search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முகஸ்டாலின்"

    • 1,000 கிலோமீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • சென்னையில் 2 ஆம் கட்டமாக 112 கிலோமீட்டர் தொலைவுக்கு பணிகள் நடைபெறுகிறது.

    சென்னை நந்தனத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சென்னை மெட்ரோ ரெயில் திட்ட தலைமை அலுவலகத்தை மத்திய வீட்டுவசதி மந்திரி ஹர்தீப் சிங் புரியும் முதலமைச்சர் மு க ஸ்டாலினும் கூட்டாக நேற்று திறந்து வைத்தனர். 


    நவீன முறையில் கட்டப்பட்டுள்ள இந்த தலைமையகத்தை இருவரும் பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மந்திரி ஹர்தீப் சிங் புரி கூறியுள்ளதாவது:

    சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் மத்திய மாநில அரசுகளின் கூட்டாட்சி முறைக்கு உதாரணமாக விளங்குகிறது. நாடு முழுவதும் தற்போது 810 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், 1,000 கிலோமீட்டர் தொலைவுக்கான மெட்ரோ ரெயில் பணிகள் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றன. 


    இதில் சென்னையில் மட்டும் இரண்டாவது கட்டமாக 112 கிலோமீட்டர் தொலைவுக்கான பணிகள் நடை பெறுகின்றன. நகர்ப்புற போக்குவரத்து முறையில் இது புரட்சிகரமானது.

    மெட்ரோ ரெயில் போக்குவரத்தைப் பயன்படுத்தும் முதன்மையான நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது. வெகுவிரைவில், மெட்ரோ ரெயில் பயன்பாட்டில் ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா நாடுகளை இந்தியா மிஞ்சிவிடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • வரும் 4ந் தேதி அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுகிறது.
    • பெரம்பலூர் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

    திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:  இந்தியை நாட்டின் அலுவல் மொழியாக்குவது தொடர்பாக பாராளுமன்ற நிலைக்குழு, குடியரசுத் தலைவருக்கு அறிக்கை அளித்துள்ளதாக செய்தி வெளி வந்தவுடன், முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இந்தியாவிலேயே முதலாவதாக அதை எதிர்த்து கண்டன அறிக்கை வெளியிட்டார்.

    திமுக இளைஞர் அணி, இது தொடர்பாக மாநிலம் முழுவதும் 15.10.2022 அன்று மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடத்தியது. பிரதமருக்கு, இது தொடர்பாக முதலமைச்சர் 16.10.2022 அன்று கடிதம் எழுதி இந்த அறிக்கையை ஏற்க கூடாது என்று வலியுறுத்தினார்.

    இந்நிலையில், அலுவல் மொழி தொடர்பான பாராளுமன்றக் குழுத் தலைவரால் கடந்த 9.9.2022 அன்று குடியரசுத் தலைவரிடம் அளிக்கப்பட்டுள்ள அறிக்கையில் உள்ள தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளுக்கும், அம்மொழிகளைப் பேசும் மக்களின் நலனுக்கு எதிராகவும் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக்கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 18.10.2022 அன்று தனித் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. அது குடியரசுத் தலைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானத்தை தமிழக மக்களிடையை விளக்கிடும் வகையிலும் அலுவல் மொழி தொடர்பான பாராளுமன்றக் குழு அறிக்கையை ஏற்க கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வருகிற 4.11.2022 (வெள்ளிக்கிழமை) அன்று இந்தித் திணிப்பு எதிர்ப்புத் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடைபெறும்.

    திமுக மாவட்ட செயலாளர்கள் தலைமையிலும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெறும் இப்பொதுக்கூட்டங்களில் திமுக உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் பங்கேற்று சிறப்புற நடத்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் பெரம்பலூரில் வரும் 4ந் தேதி நடைபெறும் திமுக பொதுக்கூட்டத்தில் முதலமைச்சரும், அக்கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றுவார் என அதில் கூறப்பட்டுள்ளது.

    • சத்யா என்ற மாணவிக்கு நேர்ந்த துயரம் இனி தமிழகத்தில் நிகழ கூடாது.
    • நல்லொழுக்கம் கொண்டவர்களாக இளைஞர்கள் வளர்ந்து சமூக பங்களிப்பை வழங்க வேண்டும்.

    சென்னை ராயப்பேட்டையில் தொழிலாளர் நலத்துறை சார்பில் நடைபெற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது:

    என்னை தேர்ந்தெடுத்துள்ள சென்னை கொளத்தூர் தொகுதியிலும் வேலை வாய்ப்பு முகாமை விரைவாக நடத்த வேண்டும். துறைமுகம் தொகுதியிலும் நடத்த வேண்டும். 234 தொகுதிகளிலும் நடத்த வேண்டும் என்பதுதான் முதலமைச்சர் என்ற முறையில் நான் வைக்கும் வேண்டுகோள்.

    இளைஞர்களுக்கு தகுதி ஏற்ப வேலைவாய்ப்பு நிச்சயம் கிடைக்கும். இந்த வேலை வாய்ப்பு முகாம் எனக்கு திருப்தி அளிக்கிறது. ஒரு லட்சமாவது வேலை வாய்ப்புக்கான ஆர்டரை கொடுக்கும் வாய்ப்பை எனக்கு வழங்கியுள்ளது பெருமையாக உள்ளது. இதைவிட முதலமைச்சருக்கு என்ன மகிழ்ச்சி இருக்க போகிறது.

    சத்யா என்ற மாணவிக்கு நேர்ந்த துயரத்தை அறிந்து நான் நொருங்கி போயுள்ளேன். அதை அறிந்தவர்கள் துயரத்தில் இருப்பார்கள். சில இளைஞர்கள் என்ன மாதிரியாக வளர்க்கிறார்களா என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் இனி தமிழகத்தில நிகழ கூடாது.

    இதுவல்ல நாம் காண விரும்ப கூடிய சமூகம், இனி எந்த பெண்ணுக்கும் இது போன்று நிகழாமல் தடுக்க வேண்டிய கடமை ஒரு சமூகமாக நமக்கு இருக்கிறது. தங்கள் பிள்ளைகளை பெற்றோர்கள் அறிவாற்றல், தனித் திறமையில், சமூக நோக்கம் கொண்டவர்களாக வளர்க்க வேண்டும்.

    பாட புத்தக கல்வி மட்டுமல்ல சமூக கல்வியும் அவசியமானது. தன்னைப் போலவே பிற உயிரையும் மதிக்க கற்றுத் தர வேண்டும். நல்லொழுக்கம் பண்பும் கொண்டவர்களாக இளைஞர்கள் வளர்ந்து வாழ்ந்து சமூகத்திற்கான பங்களிப்பை வழங்க வேண்டும்.

    அவர்கள் எந்த வகையிலும் திசை மாறி சென்று விடாதபடி வளர்க்க வேண்டிய பெரும் பொறுப்பு பெற்றோர்களுக்கு இருக்கிறது. பள்ளி கல்லூரிகளும் பெற்றோர்களும் இளைய சக்தியை பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • நுழைவுத்தேர்வுகளால் மாநில கல்வி உரிமைகள் பறிக்கப்படுகிறது.
    • மாநில சுயாட்சி, மதச்சார்பின்மையை நிலைநாட்ட நாம் குரல் கொடுக்க வேண்டும்.

    திருவனந்தபுரம்:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நேற்று தொடங்கியது. இம்மாதம் 3-ந் தேதிவரை நடைபெறும் இந்த மாநாட்டின் ஒரு அங்கமாக, கூட்டாட்சி மற்றும் மத்திய-மாநில உறவு என்ற தலைப்பில் கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார்.அப்போது அவர் பேசியதாவது,

    திமுக-கம்யூனிஸ்டும் வெவ்வேறு இயக்கமாக இருந்தாலும் திமுக கொடியின் நிறத்தில் கூட பாதி சிவப்பு உள்ளது. மாநில அரசின் உரிமைகளை மத்திய பாஜக அரசு பறித்து வருகிறது. ஜிஎஸ்டி மூலம் மாநில அரசின் நிதி உரிமையும், நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளால் கல்வி உரிமைகளும் பறிக்கப்படுகிறது என்பதால் எதிர்க்கிறோம்.

    தேசிய கல்விக் கொள்கை என்பது காவி கொள்கையாக உள்ளது. காவி, இந்தியை திணிக்கும் முயற்சியே தேசிய கல்விக் கொள்கை. நேரடியாக செய்ய முடியாதவைகளை சட்டத்தின் போர்வையில் செய்யப் பார்க்கிறார்கள். ஆளுநரை ஏவி மாநிலங்களில் இரட்டை ஆட்சியை கொண்டு வர மத்திய அரசு முயற்சி மேற்கொள்கிறது. மாநிலங்கள் நகராட்சி போல் மாறி வருகின்றன. அது இருக்கும் இடம் தெரியாமல் பின்னால் தள்ளப்பட்டுள்ளன.

    நாம் கேட்பது அதிக அதிகாரங்கள் கொண்ட மாநிலங்கள்தானே தவிர, பிரிவினை மாநிலங்களை அல்ல. இந்திய அளவில் கூட்டாட்சியை ஒப்புக்கொண்டவர்களால் கேட்கப்படுவதுதான் மாநில சுயாட்சி. மாநில சுயாட்சி, மதச்சார்பின்மையை நிலைநாட்ட நாம் குரல் கொடுக்க வேண்டும்.

    சகோதரத்துவம், சம தர்மம், சமூகநீதியை நிலைநாட்ட நாம் குரல் கொடுக்க வேண்டும். இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்றால் முதலில் மாநிலங்கள் காப்பாற்ற பட வேண்டும். நமது அரசியலமைப்பு சட்டம் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்பது மாநிலங்களின் கோரிக்கை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • நாடாளுமன்ற தேர்தலோடு, தமிழக சட்டமன்றத்துக்கும் தேர்தல் வந்தால் நாங்கள் பொறுப்பல்ல.
    • கோவை பொறுப்பு அமைச்சர் விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்து கொண்டிருக்கிறார்.

    கோவை:

    பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கைது செய்யப்பட்டதுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தி.மு.க. அரசை கண்டித்தும் கோவை சிவானந்தா காலனியில் நேற்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது:

    இந்து மதத்தை இழிவாக ஆ.ராசா பேசுவது இது புதியதல்ல. தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்று பேசிய போது பெரிதும் மக்கள் கண்டனம் தெரிவிக்கவில்லை. தற்போது அரசியல் களம் மாறி இருக்கிறது. நாங்கள் தான் சுயமரியாதைக்காரர்கள். பா.ஜ.க.வுக்கு பொருத்தமான வார்த்தை சமூகநீதி, சுயமரியாதை. ஆனால் பா.ஜ.க. மதவாத கட்சி என்றும், ஏதாவது சொல்லி ஆட்சிக்கு வரபார்க்கிறார்கள் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிடுகிறார். 


    தமிழகத்தில் 1.10 கோடி பேர் மதுவிற்கு அடிமையாகி இருப்பதில் இருந்து வெளிக்கொண்டு வரவும், அரசு அலுவலகங்களின் லஞ்சம், கனிமவள கொள்ளைகளை தடுக்கவுமே நாங்கள் ஆட்சிக்கு வர நினைக்கிறோம். கோவையின் பொறுப்பு அமைச்சர் விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்து கொண்டிருக்கிறார். மற்றொரு அமைச்சர் மேடையில் சாதி பெயரை கூறி பெண்ணை அழைக்கிறார்.

    பா.ஜ.க. தொண்டர்கள் மீது கை வைத்த காவல் துறையினருக்கு, நான் சொல்ல வேண்டியது என்னவென்றால் ஓய்வு காலத்தில் உங்களுக்கு ஓய்வூதியம் வரவில்லை என்றால் நாங்கள் பொறுப்பல்ல.2024-ல் நாடாளுமன்ற தேர்தலோடு, தமிழக சட்டமன்றத்துக்கும் தேர்தல் வந்தால் நாங்கள் பொறுப்பல்ல. 


    நீங்கள் மாற்றிக்கொள்ளவில்லையென்றால் மாற்றப்படுவீர்கள். முதலமைச்சரின் வீட்டை பா.ஜ.க. தொண்டர்கள் முற்றுகையிடும் காலம் வெகு தொலைவில் இல்லை. எங்களை தாண்டி தான் கோட்டைக்கு செல்ல வேண்டும். முதலமைச்சர் நடுநிலையோடு நடந்துகொள்ள வேண்டும். நடுநிலையாக இருந்து 5 ஆண்டுகளை முழுமையாக ஆட்சி செய்ய முயற்சி செய்யுங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஒரு சட்டமசோதாவுக்கு அனுமதி அளிப்பதை நிறுத்தி வைக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது.
    • சனாதன தர்மம் பற்றிய எனது பேச்சு, அரசியல் சாசன எல்லைக்கு உட்பட்டது.

    சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:

    மாநில அரசுக்கு தேவையான உதவிகளை செய்யத்தான் நான் இருக்கிறேனே தவிர, அதிகார எல்லைகளை மீறுவதற்காக அல்ல. ஒரு சட்ட மசோதாவுக்கு அனுமதி அளிப்பதை நிறுத்தி வைக்கவும், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அதைக் கிடப்பில் போடவும் ஆளுநருக்கு அரசியல் சாசனம் அதிகாரம் அளித்திருக்கிறது.

    அரசின் செலவினங்களுக்கான பண மசோதாவாக இல்லை என்கிற பட்சத்தில், மற்ற மசோதாக்களுக்கு ஆளுநர் அப்படியே ஒப்புதல் கொடுத்துவிட வேண்டும் என்கிற கட்டுப்பாடுகள் இல்லை. நான் என்ன செய்ய வேண்டும் என்று அரசியல் சாசனம் எதிர்பார்க்கிறதோ, அதையே செய்கிறேன் சனாதன தர்மம் பற்றிய எனது பேச்சு, அரசியல் சாசனம் வகுத்துள்ள எல்லைக்கு உட்பட்டதுதான்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்றாலும் சரி, அமைச்சர்கள் என்றாலும் சரி, அவர்களிடம் நல்ல நண்பராக நான் பழகுகிறேன். அவர்களிடம் எனக்கு எந்த பிரச்சினைகளும் இல்லை. அரசியல் ரீதியாக என்ன பேசப்பட்டாலும், ஊடகங்களில் கருத்து கூறப்பட்டாலும், என்னை அது பாதித்ததில்லை. அதுதான் எங்களுக்கிடையேயான தனிப்பட்ட நட்புறவு.

    தி.மு.க. அரசுடன் நல்லுறவை அனுபவித்து வருகிறேன். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறந்த மனிதர். அவருடன் எனக்கு ஆழமான நட்புறவு உள்ளது. அவர் இந்த மாநிலத்துக்கும் அதன் மக்களுக்கும் நல்லதைச் செய்யும் எண்ணம் கொண்டவராக இருக்கிறார். அவரது திறனுக்கேற்றபடி சிறப்பாக பணியாற்றி வருகிறார்.

    பல்கலைக்கழகங்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதை எனது முன்னுரிமையாக வைத்துள்ளேன். தேசிய கல்விக் கொள்கை புரட்சிகரமான கொள்கைகளைக் கொண்டதாகும். சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதில் நல்ல பெயர் பெற்ற மாநிலம் தமிழகம். ஆனால் எஸ்.சி., ஆதிதிராவிடர், பெண்களுக்கு எதிரான குற்றங்களின் தரவுகளை பார்க்கும் போது எனக்கு கவலை ஏற்படுகிறது. சிவில் உரிமை பாதுகாப்பு சட்டத்தின் கீழான குற்றங்களுக்கான தண்டனை விகிதமும் குறைவாகவே உள்ளது.

    ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் விடுதலையில் உச்சநீதிமன்றம் முடிவு எடுக்கட்டும், ஒரு குறிப்பிட்ட கைதியின் வழக்கில் உச்சநீதிமன்றம் முடிவு எடுத்தது. அதுபோல மற்றவர்களின் விடுதலையிலும் உச்சநீதிமன்றமே முடிவு எடுக்கட்டும். அரசியல் சாசனத்தின் 142-வது ஷரத்து அளித்துள்ள அதிகாரத்தை அவர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

    அதைச் செய்வதற்கு உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. ஆனால் ஆளுநருக்கு அந்த அதிகாரம் இல்லை. எனவே அதுதொடர்பான மனுக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துவிட்டேன். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு பற்றி நான் ஏற்கனவே கூறியிருப்பதன்படி அது மிகவும் ஆபத்தான அமைப்பாகும். இவ்வாறு அவர் கூறினார்.

    • மாணவர்களுக்கு தொழில் முனைதல் பற்றிய விழிப்புணர்வு அளிக்கப்படும்.
    • ரூ.25,000 முதல் ரூ.1 லட்சம் வரை ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரையில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் நடைபெற்ற 'தோள் கொடுப்போம் தொழில்களுக்கு' மதுரை மண்டல மாநாட்டில் கலந்து கொண்டு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வளர்ச்சிக்காக செயல்படுத்தப்பட இருக்கும் பல புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார்.

    இதன் ஒரு பகுதியாக பள்ளிப்பருவத்திலேயே மாணவர்களை புத்தாக்க சிந்தனையுடன் உருவாக்கிட "பள்ளிப்புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம்" எனும் புதிய திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனமும், பள்ளி கல்வித்துறையும் யுனிசெப் நிறுவனத்துடன் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்தும்.

    இந்த ஆண்டு, முதல் கட்டமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் அனைத்து மேல்நிலைப்பள்ளிகளில் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையில் பயிலும் 1.56 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும், 3120-ற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கும் தொழில் முனைதல் பற்றிய விழிப்புணர்வு அளிக்கப்படும்.

    மேலும், மாணவர்களிடையே புத்தாக்க சிந்தனையை ஊக்குவிக்கும் வகையில், மாணவர் குழுக்களின் சிறந்த 40 புத்தாக்க சிந்தனைகளுக்கு ரூ.25,000 முதல் ரூ.1 லட்சம் வரை ரொக்கப் பரிசுகளும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்படும்.

    இதன்மூலம் மாணவர்களின் சிந்திக்கும் திறன் மேம்படுத்தப்படுவதோடு, அவர்களை வருங்கால தொழில்முனைவோர்களாக உருவாக்க முடியும். இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • உங்கள் கோரிக்கைகள் சிலவற்றை நிறைவேற்றும் கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளேன்.
    • 10 வருடங்கள் நீங்கள் பட்ட கஷ்டத்தை படிப்படியாக சரி செய்வோம்.

    சென்னையில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    நீங்கள் அரசு ஊழியர்கள், நான் மக்கள் ஊழியர். அரசும் அரசியலும் இரண்டற கலந்தது, இதை யாராலும் பிரிக்க முடியாது. அந்த உணர்வோடு நான் இதில் கலந்து கொண்டிருக்கிறேன். அரசு ஊழியர்கள் மாநாட்டில் அரசியல் பேசக்கூடாது என்று நினைத்தாலும், அரசு ஊழியர்கள் மாநாட்டில் அரசியல் பேசாமல் வேறு எங்கே பேசுவது என்பது எனது எண்ணமாக அமைந்திருக்கிறது.

    திமுக ஆட்சியை பிடிப்பதற்கு அரசு ஊழியர்களும், ஆசிரியர்களுமே காரணம் என்ற நன்றி உணர்ச்சியோடு உங்கள் முன்னாள் நான் நின்று கொண்டிருக்கிறேன். நமது ஆதரவு முதலமைச்சருக்கு எப்போது உண்டு என்பதை உறுதி செய்வோம் என்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள்.

    உங்கள் கோரிக்கைகள் சிலவற்றை நிறைவேற்றும் கோப்புகளில் கையெழுத்திட்டு விட்டு மாநாட்டிற்கு வந்துள்ளேன். 10 வருடங்கள் நீங்கள் பட்ட கஷ்டத்தை படிப்படியாக சரி செய்வோம். அனைத்து வகையான தற்காலிக ஆசிரியர்களும், பிற தற்காலிக பணியாளர்களும் 60 வயது வரை பணி புரிய அனுமதிக்கப் படுவர்.

    அவர்களது விருப்பத்திற்கு ஏற்ப பணியிட மாறுதல் கலந்தாய்வு,  ஒளிவுமறைவு இன்றி அக்டோபர் 15 முதல் நடத்தப்படும். உங்கள் நம்பிக்கை நிச்சயம் போகாது. கோரிக்கைகளை நிச்சயம் நிறைவேற்றுவோம். உங்களுக்கு எப்போதும் பக்க பலமாக இருப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    • திமுக ஆட்சி, நீட்டை ஒழிக்கும் என்று மக்கள் நம்பத் தயாராக இல்லை.
    • நீட்டை ஒழிப்போம் என்று வாய்ச் சவடால் விட்டது தவறு என ஒப்புக் கொள்ள வேண்டும்.

    சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

    தமிழகத்தில் நடப்பது ஆட்சியா? காட்சியா? என்று தெரியாமல் மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். திராவிட மாடல் ஆட்சி என்று கூறிக்கொண்டு, ஒரு காட்டாட்சி தர்பார் நடத்துவதன் கொடுமை தாங்காமல் வெந்து மடியும் மக்கள், இந்த விடியா திமுக ஆட்சி என்று ஒழியும் என்று ஏங்கித் தவிக்கின்றனர்.

    சென்னையை அடுத்த திருமுல்லைவாயிலை சேர்ந்த மாணவி லக்ஷனா ஸ்வேதா பிலிப்பைன்ஸ் நாட்டில் இரண்டாம் ஆண்டு மருத்துவம் படித்து வந்துள்ளார். தமிழகத்தில் மருத்துவம் படிக்க விரும்பி அந்த மாணவி நீட் தேர்வு எழுதியுள்ளார். தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

    நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஒரே கையெழுத்தில் நீட்டை ஒழித்து விடுவோம் என்று வாய் நீளம் காட்டிய இந்த விடியா திமுக அரசின் கையாலாகாத்தனத்தால் மாணவ, மாணவிகளின் தற்கொலை சம்பவங்கள் நீண்டுகொண்டே இருப்பது கொடுமையிலும் கொடுமை. அதிமுக ஆட்சியிலும், நீட்டை ஒழிக்க சட்டப் போராட்டம் நடத்தப்பட்டது. அதே நேரத்தில், மாணவர்களுக்கு தன்னம்பிக்கையையும், திறமையையும் வளர்க்கும் வகையில் தமிழகம் முழுவதும் நீட் பயிற்சி மையங்கள் நடத்தப்பட்டன.

    விடியா திமுக ஆட்சி அமைந்த பின்னர் இரண்டு முறை நீட் தேர்வு நடத்தப்பட்டது. அதிமுக அரசால் உருவாக்கப்பட்ட பயிற்சி மையங்கள் முறையாக செயல்படுத்தப்படாததால், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்ததோடு, தற்கொலை சம்பவங்களும் அதிகரிப்பது மிகுந்த மனவேதனையை அளிக்கிறது.

    அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்று அவ்வை மூதாட்டி கூறினார். மாணவச் செல்வங்கள் தங்களுக்கு கிடைத்துள்ள இந்த உன்னத வாழ்வை, நம்மை ஈன்ற பெற்றோர்களுக்கும், மற்றவர்களுக்கும், நாட்டிற்கும் பயனுள்ளதாக அமைத்துக் கொள்ள வேண்டும். அதை விடுத்து, நமக்கு கிடைத்துள்ள அற்புதமான, உன்னதமான உயிரை, மாய்த்துக்கொள்ளும் செயல்களில் இனி யாரும் ஈடுபடக்கூடாது என்று மாணவச் செல்வங்களிடம் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

    கல்வி என்பது நம் எதிர்கால வாழ்க்கைக்கான திறவுகோல். குறிப்பிட்ட படிப்புதான் நம் வாழ்க்கையை சிறப்பாக்கும் என்ற எண்ணத்தை மாணவச் செல்வங்கள் கைவிட வேண்டும் என்று, ஒரு தந்தையின் ஸ்தானத்தில் இருந்து வாஞ்சையோடு வேண்டுகோள் விடுக்கிறேன். விரும்பியது கிடைக்கவில்லை என்றால், கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, படித்து பட்டம் பெற்று முன்னேறுவோம் என்ற வைராக்கியத்தை மாணவச் செல்வங்கள் மனதில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

    இனியும் இந்த விடியா திமுக ஆட்சி, நீட்டை ஒழிக்கும் என்று மக்கள் நம்பத் தயாராக இல்லை. ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்தில் நீட்டை ஒழிப்போம் என்று வாய்ச் சவடால் விட்டது தவறுதான் என்பதை ஒப்புக்கொண்டு, மாணவச் செல்வங்கள் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்டதற்கும், அவர்களை இழந்து பரிதவிக்கும் பெற்றோர்களின் துயரத்திற்கும் இந்த விடியா திமுக அரசின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தான் பொறுப்பேற்க வேண்டும்.

    இனியாவது, நீட் தேர்வை ரத்தும் செய்யும் வரை மாணவச் செல்வங்களின் எதிர்கால நலன் கருதி , நீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு, அதிமுக ஆட்சியில் தொடங்கிய இலவச பயிற்சி மையங்களை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு, ஒன்றியங்கள் தோறும் பயிற்சி மையங்களை தொடங்கி வைத்து, நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவச் செல்வங்களுக்கு பயிற்சியையும், அதனுடன் மனப் பயிற்சியையும் சேர்த்து அளிக்க வேண்டும் என்று இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • நடைபாதை, மிதிவண்டிப் பாதை, உடற்பயிற்சி உபகரணங்கள் இதில் உள்ளன.
    • இப்பூங்காவின் மொத்த நீளம் 2.1 கி.மீ. ஆகும்.

    தமிழ்நாடு நகர்புறசாலை உட்கட்டமைப்பு நிதியிலிருந்து ரூ.18.71 கோடி செலவில் கஸ்தூரிபாய் எம்.ஆர்.டி.எஸ் இரயில் நிலையம் முதல் திருவான்மியூர் எம்.ஆர்.டி.எஸ் இரயில் நிலையம் வரை பக்கிங்ஹாம் கால்வாய் கரையில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா 12.5.2022 அன்று திறந்து வைக்கப்பட்டது.

    அடர்வன காடுகள், நடைபாதை, மிதிவண்டிப் பாதை மற்றும் சுற்றுப்புறத்தை மேம்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பூங்காவின் மொத்த நீளம் 2.1 கி.மீ. ஆகும்.

    இப்பூங்காவில் சிறுவர் விளையாட்டு உபகரணங்கள், திறந்தவெளி உடற்பயிற்சி உபகரணங்கள், பாரம்பரிய மரங்கள், பூந்தொட்டிகள், எல்.ஈ.டி விளக்குகள், சுவர் ஓவியங்கள், கலை நயமிக்க சிலைகள், செயற்கை நீரூற்று, ஊட்டச்சத்து தோட்டம், இறகு பந்து மைதானம் போன்ற சிறப்பான வசதிகள் உள்ளன.

    இந்த பூங்காவிற்கு சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாப் பூங்கா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதற்கான பெயர் பலகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 


    மேலும், சிறுவர்களின் சிலம்பாட்ட பயிற்சிகளையும், திறந்தவெளி உடற்பயிற்சி பகுதியையும், கலை நிகழ்ச்சிகள் நடக்கும் பகுதியையும், ஸ்கேட்டிங் பயிற்சி பகுதியையும் முதலமைச்சர் பார்வையிட்டார். மரக்கன்றையும் முதலமைச்சர் நட்டு வைத்தார். 


    நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என். நேரு, க.பொன்முடி, எ.வ. வேலு, சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

    • வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும்.
    • கல்லூரி மாணவர்களிடையே தேசிய பற்று குறித்து போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

    ஆவடில்:

    நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி பா.ஜ.க. சார்பில் தேசிய கொடியை கையில் ஏந்தி விழிப்புணர்வு நடைபயணம் சென்னையை அடுத்த ஆவடியில் நடைபெற்றது.

    திருவள்ளூர் மேற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற இந்த நடைபயணத்தில் கலந்து கொண்ட தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தேசிய கொடியை கையில் ஏந்தியபடி புதிய ராணுவ சாலையில் பேரணியாக நடந்து சென்றார். 


    பின்னர் அங்கிருந்த காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து அவர் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அண்ணாமலை தெரிவித்துள்ளதாவது:

    மக்கள் எழுச்சியுடன் தேசிய கொடியை கையில் ஏந்தி நடைபயணத்தை மேற்கொண்டுள்ளோம். தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்களிடையே தேசிய பற்று குறித்து போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

    தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் தேசிய கொடியை ஏற்றும் இயக்கத்தை முன்னெடுப்பது அவசியம். தமிழகத்தில் உள்ள வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்ற அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடவேண்டும்.

    அதேபோல் தி.மு.க. தொண்டர்களையும் தேசிய கொடி ஏற்றும்படி மு.க.ஸ்டாலின் சொல்ல வேண்டும். பால்வளத்துறையில் ஊழல் நடைபெற்று வருகிறது. அமைச்சர் தன்னை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யவேண்டும் என திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. #mkstalin

    திருவாரூர்:

    திருவாரூர் நகர அலுவலகத்தில் கலைஞருக்கு அஞ்சலி கூட்டம் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் அவரது உருவப் படத்திற்கு கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். கருணாநிதி கட்டி காத்த தி.மு.க.வை வழிநடத்த தகுதி பெற்றவர் மு.க.ஸ்டாலின். எனவே அவரை தி.மு.க. தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும் என கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு 13 முறையும் வெற்றி பெற்று தோல்வியே காணாது 5 முறை முதல்வராக பதவி வகித்த மறைந்த கலைஞருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர் மதிவாணன், எம்.எல்.ஏ.க்கள். டி.ஆர்.பி.ராஜா, ஆடலரசன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பாலு, தியாகபாரி, நகர, ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  #mkstalin

    ×