search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின் கட்டணம் உயர்வு"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழக மின் வாரியம் ஏற்கனவே கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது.
    • கடன்களை தவிர்த்து விட்டு பொதுமக்களுக்கு தங்கு தடையில்லாமல் மின்சாரத்தை வழங்க கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிர்பந்தமான சூழ்நிலையில் தமிழக மின் வாரியம் இருக்கிறது.

    சென்னை:

    தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கோரிக்கையை ஏற்று மின் கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்கு முறை ஆணையம் முடிவு செய்து உள்ளது.

    இதற்கு மக்கள் மத்தியில் அதிருப்தி வெளியானது. இதையடுத்து பொதுமக்களிடம் கருத்து கேட்ட பின்பு மின் கட்டண உயர்வை முடிவு செய்வதற்கு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் தீர்மானித்தது.

    அதன்படி ஆன்லைன் மூலமாக பொதுமக்களிடம் இருந்து கருத்துக்கள் பெறப்பட்டன. நூற்றுக்கணக்கானோர் தங்களது கருத்துக்களை மின் கட்டண உயர்வு தொடர்பாக தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் பொதுமக்களிடம் நேரடியாகவும் கருத்து கேட்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    முதலில் கோவையில் பொதுமக்களை சந்தித்து கருத்துக்கள் கேட்கப்பட்டது. அதன்பிறகு மதுரையில் கடந்த 18-ந் தேதி பொதுமக்களை சந்தித்து மின்சார ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் கருத்துக்களை கேட்டு பெற்றனர்.

    சென்னையில் இன்று (திங்கட்கிழமை) பொதுமக்களிடம் மின் கட்டண உயர்வு பரிந்துரை தொடர்பாக கருத்துக்கள் கேட்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் கருத்து கேட்பு கூட்டம் தொடங்கியது.

    காலை 10 மணி முதல் பொதுமக்கள் மின் கட்டண உயர்வு தொடர்பாக கருத்துக்களை தெரிவிக்க அனுமதிக்கப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் இதில் பங்கேற்று தங்கள் கருத்துக்களை வெளியிட்டனர். அவை அனைத்தும் எழுத்து பூர்வமாகவும் கொடுக்கப்பட்டது.

    மதியம் 1.30 மணி வரை பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும்.

    உணவு இடைவேளைக்கு பிறகு இன்று பிற்பகல் 2.30 மணி முதல் மீண்டும் கூட்டம் நடக்கிறது. மாலை 5.30 மணி வரை இந்த கூட்டத்தை நடத்த ஒழுங்கு முறை ஆணைய அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    இந்த கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்களில் பெரும்பாலானவர்கள் மின் கட்டண உயர்வால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி தெரிவித்தனர். சிலர் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் எத்தகைய மாற்று நடவடிக்கைகளை மேற்கொண்டால் மின் கட்டணத்தை உயர்த்தாமல் நிதி நெருக்கடியை சமாளிக்க முடியும் என்றும் கருத்துக்களை தெரிவித்தனர்.

    கோவை, மதுரை, சென்னையில் பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தால் ஆய்வு செய்யப்படும். பயனுள்ள கருத்துக்களை அமல்படுத்த முடியுமா என்பது பற்றி அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். அதன் பிறகு மின் கட்டண மாற்றம் பற்றி தீர்மானிக்கப்படும்.

    தமிழக மின் வாரியம் ஏற்கனவே கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது. கடன்களை தவிர்த்து விட்டு பொதுமக்களுக்கு தங்கு தடையில்லாமல் மின்சாரத்தை வழங்க கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிர்பந்தமான சூழ்நிலையில் தமிழக மின் வாரியம் இருக்கிறது.

    எனவே மக்கள் தெரிவித்துள்ள கருத்துக்களையும் கருத்தில் கொண்டு அவற்றின் அடிப்படையில் மின் கட்டண உயர்வுக்கான ஒப்புதலை மின்சார ஒழுங்கு முறை ஆணையம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் அடிப்படையில் மின்சார வாரியம் பரிந்துரைத்துள்ள கட்டண உயர்வுகள் அமலுக்கு வரும் என்று தெரிகிறது.

    அனேகமாக அடுத்த மாதம் (செப்டம்பர்) மின்சார கட்டணம் உயர்த்தப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. என்றாலும் ஏற்கனவே பரிந்துரை செய்யப்பட்டதில் சில முக்கிய மாற்றங்கள் இருக்கும் என்று மக்களிடையே நம்பிக்கை எழுந்துள்ளது.

    • கோவையில் வருகிற 16-ந்தேதி எஸ்.என்.ஆர். கல்லூரியில் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படுகிறது.
    • மதுரையில் தள்ளாக்குளத்தில் உள்ள லட்சுமி சுந்தரம் அரங்கில் 18-ந்தேதி கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை மாற்றி அமைக்க ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இதனால் மின் கட்டணம் கணிசமான அளவுக்கு உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    குறிப்பாக 500 யூனிட் மின்சாரத்துக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு இரட்டிப்பு செலவு ஏற்படும் அளவு மின் கட்டணம் உயர உள்ளது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    இதையடுத்து மின் கட்டண உயர்வு பரிந்துரை தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்களது கருத்துக்களை ஆன்லைன் மூலமாகவும் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே பொது மக்களை நேரில் அழைத்து கருத்து கேட்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை, கோவை, மதுரை நகரங்களில் இதற்கான கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன.

    கோவையில் வருகிற 16-ந்தேதி எஸ்.என்.ஆர். கல்லூரியில் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படுகிறது. மதுரையில் தள்ளாக்குளத்தில் உள்ள லட்சுமி சுந்தரம் அரங்கில் 18-ந்தேதி கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது.

    சென்னையில் 22-ந்தேதி கலைவாணர் அரங்கில் கருத்து கேட்பு கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அன்று காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கும். பொதுமக்கள் தங்களது கருத்துக்களை அங்கு பதிவு செய்யலாம். அவர்களை அழைத்து மின் வாரியம் குறைகளை கேட்டறியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • மதுரை மாவட்டத்தில் இன்று அ.தி.மு.க. சார்பில் 3 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டதால் தேனியில் நடைபெறும் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்துக்கு தொண்டர்களை ஒருங்கிணைப்பதில் சிக்கல் ஏற்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    தேனி:

    தமிழகம் முழுவதும் மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியில் அ.தி.மு.க. சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக மதுரையில் நேற்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் தேனி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ஜக்கையன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மதுரை மாவட்டத்தில் இன்று அ.தி.மு.க. சார்பில் 3 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டதால் தேனியில் நடைபெறும் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்துக்கு தொண்டர்களை ஒருங்கிணைப்பதில் சிக்கல் ஏற்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    இதனால் காரணமாக தேனியில் நாளை அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்று வரும் நிலையில் தேனியில் மட்டும் தொண்டர்கள் ஒருங்கிணைப்பு இல்லாததால் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக தெரிய வந்துள்ளது.

    • சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், கழகப் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மின் கட்டண, உயர்வு சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை கண்டித்து மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்த உத்தரவிட்டுள்ளார்.
    • தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் 25-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் முசிறி கைக்காட்டி அருகில் நடைபெற உள்ளது.

    திருச்சி:

    திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ப.குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், கழகப் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மின் கட்டண, உயர்வு சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை கண்டித்து மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்த உத்தரவிட்டுள்ளார்.

    திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் சார்பில் மணப்பாறையில் வருகிற 25-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 9.30 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், மாநகர, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், ஒன்றிய ஊராட்சி கழக நிர்வாகிகள் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன் எனக்கூறியுள்ளார்.

    திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி விடுத்துள்ள அறிக்கையில், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் படி திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, குடிநீர் இணைப்பு கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை கண்டித்தும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 25-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் முசிறி கைக்காட்டி அருகில் நடைபெற உள்ளது.

    அதுசமயம் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளை, வார்டு கழக நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி கவுன்சிலர்கள் அனைவரும் திரளாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    • அன்றாடம் பயன்படுத்தக் கூடிய அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.
    • மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வை தமிழக அரசு உடனே திரும்ப பெற வேண்டும் என்று பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

    சென்னை:

    பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக மின் தடையின்றியும், கட்டண உயர்வின்றியும் இருந்து வந்த நிலையில் திடீரென தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தி அறிவித்திருப்பதும் அடிக்கடி மின் தடை ஏற்படுவதும் ஏமாற்றமளிக்கிறது. தமிழகத்தை ஆளும் இன்றைய தி.மு.க. அரசு கடந்த 5 ஆண்டுகளில் தாங்கள் வெளியிட்டு வந்த அறிக்கையும், பொய் பிரச்சாரங்களையும் திரும்பி பார்க்க வேண்டும்.

    ஆட்சிக்கு வந்த உடன் சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வு, விரைவு பஸ் கட்டணம் உயர்வு, பெட்ரோல், டீசல் விலை குறையாமை, தமிழகம் முழுவதும் ரவுடிகள் அட்டகாசம், அரசு அதிகாரிகளை சுதந்திரமாக செயல்படவிடாமல் ஆளும் தி.மு.க.வினரின் அடாவடித்தனம், திராவிட மாடல் என்ற போர்வையில் மக்கள் விரோத ஆட்சி செய்துவரும் இன்றைய அரசின் நடவடிக்கைகள் ஏற்புடையதல்ல.

    இந்த அதிரடியான மின் கட்டண உயர்வால் ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் வெகுவாக பாதிக்கப்படுவார்கள். அன்றாடம் பயன்படுத்தக் கூடிய அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வை தமிழக அரசு உடனே திரும்ப பெற வேண்டும் என்று பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி, 23ம் தேதி பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
    • நஷ்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் வெளியில் இருந்து மின்சாரத்தை வாங்குவது சரியா?.

    தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட இருப்பது தொடர்பாக சேலத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது:

    மின் கட்டணத்தை உயர்த்துமாறு மத்திய அரசு வலியுறுத்தவில்லை. மத்திய அரசு கொடுப்பது மானியம். தேவை எனில் பெற்றுகொள்ளலாம். மின் கட்டண உயர்வுக்கு மத்திய அரசை குறை கூற வேண்டாம்.

    தமிழக அரசு, மின் செயற்கை தட்டுபாட்டை ஏற்படுத்தி, வெளி மார்க்கெட்டில் இருந்து, அதிக பணம் கொடுத்து மின்சாரத்தை வாங்குகிறார்கள். நஷ்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் வெளியில் இருந்து மின்சாரத்தை வாங்குவது சரியா?.

    மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி,வரும் 23ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார்.
    • தமிழ்நாட்டில் உள்ள 2.37 கோடி வீடு மற்றும் குடிசை மின் இணைப்பு வைத்திருப்பவர்களில் 1 கோடி பேருக்கு மின் கட்டண உயர்வு ஏதும் இல்லை.

    சென்னை:

    தமிழக மின் வாரியத்துக்கு ரூ.1 லட்சத்து 59 ஆயிரத்து 823 கோடி கடன் உள்ளதால் வட்டி கட்ட முடியாத சூழல் ஒருபுறம் இருக்க மற்றொரு பக்கம் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மேலும் கடன் கொடுக்க மறுத்து வருகிறது.

    வருடம் தோறும் மின் கட்டணத்தை திருத்தம் செய்யாவிட்டால் ஆத்ம நிர்பார் திட்டத்தின் கீழ் பெறக்கூடிய மானியங்கள் கிடைக்காது என்றும் மத்திய அரசு கூறி வந்தது.

    இதன் காரணமாக தமிழக மின் வாரியம் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது என்றும் விரைவில் மின் கட்டணம் உயரும் என்றும் கடந்த 10 நாட்களுக்கு முன்பே மாலைமலரில் செய்தி வெளியானது.

    இப்போது தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று அறிவித்தார்.

    இதன்படி தமிழ்நாட்டில் உள்ள 2.37 கோடி வீடு மற்றும் குடிசை மின் இணைப்பு வைத்திருப்பவர்களில் 1 கோடி பேருக்கு மின் கட்டண உயர்வு ஏதும் இல்லை. அனைத்து வீடுகளிலும் 100 யூனிட் வரை விலையில்லா மின்சாரம் என்பதிலும் மாற்றம் இல்லை. குடிசை இணைப்புகளுக்கும் தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

    வீட்டு மின்நுகர்வோர்களுக்கு தேர்தல் வாக்குறுதி படி நிலைக்கட்டணம் 2 மாதங்களுக்கு ரூ.20 முதல் ரூ.50 வரை செலுத்துவதில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படும்.

    2 மாதங்களுக்கு மொத்தம் 200 யூனிட் வரை பயன்படுத்தும் 63.36 லட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (26.73 சதவீதம்) மாதம் ஒன்றுக்கு ரூ.27.50-ம், 300 யூனிட்டுகள் வரை மின்நுகர்வு செய்யும் 36.25 லட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (15.30 சதவீதம்) மாதம் ஒன்றுக்கு ரூ.72.50-ம், 400 யூனிட்டுகள் வரை மின் நுகர் செய்யும் 18.82 லட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு 7.94 சதவீதம்) மாதம் ஒன்றுக்கு ரூ.147.50-ம்,

    500 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 10.56 லட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (4.46 சதவீதம்) மாதம் ஒன்றுக்கு ரூ.297.50-ம், 600 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 3.14 லட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (1.32 சதவீதம்) ரூ.155-ம் மட்டுமே கட்டணத்தை உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    700 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 1.96 லட்சம் வீட்டு மின் நுகர்வோருக்கு (0.83 சதவீதம்) மாதம் ஒன்றுக்கு ரூ.275-ம் மொத்தம் 800 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 1.26 லட்சம் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு (0.53 சதவீதம்) மாதம் ஒன்றுக்கு ரூ.395-ம், 900 யூனிட்டுகள் வரை மின்நுகர்வு செய்யும் 84 ஆயிரம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (0.35 சதவீதம்) மாதத்துக்கு ரூ.565-ம் உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    தற்போது வீட்டு உபயோகத்துக்கு பயன்படுத்தும் மின்சாரத்தில் 500 யூனிட்டுகள் வரை பயன்படுத்தும் நுகர்வோர்களுக்கு மின் கட்டணமாக மொத்தம் ரூ.1,130 வசூலிக்கப்பட்டு வருகிறது.

    ஆனால் மின் நுகர்வு 500 யூனிட்டில் இருந்து 501 ஆக அதிகரிக்கும்போது அதற்கான மின் கட்டண தொகையானது 58.10 சதவீதம் அதிகரித்து மொத்தம் ரூ.1,786 ஆக வசூலிக்கப்பட்டு வருகிறது.

    500 யூனிட்டுகளுக்கு மேல் ஒரு யூனிட் கூடுதலாக பயன்படுத்தினாலும் மின் நுகர்வோர் கூடுதலாக ரூ.656.60 செலுத்தி வருகின்றனர். இந்த வேறுபாடுகள் முற்றிலும் களையப்பட்டு ஒரே மின் கட்டணமாக மாற்றி அமைப்பதற்கு வழி வகை செய்யப்பட்டுள்ளது என்று அறிவித்தார். இதே போல் பல்வேறு விவரங்களையும் விரிவாக கூறினார்.

    இதில் 500 யூனிட் பயன்படுத்தும் நடுத்தர பொதுமக்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.

    ஏனென்றால் இப்போது டி.வி., பிரிட்ஜ், மிக்சி, கிரைண்டர், மின் விசிறி இல்லாத வீடுகளே இல்லை. எல்லா வீடுகளிலும் மின் உபயோகம் பரவலாக உள்ளது. அப்படி பார்க்கும்போது 2 மாதத்துக்கு 500 யூனிட் தாராளமாக வந்து விடும்.

    அந்த வகையில் 500 யூனிட் வந்தாலே ரூ.1,130-ல் இருந்து ரூ.1,725 பணம் கட்ட வேண்டும். அதாவது 52 சதவீதம் கட்டணம் உயர்ந்துள்ளது.

    • நீங்கள் செல்வச் செழிப்புடன் இருக்க மக்களை அவதிக்குள்ளாக்குவதா?
    • சிலரை பணக்காரர்களாக ஆக்க தமிழக மின்சார வாரியம் ஊழலின் பிடியில் சிக்கி வருகிறது.

    தமிழகத்தில் 8 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் மின்‌ கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சர்‌ செந்தில் பாலாஜி, தெரிவித்துள்ளார்.

    இந்தநிலையில் மின் கட்டண உயர்வுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பல சாக்குப்போக்குகள் சொல்லி தமிழகத்தின் மின்துறை அமைச்சர் அனைத்து தரப்பட்ட மக்களின் மின் கட்டணத்தை இன்று உயர்த்தி உள்ளார்.

    தற்போது நடைபெற்று வரும் ஆட்சியில் சிலரை பணக்காரர்களாக ஆக்க தமிழக மின்சார வாரியம் ஊழலின் பிடியில் சிக்கித்தவித்து வருகிறது. நீங்கள் செல்லச்செழிப்புடன் இருக்க மக்களை அவதிக்குள்ளாக்குவதா?  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×