search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரக்கன்றுகள் நடும் விழா"

    • ஸ்ரீ பரஞ்சோதி யோகா கல்லூரி சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
    • உலக சமாதான ஆலயம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது .

    உடுமலை :

    இயற்கை பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு திருமூர்த்திமலை உலக சமாதான அறக்கட்டளை சார்பில் ஸ்ரீ பரஞ்சோதி யோகா கல்லூரி சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

    திருமூர்த்திமலை சுற்று பகுதியில் நடந்த விழாவிற்கு குருமகான் பரஞ்சோதியார் தலைமை வகித்தார். உலக சமாதான அறக்கட்டளை செயலாளர் சுந்தர்ராமன், பொருளாளர் பொன்னுச்சாமி மற்றும் கல்லூரி செயலாளர் செங்குட்டுவன், கல்லூரி நிர்வாக இயக்குனர் புனித வல்லிஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவையொட்டி குரு மகன் பரஞ்சோதியார் மலேசியா மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார் .உலக சமாதான ஆலயம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது .இயற்கையை பாதுகாத்து தர்மம் செய்வதே குருவிற்கு செய்யும் கடமை ஆகும் என தெரிவிக்கப்பட்டது.

    • சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே நாயக்கனேரி ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் மரக் கன்றுகள் நடும் விழா நடந்தது.

    ஆசிரியர் ரஜினி வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் பூவராகவன் தலைமை தாங்கி மரக்கன்றுகளை நட்டு வைத்தார். மரம் நடுதலின் அவசியம் மற்றும் சுற்றுச்சூழல் பற்றி ஆசிரியர் வில்வநாதன் பேசினார்.

    நிகழ்ச்சியில் பள்ளி வளாகம் மற்றும் ஏரிக்கரை பகுதியில் 100-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. முடிவில் ஆசிரியர் கமலக்கண்ணன் நன்றி கூறினார்.

    • மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
    • மகளிர் மன்றத்தினர் சார்பில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டது.

    கடத்தூர் ,

    தருமபுரி மாவட்டம் கடத்தூர் பேரூராட்சி

    யில் மாபெரும் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் சாா்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

    அதன் ஒரு பகுதியாக கடத்துார் பகுதியில் உள்ள ஏரிக்கரை பகுதியில் நீர்நிலைகள் சுத்தம் செய்தல், மற்றும் ஏரியின் கரையோரப்பகுதியில் பேரூராட்சி உறுப்பினர்கள், பணியாளர்கள் மற்றும் மகளிர் மன்றத்தினர் சார்பில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டது.

    பேரூராட்சி தலைவர் மணி தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் செயல் அலுவலர் ராஜசேகரன், முன்னாள் பேருராட்சி தலைவர் மோகன், மன்ற உறுப்பினர்கள், கார்த்திக், பச்சியப்பன், சதீஸ்குமார், மயில்சாமி, சபியுல்லாது, நகர செயலாளர் பூமுரு கன், சிலம்பரசன், ஜோதி, கவிதா, இந்திராணி, மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்றனர். முன்னதாக நீர்நிலைகள் காப்போம், சுற்றுச்சூழலை பாது காப்போம், பிளாஸ்டிக் தவிர்ப்போம் என அனை வரும் உறுதிமொழி ஏற்றனர்.

    • வெடிக்கு பதில் செடி என்ற தலைப்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மரக்கன்றுகள் நடும் விழாவா நடைபெற்றது.
    • 150 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.

    மங்கலம் :

    சாமளாபுரம் லிட்ரசி மிஷன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ,முல்லைவனம் தாவரவியல் பூங்கா மற்றும் தாய்மண் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் வெடிக்கு பதில் செடி என்ற தலைப்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மரக்கன்றுகள் நடும் விழாவானது பல்லடம் ஒன்றியம்,இச்சிப்பட்டி ஊராட்சி-கொத்துமுட்டிபாளையத்தில் உள்ள முல்லைவனம் தாவரவியல் பூங்காவில் நடைபெற்றது.

    இந்த மரக்கன்றுகள் நடும் விழாவிற்கு லிட்ரசி மிஷன் மேல்நிலைப்பள்ளி தலைவரும், பொன்னி அறக்கட்டளை தலைவருமான ஆர்.ராமமூர்த்தி தலைமை தாங்கினார் .மேலும் இந்த நிகழ்ச்சியில் தாய்மண் பாதுகாப்பு அறக்கட்டளை தலைவர் பாலசுப்ரமணியம், மலைக்காடுகள் ஆராய்ச்சியாளர் மாணிக்கம், பசுமை நிழல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார், கலங்கல் வனம் ஒருங்கிணைப்பாளர் பாபு, மகிழ்வனம் தாவரவியல் பூங்காவின் பொருளாளர் பூபதி, முல்லைவனம் தாவரவியல் பூங்கா நிர்வாகிகள்,கொத்துமுட்டிபாளையம் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த மரக்கன்றுகள் நடும் விழாவில் மூங்கில்,நாவல்,வேம்பு,பழா, உள்ளிட்ட 150 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியில் லிட்ரசி மிஷன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், சாரண சாரணிய மாணவ மாணவிகள்,என்.சி.சி மாணவர்களும் கலந்து கொண்டு இந்த மரக்கன்றுகள் நடும் விழாவில் மரக்கன்றுகளை நடவு செய்தனர்.

    • சுற்றுச்சூழலை பாதுகாத்திடும் நடவடிக்கையாக வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமப்புறங்களில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்று வருகிறது.
    • கீழ் ஒட்டிவாக்கம் கிராமத்தில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் பணியை மக்கள் கல்வி நிறுவனத்தின் தலைவர் சார்லஸ் முன்னிலையில் ஊராட்சி மன்ற தலைவர் மகேந்திரன் தொடங்கி வைத்தார்.

    வாலாஜாபாத்:

    காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் திறன் மேம்பாடு தொழில் முனைவோர் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மக்கள் கல்வி நிறுவனத்தின் சார்பில் காலநிலை மாற்றத்தால் மாசடைந்து வரும் சுற்றுச்சூழலை பாதுகாத்திடும் நடவடிக்கையாக வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமப்புறங்களில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்று வருகிறது.

    கீழ் ஒட்டிவாக்கம் கிராமத்தில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் பணியை மக்கள் கல்வி நிறுவனத்தின் தலைவர் சார்லஸ் முன்னிலையில் ஊராட்சி மன்ற தலைவர் மகேந்திரன் தொடங்கி வைத்தார்.

    மேலும் மக்கள் கல்வி நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் சவுதா நளினா தலைமையில் வாலாஜாபாத் ஒன்றியத்தில் உள்ள கிராமப்புறங்களில் உள்ள மக்கள் கல்வி நிறுவன பயனாளர்களுக்கும், கிராம மக்களுக்கும் மரக்கன்றுகளை வழங்கும் பணியை மக்கள் கல்வி நிறுவனத்தின் களப்பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

    • பேத்துப்பாறையில் பல்வேறு வகையிலான மர கன்றுகள் நடப்பட்டது.
    • நிகழ்ச்சியில் வனத்துறையினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் அருகே பேத்துப்பாறை வயல் பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் காந்தி கிராம பல்கலைக்கழக மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு அப்பகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு கொடைக்கானல் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜய சந்திரிகா தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து சோலை மரங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையிலான மர கன்றுகள் அப்பகுதியில் நடப்பட்டது.

    மேலும் அப்பகுதியில் மரக்கன்றுகள் நடுவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் வனத்துறையினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • 2000 மரக்கன்றுகள் நடப்பட்டது

    செய்யாறு:

    செய்யாறு தொகுதியில் செய்யாறு ஒன்றியம் வடபூண்டிபட்டு, அனக்காவூர் ஒன்றியம் வீரம்பாக்கம், வெம்பாக்கம் ஒன்றியம் சோதியம்பாக்கம் ஆகிய பகுதிகளில் அரசு புறம்போக்கு நிலத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் 2000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தின்படி நேற்று செய்யாறு ஒன்றியம் வடபூண்டிபட்டு கிராமத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    2000 மரக்கன்றுகள்

    நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் தலைமை வகித்தார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெய்சங்கர், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் சசிகலா சுந்தரேசன் வரவேற்றார்.

    சிறப்பு விருந்தினராக ஒ. ஜோதி எம்.எல்.ஏ கலந்துகொண்டு 2000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை தொடங்கி வைத்து பேசினார்.

    நிகழ்ச்சியில் நகர செயலாளர் கே. விஸ்வநாதன், ஒன்றிய செயலாளர் ஞானவேல், வழக்கறிஞர்கள் அசோக், சான் பாஷா, திமுக நிர்வாகி பார்த்திபன், வேளாண் உதவி அலுவலர் பழனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மகிழ் வனம் 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வருகின்றனர்.
    • நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.

     பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கோடங்கிபாளையம் ஊராட்சி சங்கோதி பாளையத்தில் ஊராட்சி நிர்வாகம் மற்றும் இளைஞர் நற்பணி மன்றத்தினர் மகிழ் வனம் என்ற பெயரில் சுமார் 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வருகின்றனர்.

    இந்த நிலையில் மகிழ் வனத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. கோடங்கிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் காவி. பழனிச்சாமி தலைமை வகித்தார். லிட்ரசி பள்ளி தாளாளர் ராமமூர்த்தி, தாய்மண் அறக்கட்டளை பாலசுப்பிரமணியம், விநாயகர் கோயில் அறக்கட்டளை தலைவர் சின்னசாமி, மகிழ் வனம் செயலாளர் பாலசுப்பிரமணியம், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சினிமா நடிகர் தாமு மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்ச்சியில், மாணிக்கம், பூபதி, ராமகிருஷ்ணன், மற்றும் லிட்ரசி பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திண்டுக்கல் ரெயில்வே நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை சார்பில் 75- வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 1000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
    • இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வண்ணம் துணிபைகள் வழங்கப்பட்டது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் ரெயில்வே நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை சார்பில் 75- வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 1000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.

    இதற்கு ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுனில் தலைமை தாங்கினார். இதில் அசிஸ்டன்ட் டிவிஷனல் என்ஜினீயர் நாராயணன் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் வனச்சரகர் மதிவாணன், முன்னாள் ராணுவ வீரர் சங்கத் தலைவர் விசுவாசம், நேரு யுவகேந்திரா மாவட்ட அலுவலர் சரண், கமர்சியல் இன்ஸ்பெக்டர் வீரபெருமாள்,ரெயில்வே நிலைய அலுவலர் கோவிந்தராஜ், சீனியர் செக்சன் என்ஜினீயர் செந்தில்,சுகாதார ஆய்வாளர் சுரேஷ், சமூக ஆர்வலர் பால் தாமஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வண்ணம் துணிபைகள் வழங்கப்பட்டது.

    • சாலைகள் திட்டத்தின் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
    • மாவட்ட கலெக்டர் சாந்தி மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம் தடங்கத்தில் சுதந்திரஅமுதப் பெருவிழாவையொட்டி நெடுஞ்சாலைகள் மற்றும் சாலைகள் திட்டத்தின் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

    இதில் மாவட்ட கலெக்டர் சாந்தி மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சேலம் திட்ட இயக்குநர் குளோத்து ங்கன்,கிருஷ்ணகிரி-தொப்பூர் டோல்கேட் திட்ட தலைவர் சிவக்குமார், மேலாளர் அருண்குமார், துணை மேலாளர் ஞானசேகரன், நிர்வாகம் மற்றும் கணக்கு பதிவு மேலாளர் ஜோஸ்வின் ஸ்மைல் ஆகியோர் பங்கேற்றனர்.

    • திருச்சி மண்டல ரயில்வே சிறப்பு பாதுகாப்பு படையின் சார்பில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது
    • அந்த வகையில் மரம் நடு விழா காஜா மலையில் உள்ள சிறப்பு காவல் படை வளாகத்தில் நடைபெற்றது.

    திருச்சி :

    திருச்சி மண்டல ரயில்வே சிறப்பு பாதுகாப்பு படையின் சார்பில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இருசக்கர வாகன பேரணி விழிப்புணர்வு ஓட்டம் உள்ளிட்ட வகையில் சுதந்திர தினத்தை அறியும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வந்தனர்.

    அந்த வகையில் மரம் நடு விழா காஜா மலையில் உள்ள சிறப்பு காவல் படை வளாகத்தில் நடைபெற்றது. இதில் திருச்சி மண்டல ரயில்வே துணை மண்டல மேலாளர் மனிஷ் அகர்வால் கலந்துகொண்டு மரம் நடு விழாவை துவக்கி வைத்தார்.

    இந்த நிகழ்வில் ரயில்வே சிறப்பு பாதுகாப்பு படை கமாண்டன்ட் அஜய் ஜோதி ஷர்மா உள்ளிட்ட அதிகாரிகள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

    • இந்திய மருத்துவ சங்க தலைவர் மகுடமுடி, செயலாளர் சுரேஷ் ராஜ், பொருளாளர் தரணி கவாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    • 200- க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் கல்லூரி வளாகத்தில் நடப்பட்டன.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி இந்திய மருத்துவ சங்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வன் உஷா தலைமை தாங்கினார். இந்திய மருத்துவ சங்க தலைவர் மகுடமுடி, செயலாளர் சுரேஷ் ராஜ், பொருளாளர் தரணி கவாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவர் நேரு வரவேற்றார். இதில் சுமார் 200- க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் கல்லூரி வளாகத்தில் நடப்பட்டன. அப்போது பேராசிரியர் செல்வராஜ், இணை பேராசிரியர்கள் ஷமீம், அணிதா ராணி, அனுசுயா, சௌமியா, ராஜ்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    ×