search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Plant Sapling Ceremony"

    • வெடிக்கு பதில் செடி என்ற தலைப்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மரக்கன்றுகள் நடும் விழாவா நடைபெற்றது.
    • 150 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.

    மங்கலம் :

    சாமளாபுரம் லிட்ரசி மிஷன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ,முல்லைவனம் தாவரவியல் பூங்கா மற்றும் தாய்மண் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் வெடிக்கு பதில் செடி என்ற தலைப்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மரக்கன்றுகள் நடும் விழாவானது பல்லடம் ஒன்றியம்,இச்சிப்பட்டி ஊராட்சி-கொத்துமுட்டிபாளையத்தில் உள்ள முல்லைவனம் தாவரவியல் பூங்காவில் நடைபெற்றது.

    இந்த மரக்கன்றுகள் நடும் விழாவிற்கு லிட்ரசி மிஷன் மேல்நிலைப்பள்ளி தலைவரும், பொன்னி அறக்கட்டளை தலைவருமான ஆர்.ராமமூர்த்தி தலைமை தாங்கினார் .மேலும் இந்த நிகழ்ச்சியில் தாய்மண் பாதுகாப்பு அறக்கட்டளை தலைவர் பாலசுப்ரமணியம், மலைக்காடுகள் ஆராய்ச்சியாளர் மாணிக்கம், பசுமை நிழல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார், கலங்கல் வனம் ஒருங்கிணைப்பாளர் பாபு, மகிழ்வனம் தாவரவியல் பூங்காவின் பொருளாளர் பூபதி, முல்லைவனம் தாவரவியல் பூங்கா நிர்வாகிகள்,கொத்துமுட்டிபாளையம் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த மரக்கன்றுகள் நடும் விழாவில் மூங்கில்,நாவல்,வேம்பு,பழா, உள்ளிட்ட 150 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியில் லிட்ரசி மிஷன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், சாரண சாரணிய மாணவ மாணவிகள்,என்.சி.சி மாணவர்களும் கலந்து கொண்டு இந்த மரக்கன்றுகள் நடும் விழாவில் மரக்கன்றுகளை நடவு செய்தனர்.

    ×