பல்லடம் அருகே மரக்கன்றுகள் நடும் விழாவில் சினிமா நடிகர் தாமு பங்கேற்பு

மகிழ் வனம் 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வருகின்றனர்.நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.
சினிமா நடிகர் தாமு மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்த காட்சி.
சினிமா நடிகர் தாமு மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்த காட்சி.
Published on

 பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள கோடங்கிபாளையம் ஊராட்சி சங்கோதி பாளையத்தில் ஊராட்சி நிர்வாகம் மற்றும் இளைஞர் நற்பணி மன்றத்தினர் மகிழ் வனம் என்ற பெயரில் சுமார் 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் மகிழ் வனத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. கோடங்கிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் காவி. பழனிச்சாமி தலைமை வகித்தார். லிட்ரசி பள்ளி தாளாளர் ராமமூர்த்தி, தாய்மண் அறக்கட்டளை பாலசுப்பிரமணியம், விநாயகர் கோயில் அறக்கட்டளை தலைவர் சின்னசாமி, மகிழ் வனம் செயலாளர் பாலசுப்பிரமணியம், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சினிமா நடிகர் தாமு மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்ச்சியில், மாணிக்கம், பூபதி, ராமகிருஷ்ணன், மற்றும் லிட்ரசி பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com