என் மலர்
உள்ளூர் செய்திகள்

கள்ளக்குறிச்சியில் மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா
- இந்திய மருத்துவ சங்க தலைவர் மகுடமுடி, செயலாளர் சுரேஷ் ராஜ், பொருளாளர் தரணி கவாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
- 200- க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் கல்லூரி வளாகத்தில் நடப்பட்டன.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி இந்திய மருத்துவ சங்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வன் உஷா தலைமை தாங்கினார். இந்திய மருத்துவ சங்க தலைவர் மகுடமுடி, செயலாளர் சுரேஷ் ராஜ், பொருளாளர் தரணி கவாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவர் நேரு வரவேற்றார். இதில் சுமார் 200- க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் கல்லூரி வளாகத்தில் நடப்பட்டன. அப்போது பேராசிரியர் செல்வராஜ், இணை பேராசிரியர்கள் ஷமீம், அணிதா ராணி, அனுசுயா, சௌமியா, ராஜ்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Next Story






