search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sapling ceremony"

    • கருணாநிதி நூற்றாண்டு விழா முன்னிட்டு நடந்தது
    • வினோத்காந்தி தொடங்கி வைத்தார்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், கணியம்பாடி அடுத்த அடுக்கம்பாறை ஊராட்சியில் கருணாநிதி நூற்றாண்டு விழா முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார்.

    கணியம்பாடி ஒன்றிய குழு தலைவர் திவ்யாகமல்பிரசாத், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் வேதாசீனிவாசன், மாவட்ட கவுன்சிலர் தேவிசிவா, ஒன்றிய செயலாளர் கலைச்சந்தர், ஒன்றிய கவுன்சிலர் சீனிவாசன், வல்லம் ஊராட்சி மன்ற தலைவர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற துணை தலைவர் தென்போ ஸ்கோ வரவேற்றார்.

    இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில சுற்றுச்சூழல் அணி துணை தலைவர் வினோத்காந்தி, ஆற்காடு எம்.எல்.ஏ. ஈஸ்வரப்பன் ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.

    • மரக்கன்று நடும் விழா நடந்தது.
    • நிகழ்ச்சியை சுஜாதா, அனிதா செல்வராஜ், பூங்கொடி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

    அலங்காநல்லூர்

    மதுரை அருகே உள்ள வெளிச்சநத்தம் கிராமத்தில் கல்லூரி மாணவிகளின் சார்பில் மரக்கன்று நடும் விழா நடந்தது. இதற்கு ஜானகி கணபதி தலைமை தாங்கினர். உன்னத் பாரத் அபியான் ஒருங்கிணைப்பாளர்கள் லட்சுமி, சக்தீஸ்வரி, மதுரை யங் இந்தியன்ஸ் காலநிலை பருவநிலை மாற்ற தலைவர் பொன்குமார், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் மகாலட்சுமி, உன்னத் பாரத் அபியான் உறுப்பினர் சோபிதா முன்னிலை வகித்தனர். மாணவ பேரவை உறுப்பினர்கள், நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள், முதுகலை சமூகபணியியல் மாணவிகள் 75 மரக்கன்றுகளை நட்டு வைத்து கிராம பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    பின்னர் பறை இசையுடன் அனைத்து வீடுகளுக்கும் சென்று பிளாஸ்டிக் தவிர்ப்பு, சுத்தமான குடிநீர், சுகாதாரமான சுற்றுச்சூழல், உடல்நலம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியை சுஜாதா, அனிதா செல்வராஜ், பூங்கொடி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

    • மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
    • ஹரிணி, தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் காயத்ரி மற்றும் ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

    மானாமதுரை

    மானாமதுரை நகராட்சி வளமீட்பு பூங்காவில் நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி உத்தரவின்பேரில் ஆணையாளர் கண்ணன் அறிவுறுத்தலின்படி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் மக்கும் குப்பைகள் உரமாக்குவது பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட சுரைக்காய், பூசணிக்காய், பலாப்பழம் ஆகியவை மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. அதைதொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகள் பூங்காவில் தேக்கு மரக்கன்றுகளை நட்டனர்.

    இந்நிகழ்ச்சியில் துப்புரவு ஆய்வாளர் பாண்டிச்செல்வம், மேற்பார்வையாளர் கார்த்திக், ஹரிணி, தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் காயத்ரி மற்றும் ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கை அருகே மதுரை-தொண்டி புறவழிச்சாலையில் மரக்கன்று நடும் விழா நடந்தது.
    • முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடந்தது.

    தேவகோட்டை

    முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சிவகங்கை கோட்டம் தேவகோட்டை உட்கோட்ட நெடுஞ்சாலை துறை சார்பில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் தொடக்கமாக சருகனி அருகே மதுரை-தொண்டி புறவழிச்சாலையில் மரக்கன்று நடும் விழா தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால்துரை தலைமையில் நடந்தது.

    இவ்விழாவில் மகிழம், மகோகலி, தளி, புங்கை, வேம்பு, நாவல், சரக்கொன்றை மற்றும் பல வகையான மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்நிகழ்ச்சியில் உதவி கோட்ட பொறியாளர் சிவக்குமார் உதவி பொறியாளர் செல்வகுமார் மற்றும் சாலை ஆய்வாளர்கள் சாலை பணியாளர்கள் மற்றும் வருவாய் துறையினர் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    சோளிங்கர்:

    கருணாநிதி நூற் றாண்டு விழாவை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டம் மருதாலம் கூட் ரோடு அருகே நெடுஞ்சாலையோரம் 12000 மரக்கன்றுகள் நடும் திட்ட தொடக்கவிழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் டி.கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.

    நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர் செல்வகுமார், ஒன்றிய குழு தலைவர் கலைக்குமார், துணைத்தலைவர் பூங்கொடி திட்ட ஆனந்தன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்த னர்.

    நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி கலந்து கொண்டு நெடுஞ்சாலையோரம் 12,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இதில் ஒன்றிய கவுன்சி லர்கள் மாரிமுத்து, சந்திரன், ஒன்றிய செயலாளர் சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் அம்சவேணி பெரியசாமி, ஒன்றிய அவைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கிசான் கோஸ்தி எனும் வயல்விழா நடைபெற்றது.
    • கருத்துக் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டது.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் வட்டாரத்தில் வேளாண்மை -உழவர் நலத்துறையின் மூலம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் நாகதேவம்பாளையம் கிராமத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கிசான் கோஸ்தி எனும் வயல்விழா நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியை கோபி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் முரளி வரவேற்று வேளாண்துறை சார்ந்த திட்டங்கள், வேளாண் இடு பொருட்களின் மானிய விவரங்கள் உள்ளிட்ட நவீன சாகுபடி தொழில் நுட்பங்கள் பற்றி விளக்கமளித்ததுடன் உலக சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை பற்றி எடுத்துக்கூறினார்.

    இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட உழவர் ஆலோசனைக் குழுத் தலைவர் ரவீந்திரன் தலைமையேற்றார். ஈரோடு மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்) முருகேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு , வேளாண்மைத்துறையின் செயல்பாடுகள் மற்றும் சுற்றுச்சூழல் நலன் காப்பதில் வேளாண் துறையின் பங்குகள் பற்றி விரிவாக எடுத்துக் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் வேளாண்மை-உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண்வணிகம், வேளாண் விற்பனைத்துறை, வனத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை,

    கோபி மைராடா வேளாண் அறிவியல் நிலைய ஆராய்சியாளர் மற்றும் சத்தி சர்க்கரை ஆலை கரும்பு மேலாளர் உட்பட அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டு அவரவர் துறை சார்ந்த அரசின் மானிய திட்டங்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப முறைகள் பற்றி விரிவாக எடுத்துக் கூறியதுடன் கருத்துக் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டது.

    மேலும் கால்நடைத் துறையின் சார்பாக கால்நடைகளுக்கான குடற்புழுநீக்க சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டது. இவ்விழாவின் முடிவில் வேளாண்மை அலுவலர் சந்திரசேகரன் நன்றி கூறினார்.

    சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் இலவசவாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டதுடன். நாகதேவன்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் கடுக்காம்பாளையம் ரேஷன் கடை ஆகிய இடங்களில் மரக்கன்றுகள் சிறப்பு அழைப்பாளர்கள் மூலம் நடப்பட்டது.

    இந்நிகழ்சியில் நாகதேவம்பாளையத்தை சேர்ந்த 100 -க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர்கள் ஜனரஜ்ஜனி, வான்மதி, குமார், பெரியசாமி மற்றும் வட்டார தொழில்நுட்ப மேலாளர் திருவரங்கராஜ் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் அன்பழகன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நடந்தது
    • பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பேரூராட்சி சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடைபெற்றது.

    விழாவுக்கு பேரூராட்சி மன்றதலைவர் லதா நரசிம்மன் தலைமை தாங்கினர். பின்னர் மரக்கன்றுகளை நட்டு விழாவை தொடங்கி வைத்தார். துணைத்தலைவர் தீபிகா முருகன் முன்னிலை வகித்தனர்.

    செயல் அலுவலர் சரவணன் வரவேற்றார். இதில் காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் உள்ள கலைஞர் நகர் பூங்கா, இருளர் காலனி பூங்கா ஆகிய பகுதிகளில் 300 மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்பது குறித்தும், மரம் வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விளக்கினார்.

    இதில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள், மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • கஸ்தூரிபாய் காந்தி செவிலியர் கல்லூரியில் நடைபெற்றது.
    • செவிலியர் மாணவர்கள் இயற்கை அன்னை புவியை காப்போம் என்ற உறுதி மொழியை அனைவரும் ஏற்றனர்.

    புதுச்சேரி:

    ஸ்ரீ பாலாஜி வித்யா பீத் பல்கலைக்கழக கழகத்தின் கீழ் இயங்கும் கஸ்தூரிபாய் காந்தி செவிலியர் கல்லூரியில் உலக புவி தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு நாட்டு நல பணித்திட்ட அலுவலர் ரமேஷ் தலைமை தாங்கினார். பேராசிரியர் ராஜேஸ்வரி வரவேற்றார்.

    கல்லூரி துணை முதல்வர் ராணி முன்னிலை வகித்தார். கல்லூரியின் முதல்வர் புனித ஜோஸ்பின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உலக புவி தினத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கவுரை ஆற்றினார்.

    தொடர்ந்து செவிலியர் மாணவர்கள் இயற்கை அன்னை புவியை காப்போம் என்ற உறுதி மொழியை அனைவரும் ஏற்றனர். பின்னர் கல்லூரி வளாகத்தில் 50 மரக்கன்றுகள் நடப்பட்டது.

    • சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே நாயக்கனேரி ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் மரக் கன்றுகள் நடும் விழா நடந்தது.

    ஆசிரியர் ரஜினி வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் பூவராகவன் தலைமை தாங்கி மரக்கன்றுகளை நட்டு வைத்தார். மரம் நடுதலின் அவசியம் மற்றும் சுற்றுச்சூழல் பற்றி ஆசிரியர் வில்வநாதன் பேசினார்.

    நிகழ்ச்சியில் பள்ளி வளாகம் மற்றும் ஏரிக்கரை பகுதியில் 100-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. முடிவில் ஆசிரியர் கமலக்கண்ணன் நன்றி கூறினார்.

    • வைப்பாற்று ஆற்றுப்படு கையில் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி நிறைவு விழா மற்றும் 25 லட்சம் பனை விதைகள் நடவும் பணி தொடக்க விழா
    • 3 பேரூராட்சி 139 கிராம ஊராட்சி பகுதிகளுக்கு தலா 2000 பனை விதைகள் வழங்கப்பட்டன.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வைப்பாற்று ஆற்றுப்படு கையில் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி நிறைவு விழா மற்றும் 25 லட்சம் பனை விதைகள் நடவும் பணி தொடக்க விழா மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. முன்னிலையில் நடைபெற்றது.

    விழாவில் கனிமொழி எம்.பி., சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் பனை விதைகளை நடவு செய்து பணிகளை தொடங்கி வைத்தனர். இதில் மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர், கூடுதல் கலெக்டர் தாக்ரே சுபம் ஞானதேவ் ராவ், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, ஒன்றிய செயலாளர்கள் ராமசுப்பு, ராதாகிருஷ்ணன், செல்வராஜ், நவநீத கண்ணன், காசி விஸ்வநாதன், அன்புராஜன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன், டேவிட்ராஜ் மரங்கள் மக்கள் இயக்கநிர்வாக அதிகாரி ராகவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    3 பேரூராட்சி 139 கிராம ஊராட்சி பகுதிகளுக்கு தலா 2000 பனை விதைகள் வழங்கப்பட்டன. அப்போது விழாவில், கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    பிரம்மனை ஆக்கக்கூடிய கடவுள் என்றும், விஷ்ணுவை காக்கக்கூடிய கடவுள் என்றும், சிவனை அளிக்கக்கூடிய கடவுள் என்றும் கூறுவார்கள்.

    ஆக்குவதை விட பாதுகாக்கக் கூடிய கடவுள் விஷ்ணுவுக்கு தான் மரியாதை அதிகம் என மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. குறிப்பிட்டுச் சொன்னார்.

    தமிழ்நாட்டை பொறுத்த வரை இங்குள்ள பெரும்பான்மையான மக்கள் அரியும் சிவனும் ஒன்று என நம்பக் கூடியவர்கள். அந்த அடிப்படையில் அழிக்கக் கூடியவர்களையும் நாம் அழித்துவிட கூடாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் மரங்கள்‍, சுற்றுப்புற சூழலை அழிப்பதற்கு ஏராள மானோர் உள்ளனர்.


    மத நல்லிணக்கத்தை மக்களின் ஒற்றுமையை அழிப்பதற்கு நிறைய பேர் உள்ளனர். அழிக்கக்கூடிய சக்திகளை எல்லாம் நாம் விட்டு விடக்கூடாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    சாதி மதங்களைக் கடந்து மக்களை ஒன்றிணைக்கும், மக்களை ஒற்றுமைப்படுத்தக்கூடிய மரக்கன்று நடுதல் போன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்த வேண்டும்.

    தமிழ் கற்றுக் கொள்வது கஷ்டம் அல்ல. இந்தியாவில் உள்ள அனைவரும் கற்றுக்கொள்ள கூடிய மொழியாக உள்ளது. அதனால் முதலில் அவர்கள் தமிழ் பேசட்டும். நாம் அதுக்கு அப்புறம் யோசிக்க லாம். தமிழ் அழகான மொழி,

    இவ்வாறு அவர் பேசினார்.

    • இந்திய மருத்துவர் சங்கத்தின் கடலூர் பிரிவு மற்றும் புதுவை ஜமீந்தார் கார்டன்ஸ் குடியிருப்போர் நலப்பணி கூட்டமைப்பு சார்பில் ஜமீந்தார் கார்டன்ஸ் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
    • ஜமீந்தார் கார்டன்ஸ் குடியிருப்போர் நலப்பணி கூட்டமைப்பு சார்பில் மூத்த வக்கீல் சந்திர சேகர் பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    இந்திய மருத்துவர் சங்கத்தின் கடலூர் பிரிவு மற்றும் புதுவை ஜமீந்தார் கார்டன்ஸ் குடியிருப்போர் நலப்பணி கூட்டமைப்பு சார்பில் ஜமீந்தார் கார்டன்ஸ் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

    இந்நிகழ்ச்சியில் இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாட்டுப் பிரிவின் மாநில தலைவர் டாக்டர் பழனிச்சாமி செயலாளர் டாக்டர் தியாகராஜன், முன்னாள் மாநில செயலாளர் டாக்டர் ரவிக்குமார், கடலூர் கிளை தலைவர் டாக்டர் பாண்டியன் மற்றும் டாக்டர்கள் முகுந்தன், ராஜேந்திரன், சந்திரன், கேசவன், கோவிந்தராஜி, கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.

    மேலும் ஜமீந்தார் கார்டன்ஸ் குடியிருப்போர் நலப்பணி கூட்டமைப்பு சார்பில் மூத்த வக்கீல் சந்திர சேகர், ஸ்ரீ கணேஷ் எலக்ட்ரிக்கல்ஸ் மற்றும் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி புதுவை சேர்மனுமான செல்வமணி பேராசிரியர்கள் சிவ சுப்பிரமணியன், பிரமானந் மொகந்தி, முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியம், ஜவுளி கடை உரிமையாளர் அனுப்மெல்வானி, ஏ.வி.எம் கட்டிட காண்டிராக்டர் விநாயக மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • 2000 மரக்கன்றுகள் நடப்பட்டது

    செய்யாறு:

    செய்யாறு தொகுதியில் செய்யாறு ஒன்றியம் வடபூண்டிபட்டு, அனக்காவூர் ஒன்றியம் வீரம்பாக்கம், வெம்பாக்கம் ஒன்றியம் சோதியம்பாக்கம் ஆகிய பகுதிகளில் அரசு புறம்போக்கு நிலத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் 2000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தின்படி நேற்று செய்யாறு ஒன்றியம் வடபூண்டிபட்டு கிராமத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    2000 மரக்கன்றுகள்

    நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் தலைமை வகித்தார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெய்சங்கர், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் சசிகலா சுந்தரேசன் வரவேற்றார்.

    சிறப்பு விருந்தினராக ஒ. ஜோதி எம்.எல்.ஏ கலந்துகொண்டு 2000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை தொடங்கி வைத்து பேசினார்.

    நிகழ்ச்சியில் நகர செயலாளர் கே. விஸ்வநாதன், ஒன்றிய செயலாளர் ஞானவேல், வழக்கறிஞர்கள் அசோக், சான் பாஷா, திமுக நிர்வாகி பார்த்திபன், வேளாண் உதவி அலுவலர் பழனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×