search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மக்களை ஒற்றுமைபடுத்தும்  மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்த வேண்டும் - 25 லட்சம் பனை விதைகள் நடும் விழாவில் கனிமொழி எம்.பி. பேச்சு
    X

    25 லட்சம் பனை விதைகள் நடும் பணி தொடக்க விழாவில் கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., ஆகியோர் பங்கேற்ற போது எடுத்த படம்.


    மக்களை ஒற்றுமைபடுத்தும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்த வேண்டும் - 25 லட்சம் பனை விதைகள் நடும் விழாவில் கனிமொழி எம்.பி. பேச்சு

    • வைப்பாற்று ஆற்றுப்படு கையில் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி நிறைவு விழா மற்றும் 25 லட்சம் பனை விதைகள் நடவும் பணி தொடக்க விழா
    • 3 பேரூராட்சி 139 கிராம ஊராட்சி பகுதிகளுக்கு தலா 2000 பனை விதைகள் வழங்கப்பட்டன.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வைப்பாற்று ஆற்றுப்படு கையில் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி நிறைவு விழா மற்றும் 25 லட்சம் பனை விதைகள் நடவும் பணி தொடக்க விழா மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. முன்னிலையில் நடைபெற்றது.

    விழாவில் கனிமொழி எம்.பி., சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் பனை விதைகளை நடவு செய்து பணிகளை தொடங்கி வைத்தனர். இதில் மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர், கூடுதல் கலெக்டர் தாக்ரே சுபம் ஞானதேவ் ராவ், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, ஒன்றிய செயலாளர்கள் ராமசுப்பு, ராதாகிருஷ்ணன், செல்வராஜ், நவநீத கண்ணன், காசி விஸ்வநாதன், அன்புராஜன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன், டேவிட்ராஜ் மரங்கள் மக்கள் இயக்கநிர்வாக அதிகாரி ராகவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    3 பேரூராட்சி 139 கிராம ஊராட்சி பகுதிகளுக்கு தலா 2000 பனை விதைகள் வழங்கப்பட்டன. அப்போது விழாவில், கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    பிரம்மனை ஆக்கக்கூடிய கடவுள் என்றும், விஷ்ணுவை காக்கக்கூடிய கடவுள் என்றும், சிவனை அளிக்கக்கூடிய கடவுள் என்றும் கூறுவார்கள்.

    ஆக்குவதை விட பாதுகாக்கக் கூடிய கடவுள் விஷ்ணுவுக்கு தான் மரியாதை அதிகம் என மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. குறிப்பிட்டுச் சொன்னார்.

    தமிழ்நாட்டை பொறுத்த வரை இங்குள்ள பெரும்பான்மையான மக்கள் அரியும் சிவனும் ஒன்று என நம்பக் கூடியவர்கள். அந்த அடிப்படையில் அழிக்கக் கூடியவர்களையும் நாம் அழித்துவிட கூடாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் மரங்கள்‍, சுற்றுப்புற சூழலை அழிப்பதற்கு ஏராள மானோர் உள்ளனர்.


    மத நல்லிணக்கத்தை மக்களின் ஒற்றுமையை அழிப்பதற்கு நிறைய பேர் உள்ளனர். அழிக்கக்கூடிய சக்திகளை எல்லாம் நாம் விட்டு விடக்கூடாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    சாதி மதங்களைக் கடந்து மக்களை ஒன்றிணைக்கும், மக்களை ஒற்றுமைப்படுத்தக்கூடிய மரக்கன்று நடுதல் போன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்த வேண்டும்.

    தமிழ் கற்றுக் கொள்வது கஷ்டம் அல்ல. இந்தியாவில் உள்ள அனைவரும் கற்றுக்கொள்ள கூடிய மொழியாக உள்ளது. அதனால் முதலில் அவர்கள் தமிழ் பேசட்டும். நாம் அதுக்கு அப்புறம் யோசிக்க லாம். தமிழ் அழகான மொழி,

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×