மரக்கன்று நடும் விழா

மரக்கன்று நடும் விழா நடந்தது. நிகழ்ச்சியை சுஜாதா, அனிதா செல்வராஜ், பூங்கொடி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
மரக்கன்று நடும் விழா
Published on

அலங்காநல்லூர்

மதுரை அருகே உள்ள வெளிச்சநத்தம் கிராமத்தில் கல்லூரி மாணவிகளின் சார்பில் மரக்கன்று நடும் விழா நடந்தது. இதற்கு ஜானகி கணபதி தலைமை தாங்கினர். உன்னத் பாரத் அபியான் ஒருங்கிணைப்பாளர்கள் லட்சுமி, சக்தீஸ்வரி, மதுரை யங் இந்தியன்ஸ் காலநிலை பருவநிலை மாற்ற தலைவர் பொன்குமார், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் மகாலட்சுமி, உன்னத் பாரத் அபியான் உறுப்பினர் சோபிதா முன்னிலை வகித்தனர். மாணவ பேரவை உறுப்பினர்கள், நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள், முதுகலை சமூகபணியியல் மாணவிகள் 75 மரக்கன்றுகளை நட்டு வைத்து கிராம பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பின்னர் பறை இசையுடன் அனைத்து வீடுகளுக்கும் சென்று பிளாஸ்டிக் தவிர்ப்பு, சுத்தமான குடிநீர், சுகாதாரமான சுற்றுச்சூழல், உடல்நலம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியை சுஜாதா, அனிதா செல்வராஜ், பூங்கொடி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com