search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொறியியல் கல்லூரி"

    • பி.எஸ்.ஆர் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு தொடக்க விழா நடந்தது.
    • இதில் மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.

    மதுரை

    பி.எஸ்.ஆர் பொறியியல் கல்லூரி மற்றும். பி.எஸ்.ஆர்.ஆர் பொறியியல் கல்லூரியின் முதலாமாண்டு மாணவர்கள் தொடக்க விழா கல்லூரி கலையரங் கத்தில் நடைபெற்றது. இதில் 2,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பெற் றோர்கள் கலந்து கொண்ட னர்.

    இதில் பி.எஸ்.ஆர். கல்விக் குழுமங்களின் இயக் குநர் விக்னேஷ்வரி அருண் குமார் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் செந்தி குமார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். கல்லூ ரியின் டீன் மாரிச்சாமி அனைவரையும் வரவேற் றார்.

    கல்லூரியின் முதல்வர் பாலசுப்ரமணியன் மாணவர்களை வாழ்த்தி பேசினார். கல்லூரியின் முதலாமாண்டு துறைத்தலைவர் செல்வராணி சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

    நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ரகநாத் கலந்து கொண்டு பேசியதாவது:-

    நான் பல வருடங்களாக இந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு மன ரீதி யான பயிற்சி அளித்து வருகிறேன். இக்கல்லூரியில் ஒழுக்கத்துடன் கூடிய கல்வி வழங்குவதால் 4 வருடங்கள் முடிவில் ஒழுக்கத்துடன் கூடிய பட்டபடிப்பை பெற்று உங்கள் குழந்தைகள் உயர்ந்த நிலைக்கு வருவார் கள் என உறுதியளித்தார்.

    பொறியியல் படிப்பை வரும் நான்கு வருடங்கள் நன்றாக படித்தால் உங்கள் தலைமுறை 40 வருடங் களுக்கு மேலோங்கி நிற் கலாம். எனவே மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்தக் கூடாது என்று அவர் பேசி னார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், இருகல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் இணைந்து செய்திருந்தனர். முடிவில் பி.எஸ்.ஆர்.ஆர் பொறியியல் கல்லூரியின் அறிவியல் மற்றும் மனித நேயத்துறை தலைவர் சக்தியஸ்ரீ நன்றி கூறினார்.

    • போதகர் நெல்சன் ஜெபம் செய்தார். கல்லூரி முதல்வர் ஸ்பென்சர் பிரதாப் சிங் வரவேற்றார்.
    • பேராசிரியர்கள். பணியாளர்கள். பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில் :

    தோவாளை சி. எஸ்.ஐ பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு இளங் கலை மற்றும் முதுகலை பொறியியல், எம்.பி.ஏ. மற்றும் எம்.சி.ஏ. படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கான வரவேற்பு விழா கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. போதகர் நெல்சன் ஜெபம் செய்தார். கல்லூரி முதல்வர் ஸ்பென்சர் பிரதாப் சிங் வரவேற்றார். தாளாளர் எபனேசர் ஜோசப் தலைமை தாங்கினார்.

    கல்லூரியின் தலைவர் குமரிப் பேராயர் செல்லையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் பேசுகையில், மாணவர்கள் அனைவரும் இறை நம்பிக்கை, உண்மை மற்றும் நன்றியுணர்வோடு வாழ்ந்து உலகில் சாதனை யாளர்களாக மாற வேண்டும் என்றார்.

    குமரிப் பேராய நலிவுற்றோர் வளர்ச்சித் துறையின் இயக்குனர் லாரன்ஸ், கல்லூரியின் காசாளர் பொன். சாலமோன், மாணவிகள் பிரெய்சலி, அகுள் மேரி ஆகியோர் முதலாம் ஆண்டு மாணவர்களை வாழ்த்தி வரவேற்றனர். முதுநிலை வணிக நிர்வாகத்துறை தலைவர் நாக்ஸன் நன்றி கூறினார். இந்த விழாவில் கல்லூரியின் அனைத்துத்துறை தலைவர்கள், பேராசிரியர்கள். பணியாளர்கள். பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • மூத்த விஞ்ஞானி வெங்கடேஷ்வ ன் விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுடன் உரையாடினார்.
    • கல்லூரி ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள் மற்றும் பலர் கலந்துகொண்ட னர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் சுங்கான்கடை புனித சவேரி யார் கத்ேதாலிக்க பொறியி யல் கல்லூரியில் 26-வது ஆண்டு இளநிலை பட்டப்ப டிப்புகளுக்கான தொடக்க விழா நடைபெற்றது. குழித்துறை மறை மாவட்ட தொடர்பா ளரும், கல்லூரி யின் ஆட்சிமன்றகுழு தலைவரு மான யேசுரெத்தி னம் தலைமை தாங்கினார். கல்லூரி தாளாளர் மரிய வில்லியம் வரவேற்றார். கல்லூரி முதல்வர், கல்லூரியின் சிறப்பம்சங்களை பட்டியலிட்டார்.

    இந்திய அரசு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை யின் விக்யான் பிரசார் அமைப்பின் மூத்த விஞ்ஞானி வெங்கடேஷ்வ ன் விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுடன் உரையாடினார்.

    கல்லூரியின் முன்னாள் மாணவரும் துபாய் நாட்டின் லக்ரேம் வர்த்தக நிறுவனங்களின் துணை தலைவரு மான டாக்டர் கெவின் வர்கீஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

    விழாவில் கல்லூரியின் முதலாமாண்டு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஜட்சன், நிதிகாப்பா ளர் பிரான்சிஸ் சேவியர், துணை முதல்வர் பேராசிரி யர் கிறிஸ்டஸ் ஜெயசிங், புனித சவேரியார் தாதியர் கல்லூரி தாளாளர் ஜெயபி ரகாஸ், மாணிங்ஸ்டார் தொழில்நுட்ப கல்லூரி தாளாளர் பிரிமஸ்சிங், கல்லூரி முதல்வர்கள், அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள், கல்லூரி ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள் மற்றும் பலர் கலந்துகொண்ட னர்.

    • பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் 500 பேர் பங்கேற்ற முகாமில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்றது.
    • சிறுதானிய விழிப்புணர்வு பேரணியை கர்னல் சி.பி. உன்னி கிருஷ் ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    நாகர்கோவில் :

    அஞ்சுகிராமத்தில் அமைந்துள்ள ரோகிணி பொறியியல் கல்லூரியில் 10 நாட்கள் என்.சி.சி. முகாம் நடைபெற்றது. கல்லூரி தலைவர் நீலமார்த்தாண் டன், துணை தலைவர் நீல விஷ்ணு, நிர்வாக இயக்குனர் பிளஸ்ஸி ஜியோ, முதல்வர் ராஜேஷ் ஆகியோர் முன்னி லை வகித்தனர். நாகர்கோ வில் 11-வது பட்டாலியன் சார்பாக நடைபெற்ற இந்த முகாமிற்கு கர்னல் சி.பி.உன்னிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் 500 பேர் பங்கேற்ற முகாமில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்றது.

    அதன் ஒரு பகுதியாக சிறு தானியம் பயன்பாடு பற்றிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. முன்னதாக ரோகிணி கல்லூரி பேராசிரியை ராதிகா சிறுதானிய பயன் பாடு பற்றி பேசினார். கடல் பாதுகாப்பு மற்றும் கடல் சார் தட்பவெப்ப நிலை குறித்து டேராடூன், இந்திய ராணுவ கல்லூரியில் ஜான்சன் உரை ஆற்றினார். இதற்கான பாதுகாப்பு உறுதிமொழியை ரோகிணி கல்லூரி முதல்வர் ராஜேஷ் என்.சி.சி. மாணவர் களிடையே வாசித்து ஏற்றுக் கொண்டார்கள். சிறுதானிய விழிப்புணர்வு பேரணியை கர்னல் சி.பி. உன்னி கிருஷ் ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் முகாம் அட் ஜூட்டன் கேப்டன் அஜிந்தர நாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ராணுவ பயிற்சியாளர்கள், பள்ளி, கல்லூரி என்.சி.சி. அதிகாரி கள் மேற்கொண்டனர். பேரணியானது ரோகிணி கல்லூரியில் தொடங்கி வட்டக்கோட்டையில் முடிவ டைந்தது.

    • சிறந்த ஆராய்ச்சி கட்டுரையை எழுதுவது பற்றியும், தரவுகள் பற்றியும் பேசினார்
    • கலந்துகொண்ட நூலகர்கள், பேராசி ரியர்கள், மாணவ-மாணவிகளுக்கு சான்றி தழ்கள் வழங்கப்பட்டது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் சுங்கான் கடை புனித கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான நூலக அறிவியல் கருத்தரங்கம் நடைபெற்றது. தொடக்க விழாவில் தாளாளர் மரியவில்லியம் குத்துவிளக்கு ஏற்றி வைத்து தலைமை உரையாற்றினார். கல்லூரி நூலகர் விஜயகுமார் வரவேற்றார். குமரி மாவட்ட நூலக கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ் மேரி கருத்தரங்கத்தின் மைய உரையை கூறினார். கல்லூரி துணை முதல்வர் கிறிஸ்டஸ் ஜெயசிங் வாழ்த்தி பேசினார். கல்லூரி வாசகர் வட்டத்தின் முத்திரையை கல்லூரி தாளாளர் வெளியிட்டார். கருத்தரங்கத்தில் சிறப்பு விருந்தினராக கேரள பல்கலைக்கழக நூலகர் சுரேஷ்குமார் கலந்து கொண்டு உரையாற்றினார். அதன்பின் வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை ஆக்னஸ் அலெக்ஸ் ரதி பல்வேறு மாவட்டகளில் இருந்து வந்திருந்த நூலகர்களையும், ஆராய்ச்சி மாணவர்கள், கல்லூரி மாணவ-மாணவி களுக்கு நன்றி கூறினார்.

    இரண்டாம் அமர்வில் சிறப்பு விருந்தினர் சுரேஷ்குமார் சிறந்த ஆராய்ச்சி கட்டுரையை எழுதுவது பற்றியும், தரவுகள் பற்றியும் பேசினார். 3-ம் அமர்வில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்துகொண்ட நூலகர்கள் கட்டுரை வாசிக்கப்பட்டு விவாதிக்கப் பட்டது. 4-ம் அமர்வில் நிறைவு விழா நடைபெற்றது. விழாவிற்கு குமரி மாவட்ட நூலகர் அதிகாரி மந்திரம் தலைமை தாங்கி, தலைமை உரையாற்றினார்.

    கருத்தரங்கில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்துகொண்ட நூலகர்கள், பேராசி ரியர்கள், மாணவ-மாணவிகளுக்கு சான்றி தழ்கள் வழங்கப்பட்டது. நிறைவு விழா நிகழ்ச்சியில் ஹோலி கிராஸ் கல்லூரி நூலகர் ஜெயகலா நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், குமரி மாவட்ட நூலக கூட்டமைப்பு, டாக்டர் அம்பேத்கர் நூலகம், கல்லூரி வாசகர் வட்டம் சார்பில் செய்யப்பட்டிருந்தது. 

    • தமிழ்நாடு பட்டாலியன் என்.சி.சி. சார்பில் 10 நாள் என்.சி.சி. பயிற்சி முகாம் நடக்கிறது
    • மாணவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    நாகர்கோவில் :

    அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் உள்ள ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நாகர்கோவில் 11 தமிழ்நாடு பட்டாலியன் என்.சி.சி. சார்பில் 10 நாள் என்.சி.சி. பயிற்சி முகாம் நடக்கிறது. இதன் ஒரு பகுதியாக போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் பேரணி நடை பெற்றது.

    கருத்தரங்கத்திற்கு சிறப்பு விருந்தினராக தக்கலை மது விலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜோதி லட்சுமி கலந்துகொண்டார். தொடர்ந்து பேரணியை சிறப்பு விருந்தினர் மற்றும் கல்லூரி முதல்வர் டாக்டர் ராஜேஷ் ஆகியோர் கொடி யசைத்து தொடங்கி வைத்த னர். பேரணியானது அஞ்சு கிராமத்தில் இருந்து தொடங்கி ரோகிணி பொறி யியல் கல்லூரி வந்து அடைந்தது. இந்த நிகழ்ச்சியை முகாம் துணை கேப்டன் அஜியேந்திர நாத் தலைமை ஏற்று நடத்தினார். இதில் மாணவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • மாணவர்களுக்கான சாகர்-23 என்ற தொழில் நுட்ப கருத்தரங்கம் நடைபெற்றது.
    • ரோகிணி பொறியியல் கல்லூரி மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    நாகர்கோவில் :

    அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் அமைந்துள்ள ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான சாகர்-23 என்ற தொழில் நுட்ப கருத்தரங்கம் நடைபெற்றது.

    ரோகிணி கல்லூரி தலைவர் நீல மார்த்தாண்டன், துணை தலைவர் நீல விஷ்ணு, நிர்வாக இயக்குனர் பிளஸ்ஸி ஜியோ ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி முதல்வர் ராஜேஷ் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நகைச்சுவை நடிகரும், சிறந்த ஊக்க மூட்டும் பேச்சாளருமான டாக்டர்.தாமு கலந்து கொண்டு "நான் ஒரு சாம்பியன்" என்ற தலைப்பில் மாணவர்கள் இடையே கருத்துரை வழங்கினார்.

    மாணவர்கள் கல்வியில் உயர் நிலைமையை அடை வதற்கான வழிமுறைகளை அவருடைய வாழ்க்கை மற்றும் திறமைகளின் மூல மாக தாமு பகிர்ந்து கொண்டார். மாணவர்கள் தங்க ளின் பெற்றோர்க ளுக்கும், பேராசிரி யர்களுக்கும் கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை எடுத்துரைத்து ஆசிரி யர்களுக்கு நன்றி பாராட்ட வைத்தார்.

    முதலாம் ஆண்டு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் மது சுரேஷ் மாண வர்களுக்கு இதற்கு முன் நடத்தப்பட்ட கருத்தரங்கம் மற்றும் பயிற்சி பட்டறை விழிப்புணர்வு பேரணிகள் ஆகியவற்றை பற்றி தொழில்நுட்ப கருத்தரங்கில் எடுத்துரைத்தார்.

    அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் நடத்திய தேர்வில் கல்லூரி அளவில் 1 முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பிற பொறியியல் கல்லூரி மாணவர்களும் பல போட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பரிசுகளை தட்டி சென்றனர். பின்னர் ரோகிணி பொறியியல் கல்லூரி மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கணிதத்துறை தலைவர் டாக்டர் மது சுரேஷ், ஆங்கிலத்துறை தலைவர் டாக்டர் வரத ராஜன், வேதியியல் துறை தலைவர் டாக்டர் ராதிகா, இயற்பியல் துறை தலைவர் டாக்டர் ஜெஸி பயஸ் மற்றும் அனைத்து துறை பேராசிரியர்களும் செய்திருந்தனர்.

    • “சுகாதாரத்தில் இளைஞர்களின் பங்கு” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது
    • நிகழ்ச்சியில் 540 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில் :

    அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் அமைந்துள்ள ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் "சுகாதாரத்தில் இளைஞர்களின் பங்கு" என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. இந்த கருத்தரங்கு எஸ்.எம்.ஐ.டி.எஸ். ரோகினி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, வைகை அறக்கட்டளை, கிராமியம் பேன்சா இந்தியா, ஆகியவற்றுடன் இணைந்து விஸ்வ யுவக் கேந்திரா ஆகியவை சார்பில் நடத்தியது.

    நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் நீல மார்த்தாண்டன், துணை தலைவர் நீல விஷ்ணு, நிர்வாக இயக்குனர் பிளஸ்ஸி ஜியோ ஆகியோர் தலைமை தாங்கினர். வேளாண்மை பொறியியல் துறையின் எச்.ஓ.டி. கிருஷ்ணவேணி வரவேற்று பேசி னார். கல்லூரி முதல்வர் ராஜேஷ் முன்னிலை வகித்து தலைமையுரையாற்றினார். விஸ்வ யுவக் கேந்திரா திட்ட அலுவலர் ரஜத் தாமஸ் சிறப்புரையாற்றினார். வைகை அறக்கட்டளை இயக்குனர் அண்ணாதுரை சிறப்புரையாற்றினார்.

    ரோகிணி பொறியியல் கல்லூரி, வைகை அறக்கட்டளை, கிராமியம் மற்றும் எஸ்.எம்.ஐ.டி. ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. தொழில்நுட்ப மூத்த சுகாதார ஆலோசகர் பாபு தண்ணீர் சுகாதாரம் மற்றும் சுகாதாரத்தில் இளைஞர்களின் பங்கை விரிவாக விளக்கினார். நிகழ்ச்சியில் 540 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • கல்லூரியில் சேர்ந்து விடுதியில் தங்கி இருந்த மாணவர்களை வெளியேற்றப்பட்டனர்.
    • மகாலட்சுமி தலைமையில் 40-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    பென்னாகரம்:

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே நல்லூர் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வந்தது. இந்த கல்லூரியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    இந்த கல்லூரி நிர்வாகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனியார் வங்கியில் கடன் பெற்றுள்ள நிலையில் திரும்பி செலுத்தாததால் நீதிமன்றத்தில் தனியார் வங்கியின் தரப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.

    இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின் படி தனியார் வங்கி அலுவலர்கள், பென்னாகரம் வட்டாட்சியர் சவுகத் அலி தலைமையிலான வருவாய்த்துறையினர் அடங்கிய குழுவினர் நேற்றுமாலை நிர்வாக அலுவலகம், கல்லூரி வகுப்பறைகள், உணவகம், ஆய்வகம், நூலகம், தங்கும் விடுதிகள் உள்ளிட்டவைகளுக்கு சீல் வைத்தனர்.

    மேலும் இந்த ஆண்டில் கல்லூரியில் சேர்ந்து விடுதியில் தங்கி இருந்த மாணவர்களை வெளியேற்றப்பட்டனர். கல்லூரியில் மூன்றாம் ஆண்டு, நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் மாற்றாக தருமபுரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் தேர்வு எழுத அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியுள்ளதாக மாணவர்களிடம் வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.

    மேலும் கல்லூரி பகுதிகளில் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளர் மகாலட்சுமி தலைமையில் 40-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 

    • சிவில் என்ஜினீயரிங் மற்றும் வேதியல் துறை இணைந்து நடத்திய சுற்றுச்சூழலின் நிலைத்தன்மை குறித்த சர்வதேச மாநாடு
    • ஆசிரியர்கள், மாணாக்கர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    நாகர்கோவில் :

    சுங்கான்கடை தூய சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் சிவில் என்ஜினீயரிங் மற்றும் வேதியல் துறை இணைந்து நடத்திய சுற்றுச்சூழலின் நிலைத்தன்மை குறித்த சர்வதேச மாநாடு நடைபெற்றது. இதில் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தை சார்ந்த சிவில் என்ஜினீயரிங் துறை தலைவர் ரமேஷ், மலேசிய சர்வதேசிய பல்கலைக்கழகத்திலிருந்து டாக்டர் அப்துல் மன்னன், தொழில்நுட்ப ஆராட்சி கவுண்சிலின் முதன்மை விஞ்ஞானி ராஜன் மற்றும் மார்க் ஐ.பி. சர்விஸ் நிர்வாக அதிகாரி ஆறுமுகம் பாண்டுரங்கன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    இம்மாநாட்டில் சுற்றுசூழலின் நிலைத்தன்மை குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் மரிய வில்லியம், முதல்வர் மகேஷ்வரன் மற்றும் நிதிகாப்பாளர் பிரான்சிஸ் சேவியர் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி மாநாட்டு செயலர்கள் ஜெர்லின் ரெஜின், சுகாசினி மற்றும் ஜட்சன் ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் சிவில் மற்றும் வேதியல் துறை ஆசிரியர்கள், மாணாக்கர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    • காளான் வளர்ப்பு பயிற்சி பட்டறை 5 நாட்கள் நடைபெற்றது.
    • ஏற்பாடுகளை வேதியியல் துறை மற்றும் வேளாண் பொறியியல் பேராசிரியர்கள் செய்து இருந்தனர்.

    நாகர்கோவில் :

    அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் அமைந்துள்ள ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் வேதியியல் துறை மற்றும் வேளாண் பொறியியல் துறை சார்பாக காளான் வளர்ப்பு பயிற்சி பட்டறை 5 நாட்கள் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் நீல மார்த்தாண்டன், துணை தலைவர் நீல விஷ்ணு, நிர்வாக இயக்குனர் பிளஸ்ஸி ஜியோ ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி முதல்வர் ராஜேஷ் தலைமை உரையாற்றினார்.

    சிறப்பு விருந்தினராக மதர் மஷ்ரூம்ஸ் நிறுவ னத்தின் தலைவர்களான புஷ்ப லதா மற்றும் சரண் (இந்தியன் ஓவர்சீஸ் வங்கி-கன்னியாகுமரி ஊரக வேலைவாய்ப்பு தொழில் பயிற்சி நிலையம்) கலந்து கொண்டனர்.

    இந்த பயிற்சியில் காளான் விதை உற்பத்தி, வளர்ப்பு, மதிப்பு கூட்டுப்பொருட்கள் செய்தல், அவற்றின் சிறப்பு அம்சங்கள், தொழில் வாய்ப்புக்கு தேவையான நிதியை பெறுதல் தொடர்பா னவற்றில் செய்முறை வகுப்புகள் ரோகிணி பொறியியல் கல்லூரியிலும், மதர் மஷ்ரூம்ஸ் நிறுவ னத்திலும் நடைபெற்றது.

    இதில் முதலாமாண்டு வேளாண் துறை மாண வர்கள் அனைவரும் பங்கு பெற்று பயன் அடைந்தனர். மேலும் இந்த பயிற்சியின் மூலமாக மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் காளான் வளர்த்து வருவது குறிப்பிடத்தக்கது. இப்பயிற்சி பட்டறைக்கான ஏற்பாடுகளை வேதியியல் துறை மற்றும் வேளாண் பொறியியல் பேராசிரியர்கள் செய்து இருந்தனர்.

    • மாணவர்கள் சிறந்த நிர்வாகியாக ஆளுமை பண்புகளை மேம்படுத்த வேண்டும்
    • சி.எஸ்.ஐ.ஆர். விஞ்ஞானி ஸ்ரீ பிரவீன் ராஜ் பேச்சு

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் சுங்கான்கடை அருகே அமைந்துள்ள வின்ஸ் பொறியியல் கல்லூரியில் முதுநிலை வணிக மேலாண்மை துறையினரின் "வி- உற்ஸவம் 2K23" நடைபெற்றது. கல்லூரியின் நிறுவனரும் முன்னாள் எம்.பி.யுமான நாஞ்சில் வின்சென்ட் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாணவி பெர்வின் மனோ வரவேற்று பேசினார். முதல்வர் டாக்டர் டயானா க்றிஸ்டில்ட்டா தொடக்க உரையாற்றினார்.

    இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில் அமைச்சகத்தின் விஞ்ஞானி ஸ்ரீ பிரவீன் ராஜ் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர் பேசுகையில், மாணவர்கள் எல்லாம் தலைவர்கள் ஆக வேண்டும். அதற்கு அவர்கள் தங்களுடைய ஆளுமை பண்புகளை மேம்படுத்த வேண்டும். ஒரு சிறந்த நிர்வாகியாக ஒரு சிறந்த தலைவனாக விரும்புகிறவர் தம்முடைய ஆளுமை அதிகாரத்தை பயன்படுத்துவதை விட பிற மனங்களை வசீகரித்து செயல்படுபவராக, செயல்படுத்தும் ஆற்றல் படைத்தவராக இருப்பது அவசியம் என்றார்.

    விழாவில் 15 கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் பொருட்களை விளம்பரப்படுத்துதல், புதிதாக ஒரு பொருளை அறிமுகம் செய்தல், கருத்து விளக்க காட்சி, நடனம் ஆகிய போட்டிகள் இடம்பெற்றன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    ×