search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீல் வைப்பு"

    • போலீசாருக்கு அதிக அளவில் ரோந்து மற்றும் சோதனைகளை தீவிரபடுத்த உத்தரவிடப்பட்டது.
    • குடோனில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் மறைத்து வைத்து இருந்தது போலீசா ரல் கண்டுபிடிக்கப்பட்டது.

    கடலூர்:

    சிதம்பரத்தில் போலீசார் சந்தேகத்திற்கு இடமான நபரை பிடித்து விசாரணை நடத்தியபோது அதில் அவர் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்தது. பின்னர் அவரிடமி ருந்து 300 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனால் அதிகாரிகள் மூலம் சிதம்பரம் மற்றும் சிதம்பரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசாருக்கு அதிக அளவில் ரோந்து மற்றும் சோதனைகளை தீவிரபடுத்த உத்தரவிடப்ப ட்டது. அதன்படி கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சீனுவாசன் என்பவரது வீடு மற்றும் அவருக்கு சொந்தமா ன குடோனில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் மறைத்து வைத்து இருந்தது போலீசா ரல் கண்டுபிடிக்கப்பட்டது. உடனே போலீசார் அந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்து அதிகாரி களின் முன்னிலையில் அதை பதுக்கி வைத்திருந்த வீடு மற்றும் கடைக்கு சீல் வைத்தனர். இதனால் அந்த பகுதி சிறிது நேரம் பரபரப்பாக இருந்தது.

    • கல்லூரியில் சேர்ந்து விடுதியில் தங்கி இருந்த மாணவர்களை வெளியேற்றப்பட்டனர்.
    • மகாலட்சுமி தலைமையில் 40-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    பென்னாகரம்:

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே நல்லூர் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வந்தது. இந்த கல்லூரியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    இந்த கல்லூரி நிர்வாகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனியார் வங்கியில் கடன் பெற்றுள்ள நிலையில் திரும்பி செலுத்தாததால் நீதிமன்றத்தில் தனியார் வங்கியின் தரப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.

    இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின் படி தனியார் வங்கி அலுவலர்கள், பென்னாகரம் வட்டாட்சியர் சவுகத் அலி தலைமையிலான வருவாய்த்துறையினர் அடங்கிய குழுவினர் நேற்றுமாலை நிர்வாக அலுவலகம், கல்லூரி வகுப்பறைகள், உணவகம், ஆய்வகம், நூலகம், தங்கும் விடுதிகள் உள்ளிட்டவைகளுக்கு சீல் வைத்தனர்.

    மேலும் இந்த ஆண்டில் கல்லூரியில் சேர்ந்து விடுதியில் தங்கி இருந்த மாணவர்களை வெளியேற்றப்பட்டனர். கல்லூரியில் மூன்றாம் ஆண்டு, நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் மாற்றாக தருமபுரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் தேர்வு எழுத அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியுள்ளதாக மாணவர்களிடம் வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.

    மேலும் கல்லூரி பகுதிகளில் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளர் மகாலட்சுமி தலைமையில் 40-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 

    • தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கையின் போது அறிவித்தபடி 500 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
    • இதையடுத்து தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகள் இன்று (வியாழக்கிழமை) முதல் மூடப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

    சேலம்:

    தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கையின் போது அறிவித்தபடி 500 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான கணக்கெடுப்பு பணிகள் நடந்து வந்தது.சேலம் மாவட்டத்தில்

    17 டாஸ்மாக் கடைகள் மூடி சீல் வைப்பு

    அதன்படி, எந்தெந்த கடைகளை மூடலாம் என்பது குறித்தும், ஒவ்வொரு மண்டலத்திலும் எத்தனை கடைகள் மூடப்பட உள்ளன என்பது பற்றியும் டாஸ்மாக் மண்டல மேலாளர்கள் மூலம் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகள் இன்று (வியாழக்கிழமை) முதல் மூடப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

    அந்த வகையில் சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய 7 மாவட்டங்களில் மொத்தம் 59 டாஸ்மாக் கடைகள் இன்று மூடப்பட்டது.

    சீல் வைப்பு

    சேலம் மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 211 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில், 17 கடைகள் மூடப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த கடைகளுக்கு இன்று காலை அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர். பின்னர் அந்த கடைகளின் இரும்பு ஷட்டர் கதவை பூட்டி சீல் வைத்தனர்.

    மாநகராட்சியில்

    8 கடைகள்

    மாவட்டத்தில் மூடப்பட்ட 17 டாஸ்மாக் கடைகள் விபரம் வருமாறு:-

    சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பிரட்ஸ் ரோடு முள்ளுவாடி கேட்-1, குகை அப்சரா இறக்கம்-1, லீ பஜார்-1, செவ்வாய்ப்பேட்டை வெங்கடப்பரோடு-1, நெத்திமேடு-1, திருச்சி மெயின்ரோடு வேலுநகர்-1, கொண்டலாம்பட்டி சந்தைப்பேட்டை மெயின்ரோடு-1, கந்தம்பட்டி-1 ஆகிய 8 கடைகள் மூடப்பட்டன.

    நகராட்சி பகுதிக்கு உட்பட்ட சிவதாபுரம் சித்தர் கோவில் மெயின் ரோடு-1, பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட மேட்டூர் துருவாகாடு-1, மேச்சேரி டவுன் -2, எம்.காளிப் பட்டி-1, கொளத்தூர்-1, ஊராட்சிக்கு உட்பட்ட தங்காயூர்-1, தீவட்டிப் பட்டி-1, தலைவாசல் டவுன்-1 ஆகிய 9 கடைகள் மூடப்பட்டன.

    நாமக்கல்

    அதேபோல், தர்மபுரி மாவட்டத்தில் 4 டாஸ்மாக் கடைகளும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 டாஸ்மாக் கடைகளும், நாமக்கல் மாவட்டத்தில் 18 கடைகளும் மூடப்பட்டது.

    • பல இடங்களில் அனுமதி இன்றி மதுக்கடை அருகே பார் செயல்பட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன.
    • சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 3 பார்களை ஆரம்பாக்கம் போலீசார் பூட்டி சீல் வைத்தனர்.

    திருவள்ளூர்:

    விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து பெண்கள் உள்பட மொத்தம் 22 பேர் இறந்தனர். இந்த சோகம் நீங்குவதற்குள் தஞ்சாவூர் அருகே மதுகுடித்த 2 பேர் பலியானார்கள். அவர்கள் குடித்த மதுவில் சயனைடு கலந்து இருந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் பல இடங்களில் அனுமதி இன்றி மதுக்கடை அருகே பார் செயல்பட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். மாவட்டத்தில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், திருத்தணி, பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, ஆர்.கே.பேட்டை ஆகிய 7 தாலுகாக்களில் மொத்தம் 137 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன.

    இந்த கடைகளுக்கு, காக்களூர் தொழிற்பேட்டையில் உள்ள, திருவள்ளூர் மேற்கு மாவட்ட டாஸ்மாக் குடோனில் இருந்து, பீர் வகைகள், மது பானங்கள், தினமும் லாரிகள் மூலம் விநியோகிக்கப்படுகின்றன.

    மொத்தம் உள்ள 137 டாஸ்மாக் கடைகளில், 56 கடைகளுக்கு அருகில் மட் டும், 'பார்' நடத்த அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. மீதி உள்ள கடைகளுக்கு அருகில் பார்கள் செயல்பட அனுமதியில்லை. ஆனால் சிலர் அனுமதி இன்றி 'பார்'கள் நடத்தி வருவது விசாரணையில் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபாஸ் கல்யாண் உத்தரவின் பேரில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணைப் போலீஸ் சூப்பிரண்டு அனுமந்தன் மேற்பார்வையில் போலீசார் மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடை அருகில் இயங்கி வந்த பார்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

    திருவள்ளூர் டோல்கேட் அருகில் திருப்பாச்சூர் ஊராட்சியில் செயல்பட்ட மதுபாரில் திருவள்ளூர் தாலுகா இன்ஸ்பெக்டர் கமலஹாசன் தலைமையிலான தனிப்படை போலீசார் சோதனை நடத்தினர். இதில் அந்த பார் அனுமதியின்றி இயங்கி வந்தது தெரிந்தது. இதையடுத்து திருப்பாச்சூர் வி.ஏ.ஓ., லோகநாதன் முன்னிலையில், போலீசார் மற்றும் கலால் துறையினர் அந்த மதுபாருக்கு சீல் வைத்தனர். இதேபோல் தலக்காஞ்சேரி, பெரியகுப்பம் மற்றும் திருவள்ளூர் பஸ் நிலையம் அருகே அனுமதியின்றி இயங்கிய மதுபாருக்கு சீல் வைக்கப்பட்டது.

    பொன்னேரி வெண்பாக்கம் லட்சுமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அரசு அனுமதி இல்லாமல் செயல்பட்ட 7 பார்களுக்கு கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி. கிரியா சக்தி தலைமையில் கலால் தாசில்தார் குமார் துணை வட்டாட்சியர் தேன்மொழி வருவாய் ஆய்வாளர் ஜெயபிரபா முன்னிலையில் பொன்னேரி போலீசார் அனுமதி இல்லாமல் செயல்பட்ட பார்களுக்கு பூட்டு போட்டனர். இதேபோல் கும்மிடிப்பூண்டி, எளாவூர் பகுதியில் உள்ள இரண்டு பார்கள் மற்றும் சுண்ணாம்பு குளத்தில் உள்ள ஒரு பார் உட்பட சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 3 பார்களை ஆரம்பாக்கம் போலீசார் பூட்டி சீல் வைத்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் அனுமதி இன்றி செயல்பட்ட மொத்தம் 71 மதுபார்களுக்கு அதிரடியாக சீல் வைக்கப்பட்டு உள்ளது.

    இவ்வளவு நாட்கள் அனுமதி இன்றி இந்த மதுபார்கள் செயல்பட்டது எப்படி? அதிகாரிகள் உடந்தையாக உள்ளனரா? மதுபார்கள் யாரின் கட்டுப் பாட்டில் செயல்பட்டது என்பது குறித்து போலீசார் மற்றும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதேபோல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் அனுமதியின்றி செயல்படும் மதுபார்கள் பற்றிய விபரங்களை சேகரித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்ட 71 மதுபார்கள் ஒரே நாளில் சீல்வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
    • திற்பரப்பு பேரூராட்சிக்குட்பட்ட பினந்தோடு மாஞ்சக்கோணம் குளம் அருகே தனியாருக்கு சொந்தமான பன்றி பண்ணை.

    கன்னியாகுமரி:

    திற்பரப்பு பேரூராட்சிக்குட்பட்ட பினந்தோடு மாஞ்சக்கோணம் குளம் அருகே தனியாருக்கு சொந்தமான பன்றி பண்ணை ஒன்று செயல்பட்டு வந்தது.

    இந்த பன்றி பண்ணையில் உள்ள பன்றி கழிவுகள் எல்லாம் அதன் அருகில் உள்ள நீரோடையில் கலந்து திற்பரப்பு அருவியின் அருகில் கலந்து சென்று கொண்டு இருந்தது. மழை காலங்களில் பன்றிகளுக்கு உணவாக போடும் கழிவுகளால் அந்த பகுதி முழுவதும் தூர்நாற்றம் வீச தொடங்கியது. இதனால் அந்த பகுதி முழுவதும் சுகாதாரகேடு ஏற்பட்டு வந்தது.

    அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் சுகாதாரகேடு விளைவிக்கும் பன்றி பண்ணையை அப்புறப்படுத்த வேண்டும் என்று பேரூராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்தனர்.

    பேரூராட்சி நிர்வாகம் பன்றி பண்ணை உரிமையாளருக்கு பண்ணையை அகற்றும்படி நோட்டீஸ் கொடுத்தார்கள். அதன்பிறகும் பன்றி பண்ணை அகற்றப்படாமல் செயல்பட்டு வந்தது. இதை கண்டித்து அந்த பகுதியை சேர்ந்த தி.மு.க., பாரதிய ஜனதா, நாம் தமிழர் கட்சியினர் சேர்ந்து பேரூராட்சி அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். போராட்டகாரர்களிடம் பேரூராட்சி மன்ற தலைவர் பொன்.ரவி, செயல் அலுவலர் எட்வின் ஜோஸ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி 2 நாட்களில் பன்றி பண்ணை அகற்றப்படும் என்று உறுதி அளித்தனர். அதன் பிறகு சம்மந்தப்பட்ட பன்றி பண்ணை உரிமையாளருக்கு பேரூராட்சி நிர்வாகம் நோட்டீஸ் கொடுத்தது. அதன்பிறகும் அவர் பன்றி பண்ணையை காலி செய்யவில்லை.

    இதையடுத்து நேற்று பேரூராட்சி நிர்வாகம் அதிரடியாக பன்றி பண்ணையை அகற்ற சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் அனுமதியுடன் மூடி சீல் வைப்பது என முடிவு செய்தனர். குலசேகரம் போலீசார் அனுமதியுடன் வருவாய் துறையினர், சுகாதார துறையினர் மற்றும் பேரூராட்சி பணியாளர்களுடன் பேரூராட்சி தலைவர் பொன். ரவி, செயல் அலுவலர் எட்வின் ஜோஸ், துணைத்தலைவர் ஸ்டாலின் தாஸ் ஆகியோர் பன்றி பண்ணையை பூட்டி சீல் வைத்தனர். உடனே பண்ணை உரிமையாளர் சுமார் 500 பன்றிகளை டெம்போவில் ஏற்றி வேறு பகுதிக்கு கொண்டு சென்றார். இதனால் அந்த பகுதியில் 2 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த பன்றி பண்ணை பிரச்சினை முடிவுக்கு வந்தது.

    • குறிப்பிட்ட தேதிக்குள் நிலுவை தொகையை செலுத்தா விட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டி ருந்தது.
    • பேரூராட்சி செயல் அலுவலர் டார்த்தி கடை ஊழியர்களை வெளியேற்றி பேக்கரியை பூட்டி `சீல்’ வைத்தார்.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பஸ் நிலையத்தில் உள்ள பேரூராட்சிக்கு சொந்தமான கடையில் மணிவண்ணன் என்பவர் பேக்கரி நடத்தி வருகிறார். இந்த நிலையில் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய கடை வாடகையை தற்போது வரை செலுத்தவில்லை என தெரிகிறது.

    இதற்கிடையே இந்த நிதியாண்டிற்க்கு செலுத்த வேண்டிய வரி பாக்கியை வசூல் செய்து வரும் நிலையில் நிதியாண்டு இறுதி என்பதால் பேரூராட்சி நிர்வாகம் வரி வசூல் செய்வதில் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தனர்.

    மேலும் குறிப்பிட்ட தேதிக்குள் நிலுவை தொகையை செலுத்தா விட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டி ருந்தது.

    இந்த நிலையில் மணிவன்னன் தனது பேக்கரி கடைக்கு தற்போது வரை வாடகை செலுத்தாததால் நேற்று மாலை பேரூராட்சி செயல் அலுவலர் டார்த்தி கடை ஊழியர்களை வெளியேற்றி பேக்கரியை பூட்டி `சீல்' வைத்தார்.

    அப்போது துப்புரவு மேற்பார்வையாளர் ரவீந்திரன், மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் இருந்தனர்.

    • முரளிக்குமார், மருந்துகளை எங்கிருந்து, யார் மூலம் வாங்குகிறார் என்பதற்கான முழு விவரங்கள் இல்லை.
    • முரளிக்குமார் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க போலீசில் புகார் கொடுக்கப்படும் என்று மருத்துவ துறையினர் கூறினர்.

    திருப்பூர்:

    திருப்பூர் அவிநாசி ரோடு, ஆஷர் நகர் அருகே, 'கற்பக விருக்ஷம் நலவாழ்வு மையம்' செயல்பட்டு வருகிறது. அதில், முரளிக்குமார் என்பவர், மனநியல் பேராசிரியர், இ-மருத்துவர் என குறிப்பிட்டு இடுப்பு, கழுத்து, கைகால், முதுகு வலி பிரச்னைகளுக்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.

    இவர் தனது கிளினிக்கில் வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து வீடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் பரப்பி வந்தார். இவரது நடவடிக்கைகள் தொடர்பாக கலெக்டருக்கு புகார் வந்ததால், விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவிட்டார்.

    இதனால், மருத்துவத்துறை இணை இயக்குனர் கனகராணி, தேசிய சுகாதார திட்ட அலுவலர் அருண்பாபு, நிர்வாக அலுவலர் மகேஷ்குமார் தலைமையிலான டாக்டர் குழுவினர் கிளினிக் சென்று, முரளிக்குமாரிடம் விசாரணை நடத்தினர். அதிகாரிகள் அவரது கிளினிக்கில் சென்று சோதனை செய்தனர். அப்போது அதிகாரிகள் வருவதை அறிந்ததும் ஊழியர்கள் மூலம் அங்கிருந்த மருந்துகளை மொட்டை மாடியில் பதுக்கி வைத்திருந்தார். அதனை கண்டுபிடித்த அதிகாரிகள் மருந்துகளை பறிமுதல் செய்தனர். பின்னர் கிளினிக்கை பூட்டி சீல் வைத்தனர்.

    இந்த ஆய்வு குறித்து, மருத்துவத்துறை இணை இயக்குனர் கனகராணி கூறுகையில், ''முரளிக்குமார், மருந்துகளை எங்கிருந்து, யார் மூலம் வாங்குகிறார் என்பதற்கான முழு விவரங்கள் இல்லை. விசாரணையில் சான்றிதழ் அனைத்தும் போலி என்பது தெரிய வந்துள்ளது. எனவே, கிளினிக் பூட்டி, 'சீல்' வைத்தோம். கலெக்டரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்,'' என்றனர்.

    முரளிக்குமார் தான் வழங்கும் மருந்துகள், மருத்துவ முறைகள் குறித்து, 'யூ டியூப்' வீடியோக்கள் பலவற்றை வெளியிட்டுள்ளார். தற்போது இவர் போலி மருத்துவர் என தெரிய வந்துள்ளதால், அவர் குறித்த வீடியோ வாக்குமூலத்தை மருத்துவக்குழுவினர் பதிவு செய்தனர். அந்த வீடியோவில், ''விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குகிறேன். யூ டியூப்பில் அப்லோடு செய்த வீடியோக்களை திரும்ப பெறுகிறேன்,'' என தெரிவித்துள்ளார். மருத்துவ துறையினர் கூறுகையில், 'முரளிக்குமார் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க போலீசில் புகார் கொடுக்கப்படும்' என்றனர்.

    • குடிநீர் வசதி, மின்வசதி ஆகிய அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டியுள்ளது.
    • கடைகாரர்கள் தாமாக முன் வந்து ஆக்கிரமிப்புகளை ஏழு நாட்களுக்குள் அகற்றி கொள்ள வேண்டும்.

    கடலூர்:

    நெல்லிக்குப்பம் நகராட்சி ஆணையாளர் பார்த்த சாரதி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    நெல்லிக்குப்பம் நகராட்சி க்குட்பட்ட 30 வார்டுகளுக்கும் சாலைவசதி, கால்வாய் வசதி, குடிநீர் வசதி, மின்வசதி ஆகிய அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டியுள்ளது. மின்சார வாரியத்திற்கு மின் கட்டணம் 0.75 லட்சம் பாக்கி உள்ளது. இந்நிலையில் வரிவிதிப்புதாரர்கள் செலுத்த வேண்டியது. சொத்துவரி நிலுவை- ரூ. 206.34 லட்சம், குழாய் கட்டணம் நிலுவை-ரூ. 37.18 லட்சம், காலிமனை வரி நிலுவை-ரூ. 41.93 லட்சம், தொழில்வரி நிலுவை-ரூ. 13.53 லட்சம், கடை வாடகை நிலுவை- ரூ. 13.22 லட்சம், எஸ்.யூ.சி. கட்டணம்-ரூ. 21.61 லட்சம், மொத்தம்-ரூ. 333.81. எனவே, மேற்படி ரூ.333.81 லட்சம் வரி மற்றும் குழாய், வரியில்லா இனங்களை 15 தினங்களுக்குள் செலுத்த வேண்டும் தவறி னால் விதிகளின்படி ஜப்தி, குழாய் இணைப்பு துண்டிப்பு, கடையை பூட்டி சீல் வைப்பு நடவ டிக்கை மேற்கொள்ள நட வடிக்கை எடுக்கப்படும்.

    அனுமதியற்ற குழாய் இணைப்புகளுக்கு தாமாக முன்வந்து நகராட்சிக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்தி ஒழுங்குபடுத்தி கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், ஆலை ரோட்டில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுவதால் கடை காரர்கள் தாமாக முன் வந்து ஆக்கிரமிப்புகளை ஏழு நாட்களுக்குள் அகற்றி கொள்ள வேண்டும். தவறினால் நகராட்சி சார்பில் ஆக்கிரமி ப்புகளை அகற்ற நேரிடும் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. சொத்துவரி குறைக்க வேண்டுபவர்கள் நகராட்சி விதிகளின்படி 2022-2023 முதல் அரையாண்டுக்கான தொகை முழுவதும் செலுத்தி ஆணையருக்கு விண்ணப்பிக்கும் படியும் கோரப்படுகிறது. பொது மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்திட நகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறி உள்ளார். 

    • அந்தியூர் அடுத்த பர்கூரில் சம்பவத்தன்று பர்கூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
    • பவானி காடையாம்பட்டி பகுதியில் களஞ்சியம் என்கிற வஜ்ரவேலுக்கு சொந்தமான டீக்கடையையும் பவானி வருவாய் துறையினர் மற்றும் போலீசார் பூட்டி சீல் வைத்தனர்.

    பவானி:

    அந்தியூர் அடுத்த பர்கூரில் சம்பவத்தன்று பர்கூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த கார் மற்றும் சரக்கு வாகனம் ஆகியவற்றை நிறுத்தி சோதனை நடத்தப்பட்டது.

    சோதனையில் மக்காச்சோளம் ஏற்றி வந்த அந்த வாகனங்களின் மறைவாக 1475 கிலோ எடை கொண்ட சாக்கு மூட்டைகளில், குட்கா, ஹான்ஸ், பான் மசாலா போன்ற போதை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து இந்த சம்பவத்தில் தொடர்பு டைய பவானி அந்தியூர் ஜங்ஷன் சோதனைசாவடி வீதியை சேர்ந்த அருண் (36), திருவள்ளுவர் நகர் பகுதியில் வசிக்கும் களஞ்சியம் என்கிற வஜ்ரவேல் (53), பவானி மயிலம்பாடி கிருஷ்ணபுரம் பகுதியை சேர்ந்த ஜெகநாதன் (48), கர்நாடக மாநிலம் சி.எம்.நகரை சேர்ந்த ரமேஷ் (60), ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த திருப்பதி (32), கடத்தூர் பகுதியை சேர்ந்த அசோக் குமார் (35) மற்றும் சத்தியமங்கலம் கோவிந்தராஜபுரம் பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்கிற கவுதம் (31) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடம் இருத்து ரூ.13 லட்சம் மதிப்பிலான போதை பொருட்கள் 1475.5 கிலோ பறிமுதல் செய்தனர்.

    இது போன்ற குற்றத்தில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவுபடி பவானி காடையாம்பட்டி பகுதியில் களஞ்சியம் என்கிற வஜ்ரவேலுக்கு சொந்தமான டீக்கடையையும் பவானி வருவாய் துறையினர் மற்றும் போலீசார் பூட்டி சீல் வைத்தனர்.

    • 50 குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல்
    • போலீஸ் எச்சரிக்கை

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் கடைகளில், ஆலங்காயம் போலீசார் நேற்று தடை செய்யப்பட்டுள்ள குட்கா மற்றும் பான் மசாலா விற்பனை செய்யப்ப டுகிறதா என்று சோதனை மேற்கொண்டனர்.

    குட்கா விற்பனை

    அப்போது நிம்மியம்பட்டு பகுதியில் பெட்டி கடைகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு கடையில் பதுக்கி வைத்திருந்த 50 குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து போதைப் பொருள் விற்பனை செய்த கடை உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    கடைகளுக்கு சீல்

    வருவாய் துறையினருக்கு போலீசார் பரிந்துரைத்ததின் பேரில், வாணியம்பாடி தாசில்தார் சம்பத், ஆலங்காயம் வருவாய் ஆய்வாளர் ராணி, கிராம நிர்வாக அலுவலர் சர்குணகுமார் உள்ளிட்டோர் அடங்கிய வருவாய் துறையினர், பெட்டி கடைக்கு சீல் வைத்தனர்.

    மேலும், ஆலங்காயம் சுற்றுவட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது, தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஆலங்காயம் இன்ஸ்பெக்டர் பழனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • தாசில்தார் அதிரடி
    • எஸ்.பி.க்கு வந்த தகவலையடுத்து அதிகாரிகள்சோதனை நடத்தினர்

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர்ந்து குட்கா, பான்பராக், கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில், அவரது உத்தரவின் அடிப்படையில் வாணியம்பாடி பகுதியில் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, வாணியம்பாடி-நேதாஜி நகர், மில்லத் நகர் பகுதியில் உள்ள 3 கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா உள்ளிட்டவை போதைப் பொருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து வாணியம்பாடி தாசில்தார் சம்பத் மற்றும் போலீசார் குட்கா போன்ற போதை பொருட்களை பறிமுதல் செய்து கடைக்கு சீல் வைத்தனர்.

    ×