search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சர்வதேச மாநாடு"

    • திறமையான தன்னியக்கத்திற்கான தொழில்நுட்ப மேலாண்மை சமூகத்தில் தொழில்கள் பற்றி விளக்கினார்.
    • 120 ஆய்வுக்கட்டுரைகள் பெறப்பட்டு, 86 கட்டுரைகள் விளக்கக்காட்சிக்கு தேர்வு செய்யப்பட்டன

    நாகர்கோவில் :

    அஞ்சுகிராமம் அருகே உள்ள ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் கணித்தல், தானியங்கி, மேலாண்மை பொருளாதாரம் மற்றும் பயன்பாட்டு சமூக அறிவியலில் உள்ள போக்குகள் தொடர்பான சர்வதேச மாநாடு நடைபெற்றது. கல்லூரி தலைவர் நீலமார்த்தாண்டன், துணை தலைவர் நீலவிஷ்ணு, நிர்வாக இயக்குனர் பிளஸ்ஸி ஜியோ ஆகியோர் தலைமை தாங்கினர்.

    கல்லூரி முதல்வர் ராஜேஷ், இணை பேராசிரியர்கள் டாக்டர் பெனிஷா, டாக்டர் எம்.ரெஜி கருத்துரை வழங்கினர்.

    ஸ்ரீனிவாஸ் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர்.பி.எஸ்.ஐத்தல் தலைமை விருந்தினராக பங்கேற்றார். அவர், இந்தியாவில் உள்ள ஆராய்ச்சி ஆய்வகங்கள் பற்றிய விழிப்புணர்வு அளித்து மாணவர்கள் ஆராய்ச்சியை தொடர தூண்டினார். திறமையான தன்னியக்கத்திற்கான தொழில்நுட்ப மேலாண்மை சமூகத்தில் தொழில்கள் பற்றி விளக்கினார்.

    மேற்கு வங்காளம் ராய்கஞ்ச் பல்கலைக்கழகத்தின் டாக்டர் பி.கே. பால், பங்களாதேஷ் பேகம் ரோகேயா பல்கலைக்கழகத்தின் டாக்டர் வஸ்செட், டாக்டர்.நீல் பி.பால்பா மற்றும் பலர் விழாவில் கருத்துரை வழங்கினர். பேராசிரியர் சஞ்சு நன்றி கூறினார்.

    கருத்தரங்கில் பல்வேறு தொழில்துறை, கல்வித்துறை சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு கல்லூரிகளை சார்ந்த இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்கள் ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்தனர். சுமார் 120 ஆய்வுக்கட்டுரைகள் பெறப்பட்டு, 86 கட்டுரைகள் விளக்கக்காட்சிக்கு தேர்வு செய்யப்பட்டன. இக்கருத்தரங்கில் கல்லூரி துணை முதல்வர் ஜெயக்குமார் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ரோகிணி பொறியியல் கல்லூரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • சுமார் 150-க்கும் மேற்பட்டோர் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.
    • ஏற்பாடுகளை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

    நாகர்கோவில் :

    அஞ்சுகிராமம் ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை சார்பில் தானியங்கி, நுண்ணறிவு கணினி மற்றும் தகவல்தொடர்பு தொடர்பான சர்வதேச மாநாடு நடைபெற்றது. கல்லூரி தலைவர் நீல மார்த்தாண்டன், துணை தலைவர் நீல விஷ்ணு, நிர்வாக இயக்குனர் பிளஸ்ஸி ஜியோ ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி முதல்வர் ராஜேஷ் முன்னிலை வகித்தார்.

    டாக்டர் ஸ்ரீ தேவி சிறப்பு விருந்தினர்களை வரவேற்றார். மாநாட்டின் கருப்பொருள் மற்றும் நோக்கத்தை பேராசிரியர் மோகனலட்சுமி வெளி யிட்டார்.

    பேராசிரியர் ரெஜி தலைமை விருந்தினரை அறிமுகப்படுத்தினார். பேராசிரியர் பி.சுபோதா அமர்வு நபர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

    நூருல் இஸ்லாம் உயர் கல்வி மையம் பேராசிரியர் எச்.வென்னிலா, பேராசிரி யர்கள் முத்துமணிகண்டன், யு.டி.எஸ்.பிள்ளை ஆகியோர் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி, ஆட்டோ மேஷன் தொழில்நுட்பத்தின் ஆட்டோமேஷன் மற்றும் தேவை குறித்து எடுத்துரைத்தார். டாக்டர். யு.டி.எஸ்.பிள்ளை இந்தியாவில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர். மற்றும் அதன் ஆராய்ச்சி ஆய்வகங்கள் பற்றிய விழிப்புணர்வை அளித்து மாணவர்களை ஆராய்ச்சியை தொடர அறிவுரைகளை வழங்கினர். பெனிஷா நன்றி கூறினார்.

    மேலும் கருத்தரங்கில் பல்வேறு தொழில்துறை, கல்வித்துறை சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு கல்லூரிகளை சார்ந்த இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்கள் ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்தனர். சுமார் 150-க்கும் மேற்பட்டோர் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

    • சிவில் என்ஜினீயரிங் மற்றும் வேதியல் துறை இணைந்து நடத்திய சுற்றுச்சூழலின் நிலைத்தன்மை குறித்த சர்வதேச மாநாடு
    • ஆசிரியர்கள், மாணாக்கர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    நாகர்கோவில் :

    சுங்கான்கடை தூய சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் சிவில் என்ஜினீயரிங் மற்றும் வேதியல் துறை இணைந்து நடத்திய சுற்றுச்சூழலின் நிலைத்தன்மை குறித்த சர்வதேச மாநாடு நடைபெற்றது. இதில் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தை சார்ந்த சிவில் என்ஜினீயரிங் துறை தலைவர் ரமேஷ், மலேசிய சர்வதேசிய பல்கலைக்கழகத்திலிருந்து டாக்டர் அப்துல் மன்னன், தொழில்நுட்ப ஆராட்சி கவுண்சிலின் முதன்மை விஞ்ஞானி ராஜன் மற்றும் மார்க் ஐ.பி. சர்விஸ் நிர்வாக அதிகாரி ஆறுமுகம் பாண்டுரங்கன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    இம்மாநாட்டில் சுற்றுசூழலின் நிலைத்தன்மை குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் மரிய வில்லியம், முதல்வர் மகேஷ்வரன் மற்றும் நிதிகாப்பாளர் பிரான்சிஸ் சேவியர் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி மாநாட்டு செயலர்கள் ஜெர்லின் ரெஜின், சுகாசினி மற்றும் ஜட்சன் ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் சிவில் மற்றும் வேதியல் துறை ஆசிரியர்கள், மாணாக்கர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    • தேர்தலில் நேர்மையை உறுதி செய்வது குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.
    • 11 நாடுகளைச் சேர்ந்த 50 பார்வையாளர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

    தேர்தல் மேலாண்மை அமைப்பின் பங்கு குறித்த இரண்டு நாள் சர்வதேச மாநாட்டை இந்திய தேர்தல் ஆணையம் நடத்துகிறது. டெல்லியில் நாளை தொடங்கும் இந்த மாநாட்டை தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். இந்த மாநாட்டின் நிறைவு அமர்வுக்கு தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே தலைமை தாங்குகிறார். 

    உலகெங்கிலும் தேர்தல்களை நடத்துவது தொடர்பான தேர்தல் மேலாண்மை அமைப்புகள் மற்றும் அரசுப் பிரதிநிதிகள், யுஎன்டிபி போன்ற அமைப்புகளுக்கும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆர்மீனியா, மொரிஷியஸ், நேபாளம், சிலி, கிரீஸ், பிலிப்பைன்ஸ் உட்பட 11 நாடுகளைச் சேர்ந்த 50 பார்வையாளர்கள் இதில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் டெல்லியில் உள்ள பல நாடுகளின் தூதரகங்களை சேர்ந்த பிரநிதிகளும் இதில் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டில் முதல் இரண்டு அமர்வுகள் தேர்தல் நேர்மையை உறுதி செய்வது மற்றும் தற்போதைய மற்றும் எதிர்கால சவால்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

    ×