search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரோகிணி பொறியியல் கல்லூரியில் சர்வதேச மாநாடு
    X

    ரோகிணி பொறியியல் கல்லூரியில் சர்வதேச மாநாடு

    • திறமையான தன்னியக்கத்திற்கான தொழில்நுட்ப மேலாண்மை சமூகத்தில் தொழில்கள் பற்றி விளக்கினார்.
    • 120 ஆய்வுக்கட்டுரைகள் பெறப்பட்டு, 86 கட்டுரைகள் விளக்கக்காட்சிக்கு தேர்வு செய்யப்பட்டன

    நாகர்கோவில் :

    அஞ்சுகிராமம் அருகே உள்ள ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் கணித்தல், தானியங்கி, மேலாண்மை பொருளாதாரம் மற்றும் பயன்பாட்டு சமூக அறிவியலில் உள்ள போக்குகள் தொடர்பான சர்வதேச மாநாடு நடைபெற்றது. கல்லூரி தலைவர் நீலமார்த்தாண்டன், துணை தலைவர் நீலவிஷ்ணு, நிர்வாக இயக்குனர் பிளஸ்ஸி ஜியோ ஆகியோர் தலைமை தாங்கினர்.

    கல்லூரி முதல்வர் ராஜேஷ், இணை பேராசிரியர்கள் டாக்டர் பெனிஷா, டாக்டர் எம்.ரெஜி கருத்துரை வழங்கினர்.

    ஸ்ரீனிவாஸ் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர்.பி.எஸ்.ஐத்தல் தலைமை விருந்தினராக பங்கேற்றார். அவர், இந்தியாவில் உள்ள ஆராய்ச்சி ஆய்வகங்கள் பற்றிய விழிப்புணர்வு அளித்து மாணவர்கள் ஆராய்ச்சியை தொடர தூண்டினார். திறமையான தன்னியக்கத்திற்கான தொழில்நுட்ப மேலாண்மை சமூகத்தில் தொழில்கள் பற்றி விளக்கினார்.

    மேற்கு வங்காளம் ராய்கஞ்ச் பல்கலைக்கழகத்தின் டாக்டர் பி.கே. பால், பங்களாதேஷ் பேகம் ரோகேயா பல்கலைக்கழகத்தின் டாக்டர் வஸ்செட், டாக்டர்.நீல் பி.பால்பா மற்றும் பலர் விழாவில் கருத்துரை வழங்கினர். பேராசிரியர் சஞ்சு நன்றி கூறினார்.

    கருத்தரங்கில் பல்வேறு தொழில்துறை, கல்வித்துறை சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு கல்லூரிகளை சார்ந்த இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்கள் ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்தனர். சுமார் 120 ஆய்வுக்கட்டுரைகள் பெறப்பட்டு, 86 கட்டுரைகள் விளக்கக்காட்சிக்கு தேர்வு செய்யப்பட்டன. இக்கருத்தரங்கில் கல்லூரி துணை முதல்வர் ஜெயக்குமார் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ரோகிணி பொறியியல் கல்லூரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×