என் மலர்
உள்ளூர் செய்திகள்

அஞ்சுகிராமம் அருகே ரோகிணி பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கம்
- “சுகாதாரத்தில் இளைஞர்களின் பங்கு” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது
- நிகழ்ச்சியில் 540 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில் :
அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் அமைந்துள்ள ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் "சுகாதாரத்தில் இளைஞர்களின் பங்கு" என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. இந்த கருத்தரங்கு எஸ்.எம்.ஐ.டி.எஸ். ரோகினி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, வைகை அறக்கட்டளை, கிராமியம் பேன்சா இந்தியா, ஆகியவற்றுடன் இணைந்து விஸ்வ யுவக் கேந்திரா ஆகியவை சார்பில் நடத்தியது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் நீல மார்த்தாண்டன், துணை தலைவர் நீல விஷ்ணு, நிர்வாக இயக்குனர் பிளஸ்ஸி ஜியோ ஆகியோர் தலைமை தாங்கினர். வேளாண்மை பொறியியல் துறையின் எச்.ஓ.டி. கிருஷ்ணவேணி வரவேற்று பேசி னார். கல்லூரி முதல்வர் ராஜேஷ் முன்னிலை வகித்து தலைமையுரையாற்றினார். விஸ்வ யுவக் கேந்திரா திட்ட அலுவலர் ரஜத் தாமஸ் சிறப்புரையாற்றினார். வைகை அறக்கட்டளை இயக்குனர் அண்ணாதுரை சிறப்புரையாற்றினார்.
ரோகிணி பொறியியல் கல்லூரி, வைகை அறக்கட்டளை, கிராமியம் மற்றும் எஸ்.எம்.ஐ.டி. ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. தொழில்நுட்ப மூத்த சுகாதார ஆலோசகர் பாபு தண்ணீர் சுகாதாரம் மற்றும் சுகாதாரத்தில் இளைஞர்களின் பங்கை விரிவாக விளக்கினார். நிகழ்ச்சியில் 540 மாணவர்கள் கலந்து கொண்டனர்.






