search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுமக்கள் கோரிக்கை"

    • செல்லூர் மீனாம்பாள்புரத்திற்கு மாற்று வழியாக பேருந்தை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
    • ஜவுளி நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் பேருந்து சேவை இல்லாததால் மிக–வும் சிரமப்பட்டு வரு–கின்றனர்.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக் டர், எம்.எல்.ஏ., தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் ஆகியோருக்கு 25-வது வார்டு பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மாநகராட்சி 25-வது வார்டுக்குட்பட்டது செல்லூர் மீனாம்பாள்புரம். மதுரை பொன்மேனி பணிமனையில் இருந்து மீனாம் பாள்புரத்திற்கு (வழித்தட எஎண் 6 ஏ) அனுப்பானடியில் இருந்து பல வருடங்களாக அரசுப்பேருந்து வந்து கொண்டிருந்தது. கொரோனா பாதிப்பால் பேருந்து சேவை நிறுத்தப்பட் டது.

    பல மாதங்களாக பேருந்து சேவை இல்லாமல் இப்பகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் இருந்து கேந்திரிய வித்யா–லாயா பள்ளி, ஓ.சி.பி.எம். பள்ளி, நாய்ஸ் பள்ளி, டோக் பெருமாட்டி மகளிர் கல்லூரி, மீனாட்சி மகளிர் கல்லூரி, அமெரிக்கன் கல்லுாரி, செயின்ட்மேரிஸ் பள்ளி, சௌராஸ்டிரா பள்ளி, கிறிஸ்டியன் மிஷன் மருத்துவனை, தியாகராஜர் கல்லூரி, ராஜாஜி மருத்துவமனை செல்லும் நோயாளிகள், வேலைக்கு செல்லும் அலுவ–லர்கள் கூலி தொழிலாளர் கள் மற்றும் கடைகள் ஜவுளி நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் பேருந்து சேவை இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் நலன் கருதி அரசுப்பேருந்தை பி.டி.ராஜன் ரோடு, பீ.பி.குளம் வழியாக மீனாம்பாள்பு–ரத்திற்கு மாற்று வழியில் இயக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • தற்போது சாரல் மழை பெய்து வருகிறது. தற்போது வகுப்பறையில் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்கின்றது.
    • மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கடத்தூர்,

    தருமபுரி மாவட்டம், கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தாளநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அப்பகுதிகளை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர்.

    பள்ளி மாணவர்களின் வகுப்பறையில் மேல் பகுதி பக்கவாட்டு சுவர்களில விரிசல்களில் லேசான மழைக்குக்கூட தாக்கு பிடிக்காமல் பழுதடைந்த கட்டிடம் உள்ளது.

    இந்த நிலையில் தற்போது சாரல் மழை பெய்து வருகிறது. தற்போது வகுப்பறையில் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்கின்றது.

    இதனால் பள்ளி மாணவர்கள் கடும் அவதிபட்டு வருகின்றனர். இவற்றை முறையாக சீர் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு முறை பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பில் கல்வி துறை அதிகாரிகளுக்கு கோரிக்கைகள் விடுத்துள்ளனர்.

    ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் உள்ள நிலையில் அப்பகுதியில் உள்ள கிராமபகுதி மாணவ, மாணவியர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இதற்கு மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • பசுமை சாலை பாலைவனமவதாக புகார்
    • வாகனங்களை காத்திருக்க வைப்பதாக வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டு

    அணைக்கட்டு:

    வேலூர் முதல் ஒடுகத்தூர் வரை சலையின் இருபுறமும் பசுமையாகவும், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு நிழலாகவும் குளிர்ச்சியாகவும் காற்றோட்டம் நிறைந்ததாகவும் காட்சியளிக்கின்ற புளிய மரங்கள் இவை சுமார் 100 ஆண்டுகள் பழமையானதாக கூறப்படுகின்றது.

    தற்போது சாலை விரிவாக்கம் பணியல் ஒரு சில மரங்களை வெட்ட அனுமதி வழங்கி விட்டு கூடுதலாக மரங்களை வெட்டி வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றன.

    இதனால் அதிகமான மரங்கள் வெட்டி கடத்தப்படுவதாகவும், பசுமை நிறைந்து காணப்படும் சாலையில் தற்போது வெயில் மட்டுமே சுட்டெரிக்கிறது. இதனால் அவ்வளியாக செல்லும் வாகன் ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளகி வருகின்றனர்.

    மேலும் மரங்களை வெட்டும் போது அவ்வழியாக செல்லும் வாகனங்களை சுமார் 15 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை காத்திருக்க வைப்பதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

    எனவே அனுமதி வழங்கிய மரங்களை மட்டுமே வெட்ட வேண்டும் பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கு எவ்வித இடையூறு இல்லாமல் வெட்ட வேண்டும் பசுமையாக இருக்கும் சாலையை பாலைவனமாக மாற்ற வேண்டாம் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • ஆரணி பகுதியில் சப்ளை பாதிப்பு
    • உடனடியாக சரி செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பாலாற்றில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் அதிக அளவு குடிநீர் உறிஞ்சும் கிணறுகள் கட்டப்பட்டுள்ளது.

    செய்யாறு சாலையில் உள்ள பாலாற்றில் ஆரணி நகராட்சி குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ், குடிநீர் உறை கிணறு 2016-2017-ம் ஆண்டு கட்டப்பட்டது.

    இந்த கிணற்றில் இருந்து தினமும் ஆரணி நகராட்சி மற்றும் கிராம பகுதிகளுக்கு குழாய் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.

    இந்த உறை கிணற்றிலிருந்து தண்ணீர் சப்ளை செய்யப்படும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. உடைந்த குழாய் வழியாக தினமும் அதிக அளவு தண்ணீர் வெளியேறி வீணாகுகிறது.

    இதனால் ஆரணி பகுதியில் பல கிராமங்க ளுக்கு குடிநீர் சப்ளை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதி அடைகின்றனர். பொதுமக்களின் நலன் கருதி உடைந்த குழாயை உடனடியாக சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கர்ப்பிணிகள், நோயாளிகள் மருத்துவ சிகிச்சைக்கு சின்னாங்குப்பம் மருத்துவமனைக்கே செல்ல வேண்டி உள்ளது.
    • இவ்வழியாக பேருந்துகள் ஏதும் இயக்கப்படுவதில்லை.

    அரூர்,

    தருமபுரி மாவட்டம், அரூர் ஒன்றியத்திற்குட்பட்ட அச்சில்வாடி, பே.தாதம்பட்டி, ஒடசல்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து கூக்கடப்பட்டி, புதுார் வழியாக சின்னாங்குப்பம் செல்வதற்கு உள்ள சுமார் 5 கிலோ மீட்டர் தார்சாலை அமைந்துள்ளது. இந்த சாலை அமைத்து பல வருடங்களாகிய நிலையில் தற்போது மிகவும் பழுதடைந்துள்ளது.

    இந்த 5 கிராமங்களில் இருந்து தினசரி பணிகளுக்கு செல்லும் பணியாளர்கள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் என தினசரி 1000-ற்கும் மேற்பட்டவர்கள் சென்று வருகின்றனர்.

    கிராமப் பகுதிகள் மலைப் பகுதிகளை யொட்டி உள்ளதால் பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகளால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது தவிர கர்ப்பிணிகள், நோயாளிகள் மருத்துவ சிகிச்சைக்கு சின்னாங்குப்பம் மருத்துவமனைக்கே செல்ல வேண்டி உள்ளது.

    பிரசவ நேரங்களில் பாதிக்கப்பட்டவர்களை குறிப்பிட்ட நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்து செல்வது மிகவும் சவாலாக உள்ளது. இது தவிர கோபிநாதம்பட்டி கூட்ரோடு பகுதியில் அமைந்துள்ள காவல் நிலையம் மற்றும் வார சந்தைகளுக்கு செல்ல மக்கள் மற்றும் சின்னாங்குப்பத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிக்கு செல்ல மாணவ, மாணவியர்கள் அவதியடைந்து வருகின்றனர். இவ்வழியாக பேருந்துகள் ஏதும் இயக்கப்படுவதில்லை.

    இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகள் பழுதடைந்து பல்வேறு இடங்களில் ஜல்லி பெயர்ந்து, குண்டு குழியுமாக உள்ள தார் சாலையை உடனடியாக புதுப்பித்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அரசு ஆஸ்பத்திரியை விரிவாக்கம் செய்ய 4.38 ஏக்கர் நிலத்தை இலவசமாக, சுகாதார துறைக்கு கிரயம் செய்து கொடுத்தும், இது வரை நடவடிக்கை எடுக்கவில்லை.
    • மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், உடனடியாக பணிகளை தொடங்க கோரி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அரசு மருத் துவமனையில் தீவிர சிகிச் சைப் பிரிவு விரிவாக்க பணியை உடனடியாக தொடங்கக்கோரி ஊத்தங்கரை சுற்றுவட்டார பொது மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு, மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், கடந்த ஆண்டு ஜூன் மாதம், தீவிர சிகிச்சைப் பிரிவு விரிவாக்க பணிக்கு ரூ.23.75 கோடி பிரதமரின் ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டது.

    நிதி ஒதுக்கி ஒரு வருட காலம் ஆகியும் பணிகளை துவங்காமல், இடத்தை தேர்வு செய்யாமல் மெத்தனமாக உள்ள, அரசு அதிகாரிகளை கண்டித்து அனைத்து கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    மேலும், அரசு ஆஸ்பத்திரியை விரிவாக்கம் செய்ய தனியார் பள்ளி நிறுவனங்களின் நிறுவனர் சந்திரசேகரன் 4.38 ஏக்கர் நிலத்தை இலவசமாக, சுகாதார துறைக்கு கிரயம் செய்து கொடுத்தும், இது வரை நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதற்காக மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், உடனடியாக பணிகளை தொடங்க கோரி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    இதில், ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். காட்டேரி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சேகர், ஜெயலட்சுமி, பூபதி ஆகியோர் தலைமையில், ஊத்தங்கரை சுற்றியுள்ள கிராமப் பொதுமக்கள் அனைத்துக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • இதுவரை ராயக்கோட்டை ஹவுசிங் போர்டு பகுதியில் ஒரு இடத்தில் கூட புதிய சாலை அமைக்கப்படவில்லை
    • குண்டும் குழியுமான சாலையில் தினம் தோறும் நடந்தும் இருசக்கர வாகனங்களிலும் செல்லும் பொதுமக்கள் விபத்துக்களை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

    ஓசூர்,

    தொழில் நகரமான ஓசூர் பகுதி மாநகராட்சி அந்தஸ்து பெற்று பல ஆண்டுகள் கடந்தும் இன்று வரை நகரின் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உரிய அளவில் செய்து கொடுக்கப்படவில்லை என்பது ஓசூர் பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்களின் வேதனையாக உள்ளது. அந்த அளவுக்கு ஓசூர் பகுதிகளில் சாலை வசதி, குடிநீர் வசதி மற்றும் இதர கட்டமைப்பு வசதிகள் போதிய அளவில் இல்லாத நிலையில் உள்ளது.

    இந்த நிலையில் ஓசூர் மாநகராட்சி 41-வது வார்டு ராயக்கோட்டை ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள 29, 34, 36, 37, 38, 39, 40, 41 என 8 தெருக்களில் சாலைகள் குண்டும், குழியுமாக மக்கள் பயன்படுத்த முடியாத அவல நிலையில் காணப்படுகிறது.

    இது தவிர அப்பகுதியில் , சாக்கடை கால்வாய்கள், பூங்கா ஆகியவை பராமரிக்கப்படாமல் பல ஆண்டுகளாக கிடக்கிறது. ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டும் தண்ணீர் வருவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். ராயக்கோட்டை ஹவுசிங் போர்டு பகுதியில் புதிய சாலைகளை அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் ஓசூர் மாநகராட்சி நிர்வாகத்திடம் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு கோரிக்கை மனு அளித்தனர். அதனை ஏற்ற மாநகராட்சி அதன் பின்பு நடைபெற்ற மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி புதிய சாலைகளை அமைக்க 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.

    நிதி ஒதுக்கி 5 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை ராயக்கோட்டை ஹவுசிங் போர்டு பகுதியில் ஒரு இடத்தில் கூட புதிய சாலை அமைக்கப்படவில்லை,

    குண்டும் குழியுமான சாலையில் தினம் தோறும் நடந்தும் இருசக்கர வாகனங்களிலும் செல்லும் பொதுமக்கள் விபத்துக்களை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் தேங்கும் குப்பைகள் மற்றும் கழிவு நீரால் கடும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாய நிலையும் உருவாகி உள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக அப்பகுதியில் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும், இல்லையெனில் மாநகராட்சி முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அப்பகுதி பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • மக்கள் கடந்த ஐம்பது ஆண்டு காலமாக கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தனர்.
    • பல நூறு லோடு லாரி மண் இக்குளத்தில் இருந்து கடத்தப்படுவதாக பொதுமக்கள் சிலர் குற்றச்சாட்டு எழுப்பி உள்ளனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், வடமதுரை ஊராட்சி, எர்ணாகுப்பம் கிராமத்தில், சின்ன ரெட்டி குளம் ஒன்று உள்ளது. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2 கீழ் ரூ.15 லட்சத்து 40 ஆயிரம் நிதியில் இக்குளத்தை மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    இக்குளத்தை தூர்வாரி படிக்கட்டுகள் அமைத்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என இப்பகுதி மக்கள் கடந்த ஐம்பது ஆண்டு காலமாக கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தனர். இந்நிலையில், இப்பணி தற்போது நடைபெற்று வருகிறது. ஆனால், இந்த குளத்தை தூர்வாரும் பணி மேற்கொள்வதாக கூறி பல நூறு லோடு லாரி மண் இக்குளத்தில் இருந்து கடத்தப்படுவதாக பொதுமக்கள் சிலர் குற்றச்சாட்டு எழுப்பி உள்ளனர்.

    மேலும், 46 மீட்டர் அகலம், 44 மீட்டர் நீளம், மூணே கால் மீட்டர் அகலம், உள் ஆழம் இரண்டரை மீட்டர் என இக்குளம் அமைக்க வேண்டும். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் இங்கு நடைபெறும் பணியை பார்வையிட்டு கால்நடைகளான ஆடு, மாடு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக பயன்படுத்தும் வகையில் இக்குளத்தை மேம்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கண வாய்புதூர் ஊராட்சி, இந்த ஊராட்சி உட்பட்ட நாராயணபுரம் இந்திரா நகர் பகுதியில் 100-க்கு குடியிருப்புகள் உள்ளன.
    • 3 மீட்ட ருக்கு அப்பால் நீர்தேக்கத் ெதாட்டி கட்டப்பட்டு மக்க ளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் காடை யாம்பட்டி ஊராட்சி ஒன்றி யத்திற்குட்பட்ட கண வாய்புதூர் ஊராட்சி, இந்த ஊராட்சி உட்பட்ட நாராயணபுரம் இந்திரா நகர் பகுதியில் 100-க்கு குடியிருப்புகள் உள்ளன.

    இந்நிலையில் நாராயண புரம் பஸ் நிறுத்தம் அருகில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு. 3 மீட்ட ருக்கு அப்பால் நீர்தேக்கத் ெதாட்டி கட்டப்பட்டு மக்க ளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த இடைப்பட்ட பகுதியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பைப்லைன் பழுத டைந்து. பைப்லைன் சரி செய்யாமல் காலம் தாமதம் செய்ததால். தண்ணீர் வீணாக அருகில் உள்ள தோட்டத்திற்கு செல்லுகிறது.

    எனவே ஊராட்சி நிர்வா கம் நடவடிக்கை எடுத்து பழுதடைந்த பைப் லைனை சரி செய்து மக்களுக்கு தேவையான நீரை வழங்க நடவடிக்கை எடுக்கும்படி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இக்கோரிக் கைக்கு நடவ டிக்கை எடுக்க வில்லை என்றால் சாலை மறியல் செய்வதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    • நிழற்குடையை மறைத்து தனியார் சார்பில் பதாகை வைக்கப்பட்டுள்ளது.
    • மர்ம ஆசாமிகள் நிழற்குடையை சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

    உடுமலை :

    உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் பகுதியில் பயணிகள் நிழற்குடை உள்ளது. பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கட்டப்பட்ட இந்த நிழற்குடை போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால் அதில் பொரு த்தப்பட்ட இருக்கைகள் சேதம் அடைந்து வருவதுடன் நிழற்குடையை சுற்றிலும் புதர்மண்டி காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள் அதை பயன்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகை யில்;-

    பஸ்சுக்காக காத்துக் கொண்டிருக்கும் பொது மக்களை இயற்கை சீற்றத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. சிறிது காலம் பயன்பாட்டில் இருந்து வந்த நிழற்குடை போதிய பராமரிப்பின்மை காரணமாக சேதம் அடைந்து வருகிறது. மேலும் நிழற்குடையைச் சுற்றிலும் புதர்மண்டி உள்ளதுடன் இருக்கைகளும் சேதம் அடைந்து உள்ளது. இந்த சூழலில் நிழற்குடையை மறைத்து தனியார் சார்பில் பதாகை வைக்கப்பட்டுள்ளது. இதை சாதகமாக கொண்டு மர்ம ஆசாமிகள் நிழற்குடையை சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலை ஒட்டியவாறு காத்திருக்க வேண்டி உள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக விபத்துக்கள் ஏற்படும் சூழலும் நிலவு கிறது.

    பராமரிப்பு இல்லாமல் உள்ள பயணிகள் நிழற்குடையை சீரமைத்தும் அதன் முன்பாக வைக்கப்பட்டுள்ள பதாகைகளை அகற்று வதற்கும் அதிகாரிகள் முன் வந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கோவில் வருமானத்தை பெற்று கொண்டு கோவிலைமுறையாக பராமரிப்பதில்லை என பக்தர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
    • பலமுறை பக்தர்கள் இந்து அறநிலையத் துறை அதிகாரிகளிடம் கோவில் சிற்பங்களை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த கோரிக்கை வைத்தனர்.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் பழமைவாய்ந்த பிரசித்தி பெற்ற தர்மராஜாகோவில் கடைத்தெருவில் அமைந்து ள்ளது.

    12 கிராம மக்கள், உள்ளுர், வெளியூர், வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநிலத்திலிருந்து லட்சகணக்கான பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.

    இதனால் பல லட்சம் ரூபாய் இந்து அறநிலைய துறைக்கு காணிக்கையாக கிடைக்கிறது. கோவில் வருமானத்தை பெற்று கொண்டு கோவிலைமுறையாக பராமரிப்பதில்லை என பக்தர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    இக்கோவில் கடந்த 50 வருடங்களுக்கு முன்னர் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில் தற்போது கோபுரம் மற்றும் அதில் உள்ள சிற்பங்கள் சிதிலமடைந்து உடைந்து விழுந்து வருகிறது.

    பலமுறை பக்தர்கள் இந்து அறநிலையத் துறை அதிகாரிகளிடம் கோவில் சிற்பங்களை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த கோரிக்கை வைத்தனர். ஆனால்அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தர்மராஜா கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    புத்தனாறு கால்வாயை தூர்வாரி கழிவுகளை கரையோரத்தில் கொட்டுவதை தடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
    கன்னியாகுமரி, ஜூன். 1-

    குமரி மாவட்டத்தில் 2-ம் போக சாகுபடியான குங்குமப்பூ சாகுபடி முடிந்து அறுவடைகள் நிறைவடைந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் பேச்சிப்பாறை,  பெருஞ்சாணி அணைகள் மூடப்பட்டன. இதனால் நீர் வரத்தின்றி ஆறு, கால்வாய், குளங்கள் வறண்டு கிடக்கின்றன.  

    இந்த நிலையில் முதல் போக கன்னிப்பூ சாகுபடி க்காக பேச்சிப்பாறை அணை விரைவில் திறக்கப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து குமரி மாவட்டத்தின் மிக நீளமான கால்வாயான நாஞ்சில் நாடு புத்தனாறு கால்வாய் எனப்படும் என்.பி. கால்வாய்  ரூ.25 லட்சம் செலவில் தூர்வாரி சீரமைக்கப்பட்டு வருகிறது. 

    கால்வாய் தொடங்கும் சீதப்பால்அருகே உள்ள சாட்டுப்புதூர் பகுதியில் இருந்து கொட்டாரம் மேட்டுக்கால் மற்றும் பள்ளக்கால் பகுதிவரை கால்வாயின் இருபுறமும் வளர்ந்துள்ள செடி கொடி கள் அகற்றப்பட்டன. 

    இதில் கொட்டாரம் முதல் பொற்றையடி வரை உள்ள பகுதியில் தூர்வாரப்பட்ட குப்பைகள், கழிவுகள் மற்றும் சகதியை நாகர்கோவில்- கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையின் ஒரத்தில் ஆங்காங்கே கொட்டி வைத்து உள்ளனர். இந்தகுப்பைகள் கொட்டப்பட்டு ஒரு மாதத்து க்கு மேல் ஆகிறது. 
    இதனால் அந்த பகுதி யில் துர்நாற்றம் வீசுவ தோடு, போக்குவரத்துக்கும் இடையூறாக இருந்து வரு கிறது. மேலும் விபத்து க்கள் ஏற்பட்டு ஆற்றில் வாகனங்கள் கவிழும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. 

    மேலும் மழை பெய்தால் ரோட்டோரத்தில் கொட்டி வைக்கப்பட்டுள்ள குப்பை கூளங்கள் மீண்டும் கால்வாயிலேயே விழும் நிலை உள்ளது. 
    எனவே கால்வாயை தூர்வாரி ரோட்டோரத்தில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும். ஏற்க னவே கொட்டப்பட்ட கழிவு களை அங்கிருந்து அகற்ற பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதார அமைப்பைச்சேர்ந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    ×