என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஊத்தங்கரை அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவு விரிவாக்க பணியை தொடங்க பொதுமக்கள் கோரிக்கை
- அரசு ஆஸ்பத்திரியை விரிவாக்கம் செய்ய 4.38 ஏக்கர் நிலத்தை இலவசமாக, சுகாதார துறைக்கு கிரயம் செய்து கொடுத்தும், இது வரை நடவடிக்கை எடுக்கவில்லை.
- மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், உடனடியாக பணிகளை தொடங்க கோரி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அரசு மருத் துவமனையில் தீவிர சிகிச் சைப் பிரிவு விரிவாக்க பணியை உடனடியாக தொடங்கக்கோரி ஊத்தங்கரை சுற்றுவட்டார பொது மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு, மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், கடந்த ஆண்டு ஜூன் மாதம், தீவிர சிகிச்சைப் பிரிவு விரிவாக்க பணிக்கு ரூ.23.75 கோடி பிரதமரின் ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டது.
நிதி ஒதுக்கி ஒரு வருட காலம் ஆகியும் பணிகளை துவங்காமல், இடத்தை தேர்வு செய்யாமல் மெத்தனமாக உள்ள, அரசு அதிகாரிகளை கண்டித்து அனைத்து கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
மேலும், அரசு ஆஸ்பத்திரியை விரிவாக்கம் செய்ய தனியார் பள்ளி நிறுவனங்களின் நிறுவனர் சந்திரசேகரன் 4.38 ஏக்கர் நிலத்தை இலவசமாக, சுகாதார துறைக்கு கிரயம் செய்து கொடுத்தும், இது வரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இதற்காக மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், உடனடியாக பணிகளை தொடங்க கோரி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இதில், ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். காட்டேரி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சேகர், ஜெயலட்சுமி, பூபதி ஆகியோர் தலைமையில், ஊத்தங்கரை சுற்றியுள்ள கிராமப் பொதுமக்கள் அனைத்துக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






