search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public insistence"

    • நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
    • உடல் நிலை பாதிக்கும் அபாயம் உள்ளதாக குற்றச்சாட்டு

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அடுத்த சு.பள்ளிப்பட்டு கிராமத்தில் உள்ள தர்மபுரி மேம்பாலத்தின் கீழ் குப்பையில் உணவு பொருட்களை மர்ம கும்பல் வீசி சென்றுள்ளனர். அதில்,

    குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பிஸ்கட்டுகள், கம்பெனி சிப்ஸ் வகைகள், டூத் பேஸ்ட், குளிர்பானங்கள் மற்றும் மளிகைப்பொ ருட்கள் ஏராளமான பாக்கெட்டுகள் கிடந்தன.

    இதையறிந்த அப்பகுதி மக்கள் அவற்றை எடுத்து செல்ல அருகே சென்று பார்த்தனர். அப்போது, அவை அனைத்தும் காலாவதியானது என்பது தெரியவந்தது. எனவே,' அவற்றை அங்கேயே விட்டுவிட்டு சென்றனர்.

    அவ்வழியாக செல்லும் குழந்தைகள் குப்பையில் வீசப்பட்டுள்ள அந்த உணவு பொருட்களை எடுத்து சாப்பிட வாய்ப்பு உள்ளது. இதன் காரண மாக அவர்களுக்கு உடல் நிலை பாதிக்கும் அபாயமும் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே அவற்றை பார்வையிட்டு அப்புறப்படுத்த வேண்டும்.

    மேலும், காலாவதியான உணவு பொருட்களை குப்பையில் வீசி சென்ற மர்ம கும்பலை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கட்டப்படுகிறது
    • பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் பேரூராட்சியில் நவீன வசதிகளுடன் கூடிய காரியமேடை அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.

    அதன்படி ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் காரிய மேடை அமைக்க கண்ணமங்கலம் பேரூராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி கோவர்த்தனன், தமது சொந்த செலவில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.6,66,700 வரைவோலையாக வேலூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் செ.கணேஷிடம் வழங்கினார்.

    மேலும் கண்ணமங்கலம் பெருமாள் கோவில் தெருவில் ஊராட்சி ஒன்றிய இந்து ஆரம்பப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு சுற்றுச்சுவர் ரூ.2.66 மதிப்பில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கட்ட ரூ.66 ஆயிரம் மதிப்பில் டிடி யும் வழங்கப்பட்டது என பேரூராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி கோவர்த்தனன் தெரிவித்தார்.

    அப்போது உதவி செயற்பொறியாளர்கள் வேலூர் அம்சா, திருவண்ணாமலை செங்குட்டுவன், கண்ணமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் முனுசாமி, இளநிலை பொறியாளர் ஷபிலால், துணை தலைவர் வி.குமார் அவர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

    • செல்லூர் மீனாம்பாள்புரத்திற்கு மாற்று வழியாக பேருந்தை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
    • ஜவுளி நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் பேருந்து சேவை இல்லாததால் மிக–வும் சிரமப்பட்டு வரு–கின்றனர்.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக் டர், எம்.எல்.ஏ., தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் ஆகியோருக்கு 25-வது வார்டு பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மாநகராட்சி 25-வது வார்டுக்குட்பட்டது செல்லூர் மீனாம்பாள்புரம். மதுரை பொன்மேனி பணிமனையில் இருந்து மீனாம் பாள்புரத்திற்கு (வழித்தட எஎண் 6 ஏ) அனுப்பானடியில் இருந்து பல வருடங்களாக அரசுப்பேருந்து வந்து கொண்டிருந்தது. கொரோனா பாதிப்பால் பேருந்து சேவை நிறுத்தப்பட் டது.

    பல மாதங்களாக பேருந்து சேவை இல்லாமல் இப்பகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் இருந்து கேந்திரிய வித்யா–லாயா பள்ளி, ஓ.சி.பி.எம். பள்ளி, நாய்ஸ் பள்ளி, டோக் பெருமாட்டி மகளிர் கல்லூரி, மீனாட்சி மகளிர் கல்லூரி, அமெரிக்கன் கல்லுாரி, செயின்ட்மேரிஸ் பள்ளி, சௌராஸ்டிரா பள்ளி, கிறிஸ்டியன் மிஷன் மருத்துவனை, தியாகராஜர் கல்லூரி, ராஜாஜி மருத்துவமனை செல்லும் நோயாளிகள், வேலைக்கு செல்லும் அலுவ–லர்கள் கூலி தொழிலாளர் கள் மற்றும் கடைகள் ஜவுளி நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் பேருந்து சேவை இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் நலன் கருதி அரசுப்பேருந்தை பி.டி.ராஜன் ரோடு, பீ.பி.குளம் வழியாக மீனாம்பாள்பு–ரத்திற்கு மாற்று வழியில் இயக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
    • அதிகாரிகள் விசாரணை

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே எருது விடும் திருவிழாவிற்கு தடையில்லா சான்றிதழ் வழங்க ஆம்பூர் தீயணைப்பு துறை அலுவலர் மேகநாதனிடம் விழா குழுவினர் சிலர் சென்றனர்.

    அப்போது பணியில் இருந்த தீயணைப்பு அலுவலர் மேகநாதன் தடையில்லா சான்றிதழை வழங்க ரூ.3 ஆயிரம் வேண்டும் என லஞ்சமாக கேட்டது போன்ற வீடியோ சமூக வளையங்களில் வைரலாக பரவியது இந்த வீடியோ ஆம்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    இது போன்ற லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது உரிய மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது சம்மந்தமாக தீயணைப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தம்பதியினர் வாக்குவாதம்
    • சமூக வளைதலங்களில் வீடியோ வைரல்.

    ஆரணி:

    திருவ ண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் மணிகூண்டு அருகில் தனியார் அசைவ ஓட்டல் இயங்கி வருகிறது.

    இந்த ஓட்டலில் நேற்று மதியம் ஆரணி அருகே நேத்தபாக்கம் கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் மட்டன் பிரியாணி சாப்பிட்டனர்.

    மேலும் மட்டன் பிரியாணி சாப்பிட்ட போது பேரதிர்ச்சியாக சாப்பிட்ட பிரியாணியில் மட்டன் துண்டுக்கு பதிலாக கரப்பான் பூச்சி கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    பின்னர் கடையின் ஊழியரிடம் தம்பதியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வீடியோ தற்போது ஆரணி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வைரலாக பரவியது. சமூக வளைதலங்களிலும் பரவி வருகின்றன.

    ஆரணியில் ஏற்கனவே சிக்கன் பிரியாணி சிக்கன் தந்தூரி சாப்பிட்டு மாணவன் ஓருவன் சிறுமி ஆகிய 2 பேர் உயிரழந்த சம்பவம் நடந்தது.

    நேற்று நடந்த இச்சம்பவத்தால் ஆரணியில் அசைவ உணவு பிரியர்கள் அதிர்ச்சியடைந் துள்ளனர். உணவு பாதுகாப்பு துறையினர் கண்துடைப்புக்கு ரெய்டு செய்யாமல் தொடர்ந்து ஆய்வு செய்து சுத்தமான முறையில் அசைவ உணவை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்களின் வலியுறுத்தி உள்ளனர்.

    ×