search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சின்ன ரெட்டி குளம் மேம்படுத்தும் பணியை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்- பொதுமக்கள் கோரிக்கை
    X

    சின்ன ரெட்டி குளம் மேம்படுத்தும் பணி நடைபெற்று வருவதை படத்தில் காணலாம்.

    சின்ன ரெட்டி குளம் மேம்படுத்தும் பணியை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்- பொதுமக்கள் கோரிக்கை

    • மக்கள் கடந்த ஐம்பது ஆண்டு காலமாக கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தனர்.
    • பல நூறு லோடு லாரி மண் இக்குளத்தில் இருந்து கடத்தப்படுவதாக பொதுமக்கள் சிலர் குற்றச்சாட்டு எழுப்பி உள்ளனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், வடமதுரை ஊராட்சி, எர்ணாகுப்பம் கிராமத்தில், சின்ன ரெட்டி குளம் ஒன்று உள்ளது. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2 கீழ் ரூ.15 லட்சத்து 40 ஆயிரம் நிதியில் இக்குளத்தை மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    இக்குளத்தை தூர்வாரி படிக்கட்டுகள் அமைத்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என இப்பகுதி மக்கள் கடந்த ஐம்பது ஆண்டு காலமாக கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தனர். இந்நிலையில், இப்பணி தற்போது நடைபெற்று வருகிறது. ஆனால், இந்த குளத்தை தூர்வாரும் பணி மேற்கொள்வதாக கூறி பல நூறு லோடு லாரி மண் இக்குளத்தில் இருந்து கடத்தப்படுவதாக பொதுமக்கள் சிலர் குற்றச்சாட்டு எழுப்பி உள்ளனர்.

    மேலும், 46 மீட்டர் அகலம், 44 மீட்டர் நீளம், மூணே கால் மீட்டர் அகலம், உள் ஆழம் இரண்டரை மீட்டர் என இக்குளம் அமைக்க வேண்டும். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் இங்கு நடைபெறும் பணியை பார்வையிட்டு கால்நடைகளான ஆடு, மாடு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக பயன்படுத்தும் வகையில் இக்குளத்தை மேம்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×