search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேச்சுப்போட்டி"

    • கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தகவல்
    • அண்ணா, பெரியார் பிறந்தநாளையொட்டி நடத்தப்பட்டது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பேரறிஞர்அண்ணா மற்றும் தந்தைபெரியார் ஆகியோரின் பிறந்தநாளை யொட்டி குமரி மாவட்டத்தில் கடந்த 15 மற் றும் 17 ஆகிய தேதிகளில் நாகர்கோவில் டதி பள்ளியில் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது. பள்ளிகளின் சார்பில் 40 பேரும், கல்லூரிகள் சார்பில் 15 பேரும் கலந்து கொண்டனர்.இதில் மொத்தம் 16 பேர் பரிசு பெற்றனர்.

    போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரம் மற்றும் சிறப்பு பரிசு ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது.

    அதாவது பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் முதல் பரிசை கண்டன்விளை அரசு மேல்நிலைப்பள்ளி

    12-ம் வகுப்பு மாணவி வன அஜிஸ்னா, 2-ம் பரிசை மணலிக்கரை கார்மல் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ஆன்சிலின் ஷேகா, 3-ம் பரிசை வடலிவிளை அரசு உயர்நிலைப்பள்ளி 7-ம் வகுப்பு மாணவி லேகா மற்றும் சிறப்பு பரிசு தொகை ரூ.2 ஆயிரத்தை கவிமணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி வினயாசுமி சிவா, பூதப்பாண்டி சர்.சி.பி. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி பவித்ரா ஆகியோர் பெற்றனர்.

    கல்லூரி மாணவர்க ளுக்கான பேச்சுப் போட்டி யில் முதல் பரிசை முளகு மூடு குழந்தை இயேசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கலைக்கல்லூரி முதுகலை ஆங்கிலம் (இரண்டாமாண்டு) மாணவி விஜித்ரா, 2-ம் பரிசை நாகர் கோவில் மகளிர் கிறிஸ்தவகல்லூரி இளங்கலை தமிழ் (முதலாமாண்டு) மாணவி அகல்யா, 3-ம் பரிசை மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவக் கல்லூரிமுதுகலை ஆங்கிலம் (முதலாமாண்டு) மாணவி ஷெரின் ஆகியோர் பெற்றனர்.

    தந்தை பெரியார் பிறந்தநாளான கடந்த 17-ந்தேதியன்று நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி யில் முதல் பரிசை மாடத்தட்டுவிளை புனித லாறன்ஸ் மேல்நி லைப்பள்ளி மாணவி நிபிஷா, 2-ம் பரிசை சூரங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி மோனிஷா, 3-ம் பரிசை நாகர்கோவில் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி அபிகா, சிறப்பு பரிசுகளை திருவிதாங்கோடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் பாபுல் உசேன் மற்றும் மார்த்தாண்டம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி அக்சயா ஆகியோர் பெற்றனர்.

    இதேபோல் கல்லூரி மாணவர்களுக்கான முதல் பரிசை மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்த வக் கல்லூரி இளங்கலை வேதியியல் (இரண்டா மாண்டு) மாணவி டெபி டேஷி, 2-ம் பரிசை தென்திரு விதாங்கூர் இந்துக் கல்லூரி இளங்கலை வணிகவியல் (முதலாமாண்டு) மாணவி சுவாதி, 3-ம் பரிசை முளகுமூடு குழந்தை இயேசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கலைக்கல்லூரி இளங்கலை வேதியியல் (இரண்டாமாண்டு) மாணவி வின்சி ஆகியோர் பெற்றனர். பரிசுத் தொகையும், பாராட்டுச்சான்றும் பின்னர் வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பரிசு மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்க, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
    • 20க்கும் மேற்பட்ட பள்ளிகளைச்சேர்ந்த 40 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    உடுமலை :

    தமிழ்வளர்ச்சி துறை சார்பில் காந்தி, ஜவஹர்லால் நேரு, அம்பேத்கர், ஈ.வெ.ரா., அண்ணா , கருணாநிதி ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லுாரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு, பேச்சுப்போட்டி நடத்தி பரிசு மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்க, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதன்படி அண்ணா , ஈ.வெ.ரா., பிறந்தநாளையொட்டி உடுமலை கல்வி மாவட்ட அளவிலான போட்டி, பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.போட்டியை, தலைமையாசிரியர் விஜயா துவக்கி வைத்தார். உடுமலை கல்வி மாவட்ட கல்வி அலுவலர் பழனிச்சாமி, பள்ளித்துணை ஆய்வாளர் கலைமணி ஆகியோர் பார்வையிட்டனர்.தமிழாசிரியர்கள் சின்னராசு, ரேணுகா, வசந்தி ஆகியோர் நடுவர்களாகச்செயல்பட்டனர்.

    இதில் 20க்கும் மேற்பட்ட பள்ளிகளைச்சேர்ந்த 40 மாணவர்கள் கலந்து கொண்டனர்.இதேபோல, போட்டியை தமிழாசிரியர் ராஜேந்திரன், கலை ஆசிரியர் லாவண்யா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.ஒவ்வொரு பிரிவிலும் தேர்வு செய்யப்படும் தலா 5 பேர் திருப்பூரில் நாளை 15, 17 ஆகிய தேதிகளில் நடக்கும் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்கவும் உள்ளனர்.

    • சா்க்காா் பெரியபாளையம் அரசு உயா்நிலை பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி தலைமையில் பேச்சுப் போட்டி நடைபெற்றது.
    • பல்வேறு பள்ளிகளில் இருந்து 44 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

    திருப்பூர் :

    முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த நாளை ஒட்டி திருப்பூா் மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் பள்ளி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், சா்க்காா் பெரியபாளையம் அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி தலைமையில் நடைபெற்றது.

    இதில், பல்வேறு பள்ளிகளில் இருந்து 44 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.இதில், அவிநாசி புனித தோமையா் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி கெளரி முதலிடத்தையும், ஊத்துக்குளி கொங்கு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவி ஸ்ரீமதி இரண்டாம் இடத்தையும், பெருமாநல்லூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி கோபிகா மூன்றாம் இடத்தையும் பிடித்தனா்.

    அதேபோல, கணபதிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ஹசீனா மற்றும் குண்டடம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவா் கிஷோா் சங்கா் ஆகியோா் சிறப்புப்பரிசுக்காக தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

    • பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் இந்த போட்டியில் பங்கேற்று பயன் பெறலாம்.
    • ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் முத்தமிழறிஞர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி வருகிற 28-ந் தேதி காலை 10 மணிக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கூட்ட அரங்கில் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடத்தப்பட உள்ளன.

    இந்த போட்டியில் பங்கேற்று வெற்றி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.3 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.2 ஆயிரம் மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் 2 பேரை தனியாக தேர்வு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் இந்த போட்டியில் பங்கேற்று பயன் பெறலாம் என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    • புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை விவேகா மெட்ரிக் பள்ளியில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகள் நடைபெற்றது
    • பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னாள் அமைச்சரும், விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் விஜயபாஸ்கர் பரிசுகளை வழங்கினார்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை விவேகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவியங்கள் வரைதல் உள்பட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

    விழாவில் முன்னாள் அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.

    விழாவில் பள்ளியின் தாளாளர் வெல்கம் என்.மோகன், மாவட்ட ஆவின் சேர்மன் பழனியாண்டி, விராலிமலை மேற்கு மாவட்ட கவுன்சிலர் ஆர்.கே.சிவசாமி, விராலிமலை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தீபன் சக்கரவர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் மணிகண்டன் உட்பட பல்வேறு நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

    விழாவில் பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முன்னதாக பள்ளி நிர்வாக இயக்குனர் அருண் பிரசாத் மோகன் வரவேற்றார். விவேகா மெட்ரிக் பள்ளி தாளாளர் வெல்கம் மோகன் நன்றி கூறினார்.

    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் இலுப்பூர் கல்வி மாவட்டத்திலேயே முதல் இடம் பெற்ற பள்ளி விராலிமலை விவேக மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது.

    • சிவகங்கையில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி வருகிற 28-ந் தேதி நடக்கிறது.
    • 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்க முடியும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான பேச்சு போட்டி வருகின்ற 28-ந்தேதி நடைபெற உள்ளது. அதன்படி காலை 9.30 மணியளவில் சிவகங்கை, மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாக அரங்கத்தில் போட்டி நடைபெறுகிறது.

    மாவட்ட அளவில் நடத்தப்படும் இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவ-மாணவி களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது. அத்துடன் இந்த பேச்சு போட்டியில் பங்கேற்கும் அரசு பள்ளி மாணவர்களில் இருவரை மட்டுமே தேர்வு செய்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே சிறப்பு பரிசாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.

    சிவகங்கை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் மட்டுமே (பள்ளிக்கு ஒருவர் வீதம்) இப்போட்டியில் பங்கேற்க முடியும்.

    மாவட்ட முதன்மை கல்வி அலுவலரால் வட்டார அளவில் இப்போட்டி நடத்தப்பட்டு மாவட்ட அளவிலான பேச்சு போட்டிக்கு 25 மாணவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள். முதன்மை கல்வி அலுவலரால் பரிந்துரைக்கப்படும் பட்டியலில் இடம் பெறும் மாணவர்கள் மட்டுமே மாவட்ட அளவிலான இப்போட்டியில் பங்கேற்க முடியும்.

    போட்டிகளில் பங்கேற்க பரிந்துரைக்கப்பெறும் மாணவர்கள் உரிய படிவத்தை நிறைவு செய்து அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களிடம் ஒப்பம் பெற்று போட்டி நடக்கும் நாளன்று மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனரிடம் நேரில் அளித்து போட்டியில் பங்கேற்கலாம்.

    போட்டிக்கான தலைப்பு போட்டி நிகழ்விடத்தில் நடுவர்கள் முன்பாக அறிவிக்கப்படும். வட்டார அளவிலான போட்டிகளில் பங்கேற்பது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.

    மேலும், விவரங்களுக்கு சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனரை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாநில அளவிலான இப்போட்டியில் பங்கேற்கும் மாணவ- மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டியின் மூலமாக தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
    • பேச்சு போட்டியானது 6 முதல் 8-ம் வகுப்புகள் மற்றும் 9, 10-ம் வகுப்புகள் மற்றும் 11, 12-ம் வகுப்புகள் என மூன்று பிரிவுகளாக நடைபெற்றது.

    தூத்துக்குடி:

    பெருந்தலைவர் காம ராஜரின் பிறந்தநாளை நாடார் மகாஜன சங்கம் (என்.எம்.எஸ்) மற்றும் ராஜா கே.எஸ்.பி.கணேசன் அகாடமி கல்வித் திருவிழா வாக ஆண்டு தோறும் கொண்டாடி வருகிறது. இவ்விழாவின் மூலமாக பெருந்தலைவர் காமராஜருக்கு புகழ் சேர்க்கும் வகையில் அவரது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மாநில அளவிலான பேச்சு, கட்டுரைப்போட்டி வரும் 15-ந் தேதி விருதுநகரில் நடைபெறுகிறது.

    மாநில அளவிலான இப்போட்டியில் பங்கேற்கும் மாணவ- மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டியின் மூலமாக தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இதன்படி, தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சு மற்றும் கட்டுரை போட்டி தூத்துக்குடி காரப் பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது.

    பேச்சு போட்டி

    மாவட்ட அளவிலான இப்போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த 40 பள்ளிகளில் இருந்து 120 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். பள்ளி மாணவ, மாணவி களுக்கான பேச்சு போட்டியானது 6 முதல் 8-ம் வகுப்புகள் மற்றும் 9, 10-ம் வகுப்புகள் மற்றும் 11, 12-ம் வகுப்புகள் என மூன்று பிரிவுகளாக நடைபெற்றது. கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரைப்போட்டி மட்டும் நடத்தப்பட்டது.

    போட்டியின் முடிவில், முதல் பிரிவில் ஸ்ரீதர்ஷினி, மேபெல் டென்னிஸ், விஸ்வநிகந்தர்யா ஆகியோரும், 2வது பிரிவில் ஸ்பெனா, ஜனனிஸ்ரீ, வினோதினி, ஜோதிஸ்ரீ ஆகியோரும், 3-வது பிரிவில் சகுந்தலா, பத்மா, சேவிமஹிகா, காளீஸ்வரி ஆகியோரும் வெற்றி பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு என்.எம்.எஸ் மற்றும் ராஜா கே.எஸ்.பி.கணேசன் அகாடமி மாநில ஒருங்கிணைப்பாளர் அவனிமாடசாமி, துணை ஒருங்கிணைப்பாளர் விவே கானந்தன், நாடார் மகாஜன சங்க துணைத்தலைவர் மதன் சுப்பிரமணியன் ஆகியோர் பரிசு வழங்கினர்.

    இதில், தூத்துக்குடி மாவட்ட ஒருங் கிணைப்பாளர் சதீஷ், காரப் பேட்டை நாடார் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி செய லாளர் செல்வராஜ், தலை மை யாசிரியர் நடராஜன், பேராசிரியர் ஜாகீர் உசேன் மற்றும் ஆசிரியை-ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது.
    • தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு

    கரூர்:

    தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட ஜூலை 18-ந்தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படுவதை முன்னிட்டு, மாவட்ட அளவில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. இதனையொட்டி கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கிடையே கட்டுரை, பேச்சுப் போட்டிகள் கரூர் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது.

    முதன்மைக் கல்வி அலுவலரால் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் மட்டுமே போட்டியில் கலந்து கொண்டனர். தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் வே.ஜோதி போட்டிகளை தொடங்கி வைத்தார். இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூ.10,000, 2ம் பரிசு ரூ.7,000, 3ம் பரிசு ரூ.5000 வழங்கப்பட உள்ளது. நடுவர்களாக முதுகலை தமிழ் ஆசிரியர்கள் மு.சசிகலா, ரா.தேவி, த.தேன்மொழி, தமிழ் ஆசிரியர்கள் க.விஜயராணி, பி.சரவணக்குமார், ம.மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ×