search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூட்டு"

    • கோபி பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்களுக்கு அதிகாரிகள் பூட்டு போட்டனர்.
    • அந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பப்பட்டனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் நகராட்சி பஸ் நிலையத்தில் 2 சக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களை நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் வெளியூரில் பணிக்கு செல்லும் சிலர் பேருந்து நிலைய வளாகத்தில் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர்.

    நகராட்சி ஆணையாளர் பிரேம் ஆனந்த் உத்தரவின்படி, துப்புரவு ஆய்வாளர் செந்தில்குமார் துப்புரவு பணி மேற்பார்வையாளர் பழனிச்சாமி மற்றும் பணியாளர்கள் பஸ்நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்களுக்கு பூட்டு போட்டனர்.

    அந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பப்பட்டனர். மீண்டும் வாகனங்கள் நிறுத்தும் பட்சத்தில் சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • இரவு மின் விளக்கு போடுவது காலையில் மின் விளக்குகளை அணைப்பது உள்ளி ட்ட பணிகளை செய்து வருகிறார்.
    • அறையில் இருந்த ஆம்ப்ளிபையர், 3 மைக் செட், 7 காயில் காப்பர் வயர், 20 எல்.இ.டி. டியூப் லைட் ஆகியவை கொள்ளை

    கன்னியாகுமரி :

    குருந்தன்கோடு அருகே கொடுப்பைக்குழியில் இலங்கத்து முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் தலைவராக அதே பகுதியை சேர்ந்த செல்லத்துரை (வயது76) இருந்து வருகிறார்.

    இவர் தினமும் இரவு மின் விளக்கு போடுவது காலையில் மின் விளக்குகளை அணைப்பது உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறார்.

    நேற்று முன்தினம் இரவு வழிபாடுகள் முடிந்ததும் கோவிலை பூட்டி விட்டு சென்று விட்டார். நேற்று காலை வந்து பார்த்தபோது கோவிலில் பொருள்கள் வைக்கப்பட்டிருந்த அறையின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்த நிலையில் கிடந்துள்ளது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது அறையில் இருந்த பெரிய ஆம்ப்ளிபையர், சிறிய ஆம்ப்ளிபயர், 3 மைக் செட், 7 காயில் காப்பர் வயர், 20 எல்.இ.டி. டியூப் லைட் ஆகியவை கொள்ளை போயிருந்தது.

    யாரோ மர்ம நபர்கள் இரவில் பூட்டை உடைத்து பொருட்களை அள்ளிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து இரணியல் போலீசில் செல்லத்துரை புகார் செய்தார். புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பஞ்சாயத்து தலைவர் மாரியப்பன் அவரது அறை மற்றும் பஞ்சாயத்து செயலாளர் அறையை பூட்டு போட்டு பூட்டி சென்றுள்ளார்.
    • மனு கொடுக்க வந்த பொதுமக்கள் பஞ்சாயத்து அலுவலகம் பூட்டி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    கடையம்:

    தென்காசி மாவட்டம் கடையம் யூனியனுக்கு உட்பட்ட திருமலையப்பபுரம் ஊராட்சியின் கீழ் 6 வார்டுகள் செயல்பட்டு வரும் நிலையில் நேற்று கூட்டம் நடைபெற இருப்பதாக பஞ்சாயத்தில் இருந்து வார்டு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

    அதன்படி வார்டு உறுப்பினர்கள் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது பஞ்சாயத்து தலைவர் மாரியப்பன் திடீரென அவரது அறை மற்றும் பஞ்சாயத்து செயலாளர் அறையையும் பூட்டு போட்டு பூட்டி சென்றுள்ளார்.

    இதனால் மனு கொடுக்க வந்த பொதுமக்கள் பஞ்சாயத்து அலுவலகம் பூட்டி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்து வருகின்றனர்.

    இதுகுறித்து வார்டு உறுப்பினர்கள் கூறுகையில், பஞ்சாயத்து தலைவர் மாரியப்பன் திடீரென புதிய பூட்டுகளை வாங்கி வந்து அறைகளை பூட்டி சென்றுள்ளார். இதனால் இன்று மனுக்கொடுக்க வந்தவர்கள் ஏமாற்றத்துடன் சென்றுள்ளனர்.

    இதுகுறித்த முதற்கட்ட விசாரணையில், பஞ்சாயத்து தலைவர் மாரியப்பனுக்கும், பஞ்சாயத்து செயலாளர் வேலுச்சாமிக்கும் இடையே ஆவணத்தில் கையொப்பம் இடாமல் இருப்பதை தலைவரிடம் தெரிவிக்காதது தொடர்பாக கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்படுகிறது.

    தூத்துக்குடி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். #SterliteShut #EdappadiPalanisamy
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டது. இதனை அடுத்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு தூத்துக்குடி கலெக்டர் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டர். இதற்கிடையே, சென்னையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்தது. கூட்டம் முடிந்த பின்னர், செய்தியாளர்களை சந்தித்த பழனிசாமி கூறியதாவது:-

    மக்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பசுமை தீர்பாயம் வெளியிட்ட விதிமுறைகளை ஸ்டெர்லைட் நிறுவனம் பின்பற்றவில்லை. இதனை அடுத்து, அனுமதியை புதுப்பிக்க அந்நிறுவனம் அளித்த விண்ணப்பத்தை தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்தது.

    ஆலைக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தூத்துக்குடியில் முழு அமைதி நிலவ பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்; போராட்டத்தின்போது காயமடைந்தவர்களுக்கு  உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். 
    ×