search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஞ்சாயத்து அலுவலகம்"

    • அலுவலக சுற்றுச்சுவர் கட்டப்பட்டதால் பொதுமக்கள் பாதிப்படைந்து உள்ளதாக புகார் அளித்தார்‌.
    • சக்தி தலைமையில் போலீசார் மற்றும் பொதுமக்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்‌.

    கடலூர்:

    கடலூர் அருகே கிழக்கு ராமாபுரத்தில் ஊராட்சி அலுவலகத்தில் சுற்றுச்சுவர் இருந்து வருகின்றது. அதே பகுதியை சேர்ந்த ஒரு நபர் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பொது வழியாக இருந்த இடத்தில் அலுவலக சுற்றுச்சுவர் கட்டப்பட்டதால் பொதுமக்கள் பாதிப்படைந்து உள்ளதாக புகார் அளித்தார்‌. அதன் பேரில் இன்று காலை வட்டார வளர்ச்சி அலுவலர் சக்தி தலைமையில் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். இத்தகவல் அறிந்த ஊர் பொதுமக்கள் பெருமளவில் அங்கு திரண்டனர். பின்னர் பல ஆண்டுகளாக ஊராட்சி அலுவலகம் சுற்றி சுற்றுச்சுவர் இருந்து வந்த நிலையில் இடிக்க அனுமதிக்க மாட்டோம் என ஊர் பொதுமக்கள் தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் சக்தி தலைமையில் போலீசார் மற்றும் பொதுமக்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்‌. அப்போது சுற்றுச்சுவர் இடிக்காமல் அதற்கு மாறாக மாற்று வழி ஏற்படுத்துவதன் மூலம் அனைவரும் எளிமையாக சென்று வரலாம் என பொதுமக்கள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அதிகாரிகள் மாற்று வழி மூலம் செல்வதற்கு அதிகாரிகள் தற்போது அந்த இடத்தை அளவீடு செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    • பண்ருட்டி ஒன்றியம் மேல்மாம்பட்டு ஊராட்சி தெற்கு மேல்மாம்பட்டில் சமுதாயகூடத்தில் ஊராட்சிஅலுவலகம் செயல்படுகிறது.
    • அலுவலகத்தில் புகுந்து கொடி கம்பம் கதவுகளை அடித்துஉடைத்து சேதப்படுத்தினர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டிஒன்றியம் மேல்மாம்பட்டு ஊராட்சி தெற்கு மேல்மாம்பட்டில் சமுதாயகூடத்தில் ஊராட்சிஅலுவலகம் செயல்படுகிறது. இந்த அலுவலகத்தினுள் புகுந்த அதே பகுதியை சேர்ந்த 3 பேர் அங்கு இருந்த கொடி கம்பம், அறை கதவு, பூட்டு ஆகியவற்றை உடைத்து சேதப்படுத்தினர். தகவல்அறிந்ததும்அங்கு விரைந்து சென்ற பஞ்சாயத்து தலைவர் முத்துலிங்கம், துணைத் தலைவர் ராமசாமி ஆகி யோர் காடாம்புலியூர் போலீசில் புகார் கொடு த்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து ஊரா ட்சி அலுவலகத்தில் புகுந்து கொடி கம்பம் கதவுகளை அடித்துஉடைத்து சேதப்படுத்திய தெற்கு மேம்பாம்பட்டு கிராம த்தைச் சேர்ந்த 3 பேரை தேடி வருகிறார்கள்.

    • பஞ்சாயத்து தலைவர் மாரியப்பன் அவரது அறை மற்றும் பஞ்சாயத்து செயலாளர் அறையை பூட்டு போட்டு பூட்டி சென்றுள்ளார்.
    • மனு கொடுக்க வந்த பொதுமக்கள் பஞ்சாயத்து அலுவலகம் பூட்டி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    கடையம்:

    தென்காசி மாவட்டம் கடையம் யூனியனுக்கு உட்பட்ட திருமலையப்பபுரம் ஊராட்சியின் கீழ் 6 வார்டுகள் செயல்பட்டு வரும் நிலையில் நேற்று கூட்டம் நடைபெற இருப்பதாக பஞ்சாயத்தில் இருந்து வார்டு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

    அதன்படி வார்டு உறுப்பினர்கள் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது பஞ்சாயத்து தலைவர் மாரியப்பன் திடீரென அவரது அறை மற்றும் பஞ்சாயத்து செயலாளர் அறையையும் பூட்டு போட்டு பூட்டி சென்றுள்ளார்.

    இதனால் மனு கொடுக்க வந்த பொதுமக்கள் பஞ்சாயத்து அலுவலகம் பூட்டி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்து வருகின்றனர்.

    இதுகுறித்து வார்டு உறுப்பினர்கள் கூறுகையில், பஞ்சாயத்து தலைவர் மாரியப்பன் திடீரென புதிய பூட்டுகளை வாங்கி வந்து அறைகளை பூட்டி சென்றுள்ளார். இதனால் இன்று மனுக்கொடுக்க வந்தவர்கள் ஏமாற்றத்துடன் சென்றுள்ளனர்.

    இதுகுறித்த முதற்கட்ட விசாரணையில், பஞ்சாயத்து தலைவர் மாரியப்பனுக்கும், பஞ்சாயத்து செயலாளர் வேலுச்சாமிக்கும் இடையே ஆவணத்தில் கையொப்பம் இடாமல் இருப்பதை தலைவரிடம் தெரிவிக்காதது தொடர்பாக கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்படுகிறது.

    ×