search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூச்சொரிதல்"

    • இன்று இரவு கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    • 6-ந்தேதி ஞாயிறு வசந்தோற்சவம் நடக்கிறது.

    ராசிபுரம் டவுன் நாமக்கல் ரோட்டில் பழமை வாய்ந்த நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் எப்போதும் கம்பம் நடப்பட்டு இருப்பதால் நித்திய சுமங்கலி மாரியம்மன் என்று பக்தர்களால் அழைக்கப்பட்டு வருகிறது. இக்கோவில் திருவிழா ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் நடந்து வருகிறது.

    அதேபோல் இந்த ஆண்டும் வழக்கம்போல் நித்திய சுமங்கலி மாரியம்மன், செல்லாண்டியம்மன், ஆஞ்சநேயர் கோவில்களின் திருவிழா நேற்று முன் தினம் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. பூச்சாட்டு விழாவில் பக்தர்கள் அம்மனுக்கு பூக்களை கொண்டு வந்து வைத்து சாமி தரிசனம் செய்தனர். அப்போது அம்மன் மலர்களின் குவியலில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூச்சாட்டு விழாவில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இதையடுத்து இன்று (வியாழக்கிழமை) இரவு கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் வருகிற 31-ந் தேதி இரவு 12 மணிக்கு பூவோடு பற்ற வைத்தலும், அன்று காலை 5 மணிக்கு பூவோடு எடுத்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. அடுத்த மாதம் 1-ந் தேதி இரவு 8 மணிக்கு கொடியேற்று விழா நடக்கிறது. 2-ந் தேதி காலையில் செல்லாண்டி அம்மன் கோவிலில் அம்மை அழைத்தல், பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது.

    இரவு 10 மணிக்கு அக்கினி குண்டம் பற்றவைத்தல் நடைபெறுகிறது. இதையடுத்து 3-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு அக்கினி குண்டம், மாலை திருத்தேர் உற்சவமும் நடக்கிறது. 4-ந் தேதி உடற்கூறு வண்டி வேடிக்கையும், 5-ந் தேதி இரவு வாணவேடிக்கையுடன் புஷ்ப பல்லக்கில் அம்மன் பவனி வருதலும், சத்தாபரணமும் நடக்கிறது. 6-ந்தேதி ஞாயிறு வசந்தோற்சவம் நடக்கிறது. அடுத்த மாதம் 7-ந் தேதி முதல் 20-ந் தேதி முடிய தினந்தோறும் விடையாற்றி கட்டளைதாரர்கள் நிகழ்ச்சி நடக்கிறது.

    • இன்று காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது.
    • பொன்னூஞ்சல் நிகழ்ச்சி அக்டோபர் 4-ந்தேதி நடைபெறுகிறது.

    திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியில் பிரசித்தி பெற்ற பூதநாயகி அம்மன் கோவில் உள்ளது. சுற்றுவட்டாரத்தில் உள்ள 96 கிராம மக்களின் குலதெய்வமாக விளங்கும் இந்த கோவிலின் திருவிழா நேற்று பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் மருங்கி நாட்டுத் தலைவர்தான் முதலில் பூப்போடுவார்கள். அதைத்தொடர்ந்து பல்வேறு பகுதி கிராம மக்களும் அம்மனுக்கு பூப்போட்டு செல்வார்கள். ஆனால் இந்த ஆண்டு இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் திருவிழாவை நடத்தி வருகின்றனர். அதன்படி நேற்று திருவிழாவில் முதல் பூவாக கோவில் செயல் அலுவலர் ஜீவானந்தம் அம்மனுக்கு பூ போட்டார்.

    அதைத்தொடர்ந்து பொதுமக்கள் பலரும் அம்மனுக்கு பூப்போட்டுச் சென்றனர். இதேபோல் வருவாய் துறையினர், போலீசார் சார்பிலும் அம்மனுக்கு பூ போட்டனர். முன்னதாக பூதநாயகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் கொண்டு வந்த அந்த பூக்களை அம்மனுக்கு செலுத்தினர். இருப்பினும் கடந்த ஆண்டை விட கிராம மக்களின் வருகை குறைந்திருந்தது.

    திருவிழாவின் தொடர்ச்சியாக இன்று காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், 27-ந் தேதியில் இருந்து மண்டகப்படி நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொன்னூஞ்சல் நிகழ்ச்சி அடுத்த மாதம்(அக்டோபர்) 4-ந் தேதி நடைபெறுகிறது. திருவிழாவையொட்டி மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு ராமநாதன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • வாணவேடிக்கை, கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
    • பூஜைகளை மணிகண்ட சிவம், வல்மீக நாத குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் நடத்தினர்.

    திருவாடானை தாலுகா திருவெற்றியூரில் பாகம்பிரியாள் சமேத வல்மீகநாத சுவாமி கோவில் 48-ம் ஆண்டு பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதனையொட்டி வல்மீகநாதர், வாழவந்த அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம், சிறப்பு அபிஷேகம் தீபாராதனைகள் நடைபெற்றது. இதைதொடர்ந்து சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும், பாகம்பிரியாள் அம்மன் புஷ்ப பல்லக்கு அலங்காரத்திலும் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    இதனையொட்டி ஆயிரக்கணக்கான பெண்கள் அம்மன் சன்னதியில் இருந்து பூத்தட்டு எடுத்து மேளதாளங்கள் முழங்க முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து கோவிலை சென்றடைந்தனர். அதனை தொடர்ந்து அம்மனுக்கு பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெற்றது. வாணவேடிக்கை, கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. பூஜைகளை மணிகண்ட சிவம், வல்மீக நாத குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் நடத்தினர்.

    இந்த நிகழ்ச்சிகளில் சிவகங்கை சமஸ்தான சரக செயல் அலுவலர் செந்தில்குமார், ஆலய கவுரவ கண்காணிப்பாளர் சுந்தரராஜன், வர்த்தக சங்கத் தலைவர் குமரேசன், செயலாளர் வல்மீகநாதன், பொருளாளர் தங்கராஜ், துணைத்தலைவர் அம்பலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை திருவெற்றியூர் கிராம மக்கள், வர்த்தக நல சங்கத்தினர் செய்து இருந்தனர். திருவாடானை போலீஸ் துணை சூப்பிரண்டு நிரேஸ், தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • முளைப்பாரி எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக அம்மனை வலம் வந்தனர்.
    • இன்று தேவி கருமாரியம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடக்கிறது.

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தி.புதுப்பட்டி சக்திபுரம் ஆயிரம் கண்ணுடையாள் மகா சக்தி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற ஆடி பூக்குழி திருவிழாவில் நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட 41 அடி நீள பூக்குழியில் ஸ்ரீஅம்மா இறங்கி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 7 மணிக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம் வந்தனர்.

    காலை 11 மணிக்கு மேல் 41 அடி உயர மகாசக்தி மாரியம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் மற்றும் பூச்சொரிதல் விழா நடைபெற்றது. முன்னதாக முளைப்பாரி எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக அம்மனை வலம் வந்தனர்.

    திருவிழாவில் இன்று (சனிக்கிழமை) தேவி கருமாரியம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து பக்தர்கள் கஞ்சிக் கலயம் எடுத்து வரும் நிகழ்ச்சியும், கஞ்சி கலயத்தை ஸ்ரீஅம்மா எடுத்து அன்னைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடக்கிறது. இதையடுத்து பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், வளையல், தாலிகயிறு வழங்கப்படுகிறது.

    விழாவின் சிறப்பு அம்சமாக 3 நாட்களாக காலை முதல் இரவு வரை கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் திருப்பூர், சேலம், கிருஷ்ணகிரி என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆயிரம் கண்ணுடையாள் மகாசக்தி பீட நிர்வாகிகள் மற்றும் அலுவலர்கள் செய்துள்ளனர்.

    • புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு 5 டன் பூக்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தஞ்சையை ஆண்ட சோழபேரரசர்கள் தஞ்சையை சுற்றிலும் எட்டு திசைகளிலும் அஷ்டசக்திகளை காவல் தெய்வங்களாக அமைத்தனர். அவ்வாறு தஞ்சைக்கு கீழ்புறத்தில் அமைய பெற்ற சக்தியே புன்னைநல்லூர் மாரியம்மன் ஆகும். இந்த கோவில் தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தை சேர்ந்த 88 கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவிலின் மூலஸ்தான மாரியம்மன் புற்று மண்ணால் உருவாக்கப்பட்டது.

    இந்த சிலையில் கோடை காலங்களில் முத்து, முத்தாக வியர்வை துளிகள் வெளியாகும் என்பது ஐதீகம். மூலவர் புற்று மண்ணால் ஆனதால் மூலஸ்தான அம்மனுக்கு பூக்களை தவிர வேறு எந்தவித அபிஷேகமும் செய்வதில்லை. இதனால் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும் பூச்சொரிதல் விழா மிகவும் பிரசித்தி பெற்றவை.

    அந்தவகையில், இந்த ஆண்டிற்கான பூச்சொரிதல் விழா ஆடி 3-வது வெள்ளிக்கிழமையான நேற்று நடந்தது. இதையொட்டி பல்வேறு ஊர்களில் இருந்து அம்மன் உருவப்படங்களுடன் கூடிய ரதங்கள் புறப்பட்டு தஞ்சை பெரியகோவிலுக்கு நேற்றுமுன்தினம் மாலை வந்தன. அங்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, அனைத்து ரதங்களும் புறப்பட்டன.

    பக்தர்கள் ஏராளமானோர் பூக்கூடைகளை கொடுத்தனர். இந்த பூக்கூடைகள் அனைத்தும் ரதத்தில் வாங்கி வைக்கப்பட்டன. பின்பு மேளதாளங்கள் முழங்க இந்த ரதங்கள் தஞ்சையில் உள்ள முக்கியவீதிகள் வழியாக சென்று புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலை வந்தடைந்தது. நேற்று காலை மாரியம்மன்கோவில் தேரோடும் முக்கிய வீதிகளில் அம்மன் ரதங்கள் வலம் வந்தன.

    ரதத்தின் முன்பு பெண்கள், சிறுமிகளின் கோலாட்டம் நடைபெற்றது. பின்பு புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு 20-க்கும் மேற்பட்ட வகையான சுமார் 5 டன் பூக்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்பு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சுக்ரவார வழிபாட்டுக்குழு, பூச்சொரிதல் கமிட்டி, அன்னதான அறக்கட்டளை, கோவில் அர்ச்சகர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் செய்து இருந்தனர்.

    • ரதங்கள் அலங்கரிக்கப்பட்டு அதில் மின்விளக்கு வசதியும் செய்யப்பட்டு இருந்தது.
    • அம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் நடைபெறுகிறது

    தஞ்சையை அடுத்த புன்னைநல்லூரில் மாரியம்மன்கோவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். மேலும் இங்குள்ள அம்மனுக்கு பூச்சொரிதல் விழா ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது.

    சுக்ரவார வழிபாட்டுக்குழு, பூச்சொரிதல் கமிட்டி, மாரியம்மன் கோவில் அன்னதான அறக்கட்டளை, அர்ச்சகர்கள், கோவில் பணியாளர்கள் மற்றும் கிராம வாசிகள் சார்பில் இந்த பூச்சொரிதல் நடைபெறுகிறது. இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பூ ரதங்கள் மந்திர கோஷங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்படும்.

    அதன்படி பல்வேறு பகுதிகளில் இருந்து எடுத்துவரப்பட்ட பூ ரதங்கள் தஞ்சை பெரிய கோவிலுக்கு நேற்று மாலை வந்தடைந்தது. இந்த ரதங்கள் அலங்கரிக்கப்பட்டு அதில் மின்விளக்கு வசதியும் செய்யப்பட்டு இருந்தது. மேலும் வாகனங்களில் அம்மன் படங்களும் வைக்கப்பட்டு இருந்தது.

    பின்னர் அங்கிருந்து ஊர்வலம் புறப்பட்டு மேலவீதி, வடக்கு வீதி, காமராஜ் மார்க்கெட், கீழவீதி, கீழவாசல், வண்டிக்காரத்தெரு, தொம்பன்குடிசை வழியாக மாரியம்மன்கோவிலை இன்று (வெள்ளிக்கிழமை) காலை சென்றடையும், பின்னர் அம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் நடைபெறுகிறது

    பூ ரத ஊர்வலத்தை சுக்ர வார வழிபாட்டுக்குழு தலைவர் கேசவன் முன்னிலையில் ஓய்வு பெற்ற போலீஸ் ஐ.ஜி. ஸ்ரீதர், திருக்கயிலாய கந்த பரம்பரை சூரியனார் கோவில் சன்னிதானம் வாமதேவ சிவாக்கிரயோகிகள் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை சுக்ர வார வழிபாட்டுக்குழு, பூச்சொரிதல் கமிட்டி, அன்னதான அறக்கட்டளை, ஆலய அர்ச்சகர்கள், பணியாளர்கள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

    • வடக்குவாசல் செல்வி அம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நடந்தது.
    • இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டி செய்து வருகிறது.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூரில் வடக்கு வாசல் செல்லியம்மனுக்கு 46-ம் ஆண்டு பூச்சொரிதல் விழா ஊர்வலம், காப்புகட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி அம்மனுக்கு யாகம் வளர்த்து சிறப்பு பூஜை நடந்தது. 10 நாட்கள் நடைபெறும்.

    இந்த விழாவில் தினசரி பூஜைகள், மாணவ-மாணவிகளின் விளையாட்டு போட்டிகள், அன்னதானம், கலைநிகழ்ச்சிகள், பட்டிமன்றம், ஆன்மீக சொற்பொழிவு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டி செய்து வருகிறது.

    • தஞ்சையை அடுத்த புன்னைநல்லூரில் மாரியம்மன்கோவில் உள்ளது.
    • பல்வேறு பகுதிகளில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பூ ரதங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்படும்.

    தஞ்சையை அடுத்த புன்னைநல்லூரில் மாரியம்மன்கோவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். மேலும் இங்குள்ள அம்மனுக்கு பூச்சொரிதல் விழா ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது.

    சுக்ரவார வழிபாட்டுக்குழு, பூச்சொரிதல் கமிட்டி, மாரியம்மன் கோவில் அன்னதான அறக்கட்டளை, அர்ச்சகர்கள், கோவில் பணியாளர்கள் மற்றும் கிராம வாசிகள் சார்பில் இந்த பூச்சொரிதல் நடைபெறுகிறது. இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பூ ரதங்கள் மந்திர கோஷங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்படும்.

    அதன்படி பல்வேறு பகுதிகளில் இருந்து எடுத்துவரப்படும் பூ ரதங்கள் தஞ்சை பெரிய கோவிலை வருகிற 4-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை வந்தடையும். அங்கிருந்து ஊர்வலம் புறப்பட்டு மேலவீதி, வடக்கு வீதி, காமராஜ் மார்க்கெட், கீழவீதி, கீழவாசல், வண்டிக்காரத்தெரு, தொம்பன்குடிசை வழியாக மாரியம்மன்கோவிலை 5-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை சென்றடையும், பின்னர் அம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் நடைபெறும்.

    பூ ஊர்வல ரதத்தை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தென்னரசு, அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜாபோன்ஸ்லே, உதவி ஆணையர் கவிதா ஆகியோர் முன்னிலையில் ஓய்வு பெற்ற போலீஸ் ஐ.ஜி. ஸ்ரீதர், திருக்கயிலாய கந்த பரம்பரை சூரியனார் கோவில் சன்னிதானம் வாமதேவ சிவாக்கிரயோகிகள் ஆகியோர் தொடங்கி வைக்கிறார்கள். 5-ந்தேதி மாலை பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    • சர்வ அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    • பக்தர்கள் அம்மனுக்கு பூக்களை காணிக்கையாக செலுத்தினர்.

    நத்தம் மாரியம்மன் கோவிலில் ஆடி மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமையையொட்டி பூச்சொரிதல் விழா நடந்தது. விழாவில் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.

    சர்வ அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு பூக்களை காணிக்கையாக செலுத்தினர்.

    இதேபோல் ஆடி மாதத்தையொட்டி பகவதி, காளியம்மன், ராக்காயி, தில்லை காளியம்மன் ஆகிய கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இங்கும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • அம்மனுக்கு தினமும் சிறப்பு பூஜை, அபிஷேகம், சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளது.
    • 15-ந்தேதி அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் மற்றும் அபிஷேகம் நடைபெறுகிறது.

    சிவகங்கை பஸ் நிலையம் எதிரில் பிள்ளை வயல் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு நடைபெறும் விழாக்களில் ஆனி மாதம் நடைபெறும் பூச்சொரிதல் விழா மிக சிறப்பு வாய்ந்தது. 10 நாட்கள் இந்த திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில் கொல்லங்குடி வெட்டுடையார் காளி கோவில் செயல் அலுவலர் கணபதி முருகன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர்.

    இதையொட்டி பிள்ளை வயல் காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடந்தது. மேலும் விழாவையொட்டி அம்மனுக்கு தினமும் மாலையில் சிறப்பு பூஜை, அபிஷேகம், சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளது. வருகிற 15-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலையில் அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் மற்றும் அபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் மாலையில் சந்தன காப்பு அலங்காரத்தில் பிள்ளை வயல் காளியம்மன் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். இரவு பூச்சொரிதல் விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

    ×