search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூச்சொரிதல்"

    • பாதயாத்திரையாக ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனுக்கு பூக்களை சாற்றி வழிபட்டனர்.
    • சிறப்பு அபிஷேகம் செய்தனர்.

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 2-வது வார பூச்சொரிதல் விழா நேற்று நடைபெற்றது. இதில், திருச்சி மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் டிராக்டர்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அலங்கரிக்கப்பட்ட அம்மன் படத்தை வைத்து கூடைகளில் பூக்களை ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு சாற்றி வழிபட்டனர்.

    மேலும், பாதயாத்திரையாகவும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனுக்கு பூக்களை சாற்றி வழிபட்டனர்.

    சமயபுரம் புதுத்தெரு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அங்குள்ள முத்துமாரியம்மனுக்கு காலை 7 மணி அளவில் சிறப்பு அபிஷேகம் செய்தனர். அதைத்தொடர்ந்து 23-வது ஆண்டாக புஷ்ப பல்லக்கில் அலங்கரிக்கப்பட்ட அம்மன் படத்தை வைத்து மேளதாளங்கள் முழங்க கடைவீதி, சன்னதி வீதி வழியாக பூக்களை கூடைகளில் ஏந்தியவாறு ஊர்வலமாக சென்று அம்மனுக்கு பூக்களை சாற்றி வழிபட்டனர். இதேபோல் சமயபுரம் அம்பலக்காரதெரு பொதுமக்களின் சார்பாகவும் பூக்கள் கொண்டு செல்லப்பட்டது. விழாவையொட்டி சமயபுரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    திருச்சி உறையூரில் பிரசித்தி பெற்ற வெக்காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு அம்மன் வீற்றிருக்கும் மூலஸ்தானத்தில் மேற்கூரை கிடையாது. வானத்தையே கூரையாக கொண்டு காற்று, மழை, வெயில் என அனைத்து இயற்கை இடர்பாடுகளையும் தன்னகத்தே தாங்கிக்கொண்டு தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு வெக்காளியம்மன் அருள்பாலித்து வருகிறார். மேலும் கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றையும் சேர்த்து வழங்கும் அன்னையாகவும் வெக்காளியம்மன் போற்றப்பட்டு வருகிறார். இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பூச்சொரிதல் விழா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான பூச்சொரிதல் விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி கோவில் அர்த்தமண்டபம் உள்ளிட்ட பகுதிகள் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. காலை 6 மணிக்கு கோவில் சார்பில் அதிகாரிகள், கோவில் பணியாளர்கள் பூக்களை கொண்டு வந்து அம்மனுக்கு சாற்றினர்.

    இதைத்தொடர்ந்து பக்தர்கள் பூக்களை அம்மனுக்கு சாற்றினர். அம்மனுக்கு சிறப்பு பூஜையும், அபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் தாம்பூல தட்டிலும், கூடை, கூடையாகவும் பூக்களை கொண்டு வந்து அம்மனுக்கு சாற்றினர்.

    திருச்சி மாநகரில் இருந்து மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விடிய, விடிய பக்தர்கள் அணி அணியாக வந்து பூக்களை காணிக்கையாக செலுத்தி தரிசனம் செய்தனர்.

    • பாதயாத்திரையாகவும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்.
    • இன்று வரை பூக்களை கொண்டு செல்வார்கள்.

    திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நேற்று வெகு விமரிசையாக தொடங்கியது. இந்த பூச்சொரிதல் விழா பங்குனி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது. பூச்சொரிதல் விழாவையொட்டி நேற்று திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வாகனங்களில் பூக்களை எடுத்துக்கொண்டு சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்து, அம்மனுக்கு சாற்றி வழிபட்டனர்.

    அதன்படி திருச்சி குதுப்பா பள்ளம் பொதுமக்கள் சார்பில் அந்த பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் இருந்து நேற்று இரவு 8 மணிக்கு சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பூக்கள் எடுத்து செல்லப்பட்டது. இதில் அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல் திருச்சி மாநகர் பகுதிகளில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பூச்சொரிதல் விழாவையொட்டி பல்வேறு இடங்களில் இருந்து பூக்கள் எடுத்து செல்லப்பட்டது. இன்று (திங்கட்கிழமை) மதியம் 12 மணி வரை பூக்களை கொண்டு செல்வார்கள். நேற்று இரவு முதலே பக்தர்கள் சமயபுரத்தில் குவிந்தனர். பாதயாத்திரையாகவும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்.

    • மாரியம்மன் வடிவங்களில் ஆதிபீடம் சமயபுரம் ஆகும்.
    • நேற்று இரவு முதலே பக்தர்கள் சமயபுரத்தில் குவிந்தனர்.

    சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக திகழ்வது சமயபுரம் மாரியம்மன் கோவில். இங்கு நாள்தோறும் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள்.

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்றாலும் பூச்சொரிதல் விழா முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த ஆண்டுக்கான பூச்சொரிதல் விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெகு விமரிசையாக தொடங்கியது.

    மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று தொடங்கி, பங்குனி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை 28 நாட்கள் பூச்சொரிதல் விழா நடைபெறும்.

    விழாவையொட்டி இன்று அதிகாலை விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாஜனம், வாஸ்து சாந்தி முடிந்து சமயபுரம் மாரியம்மனுக்கு காப்பு கட்டுதல் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து நடைபெற்ற பூச்சொரிதல் விழாவில், கோவில் நிர்வாகம் சார்பில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் யானை மீதும், கோவில் பணியாளர்கள், பக்தர்கள் கிராம பொதுமக்கள் உள்ளிட்டோர் கூடைகளிலும் தலையிலும் பூக்களை சுமந்தும், கையில் ஏந்தியும் வந்து அம்மனுக்கு சாத்தினர்.

    இதனைத்தொடர்ந்து திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து பல்வேறு வாகனங்களிலிருந்து அம்மனுக்கு இன்று இரவு முதல் நாளை (திங்கட்கிழமை) மதியம் 12 மணி வரை பூக்களை கொண்டு வருவார்கள்.

    சிவன், பிரம்மா, விஷ்ணு என்னும் மும்மூர்த்திகளால் ஸ்ரீரங்கம் கோவிலின் ஈசான பாகத்தில் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி வடிவம் கொண்டு சிருஷ்டிக்கப்பட்டு உள்ளதால் இந்தகோவிலி லும் ஸ்ரீரங்கம் கோவிலில் மூலவரை போன்ற சுதையினால் ஆன சுயம்பு வடிவமாக 27 நட்சத்திரங்களின் ஆதிக்கங்களையும் தன்னுள் அடக்கி 27 எந்திரங்களாக திருமேனி பிரதிஷ்டை செய்து இத்தலத்தில் மகாமாரியம்மன் அருள்பாலிப்பது தனிச்சிறப்பாகும்.

    அம்மனின் சுயம்புதிருமேனியில் நவக்கிரக ஆதிக்கத்தை உள்ளடக்கி நவகிரகங்களை நவசர்ப்பங்களாக திருமேனியில் தரித்து அருள்பாலிப்பதால் அம்மனை தரிசனம் செய்வதன் மூலம் நவக்கிரக தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். இத்தலத்தில் இருக்கும் அம்மனை அமாவாசை, பவுர்ணமி மற்றும் கிரகண காலங்களில் வழிபட்டால் உச்சபலன் கிடைக்கும்.

    மேலும், இந்த கோவிலில் வழிபட்டால் ராகு, கேது திசை தோஷம் நிவர்த்தி ஆகும் என்பதற்கு திருக்கோவிலின் மேற்கூரையில் சிற்ப சான்று கள் உள்ளது. தட்சன் யாகத் துக்குச்சென்ற தாட்சாய ணியை தூக்கி சிவபெருமான் ருத்ரதாண்டவம் ஆடிய போது அம்மனின் திருக்கண் இப்பகுதியில் விழுந்தது.

    இதனால் இந்தத்திருத்தலத்திற்கு கண்ணனூர் என்ற பெயர் புராணகாலம் தொட்டே இருந்து வருகிறது. மிகத்தொன்மையான உற்சவ அம்மனின் திருமேனியில் இன்றும் ஆயிரம் கண்கள் உள்ளன. இது, இத்தலத்தின் பெருமையை விளக்குவதாக அமைந்துள்ளது.

    இத்திருத்தலத்தில் அம்மன் அஷ்ட புஜங்களுடன் இருப்பதுவேறு எந்த மாரியம்மன் கோவிலிலும் காணக்கிடைக்காத அரிய காட்சியாகும். மேலும், மாரியம்மன் வடிவங்களில் ஆதிபீடம் சமயபுரம் ஆகும்.

    மும்மூர்த்திகளை நோக்கி மாயசூரனை வதம் செய்த பாவம் நீங்கவும், உலக நன்மைக்காகவும் இத்திருத்தலத்தில் தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எல்லாவிதமான நோய்களும், தீவினை களும் அணுகாது, சகல சவு பாக்கியங்களும் கிடைக்க மரபு மாறி அம்மனே பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் வருடம்தோ றும் மாசி மாத கடைசி ஞாயிறு முதல், பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை இருப்பது இந்த கோவிலின் தனிச் சிறப்பு ஆகும். அந்த நாட்களில் அம்மனுக்கு தளிகை நைவேத்தியம் கிடையாது. துள்ளு மாவு, நீர்மோர் பானகம் மற்றும் இளநீர் மட்டுமே நைவேத்தியமாக படைக்கப்படும்.

    பூச்சொரிதல் விழாவையொட்டி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நேற்று இரவு முதலே பக்தர்கள் சமயபுரத்தில் குவிந்தனர். பாதயாத்திரையாகவும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். இதையொட்டி கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • இங்கு அம்மன் வீற்றிருக்கும் மூலஸ்தானத்தில் மேற்கூரை கிடையாது.
    • சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    திருச்சி உறையூரில் பிரசித்தி பெற்ற வெக்காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு அம்மன் வீற்றிருக்கும் மூலஸ்தானத்தில் மேற்கூரை கிடையாது. வானத்தையே கூரையாக கொண்டு காற்று, மழை, வெயில் என அனைத்து இயற்கை இடர்பாடுகளையும் தன்னகத்தே தாங்கிக்கொண்டு தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு வெக்காளியம்மன் அருள்பாலித்து வருகிறார்.

    மேலும் கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றையும் சேர்த்து வழங்கும் அன்னையாகவும் வெக்காளியம்மன் போற்றப்பட்டு வருகிறார். இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பூச்சொரிதல் விழா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். அதன்படி இந்த ஆண்டுக்கான பூச்சொரிதல் விழா வருகிற 17-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6 மணி முதல் நடைபெற உள்ளது.

    முதலில் கோவில் நிர்வாகம் சார்பில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பூத்தட்டுகளை ஏந்தி கோவிலை வலம் வந்து அம்மனுக்கு பூக்களை சாற்றுவார்கள். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    • சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 12-ந்தேதி பூச்சொரிதல் திருவிழா நடைபெற உள்ளது.
    • கோவில் சிறப்பு பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும்.

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் வருகிற 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) பூச்சொரிதல் திருவிழா நடைபெற உள்ளது. இதையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு கலெக்டர் பிரதீப்குமார் தலைமை தாங்கி பேசியதாவது:-

    பூச்சொரிதல் திருவிழா நடைபெறும் 12, 13-ந்தேதிகளில் பக்தர்கள் கோவிலுக்குள் வருவதற்கும், வெளியே செல்வதற்கும் போலீசார் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். கோவிலின் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து கண்காணிக்க வேண்டும். பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு, விபத்து தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையினர் சமயபுரத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து செல்லும் வகையில் கூடுதல் பஸ் வசதி ஏற்பாடு செய்ய வேண்டும். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை சமயபுரம் புறவழிச்சாலை, மருதூர் பிரிவுரோடு, வி.துறையூர் பிரிவு ரோடு, ஆட்டுச்சந்தை பிரிவுரோடு, சமயபுரம் நால்ரோடு, சமயபுரம், மண்ணச்சநல்லூர் பிரிவுரோடு ஆகிய பகுதிகளில் போக்குவரத்து பணிகளை முறையாக கண்காணித்து சீர் செய்ய வேண்டும்.

    மின்சார வாரிய அலுவலர்கள் தடையற்ற மின்சாரம் வழங்குவதற்கும், பழுது ஏற்பட்டால் உடனே நிவர்த்தி செய்ய தேவையானயளவு பணியாளர்களை நியமிக்க வேண்டும். மருத்துவ துறையினர் திருச்சி, சென்னை தேசிய நெடுஞ்சாலை, சமயபுரம் நுழைவுவாயில், கோவிலுக்கு செல்லும் கடைவீதி, போலீஸ் நிலையம் அருகில், திருமண மண்டபம் முன்பகுதி மற்றும் தேவையான இடங்களில் 2 நாட்கள் முழுவதும் 24 மணி நேரமும் செயல்படும் மருத்துவ முகாமை அமைக்க வேண்டும்.

    இலவச மருத்துவ உதவி அளிக்க நடமாடும் மருந்தகம் அமைத்தல், தேவையான இடங்களில் 108 ஆம்புலன்ஸ் வசதி, கூடுதல் முதலுதவி முகாம் மற்றும் மருத்துவ முகாம்களை ஏற்பாடு செய்ய வேண்டும். நெடுஞ்சாலை துறையினர் சாலையின் இருபக்கங்களிலும் மேடு பள்ளங்கள் இல்லாமல் சீரமைத்து, எளிதாக பக்தர்கள் நடந்து வருவதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். தீயணைப்பு துறை மூலம் தேவையான அளவு தண்ணீர், தீயணைக்கும் உபகரணங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள், அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். எஸ்.கண்ணனூர் பேரூராட்சி சார்பில் பக்தர்களின் வசதிக்காக ஆங்காங்கே குடிநீர் தொட்டி அமைத்து குடிநீர் வசதி செய்து தரவேண்டும்.

    ஆண்கள், பெண்கள் என தனித்தனியே தற்காலிக கூடுதல் கழிவறை மற்றும் குளியலறை வசதிகள் அமைக்க வேண்டும். பிளாஸ்டிக்கை பயன்படுத்தி தண்ணீர் பாக்கெட்டுகள், சுகாதாரமற்ற உணவு பொருட்கள் கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும். குப்பைகளை உடனுக்குடன் அகற்றிட சுகாதார பணியாளர்களை கூடுதலாக நியமனம் செய்து சுகாதார பணிகள் மேற்கொள்ள வேண்டும். அன்னதானம் வழங்குபவர்கள் அதற்கான அனுமதி பெற்ற இடத்தில், உணவு பாதுகாப்பு துறையில் பதிவு செய்து தரமான உணவு வகைகள் வழங்குவதை உணவு பாதுகாப்பு துறையினர் உறுதி செய்ய வேண்டும்.

    அனுமதி பெறாத இடங்களில் அன்னதானம் கண்டிப்பாக வழங்கக்கூடாது. கோவில் சிறப்பு பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். கோவில் வளாக பகுதியில் கட்டணமில்லா கழிவறை வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மின்வசதி, முடிக்காணிக்கை செலுத்திய பக்தர்கள் குளிப்பதற்கு ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியே குளியல் தொட்டி, உடை மாற்றும் அறைகள் உள்ளிட்ட வசதி செய்து கொடுத்தல் வேண்டும்.

    இந்த விழா அமைதியாகவும், சிறப்பாகவும் நடந்திட அனைத்து துறை அலுவலர்களும் இணைந்து பணியாற்ற வேண்டும். மாவட்ட நிர்வாகமும், போலீசாரும், கோவில் நிர்வாகமும் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில், சமயபுரம் கோவில் இணை ஆணையர் கல்யாணி, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செல்வராஜ், உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்) காளியப்பன், போலீசார், வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் அரசு அலுவலர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • பக்தர்களுக்காக அம்மனே 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பது இந்த கோவிலின் தனிச்சிறப்பாகும்.
    • சக்திதலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன்கோவில்.

    சக்திதலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன்கோவில். இக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிறமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள்.

    வருடந்தோறும் மாசி மாத கடைசி ஞாயிறு முதல், பங்குனி மாதகடைசி ஞாயிறு வரை பக்தர்களுக்காக அம்மனே 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பது இந்த கோவிலின் தனிச்சிறப்புஆகும்.

    இந்த 28 நாட்களில் இக்கோவிலின் அம்மனுக்கு தளிகை, நைவேத்தியம் கிடையாது. துள்ளுமாவும், நீர்மோர், கரும்பு, பானகம் மற்றும் இளநீர் மட்டுமே நைவேத்தியமாக படைக்கப்படுகிறது.

    இப்படி சிறப்புமிக்க இக்கோவிலின் பூச்சொரிதல் விழா வருகிற மார்ச் 12-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று தொடங்குகிறது. அன்று, அதிகாலை விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், அனுக்ஞை, வாஸ்துசாந்தி, அங்குரார்ப்பணம் முடிந்து காலை 6.30 மணிக்கு மேல் 8 மணிக்குள் மீனலக்கனத்தில் அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் பூச்சொரிதல் விழா தொடங்குகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோவில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா வருகிற 12-ந்தேதி தொடங்க இருக்கிறது
    • இந்த 28 நாட்களும் இக்கோ–விலின் அம்மனுக்கு தளிகை, நைவேத்தியம் கிடை–யாது.

    மண்ணச்சநல்லூர்:

    சக்தி ஸ்தலங்களில் மிக–வும் பிரசித்தி பெற்றது திருச்சியை அடுத்த சமய–புரம் மாரியம்மன் கோவில். இக்கோவிலுக்கு தமிழ–கம் மட்டுமின்றி பிறமாநி–லங்க–ளில் இருந்தும் ஏரா–ளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்து– விட்டு செல்வார்கள்.சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் பூச்சொ–ரிதல் விழா மிகவும் பிர–சித்தி பெற்றதாகும்.

    வரு–டந்தோறும் மாசி மாத கடைசி ஞாயிறு முதல், பங்குனி மாதகடைசி ஞாயிறு வரை பக்தர்களுக்காக அம்மனே 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பது இந்த கோவிலின் தனிச் சிறப்புஆகும்.இந்த 28 நாட்களும் இக்கோ–விலின் அம்மனுக்கு தளிகை, நைவேத்தியம் கிடை–யாது. துள்ளுமாவும், நீர்மோர், கரும்பு, பான–கம் மற்றும் இளநீர் மட்டுமே நைவேத்தியமாக வழங்கப் படும்.

    இப்படி சிறப்புமிக்க இக்கோவிலின் பூச்சொ–ரிதல் விழா வருகிற மார்ச் 12-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) அன்று தொடங் குகிறது. அன்று, அதிகாலை விக்னேஷ்வர பூஜை, புண் யாகவாசனம், அனுக்ஞை, வாஸ்து சாந்தி, அங்கு–ரார்ப்பணம் முடிந்து காலை 6.30 மணிக்கு மேல் 8 மணிக்குள் மீனலக்கனத்தில் அம்மனுக்கு காப்பு கட்டுதலு டன் பூச்சொரிதல் விழா தொடங்குகிறது.விழாவிற்கான ஏற்பாடு–களை கோவில் இணை ஆணையர் கல்யாணி தலை–மையில் கோவில் பணியா–ளர்கள் மற்றும் ஊழி–யர்கள் செய்து வருகின்றனர்.


    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூக்களை காணிக்கையாக கொடுத்து அம்மனை வழிபட்டனர்.
    • இந்த பூத்தேர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாக, திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலின் மாசித்திருவிழா பூத்தமலர் பூ அலங்காரத்துடன் நேற்று முன்தினம் தொடங்கியது. அதைத்தொடர்ந்து நேற்று பூச்சொரிதல் விழா நடந்தது. இதையொட்டி காலை 9 மணியளவில் கோவில் பரம்பரை அறங்காவலர்கள் பூத்தட்டுகளை சுமந்து கோவிலை 3 முறை வலம் வந்தனர். அதன்பிறகு பூக்களை அம்மனுக்கு படைத்து அந்த பூக்களை கோவில் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேருக்கு கொண்டு வந்து கொடுத்தனர்.

    அதைத்தொடர்ந்து தேரின் முன்பு 21 வாழைத்தண்டுகளில் கற்பூரம் ஏற்றி திருஷ்டி கழிக்கப்பட்டு பூத்தேரோட்டம் தொடங்கியது. இதில் கோட்டை மாரியம்மனின் பூத்தேருக்கு முன்பாக விநாயகர், லட்சுமி, சரஸ்வதி, முருகன் சாமி பூத்தேர்கள் அணி வகுத்து சென்றன. இந்த பூத்தேர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. அப்போது வழியெங்கும் அமைக்கப்பட்டு இருந்த பூக்காணிக்கை மையங்களில் இருந்து பூக்கள் பெறப்பட்டன.

    அதேபோல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூக்களை காணிக்கையாக கொடுத்து அம்மனை வழிபட்டனர். இந்த காட்சி பக்தர்கள் வெள்ளத்தில் பூத்தேர் மிதந்து வருவதை போன்று இருந்தது. அதைத்தொடர்ந்து மதியம் சுமார் 2 மணியளவில் பூத்தேர்கள் கோவிலை வந்தடைந்தன. அதன்பிறகு பக்தர்களிடம் காணிக்கையாக பெறப்பட்ட பூக்கள் அனைத்தும் அம்மனின் கருவறையில் கொட்டி சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

    • அரியலூரில் அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடந்தது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    அரியலூர்:

    அரியலூரில் செட்டி ஏரிக்கரையில் உள்ள வினை தீர்த்த மதுர காளியம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெற்றது. முன்னதாக மல்லிகை, ரோஜா உள்ளிட்ட பல்வேறு பூக்களை பக்தர்கள் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.

    பின்னர் அம்மனுக்கு தாங்கள் வந்து கொண்டு வந்த பூக்களை செலுத்தினர். அம்மனுக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.




    • முருகப்பெருமானுக்கு மலர் அபிஷேகம் நடந்தது.
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் நேற்று மலர்க்காவடி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 6 மணிக்கு திருவனந்தல் பூஜை, விளா பூஜை, காலசந்தி பூஜைகள் நடந்தது. 7 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார தீபாராதனை நடந்தது.

    தொடர்ந்து காலை 8 மணிக்கு கோவில் கலையரங்கத்தில் திருவாவடுதுறை ஆதீனம், தருமை ஆதீனம், திருவண்ணாமலை ஆதீனம், சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், தவத்திரு குமரகுருபர சுவாமிகள், பொம்மபுரம் ஆதீனம், சிவப்பிரகாச சுவாமிகள், தம்பிரான் சுவாமிகள், திருக்கோவிலூர் ஆதீனம், மாணிக்கவாசக சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருளுரை வழங்கி மலர்க்காவடி ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். கோவில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் வரவேற்றார்.

    கோவிலில் இருந்து புறப்பட்ட மலர்க்காவடி ஊர்வலம் ஆறுமுகம் நகர், இந்திரியம் தம் தெரு, கீழபஜார் மற்றும் கிரிவல பாதை வழியாக சென்று கோவிலை வந்தடைந்தது.

    பின்னர் முருகப்பெருமானுக்கு மலர் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து உச்சிகால பூஜையை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் பவுர்ணமி கிரிவல குழு தலைவர் மாரியப்பன், பிரதோஷ குழு தலைவர் முருகன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கழுகுமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • நன்கொடையாளர்கள் புஷ்ப யாகத்திற்காக மொத்தம் 9 டன் மலர்கள் வழங்கினர்கள்.
    • சுகந்த திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    கார்த்திகை மாத ஷ்ரவண நட்சத்திரத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புஷ்பயாகம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட சுகந்த திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை புஷ்ப யாகம் நடந்தது. சுவாமி, தாயார் உற்சவர்கள் பட்டு வஸ்திரங்களால் அலங்கரிக்கப்பட்டு வேதமந்திரங்கள் முழங்க புஷ்ப யாகம் நடத்தப்பட்டது.

    14 வகையான நறுமண மலர்கள் மற்றும் 6 வகையான இலைகளுடன், மலையப்ப சுவாமியுடன், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருக்கு புஷ்ப அர்ச்சனையும், வண்ண மலர்கள் மற்றும் இலைகளுக்கு நடுவே சுவாமி, தாயார்களுக்கு புஷ்ப யாகமும் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோவில் முதன்மை நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி கலந்து கொண்டார்.

    வேத பண்டிதர்கள் ருக்வேதம், சுக்லயஜுர்வேதம், கிருஷ்ண யஜுர்வேதம், சாமவேதம், அதர்வண வேதம், பாராயணம் செய்தனர். முன்னதாக பூக்களை தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் இருந்து கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

    15-ம் நூற்றாண்டு முதல் புஷ்பயாகம் நடைபெற்று வருவதாகவும், அதன் பிறகு நிறுத்தப்பட்டு 1980-ம் ஆண்டு முதல் மீண்டும் புஷ்பயாகம் நடத்தப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். நன்கொடையாளர்கள் புஷ்ப யாகத்திற்காக மொத்தம் 9 டன் மலர்கள் வழங்கினர்கள்.

    ×