search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பூதநாயகி அம்மன் கோவில் பூச்சொரிதல் விழா
    X

    பூதநாயகி அம்மன் கோவில் பூச்சொரிதல் விழா

    • இன்று காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது.
    • பொன்னூஞ்சல் நிகழ்ச்சி அக்டோபர் 4-ந்தேதி நடைபெறுகிறது.

    திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியில் பிரசித்தி பெற்ற பூதநாயகி அம்மன் கோவில் உள்ளது. சுற்றுவட்டாரத்தில் உள்ள 96 கிராம மக்களின் குலதெய்வமாக விளங்கும் இந்த கோவிலின் திருவிழா நேற்று பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் மருங்கி நாட்டுத் தலைவர்தான் முதலில் பூப்போடுவார்கள். அதைத்தொடர்ந்து பல்வேறு பகுதி கிராம மக்களும் அம்மனுக்கு பூப்போட்டு செல்வார்கள். ஆனால் இந்த ஆண்டு இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் திருவிழாவை நடத்தி வருகின்றனர். அதன்படி நேற்று திருவிழாவில் முதல் பூவாக கோவில் செயல் அலுவலர் ஜீவானந்தம் அம்மனுக்கு பூ போட்டார்.

    அதைத்தொடர்ந்து பொதுமக்கள் பலரும் அம்மனுக்கு பூப்போட்டுச் சென்றனர். இதேபோல் வருவாய் துறையினர், போலீசார் சார்பிலும் அம்மனுக்கு பூ போட்டனர். முன்னதாக பூதநாயகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் கொண்டு வந்த அந்த பூக்களை அம்மனுக்கு செலுத்தினர். இருப்பினும் கடந்த ஆண்டை விட கிராம மக்களின் வருகை குறைந்திருந்தது.

    திருவிழாவின் தொடர்ச்சியாக இன்று காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், 27-ந் தேதியில் இருந்து மண்டகப்படி நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொன்னூஞ்சல் நிகழ்ச்சி அடுத்த மாதம்(அக்டோபர்) 4-ந் தேதி நடைபெறுகிறது. திருவிழாவையொட்டி மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு ராமநாதன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×