search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் பூச்சாட்டு விழா
    X

    ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் பூச்சாட்டு விழா

    • இன்று இரவு கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    • 6-ந்தேதி ஞாயிறு வசந்தோற்சவம் நடக்கிறது.

    ராசிபுரம் டவுன் நாமக்கல் ரோட்டில் பழமை வாய்ந்த நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் எப்போதும் கம்பம் நடப்பட்டு இருப்பதால் நித்திய சுமங்கலி மாரியம்மன் என்று பக்தர்களால் அழைக்கப்பட்டு வருகிறது. இக்கோவில் திருவிழா ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் நடந்து வருகிறது.

    அதேபோல் இந்த ஆண்டும் வழக்கம்போல் நித்திய சுமங்கலி மாரியம்மன், செல்லாண்டியம்மன், ஆஞ்சநேயர் கோவில்களின் திருவிழா நேற்று முன் தினம் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. பூச்சாட்டு விழாவில் பக்தர்கள் அம்மனுக்கு பூக்களை கொண்டு வந்து வைத்து சாமி தரிசனம் செய்தனர். அப்போது அம்மன் மலர்களின் குவியலில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூச்சாட்டு விழாவில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இதையடுத்து இன்று (வியாழக்கிழமை) இரவு கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் வருகிற 31-ந் தேதி இரவு 12 மணிக்கு பூவோடு பற்ற வைத்தலும், அன்று காலை 5 மணிக்கு பூவோடு எடுத்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. அடுத்த மாதம் 1-ந் தேதி இரவு 8 மணிக்கு கொடியேற்று விழா நடக்கிறது. 2-ந் தேதி காலையில் செல்லாண்டி அம்மன் கோவிலில் அம்மை அழைத்தல், பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது.

    இரவு 10 மணிக்கு அக்கினி குண்டம் பற்றவைத்தல் நடைபெறுகிறது. இதையடுத்து 3-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு அக்கினி குண்டம், மாலை திருத்தேர் உற்சவமும் நடக்கிறது. 4-ந் தேதி உடற்கூறு வண்டி வேடிக்கையும், 5-ந் தேதி இரவு வாணவேடிக்கையுடன் புஷ்ப பல்லக்கில் அம்மன் பவனி வருதலும், சத்தாபரணமும் நடக்கிறது. 6-ந்தேதி ஞாயிறு வசந்தோற்சவம் நடக்கிறது. அடுத்த மாதம் 7-ந் தேதி முதல் 20-ந் தேதி முடிய தினந்தோறும் விடையாற்றி கட்டளைதாரர்கள் நிகழ்ச்சி நடக்கிறது.

    Next Story
    ×