search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பிள்ளை வயல் காளியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
    X

    பிள்ளை வயல் காளியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    • அம்மனுக்கு தினமும் சிறப்பு பூஜை, அபிஷேகம், சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளது.
    • 15-ந்தேதி அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் மற்றும் அபிஷேகம் நடைபெறுகிறது.

    சிவகங்கை பஸ் நிலையம் எதிரில் பிள்ளை வயல் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு நடைபெறும் விழாக்களில் ஆனி மாதம் நடைபெறும் பூச்சொரிதல் விழா மிக சிறப்பு வாய்ந்தது. 10 நாட்கள் இந்த திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில் கொல்லங்குடி வெட்டுடையார் காளி கோவில் செயல் அலுவலர் கணபதி முருகன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர்.

    இதையொட்டி பிள்ளை வயல் காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடந்தது. மேலும் விழாவையொட்டி அம்மனுக்கு தினமும் மாலையில் சிறப்பு பூஜை, அபிஷேகம், சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளது. வருகிற 15-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலையில் அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் மற்றும் அபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் மாலையில் சந்தன காப்பு அலங்காரத்தில் பிள்ளை வயல் காளியம்மன் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். இரவு பூச்சொரிதல் விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

    Next Story
    ×