search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய தலைவர்"

    பா.ஜனதா புதிய தலைவராக ஜே.பி.நட்டா நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
    புதுடெல்லி:

    பா.ஜனதா தலைவராக இருந்து வரும் அமித்ஷா மத்திய மந்திரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். நேற்று அவர் மந்திரியாக பதவி ஏற்றுக் கொண்டார். பா.ஜனதாவில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற கொள்கை கடைபிடிக்கப்படுகிறது.

    எனவே அமித்ஷா தலைவர் பதவியை ராஜினாமா செய்ய இருக்கிறார்.



    இதனால் அடுத்த பா.ஜனதா தலைவர் யார் என்ற கேள்வி எழுந்து உள்ளது.

    தற்போது மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கும் ஜே.பி.நட்டா பா.ஜனதாவின் புதிய தலைவராக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    58 வயதான ஜே.பி.நட்டா இமாசலபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். மோடி அரசில் சுகாதார துறை மந்திரியாக இருந்துள்ளார்.

    தற்போதைய துணைத் தலைவர் ஓ.பி.மாத்தூர், பொதுச்செயலாளர் புபேந்திர யாதவ் ஆகியோரின் பெயர்களும் தலைவர் பதவிக்கு அடிபடுகின்றன.
    பாகிஸ்தானில் இயங்கும் தலிபான் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் கொல்லப்பட்டத்தை அடுத்து தங்களது புதிய தலைவரை அந்த இயக்கம் தேர்ந்தெடுத்துள்ளது. #PakistaniTaliban
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் இயங்கும் தலிபான் என்னும் பயங்கரவாத இயக்கம் பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் இந்த இயக்கத்தின் தலைவர் முல்லா ஃபஷ்லுல்லா கொன்று வீழ்த்தப்பட்டார்.

    இதையடுத்து தங்களது புதிய தலைமையை அந்த இயக்கம் தேர்வு செய்துள்ளது. இதுதொடர்பாக அந்த இயக்கத்தைச் சேர்ந்த முகமது குரசானி கூறுகையில், முல்லா ஃபஷ்லுல்லா கொலை செய்யப்பட்டதை அடுத்து, தங்களது புதிய தலைவராக முப்தி நூர் வலி மஹ்சூத் என்பவரை புதிய தலைவராக நியமித்ததாகவும், முப்தி மசீம், அகா முப்தி ஹஃப்ஜுல்லா ஆகியோர் துணை தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ##PakistaniTaliban
    தமிழக காங்கிரசுக்கு இன்னும் 2 மாதத்தில் புதிய தலைவர் நியமிக்கப்படலாம் என்று செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். #Congress #Kushboo
    சென்னை:

    காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதன் விவரம்:-

    கேள்வி: காங்கிரஸ் மேலிடம் எப்போது தமிழ்நாடு மீது கவனம் செலுத்தப்போகிறது?

    பதில்: கடந்த டிசம்பர் மாதம் தான் ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவராக பதவி ஏற்றுள்ளார். அதன்பிறகு கர்நாடக தேர்தலில் மிகவும் பிசியாக இருந்தார். அவர் அடுத்ததாக தமிழ்நாட்டின் மீது மிகவும் கவனம் செலுத்துவார் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும்.

    2019 பாராளுமன்ற தேர்தலை மையமாக வைத்து ஒட்டு மொத்த தமிழக காங்கிரசில் சீரமைப்பு பணிகள் செய்யப்படும்.

    கே: அப்படியானால் தமிழக காங்கிரஸ் தலைவரும் மாற்றப்படுவாரா?

    ப: தலைவர் மாற்றப்படுவதும் உறுதி.

    கே: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவிக்கு யாரெல்லாம் போட்டியிடுகிறார்கள்?

    ப: நான் இதுபற்றி எதுவும் சொல்ல முடியாது. ஆனால் இதுபற்றி பேசி இருக்கிறோம். இந்த பதவிக்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பாக பல மூத்த தலைவர்கள் பெயர்களை வைத்து ஆலோசித்து இருக்கிறார்கள்.

    கே: யார் அந்த மூத்த தலைவர்?

    ப: பல மூத்த தலைவர்கள் இருக்கிறார்கள். நான் அவர்கள் பெயரை சொல்ல முடியாது. அதுபற்றி மேலிடம் முடிவு செய்யும். கட்சியை யார் முன்னேற்றத்துக்கு கொண்டு வருவார்களோ, அவரை கட்சி தலைவராக தேர்வு செய்வார்கள்.


    கே: திருநாவுக்கரசரை கட்சி தலைவராக நியமித்து 2 ஆண்டுகள் தான் ஆகிறது. இவ்வாறு அடிக்கடி கட்சி தலைவரை மாற்றினால் அது கட்சிக்குள்ள பெயரையும், வளர்ச்சியையும் பாதிக்காதா?

    ப: நான் இதுபற்றி விளக்கமாக கூற வேண்டும். இதற்கு முன்பு தலைவராக இருந்த இளங்கோவன் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். அவர் மாற்றப்படவில்லை. சில பிரச்சனைகள் எழுவதை விரும்பாத அவர் பதவியை ராஜினாமா செய்தார்.

    கே: அவருக்கு வந்த அழுத்தங்கள் காரணமாக ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறதே?

    ப: அப்படி எந்த அழுத்தமும் இல்லை. நாங்கள் கூட அவரை ராஜினாமா செய்ய வேண்டாம் என்று கூறினோம். ஆனால் அவருக்கு ஒரு ஆபரே‌ஷன் செய்ய வேண்டியது இருந்தது. எனவே அவர் தனது உடலை கவனிக்க வேண்டிய நிலை உருவானது.

    ஒரு கட்சி தலைவராக இருப்பவர் ஆரோக்கியமாக இருந்து கட்சியை முன்னேற செய்ய வேண்டும். அந்த சூழ் நிலையில் அவர் மேலும் அழுத்தங்கள் ஏற்படுவதை விரும்பவில்லை. இளங்கோவனை பொறுத்த வரை வெளிப்படையான நபர். வெற்று வார்த்தைகளை பேசாதவர். ராஜினாமா செய்வதென்று அவராகவே முடிவு எடுத்தார்.

    கே: மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத்தை தலைவராக தேர்வு செய்துள்ளார்கள். அதேபோல பெரிய தலைவர்களை காங்கிரஸ் தலைவராக்க திட்டம் இருக்கிறதா?

    ப: அதேபோல திட்டங்கள் உள்ளது. இதற்குமேல் கட்சி தலைவர் நியமனம் பற்றி சொல்ல முடியாது. நாங்கள் ஒவ்வொரு தடவையும் சந்திக்கும்போது தமிழ்நாட்டில் செய்ய வேண்டிய மாற்றங்கள் பற்றி பேசி இருக்கிறோம். இங்கு தலைவர் மாற்றம் தேவைப்படுகிறது. இதுபற்றியும் பேசி இருக்கிறோம். அது நடைபெறும். யாரை தலைவராக நியமிப்பது என்பது குறித்து சில நபர்களின் பெயர் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் பெயரை என்னால் சொல்ல முடியாது.

    கே: தமிழ்நாட்டில் தேர்தல் குழு ஒன்றை தொடங்க திட்டமிட்டு இருப்பதாகவும், அதற்கு உங்களை தலைவராக நியமிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறதே?

    ப: இதுபோன்ற வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. தேர்தலை சந்திப்பது என்பது சாதாரண வி‌ஷயம் இல்லை. வீதி, வீதியாக செல்ல வேண்டும். தேர்தல் பிரசார தலைவர் பதவி என்பது மிகவும் கஷ்டமானது. ஏராளமான பொறுப்புகளை ஏற்க வேண்டும். இந்த பதவியை பொறுத்தவரை ராகுல்காந்தி என்ன மனதில் வைத்திருக்கிறாரோ அது நடக்கும்.

    கே: தற்போதைய காங்கிரஸ் தலைவர் இன்னும் சிறப்பாக செயல்பட்டு இருக்க முடியும் என்று கருதுகிறீர்களா?

    ப: ஆமாம். அவர் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்க முடியும்.

    கே: காங்கிரஸ் தலைவர் பதவி போட்டியில் ப.சிதம்பரம் பெயரும் இருப்பதாக கூறப்படுகிறதே?

    ப: ப. சிதம்பரம் கட்சியின் மிகப்பெரிய மூத்த தலைவர். நன்கு அறிமுகம் ஆனவர் என்ற வகையில் சொல்லி இருக்கலாம். அவர் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்கு தெரிந்தவர். ஆனால் அவர் காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்வாரா? என்று எனக்கு தெரியவில்லை. இதில் எனக்கு சந்தேகம் இருக்கிறது.

    கே: மாநில காங்கிரஸ் தலைவர் பதவிக்கு என்ன தகுதி இருக்க வேண்டும் என்று கட்சி மேலிடம் விரும்புகிறது?

    ப: கட்சியை ஒற்றுமையாக வைத்து முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்லும் ஒரு நபரை தேடுகிறார்கள். நாட்டில் பல பிரச்சனைகள் நிலவுகிறது.

    கர்நாடகா, ஆந்திரா, மராட்டியம் போல தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஒரு வலுவானதாக இருப்பதை பார்க்க முடியவில்லை. மாநில கட்சி சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. இந்த சூழ்நிலையில் கட்சியை முன்னெடுத்து செல்லக் கூடிய தலைவர் தேவைப்படுகிறார். அப்படி வரும் தலைவர் கட்சியை சிறப்பாக வளர்க்க வேண்டும்.

    கே: 3-வது அணி அமைய வேண்டும் என கருதும் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ், மம்தா பானர்ஜி உள்ளிட்டோருடன் தி.மு.க. பேசுவது காங்கிரஸ் மேலிடத்தை கவலையடைய செய்திருக்கிறதா?

    ப: தி.மு.க. தலைவருடன், பல்வேறு மாநில தலைவர்களும் தற்போது பேசுகிறார்கள். அதனால் இதுபோன்ற பேச்சுக்கள் வரலாம். அனுமானங்களுக்கெல்லாம் தி.மு.க.வோ, காங்கிரசோ பதில் சொல்ல வேண்டியது இல்லை. இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு. இதை வைத்துக்கொண்டு ஒரு முடிவுக்கு வரவேண்டிய அவசியம் இல்லை.

    கே: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாற்றம் எப்போது நடக்கும்?

    ப: இன்னும் 2 மாதத்துக்குள் நடக்கும் என்று நான் கருதுகிறேன்.

    கே: நீங்கள் காங்கிரசில் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா?

    ப: மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.


    தி.மு.க.வில் இருந்த போதும் நான் மகிழ்ச்சியாக இருந்தேன். தி.மு.க. தலைவர் கருணாநிதி என்மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார். நானும் அதுபோல இருந்தேன்.

    இப்போது கூட நான் கனிமொழி, செல்வி அக்கா மற்றும் பல தி.மு.க. தலைவர்களுடன் தொடர்பில் இருக்கிறேன். இங்கும் (காங்கிரஸ்) மகிழ்ச்சியாக இருக்கிறேன். அங்கும் (தி.மு.க.) மகிழ்ச்சியாக இருந்தேன்.

    கே: தமிழக காங்கிரஸ் தலைவருடன் உங்களுக்கு சரியான புரிதல் இல்லாதது போல இருக்கிறதே? அவரை சந்திந்து பேசுவதை பார்க்க முடியவில்லையே?

    ப: அதுபோன்று எதுவும் இல்லை. என்னை கூட்டத்துக்கு அழைக்கும் போது அதில் நான் பங்கேற்கிறேன். அழைப்பு வரவில்லை என்றால் செல்வது இல்லை. எனது தந்தையின் சொந்த வீடாக இருந்தாலும் என்னை அழைக்கவில்லை என்றால் போகமாட்டேன்.

    கே: தமிழக காங்கிரசின் செயல்பாடுகள் குறித்து உங்களிடம் கட்சி மேலிடம் ஆய்வு அறிக்கை கேட்டிருப்பதாக கூறப்படுகிறதே?

    ப: அப்படி ஒரு தகவல் உங்களுக்கு கிடைத்திருக்கலாம். ஆனால் இதுபற்றி பொதுவாக விவாதிக்க முடியாது. எனது உதடுகள் சீல் வைக்கப்பட்டுள்ளது.

    கே: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ராகுல் காந்தியை சந்திக்க முயற்சிப்பதாக கூறப்படுகிறதே?

    ப: கமல்ஹாசனை தனிப்பட்ட முறையில் நன்றாக தெரியும். இது ஒரு வதந்தி.

    இவ்வாறு அவர் கூறினார். #Congress #Kushboo
    ×