search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழங்குடியினர் பட்டியல்"

    • 2023 மார்ச் 27-ல் மெய்தி இனத்தினை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று மணிப்பூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
    • மணிப்பூரில் மேய்தி இனத்தினருக்கும், குக்கி பழங்குடிக்கும் இடையே மோதல் உருவாகி பின்னர் மிகப்பெரிய கலவரம் வெடித்தது.

    மெய்தி இனத்தினை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற உத்தரவை மாற்றியமைத்தது மணிப்பூர் உயர்நீதிமன்றம். இதன்படி மெய்தி இனத்தினர் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலிலேயே சேர்க்கப்படுவர்.

    2023 மார்ச் 27-ல் மெய்தி இனத்தினை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று மணிப்பூர் உயர்நீதிமன்றம் அம்மாநில அரசுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவிற்கு பிறகு மணிப்பூரில் மெய்தி இனத்தினருக்கும், குக்கி பழங்குடிக்கும் இடையே மோதல் உருவாகி பின்னர் மிகப்பெரிய கலவரம் வெடித்தது.

    உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, மணிப்பூர் பழங்குடியினர் சங்கம் மறு ஆய்வு செய்தது. அவ்வழக்கின் தீர்ப்பில், தனது உத்தரவை நீதிமன்றம் திரும்ப பெற்றுள்ளது.

    அத்தீர்ப்பில் பழங்குடியினர் பட்டியலில் மாற்றம் செய்யவும், திருத்தவும் உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நீதிமன்றம் சுட்டி காட்டியது.





    • மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க வேண்டிய நடவடிக்கை
    • 5 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு இருந்தது.

    நாகர்கோவில், நவ.20-

    குமரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது. கலெக்டர் ஸ்ரீதர் மக்களை சந்தித்து மனுக்களை பெற்றார்.

    மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து மனுக்களை கொடுத்தனர். மனு கொடுக்க வந்தவர்களை கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தீவிரமாக சோதனை செய்த பிறகே உள்ளே அனுமதித்தனர்.

    கன்னியாகுமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்க தலைவர் அலெக்சாண்டர் மற்றும் நிர்வாகிகள் திரண்டு வந்து ஒரு மனு கொடுத்தனர். அதில், மீனவர்களை பழங்குடிகளாக அங்கீகரிக்க வேண்டம் என்ற கோரிக்கையை கருத்தில் கொண்டு, மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க வேண்டிய நடவடிக்கைகளை அரசு உடனே தொடங்க வேண்டும்.

    தேங்காய்பட்டணம் துறைமுக வேலையை தணிக்கை குழுவின் ஆய்வுக்கு உட்படுத்தி தரமான வேலையை விரைவாக நடத்தி மேலும் உயிர்ப்பலி நடைபெறாமல் தடுத்து நிறுத்த வேண்டும்.

    அரசு அறிவித்தபடி மீன்பிடிக் கலன்களின் மீன்பிடி உரிமத்தின் கால அளவை பழையபடி 3 ஆண்டுகள் என்று மாற்ற வேண்டும். தமிழக துறைமுகங்களின் கட்டமைப்பை விரிவுபடுத்தி, வசதிகளை பெருக்கி, தமிழ்நாட்டு மீனவர்கள், மாநிலத்தில் உள்ள எந்த துறைமுகத்தையும் பயன்படுத்தச் செய்ய வேண்டுவது உள்பட 5 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு இருந்தது.

    • நரிக்குறவர், குருவிக்காரர் ஆகிய சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
    • கடந்த வியாழக்கிழமை மக்களவையில் பழங்குடியினர் அரசியல் சாசன திருத்த மசோதா நிறைவேறியது

    புதுடெல்லி:

    தமிழகத்தில் குருவிக்காரர், நரிக்குறவர் உள்ளிட்ட சில சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பிரிவில் சேர்த்து சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று போராடி வருகின்றனர். இதுதொடர்பாக அரசுக்கும், முதல்வருக்கும் அவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். அதில், நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை தமிழகத்தின் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி, அதற்கான பல்வேறு காரணங்களையும் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் செப்.14-ம் தேதி நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், நரிக்குறவர், குருவிக்காரர் என அழைக்கப்படுவோரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில், நரிக்குறவர், குருவிக்காரர் சமுதாயத்தினருக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்கும், பழங்குடியினர் அரசியல் சாசன திருத்த மசோதா கடந்த வியாழக்கிழமை மக்களவையில் நிறைவேற்றப்பட்டு மாநிலங்களவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    மாநிலங்களவையில் இன்று இந்த மசோதா மீது விவாதம் நடத்தப்பட்டது. விவாதத்திற்குப் பிறகு மசோதா நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து குடியரசுத் தலைவருக்கு மசோதா அனுப்பி வைக்கப்படும். குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்ததும், அரசாணை வெளியிடப்பட்டு இந்தச் சட்டம் அமலுக்கு வரும்.

    • தமிழ்நாட்டைச் சேர்ந்த நரிக்குறவர், குருவிக்காரர் உள்ளிட்ட 4 சமூகங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.
    • மத்திய அரசின் நடவடிக்கையால் 4 சமூகங்களையும் சேர்ந்த பல லட்சம் மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் முன்னுரிமையும், சமூகநீதியும் கிடைக்கும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டைச் சேர்ந்த நரிக்குறவர், குருவிக்காரர் உள்ளிட்ட 4 சமூகங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. நரிக்குறவர், குருவிக்காரர் சமுதாய மக்களின் சமூக, கல்வி முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

    டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமை யில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இமாலயப் பிரதேசத்தை சேர்ந்த ஹாட்டீ, சத்தீஸ்கரைச் சேர்ந்த பிரிஜியா, தமிழ்நாட்டை சேர்ந்த நரிக்குறவர்கள் ஆகிய மூன்று சமூகங்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை காரணமாக 4 சமூகங்களையும் சேர்ந்த பல லட்சம் மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் முன்னுரிமையும், சமூகநீதியும் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • குளச்சல் மீனவர் மாநாட்டில் தீர்மானம்
    • மீனவர் மாநாடு குளச்சல் புனித காணிக்கை மாதா மண்டபத்தில் நடந்தது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்ட பாதர் தாமஸ் கொச்சேரி மீன் தொழிலாளர்கள் யூனியன் சார்பில் மீனவர் மாநாடு குளச்சல் புனித காணிக்கை மாதா மண்டபத்தில் நடந்தது. கோடிமுனை கிளை தலைவர் ரவி ரமேஷ் தலைமை தாங்கினார். குளச்சல் கிளை தலைவர் அமல்ராஜ் மாநாடு கொடி ஏற்றினார். வாணியக்குடி கிளை தலைவர் சிம்சன் வரவேற்று பேசினார்.

    மாவட்ட தலைவர் அருட்பணி கிளாரட், நெய்தல் நிறுவனர் வக்கீல் ஜாண்சன், தென்னிந்திய மீனவர் நல சங்க தலைவர் பாரதி, கடல்சார் மக்கள் நல சங்கம் பிரவின் குமார், எச்.ஆர்.எல்.என்.அருண்காசி, தமிழ்நாடு தேசிய மீன் தொழிலாளர்கள் சங்கம் அருட்பணி சுசீலன் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

    தாமஸ் கொச்சேரி யூனியன் மாவட்ட பொருளாளர் சுரேஷ் மாநாட்டு தீர்மானங்கள் வாசித்தார்.மாநாட்டில் பாரம்பரிய மீனவர்கள் பழங்குடியினர் என்ற அங்கீகாரத்தை சட்ட பூர்வமாக்கிட மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க மத்திய, மாநில அரசுகளை கேட்பது என தீர்மானம் வலியுறுத்தப்பட்டது.

    குளச்சல் பங்குத்தந்தை டைனிசியஸ், கடலோர அமைதி மற்றும் வளர்ச்சிக் குழு இயக்குனர் டங்ஸ்டன் மற்றும் மீனவர் கூட்டுறவு சங்க நிர்வாகிகள், மீனவர் அமைப்பு நிர்வாகிகள், நெய்தல் எழுத்தாளர்கள் உள்பட மீனவர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக இயற்கை எய்திய உறுப்பினர்களின் உருவப்படம் திறக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. அழிக்கல் கிளை செயலர் சோழன் நன்றி கூறினார்.

    ×