search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நரிக்குறவர்கள்"

    • எருமை மாடு, ஆடுகள் பலியிட்டு நரிக்குறவர்கள் வினோத வழிபாடு நடந்தது.
    • 6 எருமை மாடுகள், 10-க்கும் மேற் பட்ட ஆடுகள் பலியிடப்பட் டன.

    சிவகங்கை

    சிவகங்கை அருகே பழ மலைநகரில் நரிக்குறவ மக்கள் பலர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்கள் குல தெய் வத்திற்கு, எருமை மாடு வெட்டி பொங்கல் வைக்கும் வினோத பூஜையை நடத்தி–னர். அப்போது 6 எருமை மாடுகள், 10-க்கும் மேற் பட்ட ஆடுகள் பலியிடப்பட்டன.

    இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

    எங்கள் குல தெய்வத்திற்கு ஆண்டுதோறும் கிடா வெட்டி, பூஜை செய்து வரு–கிறோம். இங்கு பூஜைகள் நடத்தும் போது வெளியூர்க–ளில் உள்ள எங்கள் உறவி–னர்கள் கலந்து கொண்டு குலதெய்வம் காளியம்ம–னுக்கு எருமை கிடாவையும், துர்கையம்மனுக்கு ஆட்டுக் கிடாவையும் பலியிட்டு பூஜை செய்வார்கள்.

    மேலும் இதற்காக, 5 ஆயிரம் முதல் 8 ஆயிரம் ரூபாய் வரை ஆட்டு கிடாக்க–ளும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை எருமை மாடுகளையும் வாங்கியுள்ளோம். இன்று அதிகாலையில் கிடா வெட்டி, ரத்தத்தை குடித்து காளியம்மனுக்கு படையல் வைத்தும், தொடர்ந்து ரவை ரொட்டிகளை செய்து பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து, மூன்று நாட்க–ளாக இங்கே பூஜைகள் செய்து வருகிறோம்.

    பூஜைக்குப் பின் எருமை மாடுகளை உரித்து, உடல் உறுப்புகளை, உறவினர்கள் ஊருக்கு எடுத்துச் செல் வோம். எருமையின் தலையை எதற்கும் பயன்ப–டுத்த மாட்டோம். மிஞ்சும் பாகங்களை உலர்த்தி பயன் படுத்திக் கொள்வோம்.

    தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் எங்க–ளின் உறவினர்கள் உள்ள–னர். வசதி படைத்தவர்களாக இருந்தாலும் ஆண்டுக்கு ஒரு முறை கிடா வெட்டி காளி–யம்மனுக்கு பூஜைகள் செய்து வருறோம். இந்த பூஜையில் உறவினர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியுடன் குலதெய்வத்தை வழிபட் டால் நோய் நொடியின்றியும், ஊசி மணி பாசி தொழிலும் சிறப்பாக அமையும் என்பது நீண்ட கால நம்பிக்கை என்று தெரிவித்தனர்.

    • சிலர் கலெக்டர் அலுவலகம் வெளியே சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் படுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • அதிகத்தூர் கிராமத்திற்கு நேரில் வந்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த அதிகத்தூர் நரிக்குறவர் காலனியில் 83 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆவடியில் வசித்து வந்த இவர்களுக்கு மாற்று இடமாக திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அதிகத்தூரில் இடம் ஒதுக்கப்பட்டு அதில் வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை என அனைத்து ஆவணங்களும் வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் வசித்து வரும் வீட்டிற்கு பட்டா வழங்கப்படாமல் உள்ளது.

    இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பட்டா கேட்டு அதிகத்தூரை சேர்ந்த நரிக்குறவர்கள் விண்ணப்பித்த போது இந்த இடம் மேய்ச்சக்கால் புறம்போக்கு நிலம் என்பதால் பட்டா வழங்க வாய்ப்பில்லை என்று கூறப்பட்டதாக தெரிகிறது. இதனால் விரக்தியடைந்த நரிக்குறவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த டவுன் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் மற்றும் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி அப்புறப்படுத்தனர். மேலும் சிலர் கலெக்டர் அலுவலகம் வெளியே சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் படுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களை குண்டுகட்டாக தூக்கி போலீசார் அப்புறப்படுத்தினர். இதனையடுத்து நரிக்குறவர்கள் யாரும் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியே வர முடியாதபடி அலுவலக கேட் மூடப்பட்டதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதற்கிடையே மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டபோது நரிக்குறவர்கள் சிலர் சூழ்ந்து பட்டாகேட்டு மீண்டும் கோரிக்கை வைத்தனர். மேலும் மணிமாலையை கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கழுத்தில் அணிவித்து அவரது காலில் விழுந்து கதறினர். அப்போது அதிகத்தூர் கிராமத்திற்கு நேரில் வந்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பட்டா தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் உறுதி அளித்ததை தொடர்ந்து நரிக்குறவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதனால் கலெக்டர் அலுவலகம் சுமார் 2 மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    • 133 பழங்குடியின நரிக்குறவர் இன மக்களுக்கு சாதிச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.
    • ஆக்கம் மற்றும் நலம் என்னும் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பள்ளி புதுப்பித்தல் பணியினை கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்.

    அரூர்,

    தருமபுரி மாவட்டம், அரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பழங்குடியின நரிக்குறவர் இன மக்களுக்கு சாதிச்சான்றிதழ்கள் வழங்குதல் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது. பின்னர் மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்ததாவது:-

    தமிழ்நாடு அரசால் நரிக்குறவர், குருவிக்காரன் சமுதாயத்தினர் அனைத்து அரசியலமைப்பு பாதுகாப்பு மற்றும் நலத்திட்டங்களை பெற தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருந்து பழங்குடியினர் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ள நரிக்குறவன், குருவிக்காரன் சமுதாய மக்களுக்கு பழங்குடியினர் சாதிச்சான்றிதழை அரசால் வெளியிடப்பட்ட நெறிமுறைகளை பின்பற்றி வழங்க தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதனடிப்படையில் இன்றைய தினம் அரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 133 பழங்குடியின நரிக்குறவர் இன மக்களுக்கு சாதிச்சான்றிதழ்கள் மற்றும் 10 நபர்களுக்கு பழங்குடியினர் நலவாரிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.

    அரசால் மிகப்பிற்படுத்தப்பட்ட பிரிவிலிருந்து தற்பொழுது பழங்குடியினர் பிரிவில் நரிக்குறவர்களுக்கு சாதிச்சான்று வழங்குவதால் ஏராளமான சலுகைகளை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    தருமபுரி மாவட்டத்தில் பழங்குடியினர் மக்களுக்கென அரசுப்பள்ளிகள் மற்றும் உண்டு உறைவிடப்பள்ளி செயல்பட்டு வருகிறது. நரிக்குறவர் இன மாணவ, மாணவியர்கள் அனைவரும் உயர்கல்வி பயின்று போட்டித்தேர்வுகளில் பங்கேற்று, இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி, டி.என்.பி.எஸ்.சி குரூப்-1, குரூப்-2 உள்ளிட்ட பல்வேறு அரசு பணிகளில் தங்களுக்கான இடஒதுக்கீட்டின் அடிப்படையில் எளிதாக அரசுப்பணியில் சேரலாம். எனவே, அனைத்து மாணவ, மாணவியர்களும் அரசின் இடஒதுக்கீட்டினை முறையாக பயன்படுத்திக்கொண்டு உயர்கல்வி பயின்று, அரசு அலுவலகத்தில் உயர்ந்த பதவியில் அமர வேண்டும்.

    மேலும் தருமபுரி, அரூர் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட அனைத்து மண்டல துணை வட்டாட்சியர்களும் தங்களது வட்டத்தின் கட்டுப்பாட்டிலுள்ள நபர்கள் ஏற்கனவே குருவிக்காரன், நரிக்குறவர் நரிக்குறவன் சாதிச்சான்று அட்டையாக பெறப்பட்டிருப்பின் அதை ரத்து செய்து இ-சாதிச்சான்று வழங்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதையடுத்து அரூர் ஊராட்சி ஒன்றியம், பறையப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆக்கம் மற்றும் நலம் என்னும் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பள்ளி புதுப்பித்தல் பணியினை கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அரூர் வருவாய் கோட்ட அலுவலர் வில்சன் ராஜசேகர், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராமதாஸ், பழங்குடியினர் நல அலுவலர் கண்ணன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கண்ணன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

    • 54 நரிக்குறவர்கள் குடும்பத்துடன் வந்து ஜாதி சான்றிதழ் வழங்க இணையதளத்தில் பதிவு செய்தனர்.
    • தாசில்தார் ராஜேஸ்வரி, மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்தராவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    மாமல்லபுரம்:

    நரிக்குறவர்களுக்கு பழங்குடியினர் சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம் தமிழ்நாட்டில் முதற்கட்டமாக மாமல்லபுரம் அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது. இதில் 54 நரிக்குறவர்கள் குடும்பத்துடன் வந்து ஜாதி சான்றிதழ் வழங்க இணையதளத்தில் பதிவு செய்தனர்.

    பூஞ்சேரி பகுதிக்கான இந்த சிறப்பு முகாமில் செங்கல்பட்டு கோட்டாட்சியர் இப்ராஹீம், திருக்கழுக்குன்றம் தாசில்தார் ராஜேஸ்வரி, மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்தராவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையத்தில் நரிக்குறவர்களால் நடத்தும் கடையும் ஒதுக்கப்பட்டது.
    • நறிக்குறவர் பெண்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் வணிக மையம் என்று பெயரிடப்பட்ட இந்த கடைக்கு நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது.

    ஸ்ரீபெரும்புதூர்:

    பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி காணப்படும் நரிக்குறவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குழுவாக தங்கி உள்ளனர். அவர்கள் தாங்கள் செய்யும் பாசிமணி,வளையல், செயின் உளிட்ட பொருட்களை சாலை ஓரங்கள், திருவிழாகள், பஸ் நிலையம் போன்ற இடங்களில் விற்பனை செய்வது வழக்கம்.

    இவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆரத்தியின் முயற்சியால் நரிக்குறவர்களின் பொருட்களை விற்பனை செய்யவும், அதனை அனைத்து இடங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லவும் முயற்சி எடுத்து உள்ளார்.

    இதையடுத்து ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் வசித்து வரும் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு ரீட்ஸ் என்ற தொண்டு நிறுவனம் மற்றும் மகளிர் மேம்பாட்டு திட்டம் மூலம் மணிமாலை கோர்த்தல், பட்டுநூலில் தயாரித்த வளையல், கவரிங் நகைகள், அணிகலன்கள் உள்ளிட்ட பொருட்கள் செய்வதற்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    இந்த பொருட்களை விற்பனை செய்யும் ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையத்தில் நரிக்குறவர்களால் நடத்தும் கடையும் ஒதுக்கப்பட்டது. இதனை நேற்று முன்தினம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    நறிக்குறவர் பெண்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் வணிக மையம் என்று பெயரிடப்பட்ட இந்த கடைக்கு நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது. விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.


    நகை கடைபோல் பிரம்மாண்டமாக காட்சி அளிக்கும் இந்த கடையில் புதிய மாடல்களில் மனதுக்கு பிடித்த வளையல், செயின்கள் இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும் இந்த பொருட்கள் தரமானதாக பிராண்ட் நிறுவனம் போலவே காட்சி அளிக்கிறது.

    இந்த மையத்தில் பணியில் உள்ள நரிக்குற பெண்கள் கோட் அணிந்து புதிய தோற்றத்தில் விற்பனை செய்கிறார்கள். இதுவும் பொதுமக்களை மிகவும் கவர்ந்து உள்ளது.

    இதன் மூலம் கலெக்டர் ஆர்த்தியின் முயற்சியால் நரிக்குறவர்களின் பொருட்களுக்கு புதி பிராண்ட் உருவாகி இருக்கிறது. இதனால தங்களது வாழ்வாதாரம் உயரும் என்று நரிக்குறவர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள கடையில் மட்டும் அல்லாமல் காஞ்சிபுரத்தில் உள்ள பிரபலமான பட்டுசேலை கடைகளிலும் நரிக்குறவர்களின் உற்பத்தி பொருட்களை காட்சிபடுத்தி விற்பனை செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. முழுக்க, முழுக்க பட்டு நூலில் செய்யப்படும் அணிகலன்கள் என்பதால்பட்டுச்சேலை வாங்குபவர்கள் இதனையும் வாங்குவார்கள் என்றனர்.

    • தமிழ்நாட்டைச் சேர்ந்த நரிக்குறவர், குருவிக்காரர் உள்ளிட்ட 4 சமூகங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.
    • மத்திய அரசின் நடவடிக்கையால் 4 சமூகங்களையும் சேர்ந்த பல லட்சம் மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் முன்னுரிமையும், சமூகநீதியும் கிடைக்கும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டைச் சேர்ந்த நரிக்குறவர், குருவிக்காரர் உள்ளிட்ட 4 சமூகங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. நரிக்குறவர், குருவிக்காரர் சமுதாய மக்களின் சமூக, கல்வி முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

    டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமை யில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இமாலயப் பிரதேசத்தை சேர்ந்த ஹாட்டீ, சத்தீஸ்கரைச் சேர்ந்த பிரிஜியா, தமிழ்நாட்டை சேர்ந்த நரிக்குறவர்கள் ஆகிய மூன்று சமூகங்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை காரணமாக 4 சமூகங்களையும் சேர்ந்த பல லட்சம் மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் முன்னுரிமையும், சமூகநீதியும் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×