search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரூக் அப்துல்லா"

    • மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
    • ஜனநாயகமும் அரசியலமைப்பும் அச்சுறுத்தப்படுவதாக பரூக் அப்துல்லா பேச்சு

    சென்னை:

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று பிரமாண்ட பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தொடங்கியது. அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்பாட்டின்பேரில் நடைபெறும் இக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று உரையாற்ற உள்ளார்.

    இக்கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா, சமாஜ்வாடி கட்சித் தலைவரும், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.

    பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வாழ்த்தி ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா பேசும்போது, 'நீங்கள் தமிழகத்திற்கு மட்டும் சேவை செய்யாமல், ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் சேவை செய்வதற்காக நீண்ட காலம் வாழ்வீர்கள். இந்தியா இப்போது இக்கட்டான சூழலில் உள்ளது. ஜனநாயகமும் அரசியலமைப்பும் அச்சுறுத்தப்படுகிறது. விழித்துக்கொள்வோம்' என்றார்.

    முன்னதாக சென்னை வந்து இறங்கியதும் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, செய்தியாளர்களைச் சந்தித்தபோது, 2024 தேர்தல் குறித்தும் பிரதமர் வேட்பாளர் குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த பரூக் அப்துல்லா, ``நாம் அனைவரும் ஒன்றிணைந்து வெற்றிபெறும்போது, இந்த தேசத்தை வழிநடத்தி ஒன்றிணைக்க சிறந்த மனிதர் யார் என்பதை முடிவுசெய்வார்கள்" என்றார்.

    தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா? என்ற கேள்விக்கு பதிலளித்த பரூக் அப்துல்லா, ``ஏன் முடியாது... ஏன் அவரால் பிரதமராக முடியாது... அதில் என்ன தவறு?" என்றார்.

    • தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் டிசம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ளது.
    • இனி தலைவர் பதவிக்கு போட்டியிட மாட்டேன் என பரூக் அப்துல்லா தகவல்

    ஸ்ரீநகர்:

    நாட்டின் மூத்த அரசியல் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா (வயது 85), தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 'இனி தலைவர் பதவிக்கு போட்டியிட மாட்டேன். தலைவர் பதவிக்கான தேர்தல் டிசம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. புதிய தலைமுறையினர் பொறுப்புகளை ஏற்கும் நேரம் இது. கட்சியின் உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும் தலைவர் பதவிக்கு போட்டியிடலாம். இது ஒரு ஜனநாயக நடைமுறை' என்றார்.

    தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் பரூக் அப்துல்லா, கட்சியின் புரவலராகப் பொறுப்பேற்பார் என்றும், தற்போது கட்சியின் துணைத் தலைவராக இருக்கும் அவரது மகன் உமர் அப்துல்லா, புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    • காஷ்மீரில் சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
    • காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து திரும்ப கிடைக்கும்வரை தேர்தல்களில் போட்டி இல்லை என்று உமர் அப்துல்லா அறிவிப்பு.

    ஸ்ரீநகர் :

    காஷ்மீரில் சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதை முன்னிட்டு சட்டசபை தொகுதிகளுக்கான பொறுப்பாளர்களை தேசிய மாநாட்டுக்கட்சி நியமித்து வருகிறது.

    இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த கட்சித்தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான பரூக் அப்துல்லா, பொறுப்பாளர் நியமனம் குறித்து அவர்களிடம் விளக்கினார்.

    அப்போது அவர் கூறுகையில், 'காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து திரும்ப கிடைக்கும்வரை தேர்தல்களில் போட்டியிடமாட்டேன் என உமர் அப்துல்லா ஏற்கனவே கூறிவிட்டார்' என்று தெரிவித்தார்.

    முன்னாள் முதல்-மந்திரியும், கட்சியின் துணைத்தலைவருமான உமர் அப்துல்லா இந்த முடிவை ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், அதை அவரது தந்தையும், கட்சித்தலைவருமான பரூக் அப்துல்லாவும் உறுதி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    சட்டசபை தேர்தலுக்காக தொகுதி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருப்பதன் மூலம், தேர்தலில் வேறு கட்சிகளுடன் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லையா? என செய்தியாளர்கள் கேட்டனர்.

    அதற்கு, 'தேர்தலுக்கு இன்னும் போதுமான நேரம் இருப்பதால், அதுகுறித்து பின்னர் முடிவு செய்யப்படும்' என்று பதிலளித்தார்.

    • ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
    • இதில் பரூக் அப்துல்லாவின் ரூ.12 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை கையகப்படுத்தியது.

    புதுடெல்லி:

    ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லா. இவர் 2001 முதல் 2011 வரை ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்தார். அப்போது இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ.112 கோடி அளவிற்கு மோசடி செய்ததாக பரூக் அப்துல்லா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    இதற்கிடையே, இந்த வழக்கில் பரூக் அப்துல்லாவின் ரூ.12 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை ஏற்கனவே கையகப்படுத்தியது.

    இந்நிலையில், ஸ்ரீநகர் கோர்ட்டில் பரூக் அப்துல்லாவுக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் அமலாக்க இயக்குனரகம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

    இந்தப் புகாரை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் பணமோசடி வழக்கு தொடர்பாக ஆகஸ்ட் 27-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    பரூக் அப்துல்லா ஏற்கனவே கடந்த மே மாதம் 31-ம் தேதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவு மேம்பட முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பாதையை மோடி பின்பற்றுவார் என ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா நம்பிக்கை தெரிவித்துள்ளார். #FarooqAbdullah
    ஸ்ரீநகர் :

    பாகிஸ்தானின் புதிய பிரதமர் இம்ரான்கான் தலைமையின் கீழ், இந்தியா- பாகிஸ்தான் இடையேயான நட்புறவு மேம்படும் என்று நம்பிக்கை இருப்பதாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக்கட்சி தலைவருமான பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.  

    தனது தந்தையும் தேசிய மாநாட்டு கட்சி நிறுவனருமான ஷேக் முகம்மது அப்துல்லாவின் 36-வது நினைவு தினத்தில் கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசிய பரூக் அப்துல்லா மேற்கூறிய தகவலை கூறினார். 

    பரூக் அப்துல்லா மேலும் கூறும் போது, “ பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் பதவியேற்றுள்ள நிலையில், இந்தியா -பாகிஸ்தான் இடையேயான உறவு மேம்படும் என்று நம்பிக்கையோடு உள்ளோம். இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவு மேம்படுவது நமக்கு மிகவும் முக்கியமானது. ஏனெனில், இருநாடுகளுக்கு இடையேயும் இணக்கான சூழல் இருந்தால்தான், நமது (காஷ்மீர்) பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படும். 

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பாதையை பின்பற்றி பிரதமர் மோடியும் பாகிஸ்தானுடனான நட்புறவை மேம்படுத்துவார் என நம்புகிறேன். இருநாடுகளும் நட்புறவில் இருந்தால்தான், பிராந்தியம் வளர்ச்சி பெறும். 

    மத்திய அரசு சட்டப்பிரிவு 35-ஏ, வை பாதுகாக்க தவறினால், உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பது போல, சட்டப்பேரவை மற்றும் பாராளுமன்ற தேர்தலையும் தேசிய மாநாட்டு கட்சி புறக்கணிக்கும்” என்றார். 
    ஆர்ட்டிகிள் 35 ஏ சட்ட பிரிவை பாதுகாக்க வில்லை என்றால் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்போம் என தேசிய மாநாடு கட்சித்தலைவரும், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். #Article35A #FarooqAbdullah
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல்-மே மாதத்தில் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்கள் கடைசியாக நடைபெற்றன. இந்த தேர்தல்களில் சுமார் 80 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன. 

    இதைதொடர்ந்து, 2016-ம் ஆண்டில் நடக்க வேண்டிய தேர்தல் அப்போது புர்ஹான் வானி என்னும் பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்ற பின்னர் ஏற்பட்ட கலவரம், வன்முறை மற்றும் அமைதியின்மையால் ஒத்திவைக்கப்பட்டது.

    தற்போது, அங்கு பதற்றம் தணிந்து, இயல்புநிலை திரும்பியுள்ள நிலையில் வரும் அக்டோபர் முதல் தேதி முதல் 5-ம் தேதி வரை நகராட்சி தேர்தல்களும், நவம்பர் 8-ம் தேதியில் தொடங்கி பஞ்சாயத்து தேர்தல்களும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கும் பிரிவு 35 ஏ குறித்தான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. உள்ளாட்சி தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், இந்த வழக்கு விசாரிக்கப்பட்டால் சட்டம் - ஒழுங்கி பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது என மாநில கவர்னர் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியதால், வழக்கு விசாரணை அடுத்தாண்டு ஜனவரிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 

    இந்நிலையில், அம்மாநில முன்னாள் முதல்வரும் தேசிய மாநாடு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லா இன்று செய்தியாளர்களை சந்திக்கும் போது, “ஆர்டிக்கிள் 35 ஏ சட்ட பிரிவை நீதிமன்றத்தில் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும். இல்லையெனில் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்போம்” என குறிப்பிட்டார்.

    ஏற்கனவே, காஷ்மீரில் உள்ள பிரிவினைவாத இயக்கங்கள் உள்ளாட்சி தேர்தலை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. 
    ×