search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணி நியமன ஆணை"

    • 30 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது
    • கல்லுாரி முதல்வர் வழங்கினார்.

    அரியலூர், 

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்காக வளாக நேர்காணல் தேர்வு நடைபெற்றது. அப்போது பல்வேறு நிலைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதியுள்ள 30 மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன அழைப்பு கடித்தை கல்லூரி முதல்வர் கலைச்செல்வி வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் வேலைவாய்ப்பு புல ஒருங்கிணைப்பாளர் ம.ராசமூர்த்தி செய்திருந்தார்.

    • கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையினை மாவட்ட கலெக்டர் மோகன் வழங்கி னார்.
    • வாரிசுதாரர்களுக்கு தகுதியின் அடிப்படையில் பணிகள் வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் முகாம் அலுவல கத்தில், வருவாய் அலகில், பணியிலிருக்கும் போது உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையினை மாவட்ட கலெக்டர் மோகன் வழங்கி னார்.அப்போதுஅவர் கூறியதாவது:- 

    தமிழ்நாடு முதல்- அமைச்சர், அரசின் திட்டங்கள் அனைத்தும் பொது மக்களிடம் கொண்டு செல்வதற்கு பெரும் உறுதுணையாக இருப்பது அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஆவார்கள். இவ்வாறு அரசு அலு வலகங்களில் பணிபுரியும் அலுவலரோ அல்லது பணியாளரோ யாரேனும் பணியில் இருக்கும் போது எதிர்பாரதவிதமாக உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்தினை பாது காத்திடும் வகையில் குடும்ப வாரிசுதாரர்களுக்கு தகுதியின் அடிப்படையில் பணிகள் வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

    அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டம், வருவாய் அலகில், பணியாற்றி வந்த 6 கிராம உதவியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு 3 கிராம நிர்வாக அலுவலர் மற்றும் 3 கிராம உதவியாளர் பணி கருணை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, கூடுதல் ஆட்சியர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சித்ரா விஜயன், தனித்துனை கலெக்டர் சமூக பாதுகாப்புத்திட்டம் விஸ்வநாதன், துணை கலெக்டர் (பயிற்சி) லாவண்யா உட்பட பலர் உள்ளனர்.

    • மத்திய அரசின் திட்டத்தின் கீழ் இதுவரை 2 கட்டங்களாக சுமார் 1.47 லட்சம் பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு உள்ளன.
    • பிரதமர் மோடியின் உறுதிப்பாட்டை நோக்கிய நடவடிக்கையே இந்த வேலை வாய்ப்பு திட்டமாகும்.

    மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், பொதுத் துறை வங்கிகள், தன்னாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் அடுத்த ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேருக்கு பணி நியமனம் வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது.

    யு.பி.எஸ்.சி. எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், ரெயில்வே தேர்வு வாரியம், எஸ்.எஸ்.சி. எனப்படும் சரக பணியாளர் தேர்வாணையம் போன்றவற்றின் மூலம் இந்த பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

    அதன்படி இதுவரை 2 கட்டங்களாக சுமார் 1.47 லட்சம் பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு உள்ளன.

    இந்த நிலையில் 3-வது கட்டமாக சுமார் 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த பணி நியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் இன்று வழங்கினார். பின்னர் பணி நியமன ஆணை பெற்றவர்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார்.

    புதிதாக பணி நியமனம் பெற்றவர்கள் மத்திய அரசின் கீழ் இளநிலை பொறியாளர், தொழில்நுட்ப பணியாளர், ஆய்வாளர், உதவி ஆய்வாளர், காவலர், தட்டச்சர், இளநிலை கணக்காளர், வருமான வரி ஆய்வாளர், ஆசிரியர், செவிலியர், மருத்துவர், சமூக பாதுகாப்பு அதிகாரி உள்ளிட்ட பணிகளில் சேருகிறார்கள்.

    இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வேலை வாய்ப்பு உருவாக்கத்துக்கு உச்சபட்ச முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற பிரதமர் மோடியின் உறுதிப்பாட்டை நோக்கிய நடவடிக்கையே இந்த வேலை வாய்ப்பு திட்டமாகும். இது இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் தேசத்தின் வளர்ச்சியில் அவர்களின் பங்களிப்புக்கு உந்துதலாக அமைந்துள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

    • 290-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்
    • மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் தொடங்கி வைத்தார்

    சோளிங்கர்:

    சோளிங்கரில் தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. வேலைவாய்ப்பு முகாமிற்கு தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்க சோளிங்கர் வட்டார மேலாளர் அலமேலு தலைமை தாங்கினார்.

    உதவி திட்ட அலுவலர் சாகுல் அமீது முன்னிலை வகித்தார். மாவட்ட திட்ட இயக்குனர் நானிலதாசன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வேலைவாய்ப்பு முகாமை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

    வேலை வாய்ப்பு முகாமில் 290-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் 102 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. ஒன்றியக் குழு உறுப்பினர்கள் வெங்குப்பட்டு ராமன், நதியா மதன்குமார், மாரிமுத்து, சுப்பிரமணி மற்றும் வட் டார இயக்க அலுவலக பணியாளர்கள் உடனிருந்தனர்.

    • மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செயற்கை கால்களை கலெக்டர் வழங்கினார்.
    • மாதம் ரூ.3 ஆயிரம் என்ற அடிப்படையில் தற்காலிகமாக பகுதி நேர தூய்மைப் பணிகளுக்கான நியமன ஆணைகளையும் கலெக்டர் வழங்கினார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடந்தது.

    இதில் இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம், விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.

    இந்த மனுக்களை கலெக்டர் துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும் முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறும் கலெக்டர் அறிவுறுத்தினார்.

    முன்னதாக, மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், கை மற்றும் கால்களை இழந்த 4 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ், நவீன செயற்கை கால்களை கலெக்டர் வழங்கினார்.

    பிற்படுத்தப்பட்டோர்,

    மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மூலம் 5 பேருக்கு மாவட்ட அலகில் இயங்கி வரும் விடுதிகளில், பகுதி நேர தொகுப்பூதியம் மாதம் ரூ.3 ஆயிரம் என்ற அடிப்படையில் தற்காலிகமாக பகுதி நேர தூய்மைப் பணிகளுக்கான நியமன ஆணைகளையும் கலெக்டர் வழங்கினார்.

    சாத்தூர் ஊராட்சி ஒன்றியம், சிந்தப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சத்துணவு சமையல் உதவியாளராக பணியாற்றி மரணமடைந்த செல்லேசுவரி என்பவரது வாரிசுதாரரான கவிதாவுக்கு அதே பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக கருணை அடிப்படையிலான பணிநியமன ஆணையையும் கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(சத்துணவு) சங்கர நாராயணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஞானவேல், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • காவல் துறை தகவல் பதிவு உதவியாளர், வரவேற்பாளர் ஆகிய பணிகளுக்கு பணிமன அணை வழங்கப்பட்டு வருகிறது.
    • போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி 29 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

    ஈரோடு:

    தமிழக காவல்துறையில் பணியின்போது உயிரிழந்த 1,132 போலீசாரின் வாரிசு களுக்கு கருணை அடிப்ப டையில் பணி நியமனம் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தர விட்டார்.

    கருணை அடிப்படையில் பணி நியம னத்தையும் சென்னையில் முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.

    அதைத்தொடர்ந்து முதற்கட்டமாக 912 பேருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. காவல் துறை தகவல் பதிவு உதவியாளர், வரவேற்பாளர் ஆகிய பணிகளுக்கு பணிமன அணை வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பணியின் போது மரணம் அடைந்த போலீசாரின் வாரிசுகள் 29 பேருக்கு பணி நியமன ஆனைகள் வழங்கும் நிகழ்ச்சி ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது.

    போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி 29 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

    • புனித அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது
    • தக்கலை மறைமாவட்ட ஆயர் மார் ஜார்ஜ் ராஜேந்திரன் எஸ்டிபி தனது பாராட்டுதல்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.‌

    கன்னியாகுமரி:

    கருங்கல் அருகே உள்ள சூசைபுரம் புனித அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. திருச்சி தொன்போஸ்கோ வழிகாட்டி நிறுவனமும், தக்கலை இளையோர் கல்வி சேவை மையமும், புனித அல்போன்சா கல்லூரியும் இணைந்து இந்த முகாமை நடத்தின.

    ஆயிரத்திற்கும் அதிக மானோர் கலந்து கொண்டனர். பி.பி.ஓ., டெய்லரிங், சாப்ட்வேர், டேட்டா என்ட்ரி, ஆட்டோ மொபைல், பேங்கிங் செக்டார், பார்மசி, கோர் ரிலேட்டேட், மெடிக்கல் கோடிங், ஹோட்டல் மேனேஜ்மென்ட் போன்ற துறைகளில் 300 க்கும் அதிகமானோர் வேலை வாய்ப்பைப் பெற்றனர்.

    அவர்கள் சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், விருதுநகர், கன்னியாகுமரி முதலிய நகரங்களில் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்றும் கலந்து கொண்ட வர்களுக்கும், வேலை வாய்ப்பைப் பெற்ற வர்களுக்கும் கல்லூரி தாளாளர் மற்றும் செயலர் பேரருட்தந்தை ஆன்றனி ஜோஸ், கல்லூரி கல்வி இயக்குனர் அருட்தந்தை மைக்கேல் ஆரோக்கியசாமி, முதல்வர் இசையாஸ், துணை முதல்வர் சிவனேசன், தக்கலை இளையோர் சங்க இயக்குனர் அருட்தந்தை சந்தோஷ்குமார், அருட் தந்தை ஜோஷி ஆகியோர் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.அத்துடன் பலரும் பயன் பெறும் வண்ணம் இத்தகைய சிறப்பு மிக்க வேலை வாய்ப்பு முகாமை நடத்திய கல்லூரிக்கும், தக்கலை இளையோர் சேவை மையத்திற்கும், திருச்சி தொன்போஸ்கோ வழிகாட்டி மையத்திற்கும், கலந்து கொண்ட வேலை வாய்ப்பு நிறுவனங்களுக்கும், வேலை வாய்ப்பைப் பெற்றுப் பயனடைந்த பயனாளர்களுக்கும் தக்கலை மறைமாவட்ட ஆயர் மார் ஜார்ஜ் ராஜேந்திரன் எஸ்டிபி தனது பாராட்டுதல்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.‌

    • 34 பிரபல நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான தகுதியான பணியாட்களை எழுத்து தேர்வு, நேர்காணல் மூலம் 500-க்கும் மேற்பட்டோரை தேர்ந்தெடுத்தனர்
    • மாணவர்கள் எவ்வாறு பணிபுரியும் நிறுவனத்தில் நடந்து கொள்ள வேண்டும், நாட்டின் எதிர்காலத்தில் அவர்களது பங்களிப்பு எப்படி அமைய வேண்டும் என்பது குறித்து விளக்கி கூறப்பட்டது.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பாலிடெக்னிக் கல்லூரியில் மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு பணிநியமன ஆணை வழங்கும் விழா நடந்தது.

    விழாவிற்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசுகையில், கடந்த கல்வியாண்டில் கல்லூரியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் டைட்டன், எல்ரூடி, இந்தியா யமஹா மோட்டார்ஸ், ஹூண்டாய் மொபிஸ், டாபோ எனர்ஜி லிமிடெட், ராணே மெட்ராஸ், ராயல் என்பில்ட், ஹூண்டாய் பாலிடெக், எஸ்.ஏ.சி. என்ஜின் காம்போனட்ஸ் உட்பட 34 பிரபல நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான தகுதியான பணியாட்களை எழுத்து தேர்வு, நேர்காணல் மூலம் 500-க்கும் மேற்பட்டோரை தேர்ந்தெடுத்தனர். இம்முகாமிகளில் பணிக்கு தேர்ந்தெடு க்கப்பட்டோருக்கான பணிநியமன ஆணை வழங்கப்படுகிறது என்றார்.

    பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் சுகுமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக சென்னை டாபே மனித வளமேம்பாட்டு மைய தலைவர் தங்கராசு, திருச்சி பெல் நிறுவன துணை பொதுமேலாளர் சண்முகராஜன் ஆகியோர் கலந்துகொண்டு பேசுகையில், மாணவர்கள் எவ்வாறு பணிபுரியும் நிறுவனத்தில் நடந்து கொள்ள வேண்டும், நாட்டின் எதிர்காலத்தில் அவர்களது பங்களிப்பு எப்படி அமைய வேண்டும் என்பது குறித்து விளக்கி கூறினர். பின்னர் பணிக்கு தேர்ந்தெ டுக்கப்பட்ட 500-க்கும் மேற்பட்டோருக்கு பணிநியமனை ஆணைகளை வழங்கி பாராட்டினர்.

    நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் சுகுமார் வேலைவாய்ப்பு அறிக்கை வாசித்தார். இதில் உடற்கல்வி பயிற்சி நிறுவன முதல்வர் பாஸ்கரன் உட்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக எந்திரவியல் துறைத்தலைவர் சரவணன் வரவேற்றார். முடிவில் வேலைவாய்ப்பு அலுவலர் தேவராஜ் நன்றி கூறினார்.

    • கள்ளக்குறிச்சியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகள் 52 பேருக்கு பணி நியமன ஆணையை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வழங்கினார்.
    • விண்ணப்பங்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ள தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மாற்றுத்தி றனாளிகளுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி பயனாளிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கூறியதாவது, மாற்றுத்தி றனாளிகளுக்கான முகாமில் சுமார் 17 தனியார் நிறுவனங்கள் மற்றும் 3 திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனங்களும் பங்கேற்றன. இந்த முகாமில் 269 மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர்.

    முகாமில் 52 மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன ஆணையினையும், 24 மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில்திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான ஆணையும் வழங்கப்பட்டன. மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் செய்து வருமானம் ஈட்டுவதற்கு மாவட்ட தொழில் மையம் வாயிலாக கடன் வழங்க 72 மாற்றுத்தி றனாளிகளிடமிருந்து விண்ணப்பங்களும், மத்திய கூட்டுறவுவங்கி மூலமாக 49 விண்ணப்பங்களும் பெறப்பட்டன. இவ்விண்ணப்பங்கள்மீது விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும், இம்முகாமில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில்திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான விளக்கமும் அளிக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் அனைவரும் இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம்களை பயன்படுத்தி வேலைவாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என கூறினார். அப்போது தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார திட்ட இயக்குநர் தேவநாதன், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலர் முரளிதரன், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்ரமணி, மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் சந்திரசேகரன் மற்றும் அரசு அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் பலரும் கலந்துகொண்டனர். 

    • 122 பன்னாட்டு நிறுவனங்கள் கல்லூரிக்கே வந்து வளாக தேர்வு நடத்தி வேலை வாய்ப்பு வழங்கி உள்ளது.
    • மாணவர்களின் தொழில்நுட்ப சந்தேகங்கள் உடனுக்குடன் தீர்த்து வைக்கப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை எப்.எக்ஸ். என்ஜினீயரிங் கல்லூரியில் மாணவ-மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கும் ஜூபிளண்ட் விழா நடைபெற்றது.

    விழாவில் ஸ்காட் கல்விக்குழுமங்களின் நிறுவனர் கிளிட்டஸ்பாபு, நிர்வாக இயக்குனர் அருண்பாபு ஆகியோர் கலந்து கொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கினர்.

    இந்தியாவில் உள்ள பல முன்னணி நிறுவனங்களில் இருந்து எப்.எக்ஸ் என்ஜினீயரிங் கல்லூரி மாணவ-மாணவிகள் 729 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.

    வேலைவாய்ப்பு பெற்றவர்களுக்கு ஆண்டு வருமானம் ரூ.3.5 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், தொழில் நிறுவனங்களுக்கு தேவையான பயிற்சிகளை தினசரி பாடதிட்டங்களுடன் நடத்தி வருவதால் இந்த ஆண்டு 729 மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.

    122 பன்னாட்டு நிறுவனங்கள் கல்லூரிக்கே வந்து வளாக தேர்வு நடத்தி வேலை வாய்ப்பு வழங்கி உள்ளது.

    தொழில் நிறுவனங்களை சார்ந்த வல்லுனர் களுக்கிடையேயான கலந்துரையாடல் மூலம் மாணவர்களின் தொழில்நுட்ப சந்தேகங்கள் உடனுக்குடன் தீர்த்து வைக்கப்படுவதால் வேலைவாய்ப்பு பெற்றுள்ள மாணவர்கள் வெகுவிரைவில் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பும் இருக்கிறது.

    படிக்கும் போதே சிறந்த பயிற்சியின் மூலம் அதிக சம்பளம் பெற்று தரும் இத்தகைய திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வரும் கல்லூரியின் பொதுமேலாளர் (வளர்ச்சி) ஜெயக்குமார், பொது மேலாளர் (நிர்வாகம்) கிருஷ்ணகுமார், முதல்வர் வேல்முருகன், வேலைவாய்ப்பு துறை டீன் ஞானசரவணன், பயிற்சிதுறை டீன் பாலாஜி, தொழில் முனைவோர் துறை இயக்குனர் லூர்டஸ் பூபால ராயன், பேராசிரியர் பிரியா, வளாக மேலாளர் சகாரியா கேபிரியல், பேராசிரியர்கள் கரோலின், ஜாஸ்பெர் ஞானச்சந்திரன், டேவிட் ஐலிங்க் உள்ளிட்டவர்களை கல்லூரி நிறுவனர் கிளிட்டஸ்பாபு, நிர்வாக இயக்குனர் அருண்பாபு ஆகியோர் பாராட்டினர்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் 627 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நடந்தது.
    • பணி அமர்வு மைய பொறுப்பாளர் அக்சய் ஜோசப் டிலன் வரவேற்றார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரி பணி அமர்வு மையத்தின் சார்பில் பணி நியமன ஆணை வழங்கும் விழா நடந்தது.

    பணி அமர்வு மைய பொறுப்பாளர் அக்சய் ஜோசப் டிலன் வரவேற்றார். கல்லூரிச் செயலாளர் அ.பா.செல்வராசன் தலைமை தாங்கினார்.

    அவர் பேசுகையில், வறுமையிலும் பிள்ளைகளை படிக்கும் வைக்கும் பெற்றோர்களை நினைவுகூர்ந்து பொருளாதார ரீதியாக மாணவர்கள் உயர்ந்த நிலையை அடைய வேண்டும். மாணவர்களின் பொருளாதாரம் உயர்ந்தால் நமது வட்டாரமும், அவர்களது குடும்பமும் உயர்ந்த நிலையை அடையும். மாணவர்களும், ஆசிரியர்களும் இணைந்து மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யும்போது கல்வி மற்றும் பொருளாதார நிலையில் சமூகம் சிறப்பான, குற்றமற்ற மாபெரும் சமுதாயமாக உருவாகும் என்றார்.

    துணை முதல்வர்கள் பாலமுருகன், முத்துலட்சுமி ஆகியோரும் வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து கல்லூரி செயலாளர்அ .பா.செல்வராசன், பல்வேறு நிறுவனங்களின் பணி நியமன ஆணைகளை பல்வேறு துறைகளைச் சேர்ந்த 627 மாணவர்களுக்கு வழங்கினார். பணி அமர்வு மையத்தின் பொறுப்பாளர் வெங்கடேஷ்குமார் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை பணி அமர்வு மையப்பொறுப்பாளர்கள் வெங்கடேஷ்குமார், அக்சய் ஜோசப் டிலன் ஆகியோர் செய்திருந்தனர்.

    ×