search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Compassionate Basis"

    • கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையினை மாவட்ட கலெக்டர் மோகன் வழங்கி னார்.
    • வாரிசுதாரர்களுக்கு தகுதியின் அடிப்படையில் பணிகள் வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் முகாம் அலுவல கத்தில், வருவாய் அலகில், பணியிலிருக்கும் போது உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையினை மாவட்ட கலெக்டர் மோகன் வழங்கி னார்.அப்போதுஅவர் கூறியதாவது:- 

    தமிழ்நாடு முதல்- அமைச்சர், அரசின் திட்டங்கள் அனைத்தும் பொது மக்களிடம் கொண்டு செல்வதற்கு பெரும் உறுதுணையாக இருப்பது அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஆவார்கள். இவ்வாறு அரசு அலு வலகங்களில் பணிபுரியும் அலுவலரோ அல்லது பணியாளரோ யாரேனும் பணியில் இருக்கும் போது எதிர்பாரதவிதமாக உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்தினை பாது காத்திடும் வகையில் குடும்ப வாரிசுதாரர்களுக்கு தகுதியின் அடிப்படையில் பணிகள் வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

    அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டம், வருவாய் அலகில், பணியாற்றி வந்த 6 கிராம உதவியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு 3 கிராம நிர்வாக அலுவலர் மற்றும் 3 கிராம உதவியாளர் பணி கருணை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, கூடுதல் ஆட்சியர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சித்ரா விஜயன், தனித்துனை கலெக்டர் சமூக பாதுகாப்புத்திட்டம் விஸ்வநாதன், துணை கலெக்டர் (பயிற்சி) லாவண்யா உட்பட பலர் உள்ளனர்.

    • காவல் துறை தகவல் பதிவு உதவியாளர், வரவேற்பாளர் ஆகிய பணிகளுக்கு பணிமன அணை வழங்கப்பட்டு வருகிறது.
    • போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி 29 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

    ஈரோடு:

    தமிழக காவல்துறையில் பணியின்போது உயிரிழந்த 1,132 போலீசாரின் வாரிசு களுக்கு கருணை அடிப்ப டையில் பணி நியமனம் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தர விட்டார்.

    கருணை அடிப்படையில் பணி நியம னத்தையும் சென்னையில் முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.

    அதைத்தொடர்ந்து முதற்கட்டமாக 912 பேருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. காவல் துறை தகவல் பதிவு உதவியாளர், வரவேற்பாளர் ஆகிய பணிகளுக்கு பணிமன அணை வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பணியின் போது மரணம் அடைந்த போலீசாரின் வாரிசுகள் 29 பேருக்கு பணி நியமன ஆனைகள் வழங்கும் நிகழ்ச்சி ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது.

    போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி 29 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

    • கருணை அடிப்படையில் அரசுப்பணி வழங்க லஞ்சம் கேட்ட அதிகாரியின் ஆடியோ வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
    • இந்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றிய வேலம்மாள் என்பவர் சில மாதங்களுக்கு முன்பு இறந்தார். இவரது பணியை கருணை அடிப்படையில் வழங்குமாறு மகள் சீனியம்மாள் மனு செய்தார். இந்த நிலையில் சீனியம்மாளுக்கு வேலை வழங்குவது தொடர்பாக கலெக்டர் அலுவலக அதிகாரி ஒருவர் லஞ்சம் கேட்பது போன்ற ஆடியோ வெளியாகி உள்ளது. அதில் சீனியம்மாளின் மகனிடம் பேசும் அதிகாரி ரூ. 15 ஆயிரம் கொடுத்தால் கருணை அடிப்படையில் வேலை வழங்குவதாக கூறுகிறார். இந்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

    கலெக்டர் அலுவலக அதிகாரியே லஞ்சம் கேட்பது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ×