கருணை அடிப்படையில் அரசுப்பணி வழங்க லஞ்சம் கேட்ட அதிகாரி?

கருணை அடிப்படையில் அரசுப்பணி வழங்க லஞ்சம் கேட்ட அதிகாரியின் ஆடியோ வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
கருணை அடிப்படையில் அரசுப்பணி வழங்க லஞ்சம் கேட்ட அதிகாரி?
Published on

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் நரிக்குடியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றிய வேலம்மாள் என்பவர் சில மாதங்களுக்கு முன்பு இறந்தார். இவரது பணியை கருணை அடிப்படையில் வழங்குமாறு மகள் சீனியம்மாள் மனு செய்தார். இந்த நிலையில் சீனியம்மாளுக்கு வேலை வழங்குவது தொடர்பாக கலெக்டர் அலுவலக அதிகாரி ஒருவர் லஞ்சம் கேட்பது போன்ற ஆடியோ வெளியாகி உள்ளது. அதில் சீனியம்மாளின் மகனிடம் பேசும் அதிகாரி ரூ. 15 ஆயிரம் கொடுத்தால் கருணை அடிப்படையில் வேலை வழங்குவதாக கூறுகிறார். இந்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

கலெக்டர் அலுவலக அதிகாரியே லஞ்சம் கேட்பது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com