search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "படிக்காத பக்கங்கள்"

    • தற்பொழுது செல்வம் மாதப்பன் இயக்கத்தில் படிக்காத பக்கங்கள் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இத்திரைப்படம் வரும் மே 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    2016 ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளிவந்த கவலை வேண்டாம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவிரற்கு அறிமுகமாகினார் யாஷிகா ஆனந்த். 2018 ஆம் ஆண்டு வெளிவந்த இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் நடித்து மக்கள் கவனத்தை பெற்றார்.

    பின் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றார். சமீபத்தில் வெளிவந்த டபுள் டக்கர் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.

    அதைத்தொடர்ந்து தற்பொழுது செல்வம் மாதப்பன் இயக்கத்தில் படிக்காத பக்கங்கள் திரைப்படத்தில் நடித்துள்ளார். பிரஜின், ஜார்ஜ் மர்யன், முத்து குமார், பாலாஜி, லொல்லுசபா மனோகர் மற்றும் பல இப்படத்தில் நடித்துள்ளனர். படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகியுள்ளது. தாய்மை மற்றும் பெண்மையை மையமாக கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் வரும் மே 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மொழி சிறந்ததாகவும் திகழ்கிற சந்தர்ப்பங்கள் உண்டு.
    • பாட்டுக்குப் பெயர் வைத்தது மொழிதான்.

    முத்துக்குமார் தயாரிப்பில் செல்வம் மாதப்பன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் புதிய படம் 'படிக்காத பக்கங்கள்.' யாஷிகா ஆனந்த் முதன்மை தோற்றத்தில் நடித்துள்ள இந்த படத்தில் ஜார்ஜ் மரியான் மற்றும் லொள்ளு சபா மனோகர் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

    இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய வைரமுத்து, "இந்தப் 'படிக்காத பக்கங்கள்' இசை வெளியீட்டு விழா மிகவும் முக்கியமான நிகழ்வு. ஒரு பாடலில், இசை பெரிதா, மொழி பெரிதா என்பது ஒரு பெரிய சிக்கலாகப் பேசப்பட்டு வருகிறது. இதில் என்ன சந்தேகம்? இசை எவ்வளவு பெரிதோ, அவ்வளவு பெரிது மொழி. மொழி எவ்வளவு பெரிதோ, அவ்வளவு பெரிது இசை. இரண்டும் கூடினால்தான் அதற்குப் பாட்டு என்று பொருள்."

    "சில நேரங்களில், இசையை விட மொழி சிறந்ததாகவும், சில நேரங்களில், மொழி சிறந்ததாகவும் திகழ்கிற சந்தர்ப்பங்கள் உண்டு. இதைப் புரிந்து கொண்டவன் ஞானி. இதைப் புரிந்து கொள்ளாதவன் அந்ஞானி."

    "பாட்டுக்குப் பெயர் வைப்பது இசையா, மொழியா? பாட்டுக்குப் பெயர் வைத்தது மொழிதான். அதற்கு அழகு செய்தது இசை, அபிநயம் செய்தது இசை, அதை மறுக்க முடியாது. இசையும் மொழியும் பரஸ்பரம் செய்து கொள்ளும் போதுதான் கலை வெற்றி பெறுகிறது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்," என்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • படத்தின் டீசரை படக்குழு கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்டது.
    • கவிஞர் வைரமுத்து எழுதியுள்ள இந்த பாடல் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவு.

    செல்வம் மாதப்பன் இயக்கத்தில் யாஷிகா ஆனந்த் நடித்துள்ள திரைப்படம் 'படிக்காத பக்கங்கள்'. இந்த படத்தில் பிரஜின், ஜார்ஜ் மரியன், பாலாஜி, லொள்ளு சபா மனோகர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இந்த படத்தை எஸ் மூவி பார்க் மற்றும் பவுர்ணமி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

    இந்த படத்தின் டீசரை படக்குழு கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்டது.

    இந்நிலையில், படிக்காத பக்கங்கள் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள மதுவுக்கு எதிரான பாடல் ஒன்று இன்று மாலை வெளியாகிறது.

    கவிஞர் வைரமுத்து எழுதியுள்ள இந்த பாடல் குறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மரணத்திற்கு முன்பே

    மனிதனைப் புதைத்துவிடுகிறது

    மது

    ஒவ்வொரு மணி நேரத்திற்கும்

    16 மதுச் சாவுகள் நிகழ்கின்றன

    44 முதல் 67 விழுக்காடு

    சாலை விபத்துகள்

    மதுவால் நேர்கின்றன

    20மில்லி ரத்தத்தில் கலந்தாலே

    பார்வையைப் பாதிக்கிறது மது

    30மில்லி கலந்தால்

    தசை தன் கட்டுப்பாட்டை

    இழந்துவிடுகிறது

    ஒருநாட்டின் மனிதவளம்

    தவணைமுறையில் சாகிறது

    ஒழுக்கக்கோடுகள் அழிந்து

    ஒழுக்கக்கேடுகள் நுழைகின்றன வாழ்வியலில்

    மதுவுக்கு எதிராக

    நான் எழுதிய ஒருபாடலை

    இன்று மாலை வெளியிடுகிறோம்

    இப்போதே உங்கள்

    கண்களுக்கும் காதுகளுக்கும்

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×