search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாடல்கள்"

    • இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.
    • தமிழில் அர்ஜூன் தாஸ் மற்றும் காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் நடித்துள்ளனர்.

    இயக்குனர் பிஜோய் நம்பியார் இயக்கி விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் "போர்" திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் வெளியாகியுள்ளது.

    தமிழில் டேவிட், சோலோ உள்ளிட்ட திரைப்படங்கள், நவரசா, ஸ்வீட் காரம் காபி போன்ற பிரபல வெப் சீரீஸ்களை இயக்கியவர் இயக்குனர் பிஜோய் நம்பியார்.

    இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். தமிழ் மட்டும் இல்லாமல், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

    தமிழ் மற்றும் இந்தியில் உருவாகி இருக்கும் "போர்" படம் வரும் மார்ச் 1ம் தேதி திரைக்கு வருகிறது. இந்தியில் "டாங்கே" என்ற பெயரில் வெளியாகிறது. இந்த படத்தில் தமிழில் அர்ஜூன் தாஸ் மற்றும் காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் நடித்துள்ளனர்.

    இந்த படத்தின் போஸ்டர் ஏற்கனவே வெளியான நிலையில், போர் படத்தின் முதல் மற்றும் 2வது பாடலின் வீடியோ வெளியிடப்பட்டது.

    இந்நிலையில், போர் திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வறுகிறது.

    • தமிழ் துறை மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் உலக மகளிர் தின விழா நடந்தது.
    • மாணவ, மாணவி களிடையே ஒவியம், கட்டுரை போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் துறை மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் உலக மகளிர் தின விழா கல்லூரி முதல்வர் சூரியகாந்தி தலைமையில் நடந்தது.

    விழாவில் மண்ணின் இசை பாடல்கள், கவிச்சரம், நாட்டுப்புற பாடல்கள் ஆகிய நிகழ்ச்சிகளில் கல்லூரி மாணவிகள் ஆர்த்தி, மருவரசி, சிவரஞ்சனி, கவிஞர் கண்ணையன், பத்மஜா, பிரியதர்ஷினி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    மேலும் எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்ட செயலாளர் உதயகுமார், வேதாரண்யம் சங்க தலைவர் ரமேஷ் உட்பட கல்லூரி மாணவ- மாணவிகளும், பேராசிரியர்கள் பிரபாகரன், அர்ஜூனன், மாரிமுத்து, இளையராஜா, முத்துகிருஷ்ணன் உட்பட பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.

    மேலும் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க மாவட்ட தலைவர் ஆவராணி ஆனந்தன் நடுவராக கொண்டு கல்லூரி மாணவிகளின் பட்டிமன்ற நிகழ்ச்சியும் நடந்தது.

    பேராசிரியர் ராஜா வரவேற்றார்.

    எழுத்தாளர்கள் சங்க செயலாளர் வீரமணி நன்றி கூறினார்.

    இதேபோல் வேதாரண்யம் அருகே உள்ள அண்டர்காடு சுந்தரேச விலாஸ் அரசு உதவி தொடக்கப்பள்ளியில் மகளிர் தின விழா பள்ளிச்செயலர் ஆறுமுகம் தலைமையில் நடந்தது.

    மாணவ, மாணவி களிடையே ஒவியம், கட்டுரை போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்ப ட்டது.

    நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், வச ந்தா,ரவீ ந்திரன் சந்திரசேகரன், சரண்யா, இலக்கி யா,வி ஜயலக்ஷ்மி, ஆனந்தன் ஓய்வு பெற்ற தலை மையா சிரியர் சித்தி ரவேல் உட்பட கல்விக்கு ழுவினரும் கலந்து கொண்டனர்.

    • பேரணியை பேராலய பங்கு தந்தை அற்புதராஜ் சிறப்பு பிரார்த்தனை செய்து தொடங்கி வைத்தார்.
    • கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து வாழ்த்து பாடல்களுக்கு ஆடியபடி ஊர்வலம் வந்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகையை அடுத்த வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் கிறிஸ்துமஸ் விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக கிறிஸ்துமஸ் தாத்தாகளின் பேரணி நடைபெற்றது.

    வேளாங்கண்ணி விடியற் காலை விண்மீன் ஆலயத்தில் இருந்து புறப்பட்ட பேரணியை பேராலய பங்கு தந்தை அற்புதராஜ் சிறப்பு பிரார்த்தனை செய்து தொடங்கி வைத்தார்.

    இதில் 100-க்கும் மேற்பட்ட சிறுவர்கள், பெண்கள் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து வாழ்த்து பாடல்களுக்கு ஆடியபடி மகிழ்ச்சியுடன் வேளாங்கண்ணி நகரில் ஊர்வலம் வந்தனர்.

    பேரணியானது பஸ் நிலையம், கடைவீதி வழியாக வேளாங்கண்ணி மாதா பேராலய முகப்பில் நிறைவு பெற்றது.

    இதில் பேராலய பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள், பங்கு மக்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • பரதநாட்டியம், நாட்டுப்புற பாடல்கள், தேசிய பாடல்கள், கரகாட்டம் என பல்வேறு நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
    • சிறுவர்களுக்கான சிறார் திரைப்படம் திரையிடுதல்.

    மதுக்கூர்:

    தமிழகமெங்கும் மாற்றுத்திற னாளி–களுக்கான விழிப்புணர்வு முகாம் பல்வேறு வகையில் நடத்தப்பட்டு வருகின்றது.

    இதனை அடுத்து தமிழக பள்ளி கல்வித்துறை, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி, தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் அறிவுரைப்படி இதன் ஒரு பகுதியாக தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் வட்டாரத்தில் மாணவர்களின் மாற்றுத்திறனாளிக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்று வருகின்றது.

    இதனை அடுத்து விழிப்புணர் பேரணி, இணைவோம் மகிழ்வோம் என பல்வேறு வகையில் நடைபெற்று வந்தது.

    இதன்படி நேற்று 25-ந்தேதி மதுக்கூர் அருகே மதுக்கூர் வடக்கு ஊராட்சியில் உள்ள வட்டார வளமையத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இதன்படி பரதநாட்டியம், நாட்டுப்புற பாடல்கள், தேசிய பாடல்கள், கரகாட்டம் என பல்வேறு நடன நிகழ்ச்சிகள் இன்று இனிய முறையில் நடைபெற்றது.

    இந்த கலை நடன நிகழ்ச்சிக்கு மதுக்கூர் வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜமீலா அவர்கள் தலைமையேற்று கலை நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார்.

    வட்டார வளமைய மேற்பார்வையாளர் தங்கம், ஆசிரியர் பயிற்றுநர்கள் வீரப்ப ராஜா, பிரகாஷ் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் சிறப்பு பயிற்றுநர்கள் இருதயராஜ், புஷ்பா மற்றும் இயன் முறை மருத்துவர் பழனிவேல் ஆகியோர் இதற்கு ஆன ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    மேலும் விளையாட்டுப் போட்டிகள் சிறுவர்களுக்கான சிறார் திரைப்படம் திரையிடுதல் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது என்பதை இங்கு குறிப்பிடத்தக்கது.

    • அரச மரத்தின் கீழ் தவமிருந்து ஆண்டுக்கு ஒரு பாடலாக 3000 பாடல்களை இயற்றினார்.
    • திருமூல நாயனாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.

    குத்தாலம்:

    திருமந்திரத்தை இயற்றிய திருமூலருக்கு அவர் சமாதியடைந்த திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோயிலில் குருபூஜை விழா நடைபெற்றது.

    திருமூலர் ஞானசமாதி அடைந்த தலம் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாவடுதுறை ஆதீனத்தில் உள்ள கோமுக்தீஸ்வரர் கோயிலில் உள்ளது.

    திருமூலர் சமாதி அடைந்த இடத்தில் இக்கோயிலில் தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.

    திருமூலர் கோமுக்தீஸ்வரர் கோயிலில் உள்ள படர்அரச மரத்தின்கீழ் தவமிருந்து ஆண்டுக்கு ஒரு பாடலாக 3000 பாடல்களை இயற்றினார்.

    இந்த 3000 பாடல்களே திருமந்திரம் என்று அழைக்கப்படுகிறது.

    இந்நிலையில், திருமூலரின் குருபூஜை விழாவை முன்னிட்டு கோயிலின் தென்மூலையில் உள்ள திருமூல நாயனாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.

    இதில், திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் கலந்துகொண்டு, சிறப்பு பூஜைகளை நடத்தினார். தொடர்ந்து, பசுக்களுக்கு பூஜை நடத்தப்பட்டது. விழாவில், 'அருள் அரசர்களும் அடியார்களும்" என்னும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

    திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் வெளியிட்டருள அதனை திருவாவடுதுறை ஆதீனக் கோயில்களின் கண்காணிப்பாளர்கள், ஆதீன பள்ளிகளின் ஆசிரியர் பெற்றுக் கொண்டனர்.

    முன்னதாக, ஆரவாய் அண்ணல் அறக்கட்டளை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து திருமுறை விண்ணப்பம் செய்தனர், சென்னை சைவ சித்தாந்த நேர்முக பயிற்சி அமைப்பாளர் உமாமகேஸ்வரி வரவேற்றார்.

    புதுச்சேரி அக்ஸி எழிலன் சிறப்புரையாற்றினார்.

    கோவில்பட்டி சைவ சித்தாந்த நேர்முக பயிற்சி பேராசிரியர் விமலா சுப்பிரமணியம் 'திருமந்திரத்தில் சைவ சித்தாந்தம்' எனும் தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார்.

    • சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடந்தது.
    • மூவரையும் பொன்னூஞ்சலில் எழுந்தருள செய்து, ஊஞ்சல் பாடல்கள் பாடப்பட்டன.

    திருவையாறு:

    தருமையாதீனத்திற்குச் சொந்தமான திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் தனிச் சன்னிதி கொண்டுள்ள சுப்பிரமணியர் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நேற்றிரவு நடந்தது.

    நேற்று முன்தினம் சூரசம்ஹார விழா நடந்ததைத் தொடந்து நேற்றிரவு சுப்பிரமணியருக்கு வள்ளி மற்றும் தெய்வானை ஆகியோருடன் கல்யாண உற்சவம் நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று சுப்பிரமணியர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடந்தது.

    இதனைத் தொட.ர்ந்து சன்னிதியில் அலங்கரிக்கப்பட்ட மணவறையில் சுப்பிரமணியர் சுவாமியின் இருபக்கமும் வள்ளி மற்றும் தெய்வானை ஆகிய இருவரையும் மணக்கோலத்தில் எழுந்தருளச் செய்து, ஹோமங்கள் வளர்த்து, மூலிகைகள், தானியங்கள், பழம், பட்டு வஸ்திரம் முதலிய ஆகுதிகள் சமர்ப்பித்து, வேதபாராயணம் முதலிய மந்திரங்கள் பாடி, இரு மணமகள்களுக்கும் மங்கல நாண் பூட்டி சுப்பிரமணியர் சுவாமிக்கு திருமணம் செய்விக்கப்ட்டது. பின்னர் மூவரையும் பொன்னூஞ்சலில் எழுந்தருளச் செய்து, ஊஞ்சல் பாடல்கள் பாடப்பட்டன.

    இத்திருமண வைபவத்தைக் கண்டு அருள்பெற்ற ஆயிரக் கணக்கான பக்தர்களுக்கும் அறுசுவை விருந்துடன் கல்யாண சாப்பாடு போடப்பட்டது. ஏற்பாடுகளை ஐயாறப்பர் கோயில் நிர்வாகத்தினர் செய்தனர்.

    ×