என் மலர்

    நீங்கள் தேடியது "Radio"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தஞ்சை தமிழ் பல்கலை கழகத்தில், தமிழ்ப் பல்கலைக்கழக இணைய வழி வானொலி தொடக்க விழா நடைபெற்றது.
    • துணைவேந்தர் முனைவர் வி. திருவள்ளுவன் இதனை தொடங்கி வைத்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை தமிழ் பல்கலை கழகத்தில், தமிழ்ப் பல்கலைக்கழக இணைய வழி வானொலி தொடக்க விழா நடைபெற்றது. துணைவேந்தர் முனைவர் வி. திருவள்ளுவன் இதனை தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    உலக அளவில் தமிழ்மொழியைப் பரப்பும் நோக்கத்திலும், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் அன்றாட நிகழ்வுகளை, பொதுமக்களுக்கும், மாணவர்கள் ஆய்விற்கும் இந்த பல்கலைக்கழக ஓசை என்ற இணையவழி வானொலி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்வில் பதிவாளர்(பொ) முனைவர் தியாகராஜன், ஆட்சிக்குழு உறுப்பினர் நீலகண்டன், புலத் தலைவர்க ள் கண்ணன், கவிதா, இளையாப்பிள்ளை, துணைப்பதிவாளர் பன்னீர்செல்வம், தொழில்நுட்பாளர்கள் செல்வம், அர்ணால்ட்டு மற்றும் கல்வியாளர்கள், அலுவல்நிலைப் பணியாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    ×