search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிலத்தகராறு"

    • வி.கோட்டா தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • சம்பவ இடத்திற்கு வந்து 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், வி.கோட்டா அருகே உள்ள ஜிவனி பள்ளியை சேர்ந்தவர் வெங்கட்ரமணா. ஆட்டோ டிரைவர். இவருக்கும் ராம தீர்த்தம் பகுதியை சேர்ந்த சின்னப்பா மகள் அருணா (வயது 30) என்பவருக்கும் கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

    தம்பதிக்கு ஹரிஷ் (12), ஜித்தின் (9) என 2 மகன்கள் இருந்தனர். வெங்கட்ரமணாவின் தம்பி மனைவி காயத்ரி. நிலப் பிரச்சனை சம்பந்தமாக அருணாவுக்கும், காயத்ரிக்கும் அடிக்கடி தகராறு நடந்து வந்தது. இதுகுறித்து அருணா தனது கணவரிடம் தெரிவித்த போது அவர் ஏதும் கண்டு கொள்ளாமல் இருந்து வந்துள்ளார்.

    நேற்று காலை அருணாவுக்கும், காயத்ரிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அருணா தனது 2 பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள கிணற்றில் இருவரையும் தள்ளிவிட்டு தானும் குதித்தார்.

    மாலை வீட்டிற்கு வந்த வெங்கட்ரமணா மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    வெங்கட்ரமணா மற்றும் உறவினர்கள் அவர்களை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர்.

    அப்போது அங்குள்ள கிணற்றின் கரை மீது நித்தின் அணிந்திருந்த செருப்பு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த வெங்கட்ரமணா உறவினர்கள் கிணற்றில் குதித்து அருணா மற்றும் அவரது பிள்ளைகளில் உடல்களை தேடினர்.

    இதுகுறித்து வி.கோட்டா தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நிலத்தகராறு காரணமாக தாய் 2 பிள்ளைகளை கிணற்றில் தள்ளி விட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
    • 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே சேஷசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன்(வயது42). இவரது மனைவி பத்மினி(39). இவர்களுக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். பத்மினியிடம் அவரது தாய் வீட்டின் 3 சென்ட் வீ்ட்டுமனை மற்றும் 55 சென்ட் நிலத்தை விற்று தர சொல்லி கண்ணன் அடிக்கடி தகராறு செய்து வந்தார். இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பத்மினி வயலில் இருந்தபோது கண்ணனும், இவரது மகன்களும் சேர்ந்து பத்மினியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து பத்மினி கொடுத்த புகரின் பேரில் கண்ணன், இவரது மகன்கள் மகிமதன், தமிழரசன் ஆகியோர் மீது சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதேபோல் பத்மினியும் அவரது ஆதரவாளர்களும் சேர்ந்து தன்னை தாக்கியதாக கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் பத்மினி, இவரது தாயார் பஞ்சவர்ணம் உள்பட 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பூவரசிக்கும், பால்ராஜ் என்பவருக்கும் இடையே நிலம் தொடர்பான பிரச்சினை ஏற்பட்டது.
    • கரியாலூர் போலீஸ் நிலையத்தில் இரு தரப்பிலும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ள கென்டிக்கல் கிராமத்தைச் சேர்ந்த பூவரசி. இவருக்கும், தாழ் கெண்டிக்கல் கிராமத்தைச் சேர்ந்த பால்ராஜ் என்பவருக்கும் இடையே நிலம் தொடர்பான பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து இரு கோஷ்டியினரும் மோதி கொண்டனர். இது குறித்து கரியாலூர் போலீஸ் நிலையத்தில் இரு தரப்பிலும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது பூவரசி கொடுத்த புகாரில் பால்ராஜ், கணேசன், லட்சுமணன் ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதேபோல் பால்ராஜ் கொடுத்தாரின் பேரில் கிருஷ்ணன், ராஜ்குமார், சசிகுமார், தமிழ்மணி ஆகிய 4 பேரும் மீதும் என இரு தரப்பிலும் சேர்த்து மொத்தம் 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விவசாயியான மாரியப்பனுக்கும், இவரின் நிலத்தின் அருகே உள்ள நிலத்தின் உரிமையாளர் வெள்ளையன் குடும்பத்தினருக்கும் இடையே நிலம் தொடர்பான பிரச்சனை இருந்து வந்துள்ளது.
    • நிலம் தொடர்பாக இருவருக்கும் இடையே நேற்று வாக்குவாதம் ஏற்பட்டது.

    காரிமங்கலம்:

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த எச்சணம்பட்டி கொட்டாவூர் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது67).

    விவசாயியான இவருக்கும், இவரின் நிலத்தின் அருகே உள்ள நிலத்தின் உரிமையாளர் வெள்ளையன் குடும்பத்தினருக்கும் இடையே நிலம் தொடர்பான பிரச்சனை இருந்து வந்துள்ளது.

    இதை அடுத்து சர்வேயர் மூலம் நிலம் அளக்கப்பட்டு எல்லைகள் போடப்பட்டது. இந்நிலையில் நிலம் தொடர்பாக இருவருக்கும் இடையே நேற்று வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த வெள்ளையன் மற்றும் அவரது குடும்பத்தினர் மாரிமுத்துவை மண்வெட்டியால் சரமாரியாக தாக்கினர்.

    ரத்த காயம் ஏற்படுத்தியதுடன் மாரிமுத்துவின் காதை கூட்டத்தில் இருந்தவர்கள் கடித்து துப்பியுள்ளனர்.

    இதனால் வலி தாங்க முடியாமல் மாரிமுத்து சத்தம் போட்டதால் அந்த கும்பல் தப்பி ஓடி விட்டது.

    இதுகுறித்து அவர் காரிமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வெள்ளையன் மகன் லட்சுமணனை கைது செய்தனர். தப்பி ஓடிய வெள்ளையன் அவரது மனைவி தனபாக்கியம் உறவினர் சுமதி ஆகியோரை தேடி வருகின்றனர்.

    • வேலூர் அருகே நிலத்தகராறு காரணமாக வாலிபர் மீது துப்பாக்கி சூடு நடைபெற்றது.
    • இதுகுறித்த புகாரின் பேரில் வேப்பங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜிட்டனை கைது செய்தனர்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த பீஞ்ச மந்தை அருகே உள்ள சின்ன எட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணி (வயது 23). விவசாயி. இவருக்கும் பக்கத்து நிலத்துக்காரரான ஜமுனாமரத்தூர் அடுத்த கீழ் குச்சனூர் கிராமத்தைச் சேர்ந்த ஜிட்டன் (55) என்பவருக்கும் நிலத்தகராறு காரணமாக முன் விரோதம் இருந்தது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு முற்றியதில் ஆத்திரமடைந்த ஜிட்டன் நாட்டு துப்பாக்கியால் மணியை சுட்டுள்ளார். இதில் மணியின் முழங்கால் மற்றும் தொடை பகுதியில் குண்டு பாய்ந்தது.

    துப்பாக்கி குண்டு சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தில் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் படுகாயம் அடைந்த மணியை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மணிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்த புகாரின் பேரில் வேப்பங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜிட்டனை கைது செய்தனர்.

    அவரிடம் இருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. கைதான ஜிட்டன் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    • வெட்டு காயம் அடைந்த காந்தி அவரது மனைவி லதா, செல்வம் சங்கீதா, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாலேந்திரன், வெங்கடேசன் ஆகிய 6 பேர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • பெண்ணை வெட்டிக்கொன்று மேலும் 6 பேரை வெட்டிய வியாபாரி சிறிது நேரத்தில் இரும்பு கம்பியால் அடித்துக் கொல்லப்பட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் அருகே உள்ள அலிவிடை தாங்கி பைரவபுரம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது70).

    இவர்களுக்கு பூர்வீக சொத்து அந்த பகுதியில் உள்ளது. இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி சரோஜாவின் மகன் செல்வம் (50). 2-வது மனைவி பார்வதியின் மகன் சுப்பிரமணி (45) இவர்களுக்கு இடையே நிலத்தகராறு இருந்து வந்தது.

    இளநீர் வியாபாரியான சுப்பிரமணி வழக்கம்போல் வியாபாரத்தை முடித்துவிட்டு விவசாய நிலத்துக்கு வந்தார். அப்போது அங்கு செல்வம் மனைவி சங்கீதா (45) துணி துவைத்து விவசாய நிலத்தில் காய வைத்திருந்தார்.

    இதை பார்த்த சுப்பிரமணி திடீரென இளநீர் வெட்டும் கத்தியால் துணி காயகட்டியிருந்த கயிற்றை அறுத்துள்ளார்.

    இதை தட்டிக்கேட்ட சங்கீதாவையும் கத்தியால் சுப்பிரமணி வெட்டினார். இதை பார்த்த பக்கத்து நிலத்திலிருந்த வெங்கடேசன் மனைவி வேண்டா அமிர்தம் (55) எதற்காக தனியாக இருக்கும் பெண்ணிடம் தகராறில் ஈடுபடுகிறீர்கள் என கேட்டார்.

    அப்போது வேண்டா அமிர்தத்தின் கழுத்தில் சுப்பிரமணி வெட்டினார். இதில் வேண்டா அமிர்தம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

    இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சங்கீதா வெட்டு காயத்துடன் ரத்தம் வழிந்தபடி விவசாய நிலத்தில் இருந்து தப்பி ஓடினார். அப்போது வெறி பிடித்தபடி கத்தியுடன் சுப்பிரமணி சங்கீதாவை விரட்டி சென்றார். எதிரே சங்கீதாவின் கணவர் செல்வம் வேண்டா அமிர்தத்தின் கணவர் வெங்கடேசன் ஆகியோர் வந்து கொண்டிருந்தனர். அவர்களிடம் நடந்த சம்பவத்தை சங்கீதா கூறிக் கொண்டிருந்தார்.

    இதற்கிடையில் சுப்பிரமணி கத்தியுடன் பின் தொடர்ந்து வந்தார். அவரை மடக்கி எதற்காக என் மனைவியை வெட்டினாய் என வெங்கடேசன் கேட்டார். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பேசிக்கொண்டிருக்கும் போதே செல்வம் அவரது மனைவி சங்கீதா வெங்கடேசன் ஆகிய 3 பேரையும் நடுரோட்டிலேயே சுப்பிரமணி வெட்டி விட்டு தப்பி சென்றார்.

    அவரை பிடிக்க முயன்ற அழிவிடை தாங்கி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாலேந்திரன் என்பவரையும் வெட்டிவிட்டு ஓடினார்.

    தொடர்ந்து வெம்பாக்கம் டவுனில் பஞ்சர் கடை நடத்தி வரும் காந்தி( 55) அவரது மனைவி லதா என்பவரையும் சுப்பிரமணி கத்தியால் வெட்டினார்.

    இதில் அவர்களும் படுகாயம் அடைந்தனர். இதற்கிடையில் காந்தி தனது கடையில் இருந்த இரும்பு ராடை எடுத்து சுப்பிரமணியின் பின்பக்க தலையில் தாக்கினார். இதில் சுப்பிரமணி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த செய்யாறு டி.எஸ்.பி. செந்தில் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    பிரம்மதேசம் போலீசார் வழக்கு பதிவு செய்து வேண்டா அமிர்தம், சுப்பிரமணி ஆகியோர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    வெட்டு காயம் அடைந்த காந்தி அவரது மனைவி லதா, செல்வம் சங்கீதா, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாலேந்திரன், வெங்கடேசன் ஆகிய 6 பேர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    பெண்ணை வெட்டிக்கொன்று மேலும் 6 பேரை வெட்டிய வியாபாரி சிறிது நேரத்தில் இரும்பு கம்பியால் அடித்துக் கொல்லப்பட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சங்கராபுரம் அருகே நிலத்தகராறில் மோதல் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
    • கோவிந்தனும், இவரது சகோதரர் ஜெயமுருகனும் மாயவனை தாக்கி, அவரது செல்போனை உடைத்தும், கொலை மிரட்டல் விடுத்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே புதுப்பாலப்பட்டு காட்டுக் கொட்டகையை சேர்ந்தவர் மாயவன் (வயது44). இவருக்கும் பாலப்பட்டு கிராமத்தை சேர்ந்த கோவிந்தன்(46) என்பருக்கும் இடையே நில தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று இந்த பிரச்சினை தொடர்பான விசாரணைக்கு சங்கராபுரம் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். அப்போது கோவிந்தனும், இவரது சகோதரர் ஜெயமுருகனும் மாயவனை தாக்கி, அவரது செல்போனை உடைத்தும், கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் கோவிந்தன், ஜெயமுரு–கன் ஆகியோர் மீது சங்க–ராபுரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் உலக நாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×