search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயி கைது"

    • நல்ல தீவனம் கொடுத்து மாட்டை சிறப்பாக பராமரித்ததால் அந்த பசு அதிக பால் கொடுக்க ஆரம்பித்தது.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பைரப்பாவை கைது செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் சத்தியசாய் மாவட்டத்தில் உள்ளது ஸ்ரீ கந்தபுரம். அந்த கிராமத்தை சேர்ந்த விவசாயி பைரப்பா பசுமாடு ஒன்றை வளர்த்து வந்தார். அந்த பசு சரியாக பால் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    எனவே தன்னுடைய பசுவை அதே கிராமத்தை சேர்ந்த மற்றொரு விவசாயிக்கு பைரப்பா விற்று விட்டார். பசுவை வாங்கிய விவசாயி அதை சரியாக பராமரித்து வளர்த்து வந்தார்.

    நல்ல தீவனம் கொடுத்து மாட்டை சிறப்பாக பராமரித்ததால் அந்த பசு அதிக பால் கொடுக்க ஆரம்பித்தது. இந்த விஷயம் பைரப்பாவிற்கு தெரியவந்து ஆவேசமடைந்துள்ளார்.

    தன்னிடம் இருக்கும் போது குறைந்த அளவே பால் கொடுத்த அந்த பசு மாடு, விற்பனை செய்த பின்அதிக பால் கொடுத்து தன்னை வஞ்சித்து விட்டதாக மனதிற்குள்ளாகவே குமுறினார்.

    விவசாயியின் தோட்டத்தில் இருந்த மாட்டை பார்த்த அவர் ஆத்திரம் தலைக்கேறி அதன் மடியை கத்தியால் அறுத்தார். பசு அலறிய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர்.

    அதற்குள்ளாக பைரப்பா தப்பியோடினார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பைரப்பாவை கைது செய்தனர்.

    • விவசாயி தனது வீட்டில் துப்பாக்கி வைத் திருப்பதாக தாண்டிக்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • சோதனை நடத்தி துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் 5 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன.

    பெரும்பாறை:

    பண்ணைக்காடு அருகே உள்ள ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர் முத் துமணி (43). விவசாயி. இவர், தனது வீட்டில் துப்பாக்கி வைத் திருப்பதாக தாண்டிக்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பே ரில் போலீசார், அவரது வீட்டில் சோதனை செய்த னர். அப்போது வீட்டில் நாட்டுத்துப்பாக்கி இருந்தது.

    ஆனால் துப்பாக்கிக்கான உரிமம் அவரிடம் இல்லை. இது தொடர்பாக முத்து மணியிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர், தனது தந்தை காலத்தில் இருந்து துப்பாக்கி வைத்திருப்பதாகவும், விளை நிலங்களுக்குள் புகும் வனவிலங்குகளை விரட்டுவதற்காக அந்த துப்பாக்கியை பயன்படுத்தி வந்ததாகவும் தெரிவித்தார்.

    இதனையடுத்து அந்த துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 5 தோட்டாக்கள் கைப்பற்ற ப்பட்டன. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துமணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நிலத்தில் மாடு ஓட்டி வந்ததை தட்டி கேட்டதால் ஆத்திரம்
    • போலீசார் விசாரணை

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த சோமந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த வர் சின்னப்பன் (வயது 86), முன்னாள் ராணுவ வீரர்.

    இவருக்கு சொந்தமான நிலத்தில் அதே ஊரில் வசிக்கும் விவசாயியான பரசுராமன் என்பவர் மாடுகள் ஓட்டி வந்தார்.

    இதனை தட்டிக்கேட்ட சின்னப்பனை பரசுராமன் ஆபாசமாக திட்டி எட்டி உதைத்தும், கொம்பால் அடித்து கொலை மிரட்டல் விடுத்த தாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த சின்னப்பன் சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டார்.

    இதுகுறித்து சின்னப்பனின் மகன் தஞ்சான் கண்ணமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சிறப்பு சப்-இன்ஸ் பெக்டர் திருமால் வழக்குப்பதிவு செய்து, பரசுராமனை கைது செய்தார். மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முன் விரோதம் காரணமாக பெயிண்டர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பூதப்பாண்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசில் சரணடைந்த ரிச்சரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள நாவல் காடு நம்பியான் குளம் பகுதியைச் சேர்ந்தவர் நெல்சன் (வயது 50), பெயிண்டர். அதே பகுதியை சேர்ந்தவர் விவசாயி ரிச்சர் (43). இவர்கள் இருவருக்கும் இடையே சொத்து பிரச்சனை உள்ளது. இதன் காரணமாக அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்தது.

    மேலும் கடந்த 2021-ம் ஆண்டு ரிச்சரை தாக்கியதாக நெல்சன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு கோர்ட்டில் விசாரணையில் உள்ளது. இந்த நிலையில் அவர்களுக்கு இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்தது.

    நேற்று இரவு நாவல் காடு பகுதியில் நெல்சன் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ரிச்சர் அவரை வழிமறித்து தகராறு செய்தார். இருவரும் தகாத வார்த்தையால் மாறி மாறி பேசினார்கள். இதில் ஆத்திரம் அடைந்த ரிச்சர் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து நெல்சனை சரமாரியாக வெட்டினார்.

    கன்னம், வயிறு, மணிக்கட்டு பகுதிகளில் வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த நெல்சன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து ரிச்சர், பூதப்பாண்டி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். நெல்சனை கொலை செய்த தகவலை போலீசாரிடம் அவர் தெரிவித்தார்.

    இன்ஸ்பெக்டர் திருமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். நெல்சன் கொலை செய்யப்பட்டது பற்றி தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். பிணமாக கிடந்த நெல்சனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கொலை செய்யப்பட்ட நெல்சனின் உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் திரண்டு இருந்தனர். இதற்கிடையில் போலீசில் சரணடைந்த ரிச்சரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். முன் விரோதம் காரணமாக பெயிண்டர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பூதப்பாண்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ரமேஷ் உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • சப்- இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ், சீனிவாசன், கிராம நிர்வாக அலுவலர் பாஸ்கர் ஆனந்தம் ஆகியோர் ரமேஷ் வீட்டிற்கு சென்றனர்.

    ஏற்காடு:

    ஏற்காட்டில் சமீப காலமாக உரிமம் இல்லாமல் கள்ளத்துப்பாக்கி பயன்படுத்துவதாக புகார்கள் வந்தது.

    இதையடுத்து ஏற்காடு பில்லேரி கிராமத்தில் உள்ள ரமேஷ் (வயது 38), விவசாயியான இவர் உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்- இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ், சீனிவாசன், கிராம நிர்வாக அலுவலர் பாஸ்கர் ஆனந்தம் ஆகியோர் அவரது வீட்டிற்கு சென்றனர்.

    அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் வீட்டின் அருகில் உள்ள ஆட்டுப்பட்டியில் சோதனை செய்தனர்.

    அப்போது உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி மற்றும் வெடி மருந்து பொருட்கள் 100 கிராமையும், ஈயக்குண்டுகள் 350 கிராம், சிறிய ஈய குண்டுகள் 100 கிராம் வீட்டில் வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதனை பறிமுதல் செய்த போலீசார் ரமேசையும் கைது செய்தனர்.

    இதற்கிடையே ஏற்காட்டில் குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் ஏற்காடு போலீஸ் நிலையத்தில் அனைத்து பஞ்சாயத்து தலைவர்கள் ஊர் பெரியவர்களை சந்தித்து வருகிற 30-ந்தேதி ஆலோசனை நடத்த உள்ளதாகவும், இதில் பஞ்சாயத்து தலைவர்கள் ஊர் பெரியவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என வாழப்பாடி டி.எஸ்.பி. கூறி உள்ளார்.

    • சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் அவர் மீது மிருகவதை தடுப்பு சட்டம் 429-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
    • பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டதா என்ற விபரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

    நெல்லை:

    நெல்லை மேலப்பாளையம் அருகே உள்ள கருங்குளம் சிவன்கோவில் பகுதியில் மாநகராட்சி பள்ளி அருகே கருங்குளம் வாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலையில் நாய்கள் சில இறந்து கிடந்தன.

    இதனை அறிந்த பொதுமக்கள் மேலப்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே சப்-இன்ஸ்பெக்டர் எபனேசர் தலைமையிலான போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று பார்வையிட்டனர். அதில் மொத்தம் 9 நாய்கள் உயிர் இழந்தது தெரியவந்தது.

    விசாரணையில் அந்த நாய்கள் விஷம் வைத்து சாகடிக்கப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் மேலப்பாளையம் கருங்குளத்தை சேர்ந்த விவசாயி அருள் செல்வம் (வயது 47) என்பவர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்தனர். இவருக்கு சொந்தமான தோட்டம் அப்பகுதியில் உள்ளது. அங்கு ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். அவற்றை நாய்கள் கடித்து கொன்று விடும் என்று சில நாட்களாக அருள் செல்வம் அச்சத்தில் இருந்துள்ளார். இது தொடர்பாக சிலரிடம் அவர், இந்த நாய்களை மருந்து வைத்து கொல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

    இந்த நிலையில் தான் அந்த நாய்கள் இறந்து கிடந்துள்ளது என்ற விபரமும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றபோது, அவர் நான் நாய்களை கொல்லவில்லை என்று கூறியுள்ளார். எனினும் சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் அவர் மீது மிருகவதை தடுப்பு சட்டம் 429-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    தொடர்ந்து, உயிரிழந்த நாய்களை நெல்லையை அடுத்த ராமையன்பட்டியில் உள்ள அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டதா என்ற விபரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

    • செடிகளை போலீசார் பிடிங்கி அழித்தனர்
    • ஜெயிலில் அடைத்தனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகேநாச் சியார் குப்பம் பகுதியில் வாழை தோப்பு நடுவே கஞ்சா செடி வளர்த்த விவசாயியைபோலீசார் கைது செய்தனர்

    கஞ்சா செடி வளர்ப்பு

    திருப்பத்தூர் அருகே உள்ள நாச்சியார் குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராமன் (வயது 62) விவசாயி. இவர் நாகராஜ் என்பவருடைய நிலத்தை குத்தகைக்கு எடுத்து வாழை பயிரிட்டு வருகிறார். இந்த வாழைத் தோப்பு நடுவே கஞ்சா செடிகள் வளர்த்து வந் தாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஆல்பர்ட் ஜானுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் குரிசிலாப்பட்டு போலீசார் நாகராஜனின் வாழைத் தோப்பிற்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது வாழை தோப் பின் நடுவில் ராமன் ஏழு கஞ்சா செடிகளை பயிரிட்டு வளர்த்து வந்தது தெரிய வந் தது. உடனடியாக கஞ்சா செடிகளை பிடிங்கி போலீசார் அழித்த னர். இதன் எடை 2½ கிலோ ஆகும்.

    இதையடுத்து போலீசார் ராமனை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். வாழைத்தோப்பில் கஞ்சா செடி வளர்த்த சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 23 வயது இளம்பெண் விவசாய நிலத்திற்கு சென்றார்.
    • சென்றாயன் (வயது 37) என்பவர் அங்கு சென்று இளம்பெண்ணிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    கடத்தூர்,

    தருமபுரி மாவட்டம், கடத்தூர் அருகே உள்ள அஸ்த்தகிரியூர் பகுதியை சேர்ந்த திருமணமான 23 வயது இளம்பெண் விவசாய நிலத்திற்கு சென்றார்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த சென்றாயன் (வயது 37) என்பவர் அங்கு சென்று இளம்பெண்ணிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் கூச்சலிட்டவாறு அந்த பெண் அங்கிருந்து வீட்டிற்கு சென்று நடந்த சம்பவத்தை தனது தாயிடம் தெரிவித்தார்.

    இதையடுத்து அந்த பெண்ணும், தாயாரும் சென்றாயன் வீட்டிற்கு சென்று கேட்டபோது அங்கிருந்த வாத்தியார் என்ற சென்னப்பன் என்பவர் பெண்ணின் தாயாரை கட்டையால் தாக்கினாராம்.

    இதுகுறித்து இளம்பெண் கடத்தூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து சென்றாயனை கைது செய்தனர். தலைமறைவான வாத்தியார் என்கிற சென்னப்பனை தேடி வருகிறார்.

    • பெருமாள் தனது மகனை கொடூரமாக கொலை செய்த சம்பவம் இன்று காலை அந்த பகுதி மக்களுக்கு தெரியவந்தது.
    • போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மகனை கொலை செய்த பெருமாளை கைது செய்தனர்.

    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொட்டக்குடியை சேர்ந்தவர் பெருமாள், விவசாயி. இவரது மகன் ராஜபிரபு (வயது 30). இவர் மது போதைக்கு அடிமையாகி தினமும் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

    மகன் ஏற்படுத்தி வந்த பிரச்சினைகளால் பெருமாள் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டார். "இப்படி ஒரு மகனை உயிரோடு வைத்திருப்பதைவிட கொன்று விடுவது நல்லது" என்று முடிவு செய்தார்.

    இதைத்தொடர்ந்து நேற்று வழக்கம்போல் மது குடித்து விட்டு வந்த மகனை தனக்கு சொந்தமான தோட்டத்துக்கு அழைத்து சென்று அவரது கை, கால்களை கயிறால் கட்டி பெற்ற மகன் என்றும் பாராமல் கிணற்றுக்குள் தள்ளி விட்டு விட்டார். இதில் தண்ணீரில் மூழ்கி ராஜபிரபு பரிதாபமாக இறந்தார்.

    இந்த நிலையில் பெருமாள் தனது மகனை கொடூரமாக கொலை செய்த சம்பவம் இன்று காலை அந்த பகுதி மக்களுக்கு தெரியவந்தது. அவர்கள் இதுபற்றி மேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கிணற்றில் பிணமாக கிடந்த ராஜபிரபு உடலை மீட்டனர்.

    மேலும் போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மகனை கொலை செய்த பெருமாளை கைது செய்தனர்.

    மேலும் பலியான ராஜபிரபு உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் கொட்டக்குடி கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த 28ஆம் தேதி மோகன் மேகலாவிடம் ரூ.50 ஆயிரம் பணம் கேட்டுள்ளார். ஆனால் மேகலா பணம் கொடுக்க மறுத்துவிட்டார்.
    • இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் மேகலாவை மோகன் கட்டையாலும் கையாலும் தாக்கியுள்ளார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜாகடை அருகே உள்ள கோதிகுட்டலப்பள்ளி பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி மனைவி மேகலா (வயது50), இவர் அதே பகுதியை சேர்ந்த மோகன் (53) என்பவரிடம் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு 9 லட்சத்துக்கு நிலம் வாங்கியுள்ளார்.

    இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி மோகன் மேகலாவிடம் ரூ.50 ஆயிரம் பணம் கேட்டுள்ளார். ஆனால் மேகலா பணம் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் மேகலாவை மோகன் கட்டையாலும் கையாலும் தாக்கியுள்ளார்.

    இதில் காயமடைந்த மேகலா கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து மகாராஜா கடை போலீசார் வழக்கு பதிவு செய்து மோகனை கைது செய்தனர்.

    • இறந்த யானைகளிடம் பாச போராட்டம் நடத்தி கொண்டிருந்த குட்டியானைகளை பட்டாசு வெடித்து அருகே உள்ள வனப்பகுதிக்கு விரட்டினர்.
    • பலியாகி கிடந்த 3 யானைகளுக்கும் அந்த இடத்திலேயே 20 பேர் கொண்ட கால்நடை குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர்.

    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வனச்சரகத்துக்குட்பட்ட மாரண்டஅள்ளி காப்பு காட்டில் இருந்து சமீபத்தில் ஒரு மக்னா யானை, 2 பெண் யானைகள், 2 குட்டி யானைகள் வெளியேறின. இவை பாலக்கோடு அருகே உள்ள ஆத்துக்கொட்டாய், நல்லூர், சென்னப்பன் கொட்டாய் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வந்தன.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மாரண்டஅள்ளி வனப்பகுதி அருகே உள்ள கிராமங்களில் சுற்றிய 5 யானைகளும் அப்பகுதியில் உள்ள காளிகவுண்டன் கொட்டாய்க்குள் புகுந்தன.

    அப்போது அங்கு சக்திவேல் என்பவரின் விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி 25 வயது மதிக்கத்தக்க மக்னா யானை, அதே வயதுடைய 2 பெண் யானைகள் மின்சாரம் தாக்கி அந்த இடத்திலேயே துடிதுடித்து இறந்தன.

    இதில் அதிர்ஷ்டவசமாக 2 குட்டி யானைகள் உயிர் தப்பின. அவை உயிரிழந்த யானைகளை சுற்றி சுற்றி வந்தபடி பாசப்போராட்டம் நடத்தியது. மேலும், அந்த யானைகள் இறந்தது தெரியாமல் தனது துதிக்கையால் குட்டியானைகள் அதனை தட்டி எழுப்பி கொண்டிருந்தன.

    நள்ளிரவில் நடந்த இந்த சம்பவம் பற்றி அந்த பகுதி மக்கள் வனத்துறையினர் மற்றும் வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்தில் மின் இணைப்பை மின்வாரிய ஊழியர்கள் துண்டித்தனர். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்து வனத்துறையினர், இறந்த யானைகளிடம் பாச போராட்டம் நடத்தி கொண்டிருந்த குட்டியானைகளை பட்டாசு வெடித்து அருகே உள்ள வனப்பகுதிக்கு விரட்டினர்.

    பலியாகி கிடந்த 3 யானைகளுக்கும் அந்த இடத்திலேயே 20 பேர் கொண்ட கால்நடை குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் 3 யானைகளின் உடல்களும் அந்த பகுதியில் பெரிய குழி தோண்டி புதைக்கப்பட்டன. யானைகள் புதைக்கப்பட்ட இடத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் மாலைகள் வைத்தும், பூக்களை தூவியும் அஞ்சலி செலுத்தினார்கள்.

    3 யானைகள் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் நடந்த விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து சட்ட விரோதமாக மின்வேலி அமைத்த பாறைக்கொட்டாயை சேர்ந்த முருகேசன் (வயது 60) என்ற விவசாயியை வனத்துறையினர் கைது செய்தனர். சட்ட விரோதமாக மின்வேலி அமைத்தது தொடர்பாக, மின்வாரியத்தினர் கொடுத்த புகாரின்பேரில் மாரண்டஅள்ளி போலீசாரும், முருகேசன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • காட்டுபன்றிகள்அழித்து சேதப்படுத்துவதால், அதனை தடுக்கமின்வேலி அமைத்திருந்தார்.
    • மின்வேலியில் சிக்கி பரிதாபமாகஉயிரிழந்தார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மேல் அருங்குணம்கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சுப்புராயன். இவர்இவரதுநிலத்தில் மணிலா பயிரிட்டுள்ளார். மணிலா பயிர்களை காட்டுபன்றிகள்அழித்து சேதப்படுத்துவதால், அதனை தடுக்கமின்வேலி அமைத்திருந்தார். இந்த நிலத்தில்மணிலா அறுவடை பணிக்காக மணம்தவழ்ந்த புத்தூர்காலனியை சேர்ந்த சேட்டுமனைவி தனலட்சுமி (வயது 65) வந்தார்.அவர் அங்கிருந்த மின்வேலியில் சிக்கி பரிதாபமாகஉயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி துணை போலீஸ்சூப்பிரண்டுசபியுல்லா,புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி விவசாயி சுப்புராயனை கைது செய்துகோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

    ×