என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி அருகே தாய்-மகனை வெட்டிக்கொன்ற விவசாயி கைது
    X

    தருமபுரி அருகே தாய்-மகனை வெட்டிக்கொன்ற விவசாயி கைது

    • விவசாய நிலங்களில் வரப்பு தொடர்பாக ராஜமாணிக்கத்திற்கும் அருகே வசிக்கும் மற்றொரு விவசாயியான பெரியசாமி என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
    • கிருஷ்ணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பெரியசாமியை தேடி வந்தனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரம் அருகே உள்ள ஒன்னியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது 55). இவருக்கு சொந்தமாக அந்த பகுதியில் விவசாய நிலம் உள்ளது. அந்த விவசாய நிலத்தின் அருகில் மற்றொரு விவசாய நிலம் உள்ளது.

    அருகருகே உள்ள விவசாய நிலங்களில் வரப்பு தொடர்பாக ராஜமாணிக்கத்திற்கும் அருகே வசிக்கும் மற்றொரு விவசாயியான பெரியசாமி (50) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இந்தநிலையில் நேற்று ராஜமாணிக்கம் தனது தாய் பழனியம்மாளுடன் விவசாய நிலத்தில் பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த பெரியசாமி வரப்பு தொடர்பாக ராஜமாணிக்கத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    இதில் ஆத்திரமடைந்த பெரியசாமி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராஜமாணிக்கத்தை வெட்டினார். அவருடைய தாயார் பழனியம்மாள் தடுக்க முயன்றபோது அவரையும் சரமாரியாக வெட்டினார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் ராஜமாணிக்கம், பழனியம்மாள் ஆகிய 2 பேரும் உயிரிழந்தனர்.

    இது குறித்து கிருஷ்ணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பெரியசாமியை தேடி வந்தனர்.

    இந்நிலையில் பெரியசாமி இன்று அதிகாலை போலீசில் சரண் அடைந்தார். அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×