search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாகர் சிலை"

    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
    • இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் கோவில் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் நாகராஜா கோவிலில் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிக மாக காணப்படும். ஆவணி 2-வது ஞாயிற்றுக் கிழமை யான இன்று (27-ந்தேதி) காலையில் நடை திறக்கப் பட்டது. இதைத் தொடர்ந்து நாகராஜருக்கு தீபாராதனை யும், அபி ஷேகங்களும் நடந்தது. கோவில் நடை திறக்கப் பட்டது முதலே பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. நாகராஜரை தரிசிக்க குடும்பத்தோடு பக்தர்கள் வந்திருந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று நாகராஜரை வழி பட்டு சென்றனர்.

    நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றுவதற்கும் கூட்டம் அதிகமாக இருந் தது. பெண்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பக்தர்கள் நாகர் சிலை களுக்கு பால் ஊற்றியும், மஞ்சள் பொடி தூவியும் வழிபட்டனர். கோவிலில் கூட்டம் அலைமோதி யதை யடுத்து கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் தலையாகவே காட்சியளித்தது.

    சாமி தரிசனத்திற்கு குமரி மாவட்டம் மட்டு மின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும், கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். தரி சனத்திற்கு வந்த பக்தர் களுக்கு கோவில் கலை யரங்கத்தில் அன்ன தானம் வழங்கப்பட்டது. பக்தர்க ளுக்கு வசதியாக குடிநீர் வசதிகளும் செய்யப்பட்டு இருந்தது. கோவிலில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு காமிரா மூலமாக போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கோவிலில் கூட்டம் அலை மோதியதையடுத்து இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் கோவில் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. நாகராஜா கோவில் திடலில் பக்தர்கள் விட்டுவிட்டு வந்தனர். நாகராஜா கோவில் திடலையொட்டி உள்ள சாலைகளில் சாலைகளின் இருபுறமும் திரு விழாக் கடைகள் அமைப்பட்டு இருந்தது.

    • பக்தர்கள் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றியும், மஞ்சள் பொடி தூவியும் வழிபட்டனர்.
    • கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராவின் காட்சிகளை கோவில் அலுவலகத்தில் இருந்து போலீசார் கண்காணித்தனர்.

    நாகர்கோவில்:

    நாகதோஷம் தீர்க்கும் புண்ணிய ஸ்தலங்களில் ஒன்றாக நாகர்கோவில் நாகராஜா கோவில் விளங்குகிறது. இங்கு பக்தர்கள் தோஷங்கள் நீங்கவும் திருமணங்கள் கைகூடவும் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

    நாகராஜா கோவிலில் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிகமாக காணப்படும். குறிப்பாக ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் நாகர் சிலைகளுக்கு பாலூற்றி வழிபட்டால் நினைத்தது நடக்கும். திருமணங்கள் கைகூடும். தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இதனால் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் ஆண்டு தோறும் கூட்டம் அதிகமாக காணப்படும்.

    இந்த ஆண்டு ஆவணி மாதத்தில் 5 ஞாயிற்றுக்கிழமை வருகிறது. முதல் ஆவணி ஞாயிற்றுக்கிழமையான இன்று (20-ந் தேதி) காலை 4:30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட் டது. இதை தொடர்ந்து நாகராஜருக்கு தீபாராதனையும் அபிஷேகமும் நடந்தது. அதிகாலையில் நடை திறக்கப்பட்டது முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஏராளமான பக்தர்கள் குடும்பத்தோடு வந்து நாகராஜரை தரிசனம் செய்தனர். குறிப்பாக பெண்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் கோவில் வளாகத்தை விட்டு வெளியே வரை நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சாமி தரிசனத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பக்தர்கள் காத்திருந்தனர். நாகர் சிலைகளுக்கு பாலூற்றி வழிபடுவதற்கும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்றனர்.

    பக்தர்கள் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றியும், மஞ்சள் பொடி தூவியும் வழிபட்டனர். இதனால் நாகராஜா கோவில் வளாகம் முழுவதும் இன்று பக்தர்கள் தலையாகவே காட்சியளித்தது. பக்தர்கள் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    பக்தர்களுக்கு தேவையான குடிநீர் உள்பட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் மேற்கொண்டு இருந்தனர். கோவில் கலையரங்கத்தில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. கோவிலில் கூட்டம் அலை மோதியதையடுத்து இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்கள் கோவில் வளாகத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டு இருந்தது. நாகராஜா கோவில் மைதானத்தில் பக்தர்கள் இருசக்கர வாகனங்களையும் 4 சக்கர வாகனங்களையும் நிறுத்தி சென்று இருந்தனர்.

    மேலும் பக்தர்களுக்கு வசதியாக பால் மற்றும் மஞ்சள் பொடிகள் கோவில் வாசலிலும் நாகராஜா திடல் பகுதியில் உள்ள சாலை ஒரங்களிலும் விற்பனை செய்யப்பட்டது. வழக்கமாக கோவில் நடை 12 மணிக்கு சாத்தப்படுவது வழக்கம். ஆனால் இன்று கூட்டம் அதிகமாக இருந்ததால் கோவில் நடை சாத்துவதில் தாமதம் ஏற்படலாம். சாமி தரிசனத்திற்கு குமரி மாவட்டத்தில் இருந்து மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து இருந்தனர். பக்தர்கள் கூட்டம் அலை மோதியதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராவின் காட்சிகளை கோவில் அலுவலகத்தில் இருந்து போலீசார் கண்காணித்தனர்.

    • தாய் அம்மனாக மயிலை முண்டகக்கண்ணி அம்மன் கருதப்படுகிறாள்.
    • நாகர்கள் சக்தி வாய்ந்தவர்களாக கருதப்படுகிறார்கள்.

    மயிலை முண்டகக்கண்ணியம்மனின் அருள் சிறப்புகளாக எத்தனையோ விஷயங்களை சொல்லலாம். அதில் தனிச்சிறப்பாக அம்மை பாதிப்பை உடனே இறங்கச் செய்வதை சொல்கிறார்கள்.

    ஒருவருக்கு அம்மை போட்டிருந்தால், அதுக்கு அவர் குடும்பத்தில் இருந்து யாராவது ஒருவர் ஆலயம் வந்து பூசாரிகளிடம் தகவல் சொன்னால் போதும். அவர்கள் அம்மனின் தீர்த்தம், மஞ்சள்,வேப்பிலையை கொடுப்பார்கள்.

    அவற்றை வாங்கிச்சென்று அம்மையால் பாதிக்கப்பட்டவரிடம் கொடுக்க வேண்டும். தீர்த்தத்தை உடனே உட்கொள்ளச் செய்ய வேண்டும். அவர் தலையில் சிறிது தீர்த்தம் தெளிக்கலாம்.

    அம்மை போட்டுள்ள இடங்களில் அம்மனின் பிரசாதமான மஞ்சளை தேய்த்து விடலாம். உடலில் சிலருக்கு அம்மை பாதிப்பு அதிகமாகி எரிச்சல் ஏற்படலாம். அந்த இடங்களில் வேப்பிலையால் தடவிக் கொடுக்கலாம்.

    இது தவிர அம்மை போடப்பட்டவர்...... இடத்தில் தலை மாட்டில் கொஞ்சம் வேப்பிலை எடுத்து வைக்கலாம். இதனால் அம்மன் அருள் பெற்று அம்மை உடனே இறங்கி விடும் என்கிறார்கள்.

    இது பல்லாயிரக்கணக்கானவர்கள் வாழ்வில் நடந்த உண்மையாகும். அன்னையின் தீர்த்தம் அருந்தி, அவள் ஆலயத்து மஞ்சளை `அம்மா...' என்றழைத்து நெற்றியில் பூசிக்கொண்டவர்களுக்குத்தான் அந்த மகத்துவம் தெரியும்.

    பில்லி-சூனியம் ஓடி விடும்

    சிலருக்கு அல்லது சில குடும்பங்களுக்கு பில்லி-சூனியத்தால் பாதிப்பு ஏற்படலாம். அந்த சூனிய பாதிப்பு பற்றி அவர்கள் அறிந்து இருக்க மாட்டார்கள்.

    தொழிலில் நஷ்டம், வீண் மனக்கவலை, குடும்பத்தில் அமைதி இல்லாத நிலை, கணவன்-மனைவி இடையே தகராறு, பொருள் நஷ்டம் என்று இந்த பில்லி சூனியத்தின் பாதிப்பு வடிவம் வேறு, வேறு வகைகளில் இருக்கலாம்.

    இத்தகைய பிரச்சினைகள் தொடர்கதையாக இருந்தால் அதற்கு ஒரு நிரந்தர முடிவு கட்ட வேண்டாமா? அந்த பொறுப்பை நீங்கள் முண்டகக்கண்ணியம்மனிடம் ஒப்படைக்கலாம்.

    அன்னைக்கு அபிஷேகம் செய்து, சர்க்கரை பொங்கல் படைத்து வழிபட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வினியோகம் செய்யுங்கள். பிறகு `அம்மா உன்னிடம் பொறுப்புகளை போட்டு விட்டேன்' என்று மனம் உருகி வேண்டி வீடு திரும்புங்கள். இந்த எளிய பிரார்த்தனையே போதும், உங்களைப்பிடித்த பில்லி-சூனியம் போன்றவை வந்த சுவடு தெரியாமல் ஓடோடி விடும்.

    இவள்தான் தாய்

    மயிலாப்பூர், மந்தவெளி, ராஜா அண்ணாமலைபுரம், அபிராமபுரம்,ராயப்பேட்டை பகுதிகளில் எத்தனையோ அம்மன் ஆலயங்கள் உள்ளன. இந்த ஆலயங்களுக்கு எல்லாம் தாய் அம்மனாக மயிலை முண்டகக்கண்ணி அம்மன் கருதப்படுகிறாள்.

    அதனால் தான் மற்ற அம்மன் ஆலயங்களில் உற்சவங்கள் மற்றம் விழாக்கள் நடக்கும் போது முதலில் முண்டகக்கண்ணி அம்மன் ஆலயத்துக்கு வந்து வழிபடுவார்கள். இங்கிருந்து தான் அந்த ஆலயங்களுக்கு கரகம் எடுத்து செல்வார்கள்.

    இந்த வழக்கம் ஆதிகாலத்தில் இருந்தே தொன்று தொட்டு நடந்து வருவதாக கூறப்படுகிறது.

    பாலாபிஷேகம் செய்தால் குழந்தை பாக்கியம்

    இத்தலத்தின் இடது பக்கத்தில் இரண்டு அரச மரத்துக்கு அடியில் ஏராளமான நாகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் தங்கள் வேண்டுதலின் பேரில் இந்த சிலைகளை எடுத்து வந்து இங்கு பிரதிஷ்டை செய்துள்ளனர். இந்த நாகர்கள் சக்தி வாய்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள்.

    இந்த நாகர்களுக்கு வேண்டிக் கொண்டு,தங்கள் கையாலேயே பாலாபிஷேகம் செய்யலாம். குழந்தை பேறு இல்லாதவர்கள் இந்த பாலாபிஷேகத்தை செய்து, நெய்விளக்கு தீபம் ஏற்றி கையில் வைத்து தீபாரதனை காட்டினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று பெண் பக்தர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.

    • ஆல மரப்பொந்தில் புற்று உள்ளது. அம்மன் நாக வடிவில் இருக்கிறாள்.
    • நாகம் இரவில் புற்றில் இருந்து வெளியில் வந்து அம்மனை வழிபட்டு செல்கிறது.

    மயிலை முண்டகக்கண்ணி அம்மன் ஆலயத்தில் நாகர் சிலைகள் உள்ள பகுதியிலும், நாகதேவதை புற்றாக உள்ள பகுதியிலும் முட்டையை உடைத்து ஊற்றி பெண்கள் வழிபாடு செய்வது வழக்கத்தில் உள்ளது. தோஷங்களை நீங்கச் செய்யும் இந்த வழிபாட்டை நாளுக்கு நாள் அதிக அளவில் பெண்கள் செய்து வருகிறார்கள்.

    முன்பெல்லாம் தினமும் சுமார் 20 முட்டைகளே வழிபாட்டுக்கு பயன்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது சராசரியாக தினமும் 2 ஆயிரம் முட்டைகள் உடைத்து ஊற்றப்படுகிறதாம்.

    அதுவும் ஆடி மாதம் சிறப்பு நாட்களில் இந்த எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. அதுபோல நாகர் சிலைகளுக்கு பெண்கள் பாக்கெட், பாக்கெட்டாக பால் கொண்டு வந்து ஊற்றி அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள்.

    இந்த முட்டை+ பாலை உடனுக்குடன் கோவில் பணியாளர்கள் அகற்றி தொடர்ந்து மற்ற பெண்கள் வழிபாடு செய்ய உதவுகிறார்கள்.

    நாகம் வழிபடுதல்

    மூலவர் அருள்மிகு முண்டகக்கண்ணி அம்மன் பின்புறம் ஆல மரம் உள்ளது. அந்த ஆல மரப்பொந்தில் புற்று உள்ளது. இங்கு அம்மன் நாக வடிவில் இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த நாகம் இரவில் புற்றில் இருந்து வெளியில் வந்து அம்மனை வழிபட்டு செல்வதாக கூறப்படுகிறது. இதற்கு வசதியாக கோவில் நிர்வாகத் தினரே கருவறை ஓலைக்குடிசையின் அடிப்பகுதியில் ஆங்காங்கே ஓட்டை போட்டு வைத்துள்ளனர்.

    அதன் வழியாக நாகம் சென்று வருவதாக நம்பப்படுகிறது. இந்த நாகம் சிலரது கண்களுக்கு தென்படுவது உண்டு. ஆனால் அடுத்த ஒரிரு வினாடிகளில் அந்த நாகம் எங்கும் சென்றது என்பதை கண்டு பிடிக்க முடியாதபடி மறைந்து விடுமாம்.

    கோவில் ஊழியர்களே அந்த நாகத்தை பல தடவை பார்த்துள்ளனர். ஆனால் அந்த நாகம் பக்தர்கள் யாரையும் இதுவரை அச்சுறுத்தியதாக எந்த வரலாறும் இல்லை.

    ராகு-கேதுவின் அமைப்பால் ஜாதகத்தில் நாகதோஷம் உள்ளவர்கள், இந்த நாகம் குடியிருக்கும் புற்றுப்பகுதியில் வழிபாடு செய்வது மிகப்பெரும் தோஷ நிவர்த்தியாகக் கருதப்படுகிறது. முட்டை உடைத்து, பால் அபிஷேகம் செய்து வழிப்பட்டால் நாக தோஷ பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம்.

    சிம்ம வாகனத்தில் உற்சவர்

    ஆலயத்தின் வலதுபுறம் அதாவது மூலவர் கருவறைஅம்மனுக்கு இடதுபுறம் அன்னையின் உற்சவர் சன்னதி உள்ளது. தனி கோவில் போல அந்த சன்னதி காட்சி அளிக்கிறது. அங்கு உற்சவர் அம்மன் சிம்ம வாகனத்தில் கம்பீரமாக வீற்றிருக்கிறாள்.

    வீதி உலா செல்வது இந்த உற்சவர் அம்மன் தான். ஒரு வருடத்தில் ஆடி கடைசி ஞாயிறு, விஜயதசமி,தை கடைசி வெள்ளி, சித்ராபவுர்ணமி, வருடபிறப்பு ஆகிய 5 தடவை மட்டுமே உற்சவர் வீதி உலா நடைபெறும். மற்ற நாட்களில் இந்த சன்னதி முன்பு பெண்கள் பொங்கல் வைத்து வழிபடுகிறார்கள்.

    கண் நோய்கள் நீங்கும்

    அருள்மிகு முண்டகக்கண்ணியம்மன் ஆலயத்துக்கு பல்வேறு கோரிக்கைகளை சுமந்து கொண்டு பக்தர்கள் வந்து சென்ற வண்ணம் உள்ளனர். அதை ஆய்வு செய்த போது பக்தர்களில் பெரும்பாலனவர்கள் தங்கள் கண் நோயை தீர்த்து வைக்குமாறு அன்னையிடம் வேண்டுவது தெரியவந்துள்ளது.

    அம்மனின் நாமத்தில் முண்டகக்கண்ணி என்று இருப்பதால் அதை முண்டக்கண்ணி என்ற நோக்கில் பக்தர்கள் நினைத்து கண் நோய்களுக்கான வழிபாடு அதிகம் நடைபெறுகிறதாம்.

    இந்த ஆலயத்துக்கு அம்மனுக்கு நன்கொடையாக வரும் வெள்ளி கண் மலர்கள் மற்றும் உண்டியல்களில் அதிகபட்சமாக கிடைக்கும் கண்மலர்கள் மூலம் இந்த தகவல் உறுதிபடுத்தப்பட்டுள்ளதாம்.

    • தினமும் பூஜைக்கு மட்டும்தான் கதவு திறக்கப்பட்டு பூஜை செய்வது வழக்கம்.
    • நிர்வாகத்தினர் கோவிலில் சென்று பார்க்கும்போது நாகர் சிலையின் சில பகுதிகள் சேதப்பட்டுத்தப்பட்டிருந்தது.

    கன்னியாகுமரி :

    குலசேகரம் அருகே மங்கலம் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற பத்ரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பின்புறம் நாகர் சிலை உள்ளது. இதை சுற்றிலும் இரும்பு கம்பியால் அளிபோட்டு பூட்டு போட்டு இருக்கும். தினமும் பூஜைக்கு மட்டும்தான் கதவு திறக்கப்பட்டு பூஜை செய்வது வழக்கம்.

    இந்த நிலையில் நேற்று மாலை ஒரு வாலிபர் கேட்டின் பூட்டை உடைத்து கோவிலுக்குள் சென்று நாகர் சிலையை அடித்து சேதப்படுத்தினார். தகவல் அறிந்து கோவில் நிர்வாகத்தினர் கோவிலில் சென்று பார்க்கும்போது நாகர் சிலையின் சில பகுதிகள் சேதப்பட்டுத்தப்பட்டிருந்தது.

    அந்த வாலிபரை பிடிக்க சென்றபோது கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு கோவில் நிர்வாகத்தினரை அவதூறாக பேசி தாக்க முயன்றார். உடனே குலசேகரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்ததும் ஊர் பொதுமக்கள் உதவியுடன் அவனை பிடித்து குலசே கரம் போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். விசாரணையின் போது அந்த வாலிபர் மங்கலம் புதுக்குளம், திரிசில் வீடு பகுதியை சேர்ந்த அனிஷ் (வயது 30) என்று தெரியவந்தது.

    அவரிடம் விசாரணை செய்தபோது அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. உடனே அவரின் தந்தைக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் உடல்நிலை பாதிக்கப்பட்டவரை மீட்டு நாகர்கோவில் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை க்காக அனுமதித்தனர்.

    கோவில் நிர்வாகிகள் கொடுத்த புகாரின்பேரில் குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஆவணி 2-வது ஞாயிற்றுக்கிழமையை யொட்டி இன்று காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது.
    • சாமி தரிசனத்திற்கு கோவில் நுழைவுவாயிலை விட்டு வெளியே வரை பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் நாகராஜா கோவிலில் ஆவணி 2-வது ஞாயிற்றுக்கிழமையை யொட்டி இன்று காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து நாகரா ஜருக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தது.காலை முதலே கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதையடுத்து சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஏராள மானோர் குடும்பத்தோடு கோவிலுக்கு சாமி தரிசனத்திற்கு வந்திருந்தனர். கைக்குழந்தைகளுடனும் வந்து பெண்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    நாகர் சிலைகளுக்கு பெ ண்கள் மஞ்சள் பொடி,பால் ஊற்றி வழிபட்டனர். பக்தர்களுக்கு வசதியாக பால் பாக்கெட்டுகள் மற்றும் மஞ்சள் பாக் கெட்டுகள் கோவில் வளாகத்துக்குள்ளும் கோவில் உள்புறத்திலும் விற்பனை செய்யப்பட்டது.

    சாமி தரிசனத்திற்கு குமரி மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர் கள் வருகை தந்திருந்தனர். இதனால் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் தலையாகவே காட்சி அளித்தது. சாமி தரிசனத்திற்கு கோவில் நுழைவுவாயிலை விட்டு வெளியே வரை பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு வசதியாக குடிதண்ணீர் வசதி உட்பட அடிப்படை வசதிகளும் அங்கு செய்யப்பட்டிருந்தது.போலீசார் மப்டி உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கோவிலுக்குள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நுழைய அனுமதி வழங்கப்படாததையடுத்து நாகராஜா திடலில் பக்தர்கள் வாகனங்களை நிறுத்தி விட்டு சாமி தரிசனத்திற்கு சென்றனர்.

    • தரிசனம் செய்ய செல்வதற்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
    • நாகர் கருவறை சன்னதியின் மேல் கூரை ஓலையால் வேயப்பட்டதாகும்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் நாகராஜா கோவிலில் ஞாயிற்றுக் கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

    ஞாயிற்றுக்கிழமையான இன்று காலையில் நடை திறக்கப்பட்டது நாக ராஜருக்கு சிறப்பு அபி ஷேகங்களும் தீபாரா தனைகளும் நடந்தது. கோவிலில் சாமி தரி சனத்திற்கு காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. தரிசனம் செய்ய செல்வதற்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    நாகர் சிலைகளுக்கு பெண்கள் பால்ஊற்றியும் மஞ்சள் பொடி தூவியும் வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது .நாகர் கருவறை சன்னதியின் மேல் கூரை ஓலையால் வேயப்பட்டதாகும்.

    இந்த மேற்கூரை ஓலைகள் ஆண்டுதோறும் ஆடி மாதம் மாற்றப்படும். அதன்படி நேற்று ஆடி கிருத்திகை ஒட்டி நாகராஜர் சன்னதியின் மேல் கூரையை பூஜாரிகள் மாற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    ×