search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நயினார் நாகேந்திரன்"

    • கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் சோலார் பிளான்ட் அமைப்பதற்கு விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுகிறது.
    • பா.ஜனதா மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் கருத்து வேறுபாடு வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் நாங்கள் இதுவரை அ.தி.மு.க. கூட்டணியில்தான் இருந்து வருகிறோம்.

    நெல்லை:

    நெல்லை சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் இன்று நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணுவிடம் மனு ஒன்று அளித்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    நெல்லை மாநகர பகுதியில் உள்ள சாலைகள் மிகவும் சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. அதனை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி கலெக்டரிடம் மனு அளித்துள்ளேன்.

    கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் சோலார் பிளான்ட் அமைப்பதற்கு விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுகிறது. இதற்கு அந்த பகுதியில் உள்ள ஏராளமான கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இது தொடர்பாக ஏற்கனவே 2 முறை சட்டமன்றத்தில் நான் பேசி உள்ளேன்.

    விளை நிலங்களை கையகப்படுத்துவதை தவிர்த்து புறம்போக்கு நிலங்களை பயன்படுத்த வேண்டும் என்று கலெக்டரிடமும் கோரிக்கை விடுத்தேன். ஆனால் கடந்த 2017-18-ம் ஆண்டிலேயே அதற்கான பணிகள் வருவாய்த் துறையினரால் தொடங்கப்பட்டு தற்போது வரை நடைபெற்று வருகிறது. எனவே இது தொடர்பாக அமைச்சரிடம் தொடர்ந்து பேசி வருகிறேன்.

    பா.ஜனதா மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் கருத்து வேறுபாடு வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் நாங்கள் இதுவரை அ.தி.மு.க. கூட்டணியில்தான் இருந்து வருகிறோம். தி.மு.க.வுடன் பா.ஜனதா கூட்டணி சேர்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.

    இது தொடர்பாக கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும். அரசுக்கு சொந்தமான இடங்களில் குவாரி அமைக்கப்பட்டால் அதனை பாரதிய ஜனதா நிச்சயமாக எதிர்க்கும். பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலையின் நடை பயணம் வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் கூட்டணிகளை நம்பியே உள்ளது.
    • தனியாக தேர்தலை சந்திப்போம் என எந்த கட்சியும் சொல்ல முடியாது.

    நெல்லை:

    கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.சிதம்பரனாரின் நினைவு தினத்தையொட்டி நெல்லை டவுன் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் நயினார்நாகேந்திரன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் நெல்லை தொகுதியில் போட்டியிட விரும்புகிறேன். கட்சி தலைமை அனுமதித்தால் போட்டியிடுவேன்.

    அ.தி.மு.க.வில் யார் தலைமை என்பதை விட அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி தொடரும் என்பதை கூறிக்கொள்கிறேன்.

    பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என பிரதமர் உத்தரவிட்டதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் 60-க்கும் மேற்பட்ட மத்திய அமைச்சர்கள் பார்த்து செல்கின்றனர்.

    10 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்பது எதிலும் இல்லை. இட ஒதுக்கீட்டில் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என பலதரப்பினரும் உள்ளனர். இந்த இடஒதுக்கீடு விவகாரத்தில் தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. இந்த இடஒதுக்கீட்டை தமிழகத்தில் உடனடியாக அமலுக்கு கொண்டு வரவேண்டும்.

    பாராளுமன்ற தேர்தலுக்கான பூர்வாங்க பணிகளை செய்து வருகிறோம்.

    அ.தி.மு.க. நான்கு பிரிவுகளாக பிரிந்து இருப்பதாக கூறுகிறீர்கள். இருகைகள் தட்டினால் தான் ஓசை வரும். எனவே அவர்கள் இணைவது நல்லது. அவ்வாறு இணைந்தால் கூட்டணி இன்னும் பலம் பெறும்.

    தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் கூட்டணிகளை நம்பியே உள்ளது. தனியாக தேர்தலை சந்திப்போம் என எந்த கட்சியும் சொல்ல முடியாது.

    இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஒரு கட்சி தொடங்கினால் கூட்டணியை வைக்ககூடாது என சட்டம் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும். கூட்டணியாக இருந்தால் பலமாக இருக்கும். கூட்டணி என்பது தேர்தலுக்கு மட்டுமே. கொள்கை அளவில் யாரும் யாருடனும் கூட்டணி கிடையாது.

    கவர்னரை எந்த ஒரு செயலை செய்யவும் நிர்பந்தித்தால் அது சரியாகாது.

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எனினும், முன்னாள் பிரதமர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதையும் கவனிக்க வேண்டும். எனவே இதில் இருதரப்பினரையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில் சிகிச்சை குறைபாடு உள்ளது என்பதை மறுக்க முடியாது. அந்த மருத்துவமனையில் அதற்கான வசதிகள் இருந்ததா? என்பதை ஆராய வேண்டும்.

    சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த சம்பவம் காங்கிரஸ் உட்கட்சி பிரச்சினை. அதுகுறித்து கருத்து கூற முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சுத்தமல்லி அணைக்கட்டில் இருந்து நயினார்குளம் வரை 23 கிலோமீட்டர் தூரத்திற்கு கால்வாய் தூர்வாரும் பணி நடந்து வருகிறது.
    • ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மொழி பேசப்படுகிறது. எந்த மாநிலத்து மக்களுக்கு எந்த மொழியில் பேசினால் புரியுமோ அந்த மொழியில் தான் பேச முடியும்.

    நெல்லை:

    நெல்லை கால்வாய் தூர்வாரும் பணியை நெல்லை சட்டமன்ற உறுப்பினரும், தமிழக பா.ஜனதா சட்டமன்ற குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் பருவ காலங்களில் மழை பெய்தாலே அனைத்து இடங்களிலும் தண்ணீர் தேங்கி இருக்கிறது. நெல்லை டவுன் பகுதியில் அமைந்துள்ள கால்வாய்களில் மழை நேரங்களில் அதிக அளவு தண்ணீர் தேங்கி ஊருக்குள் புகுந்துவிடுவதை தடுக்க ரூ.68.21 லட்சம் மதிப்பில் கால்வாய் தூர்வரப்பட்டு வருகிறது.

    சுத்தமல்லி அணைக்கட்டில் இருந்து நயினார்குளம் வரை 23 கிலோமீட்டர் தூரத்திற்கு கால்வாய் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மொழி பேசப்படுகிறது. எந்த மாநிலத்து மக்களுக்கு எந்த மொழியில் பேசினால் புரியுமோ அந்த மொழியில் தான் பேச முடியும்.

    பிரதமர் தமிழில் பேசினால் ஏமாற்றுகிறார் என சொல்கிறார்கள். வைகோ இப்படி பேசுவது தேவையில்லாத விஷயம். இந்தியை திணிப்போம் என மத்திய அரசு எங்கும் இதுவரை சொல்லவில்லை.

    இந்தியை வைத்து எதிர்க்கட்சியினர் அரசியல் செய்து வருகின்றனர். கட்டமைப்பு வசதிகளை கொண்டு வருவது பாரதிய ஜனதா கட்சி அரசு. தங்க நாற்கர சாலை திட்டத்தை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கொண்டு வந்துள்ளார்.

    நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் இதுவரை எந்த கட்டமைப்பு மேம்பாட்டு வசதியும் காங்கிரஸ் கட்சி கொண்டு வரவில்லை. பரந்தூர் விமான நிலைய திட்டம் கண்டிப்பாக வேண்டும். அ.தி.மு.க.வில் நடப்பது உட்கட்சி பிரச்சனை. அதை அவர்களே பேசி தீர்த்துக் கொள்ளட்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பட்டமளிப்பு விழா பா.ஜனதாவின் பிரச்சார மேடை என்பது கூறுவது தவறு.
    • பட்டமளிப்பு விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் கலந்து கொள்ள வேண்டியது அவரது கடமை.

    நெல்லை:

    நெல்லை தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் இன்று ராமையன்பட்டியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வில் சண்டை ஏற்படுவதால்தான் நான் வெளியேறினேன். அ.தி.மு.க.வினர் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்.

    உள்கட்சி விவகாரத்தில் பா.ஜனதா தலையிட முடியாது. இதுகுறித்து அகில இந்திய தலைமை முடிவு செய்யும். அதே நேரத்தில் இதற்கு முன்பு இது போன்ற குளறுபடிகள் நடந்துள்ளது. ஆகவே ஒன்றாக சேர மாட்டார்கள் என்று கூற முடியாது. இந்த விவகாரத்தில் பா.ஜனதா நடுநிலைமையாகவே இருக்கும்.

    அ.தி.மு.க. அலுவலகம் அருகே சட்டம், ஒழுங்கு பிரச்சினைகள் நடக்காமல் தி.மு.க. பார்த்திருக்க வேண்டும். அ.தி.மு.க. அலுவலகத்துக்கு சீல் வைக்கும் அளவுக்கு தி.மு.க. சென்றிருக்க கூடாது. தி.மு.க.வுக்கு எதிர்க்கட்சியாக பா.ஜனதா உள்ளது.

    நான் பா.ஜ.க.வில் சேரும்பொழுது அ.தி.மு.க.வில் உள்ளவர்களை என்னோடு யாரையும் அழைக்கவில்லை. அப்படி அழைப்பு விடுத்திருந்தால் அநேகம் பேர் வந்திருப்பார்கள்.

    அ.தி.மு.க.வின் வாழ்வுக்கு ஓ.பி.எஸ். இ.பி.எஸ். இணைந்த கைகளாக இருந்தால் நன்றாக இருக்கும்.

    பட்டமளிப்பு விழா பா.ஜனதாவின் பிரச்சார மேடை என்பது கூறுவது தவறு.

    பட்டமளிப்பு விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் கலந்து கொள்ள வேண்டியது அவரது கடமை.

    தி.மு.க. அரசு கல்குவாரி திறப்பது தொடர்பாக ஆலோசனைகள் நடத்தி வருகிறது என கலெக்டர் தெரிவித்துள்ளார். வெகுவிரைவில் அதற்கு முடிவு எட்டப்பட வேண்டும். குவாரிகள் விரைவில் திறக்கப்பட வேண்டும். தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்க வேண்டும்.

    தி.மு.க. அரசு உடனே நடவடிக்கை எடுத்து கல்குவாரிகளை திறந்து வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். கட்டுமான பொருட்கள் விலை ஏற்றத்தை தடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க. எம்.பி.ஆர். ராசா மட்டும்தான் தனி நாடு கேட்பாரா? நாங்களும் கேட்போம், தமிழகத்தை எங்களுக்கு இரண்டாக பிரித்துக் கொடுங்கள்.
    • ஆந்திராவில் இருந்து தெலுங்கானாவை தனியாக பிரித்தது போல் தமிழகத்தையும் 2 மாநிலங்களாக பிரிக்க வேண்டும்.

    நெல்லை:

    தி.மு.க. அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இன்று பா.ஜனதா சார்பில் போராட்டம் நடைபெற்றது.

    நெல்லையில், ஜோதிபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தயா சங்கர் தலைமை தாங்கினார். மாநில இளைஞரணி துணைத்தலைவர் நயினார் பாலாஜி, மாவட்ட பொதுச்செயலாளர் முத்து பலவேசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டார். இதில் மாவட்ட செயலாளர் வக்கீல் வெங்கடாஜலபதி என்ற குட்டி, மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் பாபு தாஸ், துணைத்தலைவர் மார்க்கெட் கணேசன், தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில செயலாளர் குணசேகர் அரியமுத்து, மாவட்ட செயலாளர் நாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    இந்த ஆர்ப்பாட்டம் மிகச் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக பா.ஜனதா கூட்டத்தின்போது போலீசாரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

    ஆனால் தற்போது எங்கள் தொண்டர்களின் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இதனால் போலீசாருக்கு நாங்கள் பாதுகாப்பு கொடுக்கிறோம்.

    தற்போது தமிழகத்தில் காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. நெல்லை மாவட்டத்தில் கஞ்சா, மதுபோதைக்கு இளைஞர்கள் அடிமையாகி விடுகின்றனர்.

    பள்ளி மாணவர்கள் நிறைய பேர் பாட்டில் உடன் பையை சுமந்து செல்லும் நிலை உள்ளது. விரைவில் ஆணும் பெண்ணும் அடிமையாகும் நிலை தமிழகத்தில் உருவாகி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

    தி.மு.க. எம்.பி. ஆர்.ராசா மட்டும்தான் தனி நாடு கேட்பாரா? நாங்களும் கேட்போம், தமிழகத்தை எங்களுக்கு இரண்டாக பிரித்துக் கொடுங்கள். பாண்டியநாடு, பல்லவ நாடு என்று இரண்டாக பிரித்துக் கொடுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

    தமிழகத்தை இரண்டு மாநிலங்களாக பிரித்தால் நல்லது என்பது எனது ஆசை. நிர்வாக காரணங்களுக்காக இரண்டாக பிரிக்கலாம். அதன் மூலம் அதிக அளவு நிதியை பெற முடியும். மாநிலங்களும் வளர்ச்சியை நோக்கி செல்லும்.

    ஆந்திராவில் இருந்து தெலுங்கானாவை தனியாக பிரித்தது போல் தமிழகத்தையும் 2 மாநிலங்களாக பிரிக்க வேண்டும். அதில் பா.ஜனதா முதல்-அமைச்சராக இருந்தாலும் சரி, கூட்டணி கட்சியான அ.தி.மு.க. முதல்-அமைச்சர் பதவியில் அமர்ந்தாலும் சரி.

    தற்போது அ.தி.மு.க.வில் நிலவும் பிரச்சினையில் நாங்கள் நடுநிலையாக உள்ளோம். மோடியின் 8 ஆண்டு ஆட்சியில் ஊழலை பார்க்க முடியாது. ஜி.எஸ்.டி. தொடர்பாக தமிழகத்திற்கு ஒரு பைசா கூட மத்திய அரசு செலுத்த வேண்டியது இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க. என்பது மிகப்பெரிய கட்சி. ஏழை, எளிய மக்களுக்காக எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட கட்சி.
    • 2 தலைவர்களில் நல்லவர் யாரோ? அவர்கள் தலைமை பதவிக்கு வரவேண்டும். தகுதியானவர் அந்த பதவிக்கு வரவேண்டும்.

    நெல்லை:

    சர்வதேச யோகா தினத்தையொட்டி நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே உள்ள நாரணம்மாள்புரத்தில் பா.ஜனதா சார்பில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு யோகாசனம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க. என்பது மிகப்பெரிய கட்சி. ஏழை, எளிய மக்களுக்காக எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட கட்சி. ஜெயலலிதாவால் கட்டி காப்பாற்றப்பட்ட கட்சி.

    அந்த கட்சியில் தகுதி உள்ளவர்கள், திறமை உள்ளவர்கள், தொண்டர்களின் மனநிலைக்கு ஏற்றவர்கள் அதாவது 2 தலைவர்களில் நல்லவர் யாரோ? அவர்கள் தலைமை பதவிக்கு வரவேண்டும். தகுதியானவர் அந்த பதவிக்கு வரவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து, அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது சிறப்பு அழைப்பாளர்களுக்கு இடம் இல்லாததால் வேறு மண்டபத்திற்கு பொதுக்குழு கூட்டத்தை மாற்றி நடத்த வேண்டும்.

    அதனால் பொதுக்குழு கூட்டத்தை தள்ளிபோட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியிருப்பது குறித்து கேட்டபோது, அ.தி.மு.க.வின் விதி 20-பி படி, டவுன் பஞ்சாயத்து செயலாளர் உள்பட அனைத்து சிறப்பு அழைப்பாளர்களும் பொதுக்குழுவில் பங்கேற்க வேண்டும்.

    எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே சிறப்பு அழைப்பாளர்கள் கண்டிப்பாக அழைக்கப்படவேண்டும் என்பது விதி. அந்த கட்சியை கட்டி காக்க திறமையான தலைமை வேண்டும். அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை என்பது சரியான முடிவு தான் என்றார்.

    பேட்டியின்போது நெல்லை மாவட்ட பா.ஜனதா தலைவர் தயாசங்கர், அரசாங்க பிரிவு தலைவர் மகாராஜன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    ×