search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி சேர்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை- நயினார் நாகேந்திரன் பேட்டி
    X

    தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி சேர்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை- நயினார் நாகேந்திரன் பேட்டி

    • கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் சோலார் பிளான்ட் அமைப்பதற்கு விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுகிறது.
    • பா.ஜனதா மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் கருத்து வேறுபாடு வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் நாங்கள் இதுவரை அ.தி.மு.க. கூட்டணியில்தான் இருந்து வருகிறோம்.

    நெல்லை:

    நெல்லை சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் இன்று நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணுவிடம் மனு ஒன்று அளித்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    நெல்லை மாநகர பகுதியில் உள்ள சாலைகள் மிகவும் சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. அதனை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி கலெக்டரிடம் மனு அளித்துள்ளேன்.

    கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் சோலார் பிளான்ட் அமைப்பதற்கு விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுகிறது. இதற்கு அந்த பகுதியில் உள்ள ஏராளமான கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இது தொடர்பாக ஏற்கனவே 2 முறை சட்டமன்றத்தில் நான் பேசி உள்ளேன்.

    விளை நிலங்களை கையகப்படுத்துவதை தவிர்த்து புறம்போக்கு நிலங்களை பயன்படுத்த வேண்டும் என்று கலெக்டரிடமும் கோரிக்கை விடுத்தேன். ஆனால் கடந்த 2017-18-ம் ஆண்டிலேயே அதற்கான பணிகள் வருவாய்த் துறையினரால் தொடங்கப்பட்டு தற்போது வரை நடைபெற்று வருகிறது. எனவே இது தொடர்பாக அமைச்சரிடம் தொடர்ந்து பேசி வருகிறேன்.

    பா.ஜனதா மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் கருத்து வேறுபாடு வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் நாங்கள் இதுவரை அ.தி.மு.க. கூட்டணியில்தான் இருந்து வருகிறோம். தி.மு.க.வுடன் பா.ஜனதா கூட்டணி சேர்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.

    இது தொடர்பாக கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும். அரசுக்கு சொந்தமான இடங்களில் குவாரி அமைக்கப்பட்டால் அதனை பாரதிய ஜனதா நிச்சயமாக எதிர்க்கும். பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலையின் நடை பயணம் வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×