search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளையராஜா 75"

    தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கொண்டாடப்படும் இசையராஜா 75 நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் பங்கேற்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Ilayaraja75 #Rajinikanth #KamalHaasan
    இசையமைப்பாளர் இளையராஜாவின் 75-வது பிறந்தநாள் தமிழ் திரைத்துறையினர் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பாக, ‘இளையராஜா 75’ எனும் இசை நிகழ்ச்சியுடன் கூடிய விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

    சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வருகிற பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் இந்த விழா நடைபெற உள்ளது. 2-ந் தேதி தென்னிந்தியத் திரையுலகின் முக்கியப் பிரபலங்கள் கலந்து கொள்ளும் கலை நிகழ்ச்சியும், 3-ந் தேதி இளையராஜாவின் இசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.



    இந்த விழாவுக்கு திரையுலகின் முன்னணி பிரபலங்களை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் மற்றும் முக்கிய உறுப்பினர்கள் நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகிறார்கள். ரஜினி மற்றும் கமல் இருவரையும் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர். இருவருமே கண்டிப்பாக வருவதாக உறுதியளித்துள்ளனர். #Ilayaraja75 #Rajinikanth #KamalHaasan

    பிப்ரவரி மாதம் இளையராஜா 75 நிகழ்ச்சி நடைபெறுவதையொட்டி, நடிகர் ரஜினிக்கு விஷால் நேரில் சென்று அழைப்பு வைத்திருக்கிறார். #Ilayaraja75 #Rajini
    இசை அமைப்பாளர் இளையராஜாவின் 75-வது பிறந்த நாளையொட்டி அவரது இசை சாதனையை பாராட்டி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ‘இளையராஜா-75’ என்ற பெயரில் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வருகிற பிப்ரவரி மாதம் 2, 3-ந்தேதிகளில் இந்த இசை நிகழ்ச்சி நடக்கிறது. இந்த 2 நாட்களிலும் இளையராஜா கலந்து கொண்டு இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறார்.

    இது தொடர்பாக விஷால் கூறுகையில், “பிப்ரவரி 2-ந்தேதி அனைத்து மொழி கலைஞர்களும் கலந்து கொள்ளும் பாராட்டு விழாவாக நடத்தப்படுகிறது. தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், பின்னணி பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஜேசுதாஸ் மற்றும் பாடகிகள் சுசீலா, ஜானகி உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுப்போம்” என்றார்.



    இதையடுத்து விஷால் இன்று போயஸ்கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து ‘இளையராஜா-75’ இசை நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்தார். அழைப்பை ரஜினிகாந்த் ஏற்றுக் கொண்டார். இதே போல் மற்ற பிரபலங்களையும் விஷால் நேரில் சந்தித்து அழைப்பு விடுக்கிறார்.
    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற இருக்கும் ‘இளையராஜா 75’ நிகழ்ச்சிக்காக 10 கதாநாயகர்கள் இணைந்துள்ளார்கள். #Ilayaraja
    2019-ம் ஆண்டு துவங்கியதும் இசைஞானி "இளையராஜா 75" இசை விழாவுக்காக இசைப்பிரியர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வழங்கும் மாஸ்டரோ இசைஞானி இளையராஜாவின் ‘இளையராஜா75’ நிகழ்ச்சியின் டிக்கெட் விற்பனை துவக்க விழா சமீபத்தில் மாபெரும் மக்கள் கூட்டத்தின் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதை தொடர்ந்து  டிக்கெட் விற்பனை ஆன்லைனில் பரபரப்பாக விற்பனையாகி கொண்டிருக்கிறது. 

    பிப்ரவரி 2, 3 தேதிகளில், நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் - கலை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள் என நடக்க இருக்கிறது. 'இளையராஜா 75' டீசர் பல உருவாக்கப்பட்டது. அதை, ஒரே நேரத்தில் விஷால், கார்த்தி, விஜய்சேதுபதி, ஜெயம் ரவி, ஆர்யா, விஷ்ணு விஷால், ஜீவா, அதர்வா, சந்தானம் மற்றும் நந்தா ஆகிய 10 கதாநாயகர்கள் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார்கள். 



    பிப்ரவரி 2-ம் தேதி இசைஞானி இளையராஜா அனைத்து மொழி ஜாம்பவான்ங்களுடன் இணைந்து பணியாற்றியதை நினைவு கூர்ந்து கௌரவிக்கும் விதமாக கலைஞர்கள் இளையராஜாவின் பாடல்களுக்கு நடனமாடுகிறார்கள். இதை அவர் விழா காண வந்துள்ள  ரசிகர்களுடன் அமர்ந்து ரசிக்க இருக்கிறார். அடுத்தநாள் 3-ம் தேதி இளையராஜா அவரது குழுவினருடன் சேர்ந்து நிகழ்த்தும் மாபெரும் இசை நிகழ்ச்சி பிரமாண்டமாக அமைக்கப்படும் மேடையில் நடைபெறுகிறது. 
    தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனையை தமிழ்நாடு பலூன் திருவிழாவில் வைத்து இளையராஜா, விஷால் தொடங்கி வைக்கிறார்கள். #Ilayaraja75 #Vishal #ProducerCouncil
    இசை அமைப்பாளர் இளையராஜாவை பெருமைப்படுத்தும் விதமாக இளையராஜா 75 என்ற இசை நிகழ்ச்சியை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நடத்த இருக்கிறது.

    இதுதொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் பெருமையுடன் வழங்கும் ‘இளையராஜா-75 நிகழ்ச்சி வரும் பிப்ரவரி மாதம் 2, 3-ந் தேதிகளில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கான டிக்கெட் விற்பனை தொடக்க நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற இருக்கிறது.



    வரும் 6-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு, செங்கல்பட்டு அருகே ‘மகேந்திரா வேர்ல்டு சிட்டி‘யில் நடைபெறும் 5-வது தமிழ்நாடு சர்வதேச பலூன் திருவிழாவில் இந்த நிகழ்ச்சி தொடங்குகிறது.

    இங்கு ‘இளையராஜா-75 என்ற பெயரில் பலூன்கள் பறக்கவிடப்படும். அதில் ஒரு ராட்சச பலூனில் இளையராஜா பயணம் செய்வார். மற்றொரு பலூனில் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் பயணம் செய்கிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Ilayaraja75 #Vishal #ProducerCouncil

    இளையராஜாவுக்கு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக இசையராஜா-75 நிகழ்ச்சிக்காக 2 நாள் படப்பிடிப்புக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. #Ilayaraja
    1000 திரைப்படங்களுக்கு மேலும், 5000-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்தும், 500-க்கும் மேற்பட்ட பாடல்களை தனது சொந்த குரலில் பாடியும் 5-முறை தேசிய விருதுகளை பெற்று திரையுலகில் இன்றும் மாபெரும் சாதனை படைத்துக்கொண்டிருக்கும் இசைஞானி இளையராஜாவுக்கு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக இசையராஜா-75 என்ற பெயரில் அவரை கௌரவிக்கும் பொருட்டு இந்திய அளவில் பிரம்மாண்டமான இசைவிழாவை வெகு சிறப்பாக நடத்த இருக்கிறார்கள்.

    மேற்படி விழாவானது, 2019-பிப்ரவரி மாதம் 2-3ம் தேதிகளில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட திரையுலகில் உள்ள அனைத்து முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இளையராஜாவுடன் பணிபுரிந்த இயக்குனர்கள், இசை கலைஞர்கள் பங்கு பெற்று அவருக்கு பெருமை சேர்க்க இருக்கிறார்கள்.

    எனவே பிப்ரவரி 2-3 தேதிகளில் அனைத்து படப்பிடிப்புகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு தமிழ்த் திரையுலகில் சார்பாக அனைவரும் கலந்துகொண்டு விழாவை சிறப்பிக்க வேண்டு என்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.


    இசைஞானியுடன் ஒருநாள் என்ற நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட இளையராஜா, இதுவரை நான் எதிர்பார்த்த பாடல் அமையவே இல்லை என்று கூறியிருக்கிறார். #Ilayaraja
    இசைஞானி இளையராஜாவின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் ‘இசைஞானியுடன் ஒருநாள்’ என்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் கல்லூரி மாணவர்களோடு கலந்துரையாடிய இளையராஜா தன் மெட்டுக்களால் மாணவர்களை அசத்தினார்.

    கல்லூரி மாணவ, மாணவிகள் இளையராஜாவின் பாடல்களைப் பாடி அசத்த, அதை அகம் மகிழ்ந்து ரசித்தார். ஒரு மாணவி அவரிடம் ’இதுவரை நீங்கள் இசை அமைத்த பாடல்களில் நீங்கள் எதிர்பார்த்தபடி அமையாத பாடல் எது?’ என்று கேட்க, ``இதுவரை நான் இசையமைத்ததில் எந்தப் பாடலுமே நான் எதிர்பார்த்தபடி அமைந்த தில்லை. ஒவ்வொரு பாடலிலும் எங்கேயாவது தவறு இருக்கும்.



    இசையில் அனைத்துச் செல்வங்களும் இருக்கின்றன. அதைச் சரியாக பயன்படுத்த வேண்டும். இசைக்கு வெற்றி, தோல்வி எதுவுமே கிடையாது. வெற்றி -தோல்வி என்பதை மாணவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள கூடாது. மற்றவர்களுக்குதான் நான் இசைஞானி. எனக்கு நான் இன்னமும் இசைஞானி இல்லை. சொல்லப்போனால் எனக்கு நான் இளையராஜாவே இல்லை’’ என்று பதில் அளித்தார்.

    ×