என் மலர்

  சினிமா

  நான் எதிர்பார்த்த பாடல் அமையவே இல்லை - இளையராஜா
  X

  நான் எதிர்பார்த்த பாடல் அமையவே இல்லை - இளையராஜா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இசைஞானியுடன் ஒருநாள் என்ற நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட இளையராஜா, இதுவரை நான் எதிர்பார்த்த பாடல் அமையவே இல்லை என்று கூறியிருக்கிறார். #Ilayaraja
  இசைஞானி இளையராஜாவின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் ‘இசைஞானியுடன் ஒருநாள்’ என்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் கல்லூரி மாணவர்களோடு கலந்துரையாடிய இளையராஜா தன் மெட்டுக்களால் மாணவர்களை அசத்தினார்.

  கல்லூரி மாணவ, மாணவிகள் இளையராஜாவின் பாடல்களைப் பாடி அசத்த, அதை அகம் மகிழ்ந்து ரசித்தார். ஒரு மாணவி அவரிடம் ’இதுவரை நீங்கள் இசை அமைத்த பாடல்களில் நீங்கள் எதிர்பார்த்தபடி அமையாத பாடல் எது?’ என்று கேட்க, ``இதுவரை நான் இசையமைத்ததில் எந்தப் பாடலுமே நான் எதிர்பார்த்தபடி அமைந்த தில்லை. ஒவ்வொரு பாடலிலும் எங்கேயாவது தவறு இருக்கும்.  இசையில் அனைத்துச் செல்வங்களும் இருக்கின்றன. அதைச் சரியாக பயன்படுத்த வேண்டும். இசைக்கு வெற்றி, தோல்வி எதுவுமே கிடையாது. வெற்றி -தோல்வி என்பதை மாணவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள கூடாது. மற்றவர்களுக்குதான் நான் இசைஞானி. எனக்கு நான் இன்னமும் இசைஞானி இல்லை. சொல்லப்போனால் எனக்கு நான் இளையராஜாவே இல்லை’’ என்று பதில் அளித்தார்.

  Next Story
  ×