search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடிகர் சங்கம்"

    • நடிகர் சங்க பேரவை கூட்டம் தேனாம்பேட்டை காமராஜர் அரங்க வளாகத்தில் நடக்கிறது.
    • துணைத்தலைவர் கருணாஸ் ஆண்டறிக்கை வாசித்து வரவு செலவு கணக்கு அறிக்கை சமர்பிக்கிறார்.

    தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67-வது ஆண்டு பேரவை கூட்டம் வருகிற 10-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு தேனாம்பேட்டை காமராஜர் அரங்க வளாகத்தில் நடக்கிறது. தலைவர் நாசர் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது. துணைத்தலைவர் கருணாஸ் ஆண்டறிக்கை வாசித்து வரவு செலவு கணக்கு அறிக்கை சமர்பிக்கிறார்.

    பொருளாளர் கார்த்தி எதிர்கால பொருளாதார திட்டமிடல் குறித்தும் பொதுச்செயலாளர் விஷால் எதிர்கால நலத்திட்டங்கள் குறித்தும் பேசுகின்றனர். துணைத்தலைவர் பூச்சி எஸ்.முருகன் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதையொட்டி அனைத்து சினிமா சங்கங்களின் ஒருங்கிணைப்புடன் அன்று மட்டும் படப்பிடிப்பு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது.
    • இந்த கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் நாசர் தலைமை தாங்கினார்.

    தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் நாசர் தலைமை தாங்கினார். பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள் பூச்சி முருகன், கருணாஸ் மற்றும் குஷ்பு, கோவை சரளா, ராஜேஷ், மனோபாலா, பசுபதி, சோனியா, பிரசன்னா, நந்தா உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

     

    நடிகர் சங்க கட்டிட பணிகளை தொடங்குவது, கட்டிட நிதி திரட்டுவது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெறும் நடிகர் சூர்யா, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், இயக்குனர் வசந்த் உள்ளிட்டோர் நடிகர் சங்க செயற்குழு கூட்டத்துக்கு அழைக்கப்பட்டு பாராட்டு தெரிவித்து நினைவு சின்னம் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

    பின்னர் நடிகர் சங்க கட்டிட நிதியாக சூர்யா, கார்த்தி, தயாரிப்பாளர் ராஜசேகர கற்பூர சுந்தரபாண்டியன் ஆகியோர் இணைந்து நடிகர் சங்க கட்டிட நிதியாக ரூ.25 லட்சத்துக்கான காசோலையை நாசரிடம் வழங்கினார்கள்.

    பொள்ளாச்சியில் கல்லூரி, பள்ளி மாணவிகளை ஒரு கும்பல் பலாத்காரம் செய்த சம்பவத்திற்கு நடிகர் சங்கம் தலைவர் நாசர் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். #NadigarSangam #PollachiRapists
    பொள்ளாச்சியைச் சேர்ந்த பாலியல் மாபியா கும்பலின் செய்தியறிந்து நாடே உறைந்து போய் கிடக்கிறது. 200-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை துன்புறுத்தி வேட்டையாடி வந்த அந்த கயவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டுமென தமிழகம் முழுவதில் இருந்தும் போராட்டக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன. இந்நிலையில், நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். அதில், 

    கடந்த சில நாட்களாக ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் வரும் பொள்ளாச்சியில் நடந்துள்ள பாலியல் வன்கொடுமை பற்றிய செய்திகள் மனதை கனக்கச் செய்கின்றன. இந்த மாபெரும் படுபாதக செயல்களை பல காலங்களாக திட்டமிட்டு ஒரு கும்பல் செய்து வந்திருப்பதை ஆதாரப்பூர்வமாக பார்க்க முடிகிறது.  

    இந்த செயலின் பின்னணியில் உள்ளவர்களை விரைவாக கண்டறிந்து, அவர்கள் சமூகத்தில் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் கடுமையான தண்டனையை பெற்றுத் தர வேண்டும் என காவல்துறையிடம் வேண்டுகோள் வைக்கிறோம்.

    இச்செயலில் காவல்துறை நேர்மையாகவும் துணிவுடனும் விரைந்து செயல்படும் என நம்புகிறோம். அந்த நேர்மைக்கு எப்போதும் தென்னிந்திய நடிகர் சங்கம் துணை நிற்கும் என இந்த நேரத்தில் உறுதியளிக்கிறோம்.



    அலைபேசியில் உள்ள இணையதளங்கள் முகநூல் வாட்ஸ்அப் போன்ற விஞ்ஞான வளர்ச்சியில் உள்ள ஆபத்துக்களை உணர்ந்து இன்றைய தலைமுறையினர் விழிப்புடன் செயல்படவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

    நம்மை வழி நடத்துவதில் நம்ம பெற்றோருக்கு இருக்கக்கூடிய பொறுப்பும், கனவுகளும், வேறு யாருக்கும் இருக்கப்போவதில்லை. அதனால் ஒரு குறிப்பிட்ட வயது வரை நம் பெற்றோர்களுக்கு தெரியாமல் எந்த ஒரு உறவுகளையும் நட்புகளையும் யாரும் வைத்துக்கொள்ள வேண்டாம் என இளைய தலைமுறையினரை தென்னிந்திய நடிகர் சங்கம் கேட்டுக் கொள்கிறது.

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    மறைந்த திமுக தலைவர் கருணாநிதி இறுதிச்சடங்கில் இந்தியாவின் அனைத்து தலைவர்களும் வந்த நிலையில், தமிழக முதல்வர் வந்திருக்க வேண்டாமா? என நினைவேந்தல் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசியுள்ளார். #Rajinikanth #Karunanidhi
    சென்னை:

    மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் காமராஜர் அரங்கில் நடந்து வருகிறது. இதில், நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல நடிகர், நடிகைள், இயக்குநர்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்தவர்கள் பங்கேற்று கருணாநிதி உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நினைவேந்தல் கூட்டத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலினும் கலந்து கொண்டார்.

    இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசியதவது:-

    திமுக தலைவர் கருணாநிதி இல்லாத தமிழ்நாட்டை என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை. இலக்கியம், சினிமா என பல துறைகளிலும் சிறந்து விளங்கியவர். பழையவராகவே, புதியவராகவோ இருந்தாலும், கருணாநிதி இல்லாது அரசியல் செய்ய முடியாது என்ற நிலையை உருவாக்கியவர்.

    பல வஞ்சனைகளை தாண்டி அரசியலில் ஜொலித்த கருணாநிதியால் அரசியலுக்கு வந்தோர் லட்சம் பேர் உள்ளனர். அதிமுகவின் ஆண்டு விழாவில் அண்ணா, எம்ஜிஆரின் புகைப்படத்தோடு திமுக தலைவர் கருணாநிதியின் புகைப்படத்தையும் வைக்க வேண்டும். அதிமுக உருவானதற்கு காரணம் கருணாநிதிதான்.

    தமிழ்நாட்டில் இனி பெரிய விழா என்றால் மு.க.ஸ்டாலின் யாரை கூப்பிட போகிறார் என்று தெரியவில்லை. மெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன். 

    இந்த இடத்தில் இதை சொல்லியே ஆக வேண்டும். கருணாநிதியின் இறுதிச் சடங்கிற்கு ராகுல் காந்தி, பல மாநில முதல்வர்கள் என ஒட்டுமொத்த இந்தியாவே வந்த நிலையில் முதலமைச்சர் வர வேண்டாமா?. அமைச்சர்கள் வந்திருக்க வேண்டாமா?. 

    என ரஜினிகாந்த் பேசியுள்ளார்.
    நடிகர் சங்கம் சார்பில் சென்னை காமராஜர் அரங்கில் நடக்கும் கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் ஸ்டாலின், ரஜினிகாந்த் மற்றும் நடிக, நடிகைகள் பங்கேற்றுள்ளனர். #Karunanidhi #MKStalin #Rajinikanth
    சென்னை:

    மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் காமராஜர் அரங்கில் நடந்து வருகிறது. இதில், நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல நடிகர், நடிகைள், இயக்குநர்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்தவர்கள் பங்கேற்று கருணாநிதி உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நினைவேந்தல் கூட்டத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலினும் கலந்து கொண்டுள்ளார்.

    கூட்டத்தில் கலந்து கொண்ட நடிகர்கள் கருணாநிதி குறித்து தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
    கேரளாவில் கனமழை காரணமாக பல இன்னல்களை சந்தித்து வருபவர்களுக்கு, முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம் நடிகர் சங்கம் முதல் கட்டமாக வழங்க முடிவு செய்துள்ளார்கள்.
    தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 38-வது செயற்குழு கூட்டம் தலைவர் நாசர் தலைமையில் இன்று (12.08 .2018) காலை நடிகர் சங்க புதிய கட்டிட வளாகத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர். 

    இந்த கூட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வரும், நடிகர் சங்க ஆயுட்கால உறுப்பினருமான கலைஞர் மு.கருணாநிதி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தபட்டது. 



    மேலும் சமீபத்தில் இயற்கை சீற்றத்தால் பேரழிவு சந்தித்து வரும் கேரள மக்களுக்கு நடிகர் சங்கம் மூலம் முதல் கட்டமாக ஐந்து லட்சம் ரூபாய் கேரளா முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    ×