search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துறைமுகம்"

    • 29 உயிரிழப்புகள் நுழைவு வாயில் பகுதியில் நடந்து உள்ளதாக மீனவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
    • ரூ.245 கோடி செலவில் சீரமைப்பு பணிகள் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் மீன்பிடித்துறைமுகம் முகத்துவாரத்தில் படகு கவிழ்ந்து மீனவர்கள் பலியா வது கடந்த பல ஆண்டுகளாக தொடர்கதையாக நடந்து வருகிறது.

    இந்த துறைமுகம் செயல்பாட்டுக்கு வந்த பிறகு இதுவரையிலும் 29 உயிரிழப்புகள் நுழைவு வாயில் பகுதியில் நடந்து உள்ளதாக மீனவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

    எனவே மீன்பிடித்துறை முகத்தை மறு சீரமைப்பு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதனை ஏற்று மத்திய, மாநில அரசுகள் சார்பில் ரூ.245 கோடி செலவில் சீரமைப்பு பணிகள் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

    பணிகள் தொடங்கும் முன்பு பலி எண்ணிக்கை அதிகரித்ததால் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட அதிகாரி களிடம் மீன்பிடி த்துறைமுக கட்டுமான பணி தொடங்கி முடியும் வரை துறைமுகத்தை மூட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இந்த கோரிக்கை அரசு தரப்பில் ஏற்றுக் கொள்ளப்ப ட்டது. அதன்படி கடந்த 1-ம் தேதி முதல் மீனவர்கள் மீன்பிடித் துறைமுகத்தை தற்காலிகமாக மூடினர். இதற்கிடையில் வெளியூரில் மீன்பிடிக்க சென்ற விசைப்ப டகுகள் மீன்களை இறக்க முடியாமல் துறைமுக முகத்து வாரத்தில் நிறுத்தி வைக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டது.

    குறிப் பாக 9 விசை படகுகளில் ரூ.1 கோடி மதிப்பிலான மீன்கள் தேக்கமடைந்ததாக கூறப்பட்டது. தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் அந்த விசைப்படகுளில் இருந்த மீன்கள் துறைமுகத்தில் இறக்க உத்தரவிடப்பட்டது. பின்னர் மறு அறிவிப்பு வரும் வரையிலும் துறை முகம் மூடுவதாக அறிவிப்பு வெளியானது. இது தொடர்பாக அங்கு விளம்பர பலகையும் அரசு சார்பில் வைக்கப்பட்டது.

    ஆனாலும் சிறு வள்ளங்களில் மீன் பிடிக்க அப்பகுதி மீனவர்கள் சென்று வந்தனர். இதற்கிடை யில் நேற்று ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற சுமார் 40 -க்கும் அதிகமான படகுகள் தேங்காப்பட்டணம் துறை முகம் வந்தன. அதில் சில படகுகள் நேற்று அரசு உத்தரவையும் மீறி துறைமுகத்தை திறந்து உள்ளே மீன் இறக்கி விற்பனை செய்துள்ளனர்.

    இதற்கு ஒரு தரப்பு மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் எதிர்ப்பையும் மீறி மீன் இறக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த நிலை தொடர்ந்தால் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மீனவர்கள் அச்சம் தெரிவித்து உள்ளனர்.

    இது தொடர்பாக அப்பகுதி மீனவர்கள் கூறுகையில், தொடர் போரா ட்டத்தின் விளைவாகத்தான் மறு சீரமைப்பு பணிகள் நிறைவடையும் வரை மீன்பிடி துறைமுகத்தை தற்காலிகமாக மூடுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. ஆனால் இதற்கிடை யில் கேரளா வுக்கு மீன்பிடிக்க சென்ற விசை படகுகளில் மீன்களை கொண்டு வந்து தேங்காப்பட்டணம் மீன்பிடி துறை முகத்தில் இறக்கியுள்ளனர். இதனை மீன்வளத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.

    அதே நேரம் கரமடி வள்ளத்தில் மீன்பிடிக்கும் சாதாரண மீனவர்களின் மீன்களை துறைமுகத்தில் அனுமதிக்காத நிலை உள்ளது.

    குறிப்பாக இனயம் மண்டலம் மீனவர்கள் சென்ற போது மீன் விற்க விடாமல் விரட்டியுள்ளனர். இது தொடர்பாக மீன்வள த்துறை நடவடிக்கை எடுக்குமா?துறைமுகம் முகத்துவாரத்தில் நாளை எதாவது விபத்தோ, உயிர் இழப்போ ஏற்பட்டால் மாவட்ட நிர்வாகமும் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளும் பொறுப்பே ற்பார்களா?

    குறிப்பிட்ட நபர்கள் மட்டும் மீன் விற்க அனுமதிக்கப்படுவது தொடர்பாக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் தெரிவித்தனர்.

    • கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
    • நகர்ந்து வடக்கு ஒடிசா மற்றும் வடக்கு சத்தீஷ்கர் மாநிலம் அருகே அடுத்த 24 மணி நேரத்தில் வலுவிழக்கக்கூடும் .

    கடலூர்:

    தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர கடற்கரையோரம் நேற்று நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்து ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கு சுமார் 20 கி.மீ. தூரததில் உள்ளது. இந்த புயல் சின்னம் மேற்கு வட மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து வடக்கு ஒடிசா மற்றும் வடக்கு சத்தீஷ்கர் மாநிலம் அருகே அடுத்த 24 மணி நேரத்தில் வலுவிழக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தனர். இதன் காரணமாக கடலூர் துறைமுகத்தில்1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. 

    • 9 விசைப்படகுகள் மீன்கள் இறக்க முடியாமல் முகத்துவாரத்தில் நிறுத்தம்
    • தடயை மீறி சிறிய வள்ளங்களில் சிலர் செல்வதால் குழப்பம்

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக முகத்துவாரத்தில் படகு கவிழ்ந்து மீனவர்கள் பலியாவது தொடர்கதையாக நடந்து வருகிறது. இதனை தடுக்க வலியுறுத்தி மீன வர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதை தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகளிடம் மீன்பிடித்துறைமுக கட்டுமான பணி தொடங்கும் வரை துறைமுகத்தை மூட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கை அரசு தரப்பில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

    அதன்படி நேற்று முன்தினம் மீனவர்கள் மீன்பிடித் துறைமுகத்தை தற்காலிகமாக மூடினர். இதனால் நேற்று முன்தினம் மீன் பிடித்து வந்த 3 விசைப்படகுகள் மீன்களை இறக்க முடியாமல் முகத்து வாரத்தில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மேலும் 6 விசைப்படகுகள் வந்துள் ளது. இந்த 9 விசைப் படகுகளில் பிடித்து வந்த மீன்களை இறக்கி விற்பனை செய்வதற்கு தூத்தூர் மண்டலத்தை சேர்ந்த மீனவர்கள் முயற்சித்துள்ளனர்.

    இதற்கு மீனவர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரி விக்கப்பட்டதை தொடர்ந்து விசைப்படகுகள் துறை முக ஓரத்தில் நிறுத்தப்ப ட்டுள்ளது. இந்த விசைப்படகுகளில் ரூ.1 கோடி மதிப்புள்ள மீன்கள் இருப்பதாக கூறப்படுகிறது. தூத்தூர் மண்டலத்தை சேர்ந்த மீனவர்கள் பிடித்து வந்த மீனை விற்க நடவடிக்கை எடுக்க அரசை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இனையம் மண்டலத்தை சேர்ந்த மீனவர்கள் துறைமுக கட்டுமானப் பணிகள் தொடங்கும் வரை துறைமுகத்தை திறக்க கூடாது என கூறியுள்ளனர்.

    அதே நேரம் தூத்தூர் மண்டலத்தை சேர்ந்த மீனவர்கள் சின்ன முட்டம், குளச்சல் போன்ற துறைமுகங்களில் சென்று மீன்பிடிப்பதற்கு கடினமாக இருக்கிறது என கூறி இந்த துறைமுகத்தை உடனே திறக்க வேண்டும் என கூறுகின்றனர். இதனால் இரு மண்டலத்தை சேர்ந்த மீனவர்கள் மாறி மாறி கருத்துக்களை தெரிவிப்பதால் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மீனவர் குறை தீர்ப்பு கூட்டத்திலும் எதிரொலித்தது.

    தற்பொழுது துறைமுக நுழைவாயிலில் உள்ள செக்போஸ்டை மூடி உள்ளதால் இருசக்கர வாகனங்களும் கார் டெம்போ போன்ற எந்த வாகனங்களையும் உள்ளே விடாமல் அடைத்து வைத்துள்ளதால் மீனவர்கள் துறைமுகத்திற்கு நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் தற்பொழுது வானிலை மிகவும் மோசமாக உள்ளதால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லக்கூடாது என வலியுறுத்தியும் அதைக் கேட்காமல் சிலர் சிறிய வள்ளங்களில் சென்றுமீன் பிடிப்பதும் மீனவர்களிடையே அதிருப்தி யை ஏற்படுத்தியுள்ளது.

    • கடந்த 4 ஆண்டுகளில் 25-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.
    • நேற்று முன்தினம் இனயம் புத்தன் துறை கடற்கரை கிரா மத்தைச் சேர்ந்த அமல்ராஜ் (வயது 67) வள்ளம் கவிழ்ந்து கடலில் விழுந்தார்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள தேங்காப்பட்டணத்தில் தூத்தூர், இனையம் மண்ட லத்தை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு வசதியாக. மீன்பிடித் துறைமுகம் கட்டப்பட்டது.

    ஆனால் துறைமுகம் சரியான கட்டமைப்புடன் கட்டப்படாததால் மீன்பிடி துறைமுக முகத்துவாரத்தில் படகு கவிழ்ந்து மீனவர்கள் பலியாவது தொடர் கதை யாக நடந்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் 25-க்கும் மேற்பட்ட மீன வர்கள் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு பூத்துறையிலிருந்து மீன் பிடிக்க சென்ற சைமன் என்பவர் முகத்துவாரத்தில் சிக்கி பரிதாபமாக பலி யானார். அவரது இறப்பைத் தொடர்ந்து மீனவர்கள் தொடர்ந்து 8 நாட்கள் மீன் பிடிக்க செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்ட னர்.அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் கடந்த சில தினங்க ளுக்குமுன்பு மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இனயம் புத்தன் துறை கடற்கரை கிரா மத்தைச் சேர்ந்த அமல்ராஜ் (வயது 67) வள்ளம் கவிழ்ந்து கடலில் விழுந்தார். சக மீனவர்கள் காப்பாற்ற முயற்சி செய்தும், முடிய வில்லை. 2 நாட்களாக மீனவர்கள் மற்றும் கடலோர காவல் படையினர் அமல்ராஜை தேடி வருகின்றனர். ஆனால் அவரைப் பற்றிய தகவல் இன்று வரை கிடைக்க வில்லை.

    இந்த சூழலில் தேங்கா பட்டணம் மீன்பிடி துறைமு கத்தை மறு சீரமைப்பு செய்ய வலியுறுத்தி கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக மீனவர் அமைப்புகள் சார்பில் அறிவிக்க ப்பட்டது. இதையடுத்து இன்று காலை இனயம், தூத்தூர் மண்டலங்களை சேர்ந்த 15 மீனவ கிராம மக்கள் தேங்கா பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் குவிந்தனர்.

    காலை முதல் கொட்டி தீர்த்த மழையை பொருட்ப டுத்தாமல் உண்ணா விரதத்தில் மீன வர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு அமைப்புகளை சேர்ந்த மீனவ பிரதிநிதிகள், பங்கு பணியாளர்கள் உட்பட ஏராளமான பேரும் இதில் பங்கேற்றனர்.

    • கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தகவல்
    • தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக திட்டத்திற்கு ஒன்றிய அரசு ரூ.150 கோடியும், நபார்டு ரூ.60 கோடி, தமிழக அரசு ரூ.43 கோடி ஒதுக்கீடு

    நாகர்கோவில்:

    தேங்காப்பட்டணம் துறைமுக மேம்பாட்டு திட்டப்பணிகள் குறித்து துறை அலுவலர்கள் மற்றும் மீனவ பிரதிநிதிகளுடன் குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் ஆலோசனை மேற் கொண்டார்.

    கன்னியாகுமரி மாவட்ட மீன்வளத்துறையின் சார்பில் தேங்காப்பட் டணம் துறைமுகம் மேம் பாட்டு பணிகள் குறித்து துறைசார்ந்த அலுவலர்கள் மற்றும் மீனவ பிரதிநிதி கள் உள்ளிட்டோர்களுட னான கலந்தாய்வுக்கூட் டம் கலெக்டர் அரவிந்த் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத், விஜய் வசந்த் எம்.பி., ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலையில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

    கூட்டத்திற்கு பின்னர் மாவட்ட கலெக்டர் அரவிந்த் கூறியதாவது:-

    தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகம் தொழில்நுட்ப காரணங்க ளால், முகத்துவாரப் பகு திகளில் பல உயிரிழப்பு கள் ஏற்பட்டு வந்தது. இது குறித்து தேங்காப்பட்ட ணம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் வசித்துவரும் மீனவர்கள் மற்றும் மீனவ பிரதிநிதிகள் மாவட்ட நிர்வா கத்திற்கு உயிரிழப்பு கள் ஏற்படுவதை தடுப்பதற் கான மேல்நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் மீன்பி டித்துறைமுக முகத்துவா ரத்தை ராட்சத இயந்திரம் கொண்டு ஆழப்படுத்துவற் கான நடவடிக்கை விரை வில்மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    துணை இயக்குநர் (மீன்வளத்துறை) காசி விஸ்வநாத பாண்டியன், கலெக்டரின் நேர்முக உத வியாளர் (பொது) வீரா சாமி, ஊசூர் மேலாளர் சுப்பிரமணியம், உதவி செயற்பொறியாளர்கள், மீனவ பிரதிநிதிகள் ஜார்ஜ் ராபின்சன், ஜோர்தான், பினுலால்சிங் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    இது தொடர்பாக ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கூறுகையில், 'தேங்காப் பட்டணம் மீன்பிடி துறை முகதிட்டத்திற்கு ஒன்றிய அரசு ரூ.150 கோடியும், நபார்டு ரூ.60 கோடி. தமி ழக அரசு ரூ.43 கோடி ஒதுக் கீடு செய்து ஒரு வாரத் தில் இதற்காக அரசாணை வெளியிட உள்ளது.

    துறைமுக முகதுவா ரத்தில் மணல் அள்ளும் பணிக்கு புனேயில் இருந்து இயந்திரம் ரூ.31.18 கோடியில் வர உள்ளது. செப்டம்பர் 20-ந் தேதிக்கு பிறகு மண் அள் ளும் பணி தொடங்கும் என்று தெரிவித்துள்ளார் கள். அவ்வாறு தொடங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும்' என்றார்.

    • அமைச்சர்கள், அதிகாரிகள் ஆலோசனை
    • தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக திட்ட பணிகள் குறித்த கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது.

    நாகர்கோவில்:

    தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக திட்ட பணிகள் குறித்த கூட்டம் நேற்று சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில் நடைபெற்றது. மீன்துறை இயக்குநர் பழனிசாமி, ராஜேஷ்குமார் எம். எல்.ஏ உள்ளிட்டோரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    பின்னர் அமைச்சர் மனோதங்கராஜ் கூறு கையில், 'மீனவர்களுக்கு பாதுகாப்பான வகையில் துறைமுகத்தை மறுசீர மைப்பு செய்ய தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த உத்தரவின்பேரில், நியாட், சிடபிள் யூபி ஆர்.எஸ்., ஐஐடி மற் றும் மீன்வளத்துறையின் தொழில்நுட்ப வல்லுநர் களை வரவழைத்து பல கட்ட ஆய்வுகளை மேற் கொண்டு, உள்ளூர் மீன வர்களின் கருத்துக்களை கேட்டறிந்து அதற்கேற்ப திட்டம் மறுவடிவமைப்பு செய்யப்பட்டது. உள்ளூர் மீனவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து திட்ட வடிவமைப்பு இறுதி செய்யப்பட்டது வரலாற்றிலேயே இது முதல் முறையாகும்.

    அதன்பின்னர் தமிழக அரசு திட்டத்திற்கான கருத்துரு தயாரித்து, மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்திருந் தது. இது குறித்து கடந்த 21.04.2022 அன்று நடை பெற்ற மத்திய ஒப்புதல் மற்றும் கண்காணிப்பு குழுவின் 12-வது கூட்டத் தில், துறைமுக உட்கட்ட மைப்பு வசதிகள் மற்றும் பிரதான அலைதடுப்பு நீட்டிப்பு சுவர் ஆகிய இரண்டு பணிகளையும் ஒரே கருத்துருவாக்க கேட் டுக்கொண்டதற்கிணங்க, தமிழக அரசு மீண்டும், இரு பணிகளையும் ஒரே கருத் துருவாக்கி ரூ.253 கோடிக் கான திட்டத்தை அனுப்பி வைத்தது. அதனை கடந்த 29.07.2022 அன்று நடை பெற்றகூட்டத்தில் மத்திய ஒப்புதல் மற்றும் கண்கா ணிப்பு குழு ஒப்புதல் அளித்து, ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீட்டு ஒப்புதலுக் காக பரிந்துரை செய்தது.

    துறைமுகத்தின் முகத்துவாரப் பகுதியை ஆழப்படுத்த தற்போது பணியில் இருக்கும் இயந்திரங்களை விட கனரக ட்ரெட்ஜிங் இயந்திரம் வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. துறைமுக பணிக்கான மத்திய அரசின் ஒப்புதல் ஓரிருநாட்களில் கிடைத்த தும், உடனடியாக டெண் டர் விடப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப்படும். இதற் கான பணிகளை தமிழக அரசு முழுவீச்சில் செயல்ப டுத்தி வருகிறது.

    எனவே, மீனவர்கள் அரசுக்கு ஒத்துழைப்பு அளித்து பணிகள் தொடங்கும் வரை அமைதி காக்க வேண்டும். லைப் ஜாக்கெட் அணிந்து படகில் பயணிப்பது, இயற்கை  சீற்றநேரங்களிலும், ஆபத்தான பகுதிகளி லும் உயிர் காக்க உதவும். துறைமுக பணிக்காக தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும், லைப் ஜாக் கெட் அணிவது குறித்தும் தவறான கருத்துக்களை யாரும் அரசியல் லாபத்திற்காக பரப்ப வேண்டாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    • சுமார் 300க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்
    • குளச்சல் மீன்பிடி துறைமுகங்களுக்கு வந்த விசைப்படகுகளில் டன் கணக்கில் “கொழி சாளை” மீன்கள் பிடிப்பட்டிருந்தன.

    கன்னியாகுமரி :

    குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு சுமார் 300க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 7 நாட்கள் முதல் 15 நாட்கள் வரை நடுக்கடலில் தங்கி மீன்பிடி தொழிலில் ஈடுபடும் விசைப்படகு மீனவர்கள். கடந்த இரண்டு மாதங்களாக அரபிக்கடல் பகுதியில் மீன்பிடி தடைக்காலம் மற்றும் தொடர் கடல் சீற்றம் காரணமாக மீன்பிடி தொழிலுக்கு செல்லாமல் இருந்து வந்தனர்.

    இந்த நிலையில் கழிந்த வாரம் முதல் ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்கு சென்ற 300-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் படிப்படியாக கரை திரும்பி வருகின்றனர்.

    குளச்சல் மீன்பிடி துறைமுகங்களுக்கு வந்த விசைப்படகுகளில் டன் கணக்கில் "கொழி சாளை" மீன்கள் பிடிப்பட்டிருந்தன.

    இந்த மீன்களை விற்பனைக்காக மீனவர்கள் துறைமுகங்களில் மலை போல் குவித்து வைத்திருந்த நிலையில் மீன்களின் விலையும் கணிசமாக குறைந்த நிலையில் இந்த மீன்களை வாங்க உள்ளூர் மற்றும் கேரளா வியாபாரிகள் ஆர்வம் காட்டி குவிந்தனர்.

    ஒரு கிலோ கொழி சாளை மீன் சாதாரணமாக ரூ.50 முதல் ரூ.60 வரை விலை போகும் நிலையில் இன்று ரூ.20க்கு விலை போனது.

    • போதை பழக்கத்தை தட்டிக் கேட்டதால் மகன் கொலை
    • போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெற்றோர் புகார்

    நாகர்கோவில்:

    ராஜாக்கமங்கலம் அருகே உள்ள கீழ முட்டம் பகுதியைச் சேர்ந்தவர் அல்மாண்ட்ஸ். இவரது மனைவி சகாயராணி. இவர்களது மகன் நிக்சன் (வயது 29).

    இவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 27-ந் தேதி முட்டம் துறைமுகத்தில் மர்மான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து வெள்ளி சந்தை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் மகன் சாவில் சந்தேகம் இருப்ப தாக அல்மாண்ட்ஸ், அவரது மனைவி சகாயராணி ஆகியோர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்தனர். மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    எங்களுக்கு நிக்சன் என்ற மகனும் 3 மகள்களும் உள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி எனது மகன் வீட்டில் இருந்தபோது அவரை ஒரு சிலர் அழைத்து சென்றனர். பின்னர் அவர் இரவு வீட்டிற்கு வரவில்லை.

    மறுநாள் காலையில் முட்டம் துறைமுகத்தில் எனது மகன் மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்து விட்டதாக எங்களுக்கு தகவல் தெரிவித்தனர். எங்கள் மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக ஏற்கனவே கூறி இருந்தோம். இதுவரை இந்த நடவடிக்கை எடுக்கவில்லை.

    போதை பழக்கத்தை தட்டி கேட்ட காரணத்திற்காக அவரை கொலை செய்து விட்டனர். அதற்கு காரணமான 3 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர்.

    வடகிழக்கு மாநிலங்களுக்கு எளிதாக சரக்குகளை கொண்டு செல்வதற்காக வங்காள தேசத்தில் உள்ள சிட்டகாங், மோங்லா துறைமுகங்களை இந்தியா பயன்படுத்த அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. #Bangladesh #India
    டாக்கா:

    நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள 7 மாநிலங்களை இணைக்க ஒரே ஒரு தரை வழி மட்டுமே உள்ளது. இதனால், அங்குள்ள திரிபுரா, மிசோரம் போன்ற மாநிலங்களுக்கு சரக்குகளை எடுத்துச் செல்வதில் கால தாமதம் ஏற்படுகிறது.

    இந்த நிலையில், வங்காளதேசத்தில் உள்ள சிட்டகாங், மோங்லா துறைமுகங்களை வணிக ரீதியாக பயன்படுத்த அந்நாட்டுடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டது. இதன் மூலம், இந்திய துறைமுகங்களில் இருந்து மேற்கண்ட இரண்டு துறைமுகங்களுக்கு சரக்குகள் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து சாலைகள், நீர்வழி மூலம் எளிதாக இந்திய பகுதிக்கு எடுத்துச் செல்லப்படும்.

    இந்த ஒப்பந்தத்தின் வரைவுக்கு வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை இந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும் எனவும், தேவைப்பட்டால் நேபாளம், பூட்டான் போன்ற நாடுகளுக்கும் இந்த துறைமுகம் மூலம் சரக்குகள் அனுப்பலாம் எனவும் வரைவில் கூறப்பட்டுள்ளது. 
    ×