search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தடுப்பு வேலி"

    • ராமேசுவரத்தில் தடுப்பு வேலியை திறந்துவிட்ட போலீஸ் இன்ஸ்பெக்டரால் பரபரப்பு ஏற்பட்டது.
    • அங்கு வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு உமாதேவி தடுப்பு வேலியை மீண்டும் அடைத்து பக்தர்கள் முறை யாக செல்ல வழி வகை செய்தார்.

    ராமேசுவரம்

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு தொடர் விடு முறை காரணமாக 50 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட பக்தர் கள் வருகை தந்தனர். அக்னி தீர்த்த கடலில் நீராடி பின் னர் ராமநாதசுவாமி கோவி லுக்குள் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் நீராட ஒரே நேரத்தில் பக்தர்கள் குவிந்த னர்.

    இதனால் வடக்கு ராஜ கோபுரம் பகுதியில் எங்கு பார்த்தலும் பக்தர்களாக காணப்பட்டனர். கோவி லுக்கு உள்ளேயும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் இருந் தனர். இதனால் கோவில் நிர்வாகம் சார்பில் தடுப்பு அமைக்கப்பட்டு வரிசை யாக நீராட அனுமதிக்கப் பட்ட னர்.

    இந்த நிலையில் அங்கு பணியில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் திடீரென தடுப்பு வேலியை திறந்து விட்டதால் பெரும் கூட்டமாக கோவிலுக்குள் முண்டியடித்துக்கொண்டு நுழைந்தனர்.

    இதனால் பெரும் பரபரப்பு ஏற்ப ட்டது. இதனைத் தொட ர்ந்து, அங்கு வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு உமாதேவி தடுப்பு வேலியை மீண்டும் அடைத்து பக்தர்கள் முறை யாக செல்ல வழி வகை செய்தார். அங்கிருந்த இன்ஸ் பெக்டர் முருகேசன் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டார்.

    • மின்சாரம் பாய்ந்து யானைகள் உயிரிழப்பதை தடுக்க கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது.
    • அதிகபட்சம் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் யானைகளின் நடமாட்டம் உள்ள பகுதிகளில் தடுப்பு வேலிகள் அமைப்பது என முடிவு செய்யப்பட்டது.

    கோவை,

    கோவையில் நரசிம்மநாயக்கன் பாளையம் அருகே மின்சாரம் தாக்கி ஆண் யானை ஒன்று பலியானது. மின் கம்பம் உடைந்து யானையின் மீது விழுந்ததில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்தது.

    இதையடுத்து மின்சாரம் பாய்ந்து யானைகள் உயிரிழப்பதை தடுக்க புதிய வழிமுறைகளை பின்பற்ற கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது.

    கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன், மாவட்ட வன அலுவலர் அசோக்குமார், மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    வனப்பகுதியை ஒட்டிய ஒரு கிலோ மீட்டர் முதல் அதிகபட்சம் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் யானைகளின் நடமாட்டம் உள்ள பகுதிகளை வரையறுத்து அந்த பகுதியில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகள், பழுதடைந்த மின் கம்பங்களை சரி செய்தல், உயரமான மின் கம்பங்களை அமைப்பது, காப்பிடப்பட்ட மின் கம்பிகளை பயன்படுத்துதல், மின் கம்பங்களை சுற்றிலும் தடுப்பு வேலிகள் அமைப்பது என முடிவு செய்யப்பட்டது.

    வனத்துறை மற்றும் மின்வாரிய பணியாளர்களுடன் காப்புக்காட்டை ஒட்டிய பகுதிகளில் மின்வேலிகள் மற்றும் மின் கம்பிகளை ஆய்வு செய்ய கூட்டு புலத்தணிக்கையை தொடர்ந்து மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

    மேலும் மனித - வன விலங்கு முரண்பாடுகளை தவிர்ப்பது குறித்து தாசில்தார், வனச்சரக அலுவலர், போலீஸ் இன்ஸ்பெக்டர், மின்வாரிய அலுவலர்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை கூட்டம் நடத்தி நடவடிக்கைகள் மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

    • இந்த கோவில்வளாகத்தில் சமூகவிரோத செயல் நடைபெறுவதாக கூறிஅதனை தடுப்பதற்காகதடுப்புவேலிஅமைத்திருந்தனர்.
    • .இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியம்நடுக்கா ட்டுபாளையத்தில் மதுரை வீரன் கோவில் உள்ளது. இந்த கோவில்வளாகத்தில் சமூகவிரோத செயல் நடைபெறுவதாக கூறிஅதனை தடுப்பதற்காகதடுப்புவேலிஅமைத்திருந்தனர். இதனால் அதே ஊராட்சியைசேர்ந்த மேல்காட்டுபாளையத்திற்கு எளிதில் சென்று வர முடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து சமரசம் பேசினர். இதில்உடன்பாடு ஏற்பட்டு மேல் காட்டுபாளையத்திற்கு

    செல்ல வழி ஏற்படுத்தப்பட்டது . இந்த வழி மட்டும் போதாது கோவிலை சுற்றி அமைக்கப்பட்டு ள்ள தடுப்பு வேலிகளை முழுமை யாக அகற்ற வேண்டும் என்று ஒரு தரப்பினர் கோரி வந்தனர்  இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதனை தொடர்ந்து இன்று காலை நடுக்காட்டு பாளையத்தை சேர்ந்த கிராம மக்கள் பெண்கள், இளைஞர்கள், பண்ருட்டி வருவாய் தாசில்தார் அலுவலகம் முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்- இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தாலுகா அலுவலகத்திற்கு விரைந்து சென்றனர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் பின்னர் பொதுமக்கள் பண்ருட்டிதலைமை இடத்து துணை தாசில்தார் கிருஷ்ணாவிடம் மனு கொடுத்தனர். தாசில்தார் அவசர வேலையாக வெளியில்சென்றுள்ளார். அவர்வந்தவுடன் 5 பேர் மட்டும் வாருங்கள் பேசிக்கொள்ளலாம் என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து நடுக்காட்டு பாளையம் கிராம மக்கள் கலைந்து சென்றனர் .இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது

    • நீலகிரி சாலைகளில் பயணிக்க அனைத்து தரப்பினரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
    • வெளிமாநில, வெளி மாவட்ட வாகனங்கள் செல்வதற்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

    ஊட்டி 

    மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் வாகன ஓட்டுனர்களும், வெளி மாநில வாகன ஓட்டுனர்களும் மிகவும் ஆசையுடன் வாகனங்களை இயக்குவதற்கு முக்கிய காரணமே இயற்கை எழில் சூழ்ந்த காடுகளுக்கு நடுவே உள்ள சாலையில் இதமான சூழ்நிலையில் செல்வததால் தான்.

    இதன் காரணமாக நீலகிரி சாலைகளில் பயணிக்க அனைத்து தரப்பினரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    நீலகிரி மாவட்டத்தின் மிக முக்கிய சுற்றுலாத்தலமான முதுமலைக்கு ஊட்டியில் இருந்து கல்லட்டி சாலை வழியாக செல்லாம். இந்த சாலையானது 36 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட மலை வளைவு பாதையாகும்.

    இந்த சாலையில் பல்வேறு ஆபத்துகளும், தொடர் விபத்துகளும் நடைபெற்று வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு கூட சென்னையில் இருந்து சுற்றுலா வந்த பெண் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

    தொடர் விபத்துக்களால் அந்த சாலையில் வெளிமாநில, வெளி மாவட்ட வாகனங்கள் செல்வதற்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

    கல்லட்டி மலைப்பா தையில் உள்ள மிகப்பெரிய இறங்கு முகமான பாதையில் வாகனத்தை இயக்குபவர்கள் இருபுறமும் இயக்கும் வகையில் அந்த சாலை இருந்தது.

    அந்த பகுதியில் சிலர் வேகமாக வாகனங்களை இயக்குவதால் பாதுகாப்பு கருதி அந்த சாலையின் இடையே கீழ் இறங்கும் வாகனங்கள் ஸ்பீட் பிரேக்கர் என்று சொல்லக்கூடிய வேகக்கட்டுப்பாட்டு கோடுகளை தாண்டி மெதுவாக செல்லும் வகையிலும், மேல் நோக்கி வரும் வாகனங்கள் எந்தவித தடையும் இன்றி மேலேறி வரும் விதமாக சாலைகளின் நடுவே தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டு வருகிறது.

    தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது இனிவரும் காலங்களில் வேகமான பயணம் இந்த சாலைகளில் இல்லாமல் மிதமான வேகம் உயிர் பாதுகாப்பு என்பதை வலியுறுத்தும். இது போன்ற செயல்பாடுகள் அனைத்து தரப்பினரினரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது.

    • பழனி செல்லும் வாகனங்களை பார்க்காமல் செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
    • ஒரு காவலரை நிறுத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    உடுமலை:

    உடுமலையிலிருந்து பழனி செல்லும் ரோட்டின் தெற்கு பகுதியில் தடுப்பு வேலி இல்லாததால் தெற்கிலிருந்து கொழுமம் ரோடு மற்றும் அரசு குடியிருப்பு பகுதி வழியாக வடக்காக வரும் வாகனங்கள் எதிரே உடுமலையிலிருந்து அதிவேகமாக பழனி செல்லும் வாகனங்களை பார்க்காமல் செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

    மேலும் இந்த பகுதியில் குடியிருப்பு மற்றும் வங்கி மற்றும் வணிக வளாகங்கள், கடைகள் உள்ள பகுதி என்பதால் இந்த பகுதியை அடிக்கடி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இந்த பகுதியில் வேகத்தடை அமைக்கவும் தடுப்பு வேலி அமைக்கவும் பள்ளி துவங்கும் மற்றும் பள்ளி விடும் நேரங்களில் நிரந்தரமாக ஒரு காவலரை அந்த பகுதியில் நிறுத்தி கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • குலசேகரன்பட்டினம் அருகே 2,233 ஏக்கர்கள் நிலம் அடையாளம் காணப்பட்டு அந்த நிலங்கள் கையகப்படுத்தும் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.
    • ராக்கெட் ஏவுதளம் அமைய உள்ள இடத்தில் நில அளவீடு பணிகள் முடித்து தடுப்பு வேலிகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    உடன்குடி:

    விண்வெளி ஆராய்ச்சியில் உச்சத்தை எட்டி வரும் இந்தியா–வின் அனைத்து விண்வெளி திட்டங்களும் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    குலசேகரன்பட்டினம்

    இந்நிலையில் மத்திய அரசு மற்றொரு ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க முடிவு செய்தது. பல்வேறு கட்டங்களாக நடந்த ஆய்வுக்குப் பின் தூத்துகுடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குலசேகரன்பட்டிணம் பகுதி தேர்வு செய்யப்பட்டது. பொதுவாக ராக்கெட் ஏவுதளம் அமையும் இடமானது, காற்றின் வேகம் மணிக்கு 30கிலோ மீட்டருக்கு குறைவாகவும், குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகாத பகுதியாகவும், புயல், மின்னல் மற்றும் மழையின் தாக்கம் குறைவாக உள்ள பகுதிகளாகவும் இருக்க வேண்டும்.

    நிலையான காலசூழ்நிலை, நல்ல வெளிச்சம், குறைந்த பனி மற்றும் மேகமூட்டம் உள்ள பகுதியாக இருக்க வேண்டும்.

    அந்த வகையில் நிலவியல் ரீதியாக குலசேகரன்பட்டினம் பகுதி ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு சிறந்த இடமாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

    இதனையடுத்த இஸ்ரோ சார்பில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் முதற்கட்டமாக தமிழக அரசிடம் இருந்து நிலத்தை பெறுவதற்கான பணிகள் நடந்து வருகிறது.

    அதன்படி குலசேகரன்பட்டினம் அருகே 2,233 ஏக்கர்கள் நிலம் அடையாளம் காணப்பட்டு அந்த நிலங்கள் கையகப்படுத்தும் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. காலி இடங்களுக்கு ஏக்கருக்கு அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலை வழங்கப்பட்டது.

    மேலும் குலசேகரன்பட்டினம் அருகே கடற்கரையை ஒட்டி அரைவட்ட வடிவில் நிலம் எடுக்கப்படுகிறது. திருச்செந்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட மாதவன்குறிச்சி, சாத்தான்குளம் தாலுகாவுக்கு உட்பட்ட படுக்கப்பத்து, பள்ளக்குறிச்சி ஆகிய 3 கிராமங்களியல் இருந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன.

    இதில் 141 ஏக்கர் புறம்போக்கு நிலம் தவிர, மீதம் உள்ள பட்டா நிலங்கள் கையகப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதனை 8பகுதியாக பிரித்து பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்த பணிகளுக்கென 8 தாசில்தார்கள் நியமிக்கப்பட்டு ஒவ்வொரு தாசில்தார் தலைமையிலும் 13பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு இந்த பணிகளை கண்காணிப்பதற்காக ஒரு வருவாய் அலுவலர் மற்றும் துணைஆட்சியர் அந்தஸ்திலான அதிகாரியும் நியமிக்கப்பட்டு உள்ளார். தற்போது பெரும்பாலான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு இஸ்ரோவசம் ஒப்படைக்கப்பட்டு விட்டது.

    இதனையடுத்து ராக்கெட் ஏவுதளம் அமைய உள்ள இடத்தில் நில அளவீடு பணிகள் முடித்து தடுப்பு வேலிகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் படுக்கப்பத்து பகுதி எள்ளுவிளை பகுதியிலிருந்து அமராபுரம், கூடல்நகர் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது கம்பி வேலிகள் அமைப்பதற்காக கான்கீரிட் அமைத்து கற்கள் நடப்பட்டு வருகிறது.

    தொடர்ந்து விறு விறுப்பாக நடந்து வரும் இந்த பணியானது ஓரிரு மாதங்களில் நிறைவடையும் என்றும், தடுப்பு வேலி அமைக்கும் பணி முடிந்ததும் அடுத்தக்கட்ட பணிகள் தொடங்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    ×