search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிரோன்"

    • கடற்கரை சாலையில் உள்ள பிரெஞ்சு தூதரகத்தின் சுற்றிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும்.
    • பிரெஞ்சு தூதரகத்தின் மீது டிரோன் பறந்தது ஊழியர்கள் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தியது.

    புதுச்சேரி:

    புதுவை கடற்கரை சாலையில் பிரெஞ்சு தூதரகம், தலைமை செயலகம், அரவிந்தர் ஆசிரமம், மணக்குள விநாயகர், காவல்துறை தலைமையகம் ஆகியவை உள்ளது.

    கடற்கரை சாலையில் உள்ள பிரெஞ்சு தூதரகத்தின் சுற்றிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும்.

    இந்நிலையில் இன்று பகலில் பிரெஞ்சு தூதரகத்தின் மீது டிரோன் ஒன்று பறந்தது.

    இதைக்கண்ட தூதரக ஊழியர்கள் மத்தியில் பதட்டம் ஏற்பட்டது. உடனடியாக பாதுகாப்பு பணியிலிருந்த தூதரக பாதுகாப்பு அதிகாரிகளிடம் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து சென்று டிரோனை இயக்கியவரை பிடித்து விசாரித்தனர்.

    ஆனால் அவர்கள் சரிவர பதில் தெரிவிக்கவில்லை. உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வருவதற்கு முன்பாக அந்த நபர் டிரோனை எடுத்துக்கொண்டு மாயமானார்.

    அங்கிருந்த கேமரா மூலம் டிரோனை இயக்கியவர் யார்? என போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனால் தூதரகம் அருகே பரபரப்பு ஏற்பட்டது.

    • பாகிஸ்தான் பயங்கரவாதிகள் டிரோன் மூலம் ஆயுதங்களை இந்தியாவுக்குள் அனுப்புவதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.
    • டிரோனில் பயங்கர ஆயுதங்கள் கடத்தப்பட்டிருப்பது தெரியவந்தது.

    பாகிஸ்தானில் ஆயுத பயிற்சி பெறும் பயங்கரவாதிகள் காஷ்மீர் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ இயலாதபடி எல்லையில் பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் டிரோன் மூலம் ஆயுதங்களையும், போதை பொருட்களையும் இந்தியாவுக்குள் அனுப்புவதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

    எல்லையில் அத்துமீறி நுழையும் டிரோன்களை கண்காணிக்க ராணுவ வீரர்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த வாரம் மட்டும் ஊடுருவ முயன்ற 3 பாகிஸ்தான் டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.

    இந்த நிலையில் நேற்று இரவு பஞ்சாப் மாநில எல்லையில் பாகிஸ்தானில் இருந்து டிரோன் ஒன்று ஊடுருவியது. இதை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கண்டுபிடித்து உஷாரானார்கள்.

    அந்த டிரோனை நோக்கி சரமாரியாக சுட்டனர். அந்த டிரோன் பாகிஸ்தானுக்குள் திரும்பி செல்ல முயன்றது. என்றாலும் இந்திய ராணுவ வீரர்கள் அந்த டிரோனை சுட்டு வீழ்த்தினார்கள்.

    அமிர்தசரஸ் அருகே ராஜாதல் என்ற இடத்தில் அந்த டிரோன் நொறுங்கி கிடந்தது. அந்த டிரோனில் பயங்கர ஆயுதங்கள் கடத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. அவற்றை எல்லை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.

    • டெல்லியின் ஜசோலா விஹார் மெட்ரோ ரெயில்நிலைய தண்டவாளத்தில் டிரோன் ஒன்று விழுந்தது.
    • இதனால் ஏற்பட்ட பரபரப்பால் அந்த ரெயில் நிலையம் சிறிது நேரம் மூடப்பட்டது.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் உள்ள ஜசோலா விஹார் மெட்ரோ ரெயில்நிலைய தண்டவாளத்தில் இன்று பிற்பகல் 3 மணியளவில் டிரோன் ஒன்று விழுந்து கிடந்தது. இதனால் அந்தப் பகுதியில் திடீரென பரபரப்பு ஏற்பட்டது.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு உடனே வந்த போலீசார் டிரோனை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர். அதில் மருந்து பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

    விசாரணையில், தனியார் நிறுவனம் ஒன்று மருந்து பொருட்களை அனுப்பி வைத்ததை கண்டுபிடித்த போலீசார், அது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

    இந்தப் பரபரப்பால் ஜசோலா விஹார் ரெயில் நிலையம் சிறிது நேரம் மூடப்பட்டிருந்தது. அதன்பின், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து விடப்பட்டது.

    • ராஜபாளையம் அருகே டிரோன் ‌மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டது.
    • இதில் விவசாயிகள் சங்கம் சார்பில் பிள்ளையார்சாமி, சிவன் உள்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள தெற்கு வங்காநல்லூரில் உளுந்து பயிரிட்டுள்ள வயலில் ராஜபாளையம் வேளாண்மை உதவி இயக்குனர் திருமலைச்சாமி, வேளாண்மை அலுவலர் தனலட்சுமி உள்பட வேளாண்மை அலுவலர்கள் டிரோன் மூலம் மருந்து மற்றும் உரம் தெளிப்பது குறித்து செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர்.

    ஒரு ஏக்கர் பரப்பளவில் 10 நிமிடங்களில் இந்த தெளிப்பான்கள் மூலம் தெளிக்கவும், ஏக்கருக்கு ரூ. 600 மட்டுமே செலவு ஆவதால் நேரமும், கூலியும் மிச்சமாவதாக விவசாயிகள் தெரிவித்தனர். இதில் விவசாயிகள் சங்கம் சார்பில் பிள்ளையார்சாமி, சிவன் உள்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    ×