search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Insecticide"

    • வேப்ப இலைகள் பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டவை.
    • பாரம்பரிய மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்டவை.

    வேப்ப இலைகள் பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டவை. பாரம்பரிய மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்டவை. பல்வேறு நோய்களை நெருங்க விடாமல் தடுக்கும் அசாதாரண ஆற்றல் அதற்கு உண்டு. அதனால்தான் இப்போதும் பல்வேறு வழிகளில் பயன்பாட்டில் இருக்கிறது. வெறும் வயிற்றில் வேப்ப இலைகளை உட்கொள்வதால் பல நன்மைகளை பெறலாம். அவை குறித்து பார்ப்போம்.

    1. ரத்தத்தை சுத்தப்படுத்தும்:

    வேம்பு ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. வேப்ப இலைகளை வெறும் வயிற்றில் உட்கொள்வது ரத்தத்தில் சேரும் நச்சுகள் மற்றும் அசுத்தங்களை அகற்றி ரத்தத்தை சுத்தப்படுத்த உதவும். ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.

    2. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்:

    வேம்பில் ஆன்டி ஆக்சிடெண்டுகள், பிளாவனாய்டுகள், வைட்டமின் சி போன்ற சத்துக்கள் உள்ளன. வெறும் வயிற்றில் வேப்ப இலைகளை உண்பது உடலின் இயற்கையான பாதுகாப்பு வழிமுறைகளை மேம்படுத்தி நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்களை எதிர்த்து போராடும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும்.

    3. செரிமானத்தை தூண்டும்:

    செரிமானத்திற்கு உதவவும், இரைப்பை குடல் பிரச்சினைகளை போக்கவும் பாரம்பரிய வழக்கமாக வேம்பு பயன்படுத்தப்படுகிறது. வெறும் வயிற்றில் வேப்ப இலைகளை உட்கொள்வது செரிமான செயல்பாடுகளை தூண்டும். வயிறு வீக்கம், வாயுத்தொல்லை, மலச்சிக்கல் போன்றவற்றுக்கு வித்திடும் ஆரம்பக்கட்ட அறிகுறிகளை விரட்டியடிக்கும்.

    4. நச்சுக்களை நீக்கும்:

    உடலில் இருந்து நச்சுகள் மற்றும் கழிவுப்பொருட்களை அகற்ற உதவும் பண்புகளை வேம்பு கொண்டுள்ளது. வேப்ப இலைகளை வெறும் வயிற்றில் சாப்பிடுவது உடலின் நச்சுத்தன்மை நீக்க செயல்முறைகளை விரைவுபடுத்தி, ஒட்டுமொத்த நச்சுக்களை வெளியேற்ற செய்யும். உடலை சுத்தப்படுத்தும் செயல்முறையையும் ஊக்குவிக்கும்.

     5. நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்:

    வேம்பு, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் பண்புகளை கொண்டிருப்பதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. வெறும் வயிற்றில் வேப்ப இலைகளை உட்கொள்வது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவது மற்றும் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை குறைப்பதன் மூலம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும்.

    6. வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்:

    வேப்ப இலையில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை வாய்வழி தொற்று, பல் சொத்தை, ஈறு நோய்களை தடுக்க உதவும். வேப்ப இலைகளை வெறும் வயிற்றில் சாப்பிடுவது, வாயில் பாக்டீரியாவின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும். ஈறுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலம் வாய்வழி சுகாதாரத்தையும் பாதுகாக்கும்.

     7. சரும ஆரோக்கியம் காக்கும்:

    பாக்டீரியா, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு உள்ளிட்ட சருமத்திற்கு நன்மை பயக்கும் பண்புகளை வேம்பு கொண்டுள்ளது. வெறும் வயிற்றில் வேப்ப இலைகளை உட்கொள்வது முகப்பரு, தோல் அழற்சி, தோல் தடிப்பு உள்பட பல்வேறு சருமம் சார்ந்த பிரச்சினைகளில் இருந்து விடுபடவும், சரும அழகை மேம்படுத்தவும் உதவும்.

     8. கூந்தலுக்கு வலு சேர்க்கும்:

    உச்சந்தலை மற்றும் மயிர்க்கால்களுக்கு ஊட்டமளிக்கும் சத்துக்கள் வேம்பில் உள்ளன. முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். உச்சந்தலையில் தொற்று ஏற்படாமல் தடுக்கும். வெறும் வயிற்றில் வேப்ப இலை சாப்பிடுவது, முடியின் வேர்களை வலுப்படுத்தும். பொடுகுத்தொல்லையை குறைக்கும். முன்கூட்டியே நரை முடி எட்டிப்பார்ப்பதையும் தடுக்கும்.

    • ஈரோடு மாவட்டம் புளியம்பட்டியில் உள்ள தனியாா் பூச்சி மருந்துக் கடையில் செடியை காண்பித்து மருந்து வாங்கி வந்தேன்.
    • புழு தாக்குதலைக் கட்டுப்படுத்துவதற்கு தெளித்த மருந்து செடியை முற்றிலும் நாசமாக்கிவிட்டது.

    அவிநாசி:

    அவிநாசியை அடுத்த தண்டுக்காரன்பாளையம் ஊராட்சி குமாரபாளையம் பிள்ளையாா் கோவில் தோட்டத்தை சோ்ந்தவா் விவசாயி திருமூா்த்தி (வயது 73). இவா் தனது தோட்டத்தில் காலிபிளவா் பயிரிட்டுள்ளாா். இந்நிலையில் பூச்சி மருந்தை மாற்றிக் கொடுத்ததால் காலிபிளவா் பயிா் முற்றிலும் கருகி நாசமாகியுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளாா்.

    இது தொடா்பாக மேலும் அவா் கூறியதாவது:-

    எனது தோட்டத்தில் அரை ஏக்கரில் காலிபிளவா் சாகுபடி செய்துள்ளேன். செடியில் புழு தாக்குதல் இருந்ததால், ஈரோடு மாவட்டம் புளியம்பட்டியில் உள்ள தனியாா் பூச்சி மருந்துக் கடையில் செடியை காண்பித்து மருந்து வாங்கி வந்தேன். மருந்து தெளித்த 4 நாள்களில் செடிகள் அனைத்தும் கருகி விட்டன. செடிகள் கருகிவிட்டதாதல் காய்கள் பிடிக்க வாய்ப்பில்லை. புழு தாக்குதலைக் கட்டுப்படுத்துவதற்கு தெளித்த மருந்து செடியை முற்றிலும் நாசமாக்கிவிட்டது. இதனால், ரூ.2 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து தோட்டக்கலைத் துறையினா் ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

    • உடல்நலம் பாதிக்கப்பட்டதால விரக்தி
    • போலீசார் விசாரணை

    வாணாபுரம்:

    தச்சம்பட்டு அருகே உள்ள சூ.பாப்பாம்பாடி பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை (வயது 64), கூலி தொழிலாளி.

    இவ ருக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்ததாகவும் அதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் விவசாய பயிர்களுக்கு அடிக்க வைக்கப்பட்டிருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்துவிட்டு மயங்கி கிடந்தார்.

    உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு காட்டாம் பூண்டி அரசு சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருவண்ணா மலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தச்சம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பரமத்தி வட்டாரத்தில் நீடித்த நிலையான பருத்தி சாகுபடி இயக்கத்தின் கீழ் மேலப்பட்டி கிராமத்தில் ட்ரோன் மூலம் பூச்சி மருந்து தெளித்தல் நிகழ்ச்சி செயல்விளக்கமாக செய்து காண்பிக்கப்பட்டது.
    • விவசாயிகள், மற்றும் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டாரத்தில் நீடித்த நிலையான பருத்தி சாகுபடி இயக்கத்தின் கீழ் மேலப்பட்டி கிராமத்தில் ட்ரோன் மூலம் பூச்சி மருந்து தெளித்தல் நிகழ்ச்சி செயல்விளக்கமாக செய்து காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர், பரமத்தி வட்டார அட்மா திட்ட தலைவர் தனராசு , மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில், பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி மற்றும் திரளான விவசாயிகள், மற்றும் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • விவசாயிகள் மர வள்ளிக் கிழங்கு குச்சிகள் பாதிப்படைந்த வயலில் இருந்து விதை கரணை தேர்வு செய்வதை தவிர்க்க வேண்டும்.
    • அனைத்து விவசாயிகளின் கூட்டு முயற்சி மாவுப்பூச்சி மேலாண்மைக்கு மிகவும் அவசிய மானதாகும்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டாரத்தில் தோட்டக்கலைத்துறை வெளியிட்டுள்ள கூறியிருப்பதாவது:-

    விவசாயிகள் மர வள்ளிக் கிழங்கு குச்சிகள் பாதிப்படைந்த வயலில் இருந்து விதை கரணை தேர்வு செய்வதை தவிர்க்க

    வேண்டும். முன்னெச்சரிக்கையாக, வேப்ப எண்ணெய் 2 சதவீதம் அல்லது அசாடிராக்டின் 1500 (5 மி.லி/ லிட்டர் தண்ணீருக்கு) மற்றும் 1 மி.லி. டீப்பால் ஒட்டும் திரவம் 1 லிட்டர் தண்ணீருடன் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு செடியின் அடிப்பாகம் வரை நன்கு நனையும் படி தெளிக்க வேண்டும். இதனால் மாவுப்பூச்சிகள் தாக்குதலை தடுக்கலாம்.

    தையோமீத்தாக்சிம் பூச்சிக் கொல்லி 1 லிட்டர் தண்ணீருக்கு 0.5 கிராம் அளவில் கலந்து கைத் தெளிப்பான் கொண்டு செடியின் அடிப்பாகம் நன்கு நனையும்படி தெளித்து மாவுப்பூச்சி தாக்கு தலை தடுக்கலாம். மருந்து தெளிக்கும்போது பாதிக்கப்பட்ட செடியின் நுனிப்பகுதியை மாவுப்பூச்சி

    யுடன் சேர்த்து அப்புறப்ப டுத்தி எரிக்க வேண்டும்.

    அனைத்து விவசாயிகளின் கூட்டு முயற்சி மாவுப்பூச்சி மேலாண்மைக்கு மிகவும் அவசிய மானதாகும். விவ

    சாயிகள் ஒருங்கிணைந்த முறைகளில் மாவுப்பூச்சி களை கட்டுப்படுத்த வேண்டும். நமது பகுதியில் மரவள்ளி நடவு பருவம் என்பதால் அனைவரும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.

    மேற்கண்ட மருந்துகள் கபிலர்மலை வட்டார தோட்டக்கலை துறை சார்பில் மானியம் மூலம் வழங்கப்படுகிறது. மானிய விலையில் மருந்துகள் தேவைப்படும் விவசாயிகள் சிட்டா,ஆதார் நகல், ரேசன் கார்டு நகல்,புகைப்படம் ஆகியவற்றை கபிலர்மலை வட்டார தோட்டக்கலை துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்து கொடுத்து பெற்றுக் கொள்ளலாம்.

    • ராஜபாளையம் அருகே டிரோன் ‌மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டது.
    • இதில் விவசாயிகள் சங்கம் சார்பில் பிள்ளையார்சாமி, சிவன் உள்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள தெற்கு வங்காநல்லூரில் உளுந்து பயிரிட்டுள்ள வயலில் ராஜபாளையம் வேளாண்மை உதவி இயக்குனர் திருமலைச்சாமி, வேளாண்மை அலுவலர் தனலட்சுமி உள்பட வேளாண்மை அலுவலர்கள் டிரோன் மூலம் மருந்து மற்றும் உரம் தெளிப்பது குறித்து செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர்.

    ஒரு ஏக்கர் பரப்பளவில் 10 நிமிடங்களில் இந்த தெளிப்பான்கள் மூலம் தெளிக்கவும், ஏக்கருக்கு ரூ. 600 மட்டுமே செலவு ஆவதால் நேரமும், கூலியும் மிச்சமாவதாக விவசாயிகள் தெரிவித்தனர். இதில் விவசாயிகள் சங்கம் சார்பில் பிள்ளையார்சாமி, சிவன் உள்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    ×