search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெய்சாரதா மெட்ரிக் பள்ளி"

    • மழலையர் பிரிவு( எல். கே.ஜி, யு. கே. ஜி ) மாணவர்கள் கண்ணன்களாகவும் ராதைகளாகவும் வேடமிட்டு அசத்தினர்.
    • கீதையின் சுலோகங்களை மழலை மொழியில் ஒப்புவித்து அசத்தினர்.

    திருப்பூர் :

    திருப்பூர் 15 வேலம்பாளையம் ஜெய்சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கிருஷ்ணஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. மழலையர் பிரிவு( எல். கே.ஜி, யு. கே. ஜி ) மாணவர்கள் கண்ணன்களாகவும்ராதைகளாகவும் வேடமிட்டு கீதையின் சுலோகங்களை மழலை மொழியில் ஒப்புவித்து அசத்தினர்.

    ஒவ்வொரு மாணவரும் கிருஷ்ணர்களாகவும், மாணவிகள் ராதையாகவும் வேடமணிந்து இருந்தது மிகவும் கவர்ந்தது. இந்நிகழ்ச்சியில் பள்ளித் தாளாளர் நிக்கான்ஸ் வேலுச்சாமி, செயலாளர் கீர்த்திகாவாணிசதிஷ், பொருளாளர் சுருதி வேலுசாமி, பள்ளி முதல்வர் ஏ.எஸ். மணிமலர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். 

    • காசோலையை மாணவர்களின் தாயாரிடம் வழங்கப்பட்டது.
    • பள்ளி மூலமாக விபத்து காப்பீட்டு தொகை ரூ.4லட்சம் பெறப்பட்டது.

    திருப்பூர் :-

    திருப்பூர் 15 வேலம்பாளையம் ஜெய்சாரதா மெட்ரிக் பள்ளியில் பயிலும் நவீனா மற்றும் ஹரிகரனின் தந்தை விபத்தில் சிக்கி மரணமடைந்தார். இதையடுத்து பள்ளி மூலமாக விபத்து காப்பீட்டு தொகை ரூ.4லட்சம் பெறப்பட்டு அதற்கான காசோலையை மாணவர்களின் தாயாரிடம் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் நிக்கான்ஸ் வேலுச்சாமி தலைமை தாங்கி பேசினார். பள்ளி முதல்வர் மணிமலர் வரவேற்று பேசினார். செயலாளர் கீர்த்திகா வாணி சதீஷ், கோவை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதன்மை மேலாளர் மணிகண்டபிரபு ஆகியோர் கலந்து கொண்டனர். யுனைட்டடு இந்தியா காப்பீட்டு நிறுவனத்தின் மண்டல மேலாளர் குமரேசன் விபத்து காப்பீட்டின் அம்சங்களை விளக்கினார். காப்பீடு வளர்ச்சி அலுவலர் மூர்த்தி, காப்பீடு ஆலோசகர் ராஜ சுகுமார் கலந்து கொண்டு பேசினர்.

    பள்ளி தாளாளர் நிக்கான்ஸ் வேலுச்சாமி மாணவர்களின்தாயாரிடம் காப்பீடு தொகைக்கான காசோலையை வழங்கினார். முடிவில் பள்ளியின் பொருளாளர் சுருதி நன்றி கூறினார்.

    • 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் சாதனை,விளையாட்டில் தேசிய அளவில் சாதனை.

    திருப்பூர் :

    திருப்பூர் 15 வேலம்பாளையத்தில் உள்ள ஜெய்சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ்-2 தேர்வில் பள்ளி மாணவிகள் ஜெயவாணி 600-க்கு 594 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடமும், மோனிகா 592 பெற்று 2-ம் இடமும், சண்முகபிரியா 591 பெற்று 3-ம் இடமும் பிடித்துள்ளனர்.

    மேலும் கணிதம், இயற்பியல், கணினி அறிவியல், கம்ப்யூட்டர் அப்ளிகேசன், கணக்கு பதிவியல், வணிகவியல், பொருளியல், வணிக கணிதம் உள்ளிட்ட பாடங்களில் 64 மாணவர்கள் 100-க்கு மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். தேர்வு எழுதிய மாணவர்களில் 73 சதவீத மாணவர்கள் 500-க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

    இதேபோல் 10-ம் வகுப்பு தேர்வில் மாணவிகள் ஹேமவர்தினி 500-க்கு 496 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடமும், பாலஹர்சினி 490 பெற்று 2-ம் இடமும், மாணவன் அருள்குமரன் 487 பெற்று 3-ம் இடமும் பிடித்துள்ளனர். மேலும் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட பாடங்களில் 11 மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தேர்வில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ-மாணவிகளை பள்ளி தாளாளர் வேலுச்சாமி, பள்ளி அறக்கட்டளை செயலாளர் கீர்த்திகா வாணி சதீஷ், பொருளாளர் ஸ்ருதி, பள்ளி முதல்வர் மணிமலர் மற்றும் ஆசிரிய - ஆசிரியைகள் பாராட்டினார்கள்.

    10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் சாதனை,விளையாட்டில் தேசிய அளவில் சாதனை, நீட் தேர்வில் முதல் முயற்சியிலேயே 4 மாணவர்கள் வெற்றி, 2022 குடியரசு தினவிழாவில் பள்ளி மாணவி குடியரசுத் தலைவர் முன்னிலையில் பரதநாட்டியம் ஆடியது உள்பட பல்வேறு பெருமைகளை கொண்ட பள்ளியாகவும், சிறந்த மாணவர்களை உருவாக்கும் பள்ளியாகவும் ஜெய்சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விளங்கி வருகிறது என்று பள்ளி தாளாளர் வேலுச்சாமி தெரிவித்தார்.

    • பள்ளியின் செயலாளர்,பொருளாளர், முதல்வர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
    • பள்ளியின் முதல்வர் மணிமலர் யோகாவின் சிறப்புகள் பற்றி எடுத்துக்கூறினார்

    திருப்பூர் :

    திருப்பூர் 15 வேலம்பாளையம் ஜெய்சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவர்கள் யோகா என்ற எழுத்தின் வடிவில் சூரியநமஸ்காரத்தின் 12 நிலைகள் மற்றும் சக்ராசனம், ஏகாபாத ஆசனம், உட்கட் ஆசனம் ஆகிய 5 ஆசனங்களை செய்து காட்டினர்.

    பள்ளியின் செயலாளர்,பொருளாளர், முதல்வர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பள்ளி செயலாளர் கீர்த்திகா வாணி சதீஷ் கலந்து கொண்டு ஒருவரின் கவனத்தை ஒருமுகப்படுத்தி உடல், மனம், ஆன்மா ஆகியவற்றை ஒன்றிணைப்பது யோகா என்று யோகா தினத்தை பற்றி பேசினார். பள்ளி பொருளாளர் சுருதி இலக்கின்றி அலையும் மானுட வாழ்வில் இலக்கை அடைய செய்வது யோகா என்று எடுத்துரைத்தார்.

    மேலும் பள்ளியின் முதல்வர் மணிமலர் யோகாவின் சிறப்புகள் பற்றியும் யோகாவின் மூலம் நோயின்றி வாழும் முறைகள் பற்றியும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் எடுத்துக்கூறினார்.  

    ×